October 31, 2007
October 30, 2007
அஞ்சலி : முதுபெரும் எழுத்தாளரான லா.ச.ரா மரணம்
லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட முதுபெரும் எழுத்தாளரான லா.ச.ராமாமிருதம், தனது 91-வது வயதில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவ்ர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனி இடம் பெற்று விளங்கியவர் லா.ச.ராமாமிருதம். லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வருபவர். அபிதா என்ற அவர் எழுதிய நாவல் மிகவும் புகழ் பெற்றது (ஒரு நாவல்தான் எழுதியுள்ளார்). ஏராளமான சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள இவர், உணர்ச்சி பெருக்கான நடையினால் வாசகர்களை மிகவும் கவர்ந்தவர். தன்னை சௌந்தர்ய உபாகசர் என்று அழைத்து கொண்ட லா.ச.ரா வின் தமிழ்நடை மிகவும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் குடும்பம் மற்றும் பெண்கள் ஆகிய விஷயங்களை மையமாக கொண்டு கதை எழுதியிருக்கும் இவர், சிந்தாநதி என்னும் நூலுக்காக 1989-ம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு வென்றார். தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்பட்ட லா.ச.ரா, 1916-ம் ஆண்டு திருச்சியின் லால்குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. தந்தை மற்றும் ஊர் பெயரை இணைத்து கொண்டு லா.ச.ராமாமிருதம் என்னும் பெயரில் அவர் கதைகள் எழுதத் தொடங்கினார். அவருடைய முதல் கதை 18-வது வயதில் மஞ்சரியின் சிறுகதை பத்திரிகையில் வெளியானது.அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் 91 வயதான லா.ச.ரா இன்று அதிகாலை சென்னையில் மரணமடைந்தார். இலக்கிய உலகைச் சேர்ந்த பல முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:12 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : இட்லிவடை
இன்றைய குறள்
எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:58 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 145 - ம் குறள்
கவிதையில்தான் மொழியின் சாரம் உயிர்ப் பிடிப்புடன் உள்ளது
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:21 PM
0
comments (நெற்றிக்கண்)
கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களில் மூவர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்
- நைஜீரியாவில் கடத்தப்பட்டவர்கள் விடுதலை : நைஜீரியாவில் கடந்த அக்டோபர் 26 ஆம் திகதியன்று, பெட்றோலியம் அகழும் கப்பலில் இருந்து கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களும், இரண்டு போலந்து நாட்டுக்கார்ரகளும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள இந்திய துணைத் தூதர் அணில் திரிகுணாயத் தமிழோசையிடம் தெரிவித்தார். விடுவிக்கப்பட்டவர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை, ஆனால் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள் எனவும் அவர் கூறினார். இந்தக் கடத்தல் தொடர்பாக எந்தக் குழுவும் உரிமைகோரவில்லை என்றும் இவர்களை விடுவிக்க பணம் கொடுக்கப்பட்டதாக தங்களுக்குத் தெரியவில்லை என்றும் இந்தியத் தூதர் தெரிவித்தார். கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களில் மூவர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்ட அஜித் காமராஜின் இளைய சகோதரர் சுதர்சனன் தனது அண்ணன் விடுவிக்கப்பட்ட பிறகு தம்மிடம் பேசியதாகவும், கடத்தியவர்கள் தம்மை துன்புறுத்தவில்லை என்று தம்மிடம் கூறியதாகவும் தமிழோசையிடம் தெரிவித்தார். இது குறித்த மேலதிகத் தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
- நூற்றுக்கும் அதிகமான ஆப்பிரிக்கக் குழந்தைகளை அழைத்துச் சென்ற தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகளை சாட் அரசு கைது செய்துள்ளது : ஆப்பிரிக்காவின் சாட் நாட்டில் இருந்து நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளை பிரான்ஸ் நாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற தன்னார்வ அமைப்பு ஒன்றின் அதிகாரிகளை சாட் நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
- நானூறு வயதான சிப்பி : சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டின் வடக்கு அத்திலாந்திக் பெருங் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒருவகையான சிப்பி, சுமார் 405 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். உலக வரலாற்றில், மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரினமாக இந்த கடற் சிப்பி கருதப்படுகிறது. இத்தனை நாள் இந்த சிப்பி உயிர்வாழ்ந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள்
- இராக்கில் வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளை நீதி விசாரணைக்கு உட்படுத்த வழி செய்யும் சட்டமூலம் : இராக்கில் செயற்படுகின்ற வெளிநாட்டு பாதுகாப்புத்துறை ஒப்பந்ததாரர்கள், குற்றவிசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுவதிலிருந்து தப்பிக்க வழி செய்யும் தற்போதைய சலுகையை ரத்துச் செய்யும் வகையிலான சட்டமூலம் ஒன்றுக்கு இராக்கிய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது
- பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்கு அருகாமையில் ஒரு தற்கொலைதாரி குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டார்கள் என்றும், பலர் காயமடைந்தார்கள் என்றும் கூறப்படுகிறது
- எலிசபெத் மகாராணியாரைச் சந்தித்த சவூதி அரசர் : லண்டனில் சவூதி மன்னர்பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணமாக வந்திருக்கும் சவூதி அரேபிய அரசர் அப்துல்லா அவர்களின் பயணத்தின் முதல் நிகழ்வாக, எலிசபெத் அரசியார் அவரை முறைப்படி வரவேற்றார்
- இராக்கின் மிகப் பெரிய அணையின் பாதுகாப்புக் குறித்து அமெரிக்கா கவலை : இராக்கில் உள்ள மிகப் பெரிய அணையின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மோசூல் நகருக்கு வடக்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் டைக்ரிஸ் நதியின் குறுக்காக இந்த அணைக்கட்டு அமைந்துள்ளது
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:08 PM
0
comments (நெற்றிக்கண்)
October 29, 2007
இன்றைய குறள்
எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்
பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப்பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்
அறத்துப்பால் : பிறனில் விழையாமை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:06 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 144 - ம் குறள்
சம்பாதிக்க வழியா இல்ல.. இவரப்பாருங்க!
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:54 PM
0
comments (நெற்றிக்கண்)
முட்டாள்தனம் மனித இனத்தின் அசிங்கம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:21 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு கத்திக்குத்து
- தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.கிருஷ்ணசாமியை இன்று திங்கட்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சில அடையாளம் தெரியாத நபர்கள் வேல்கம்புகளாலும் கத்தியாலும் குத்தியிருககின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கணிசமான அளவு இரத்த இழப்பு ஏற்பட்டிருககிறது, அவர் தற்போது மதுரை தனியார் மருத்துவமனையன்றில் அனுமதிககப் பட்டிருககிறார். உயிருககு ஆபத்தில்லை என்று கூறப்படுகிறது. நாளை பசும்பொன்னில் நடைபெறவிருககும் முத்துராமலிங்கத்தேவர்அஞ்சலி நிகழ்ச்சி தொடர்பாக ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. முக்குலத்தோரைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவரென நினைத்து கிருஷ்ணசாமி தாக்கப்பட்டிருகககூடும் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
- நைஜீரியாவில் 3 தமிழர்கள் உட்பட 4 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர் : எஃப்.பி.எஸ்.ஓ. மிஸ்ட்ராஸ் என்ற இத்தாலிய நிறுவனத்திற்காக நைஜீரியாவின் எண்ணைக் கிணறு ஒன்றில் வேலைபார்த்துவந்த நான்கு இந்தியர்கள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு பிடித்துச்செல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்ட வடக்கான் குளம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட நான்கு இந்தியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டனர். நான்காவது நபர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். இவர்களை விடுவிக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நைஜீரியாவுக்கான இந்தியாவின் துணைத் தூதர் அனில் த்ரிகுணாத் தமிழோசையிடம் விளக்கினார். கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.
அவர் தெரிவித்த விபரங்களை நேயர்கள் கேட்கலாம் - மும்பை பங்கு சந்தையின் புதிய சாதனையும், நிலமற்ற ஏழை விவசாயிகளின் போராட்டமும் : இந்தியாவின் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் இன்று 20 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துசென்றுள்ளது. பங்குச் சந்தையின் அதிவேக வளர்சியின் காரணமாக இந்திய நிறுவனங்களின் மதிப்பு உயந்துள்ளது
- வட இலங்கையில் இராணுவத்தினர் புலிகள் இடையில் மோதல் வலுத்துள்ளது : இலங்கையின் வடக்கே மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மன்னார் தம்பனை பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்திருந்த பொறிவெடியில் சிக்கிய இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
- பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் மேற்குலக நாடுகளின் ஈடுபாடு போதாது என்கிறார் சவுதியரேபிய மன்னர் : பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் போதிய முயற்சி எடுக்கவில்லை என்று தான் நம்புவதாக சவுதியரேபிய மன்னர் அப்துல்லா கூறியுள்ளார்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:13 PM
0
comments (நெற்றிக்கண்)
October 28, 2007
வெளிநாடுகளுக்குச் சென்ற விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு வரவேண்டும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:50 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்
நம்பிப் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்
அறத்துப்பால் : பிறனில் விழையாமை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:41 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 143 - ம் குறள்
சம்பாதிக்க வழியா இல்ல.. இவரப்பாருங்க!!
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:39 PM
0
comments (நெற்றிக்கண்)
கறும்புலிகள் புதைக்கப்பட்ட சர்ச்சை தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி கருத்து
- சமீபத்தில் அநுராதபுர விமானதள தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் சடலங்கள் முறையான நீதிமன்ற உத்தரவின்றி புதைக்கப்பட்டு விட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த பின்னணியில், இந்த சடலங்களை புதைக்கும் முடிவை தாம் எடுத்ததாக பிபிசியிடம் தெரிவித்தார் இந்த சடலங்களை பிரேதப் பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் அஜித் ஜெயசேன. போதுமான குளிர்பதன வசிதியில்லாததன் காரணமாக அனுராதபுரத்தில் இந்த சடலங்களை வைக்க தங்களுக்கு வசதியில்லை என்றும் அதனால் பேரிடர் ஏற்படும்போது சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட நடைமுறைக்கேற்ப தற்காலிகமாக உடல்களை புதைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சடலங்களை புதைக்க நீதிமன்ற உத்தரவு தேவை என்றும் அது போன்ற உத்தரவு இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கும் அஜித் ஜெயசேன, தாம் உள்ளிட்ட பிரேதப் பரிசோதனை செய்த குழுவினர் இந்த 21 சடலங்களை தற்காலிகமாக புதைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். இந்த சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பெற்றுக்கொள்ள விடுதலைப் புலிகள் விரும்பினால் அது சாத்தியம் என்றே தாம் நினைப்பதாகவும், இந்த சடலங்களை பொறுப்பானவர்கள் எடுத்துச்செல்லும்வரை அவற்றை குறிப்பிட்ட காலத்துக்கு புதைத்து வைத்த முடிவுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
- இந்தியாவில் ஆடை தயாரிக்க குழந்தை தொழிலாளர் பயன்படுத்தப்பட்டது குறித்து 'கேப்' நிறுவனம் அதிர்ச்சி : இந்தியாவிலிருந்து 'கேப்' நிறுவனத்துக்கு கொள்முதல் செய்யப்படும் ஆயத்த ஆடைகளை தயாரிக்க சில இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவந்ததை அடுத்து, இது தொடர்பாக விவாதிக்க இந்தியாவில் இருந்து ஆயத்த ஆடைகளை அனுப்பும் நிறுவனங்களை சர்வதேச ஆடை நிறுவனமான 'கேப்' அவசரப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆடைகளை தயாரிக்க குழந்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றுவந்த தகவல்கள் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாகவும், அவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆடைகள் அழிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. பிபிசி நிறுவனத்துக்கு கிடைத்த தொலைக்காட்சி படத்தில்,'கேப்' நிறுவனத்திற்கான ஆடைகளை தயாரிக்கும் ஒரு துணை ஒப்பந்ததாரரின் தொழிற்சாலையில் ஒரு சிறுவன் 'கேப்' நிறுவனத்தின் அச்சு பொறுத்தப்பட்ட உடையை தைப்பது தெரிந்தது.
- நெஞ்சம் மறப்பதில்லை - ஆறாம் பாகம் : ஒரு மூலக் கதையை திரையில் சுவாரஸ்யமாக அளிக்கும் வகையில் திரைக்கதை அமைப்பதில்தான் ஒரு இயக்குநரின் திறமை அடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். திரைக்கதை அமைப்பதில் கிருஷ்ணன்-பஞ்சு இரட்டை இயக்குநர்கள் மிகவும் கைதேர்ந்தவர்கள்; கதைக்கு ஏற்ப அழகான முறையில் பாத்திரங்களை உருவாக்கி சம்பவங்களைக் கோர்த்து கொடுப்பதில் இவர்கள் வல்லவர்கள் என்கிறார் சம்பத்குமார். அண்ணாதுரையின் கதை வசனத்தில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் உருவான 'நல்லதம்பி' திரைப்படமானது, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு போன்ற பிரச்சாரங்களை செய்வதாகவும் சமதர்ம சமுதாயத்தை இலக்காகக் கொண்ட படமாகவும் விளங்கியது. அவர்கள் இயக்கிய 'பராசக்தி' திரைப்படம் தமிழ் திரையுலகின் மைல்கல். கருணாநிதியின் கணல் தெறிக்கும் வசனங்களும், சிவாஜி கணேசனின் ஆக்ரோஷ நடிப்பும், புரட்சிக் கருத்துகளும் அடங்கிய படமிது. கிருஷ்ணன்-பஞ்சு படங்களில் கனமான கதையம்சம், உணர்ச்சிப்பூர்வமான பாத்திரப்படைப்பு, கண்ணியமான காட்சியமைப்பு இருந்ததை நெஞ்சம் மறப்பதில்லை ஆறாம் பாகம் எடுதியம்புகிறது.
- நிலச் சீர்திருத்தம் கோரி தில்லியில் பெரும் ஆர்ப்பாட்டம் : இந்தியத் தலைநகர் புதுதில்லியில் இன்று ஞாயிற்றுக்கிழமை 25 ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பெருந்திரளாக கூடியுள்ளனர். நான்கு வார காலம் நடைப் பயணமாக 325 கிலோமீட்டர் தூரம் ஊர்வலம் மேற்கொண்டு வந்துள்ள இவர்கள் விவசாய நிலங்களில் தமக்கும் பங்கு கேட்டு போராடுவதற்காக தில்லி வந்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நிலமற்ற பழங்குடியின மக்களும் அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளிகளும் அடங்கிய இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், நிலச் சீர்திருத்தம் வரவேண்டும், விவசாய நிலங்களின் மீதான உரிமை குறித்து தெளிவான சட்டங்கள் வரவேண்டும் என்று கோருகின்றனர். தெளிவான சட்டங்கள் இல்லாத காரணத்தினாலேயே தொழிலாளிகளுக்கு நிலம் கிடைப்பதில்லை என்றும் நடைமுறையிலுள்ள விதிமுறைகளும் பெரு நில உரிமையாளர்களுக்கு சாதகமாகவே இருப்பதாகவும் அவர்கள் குமுறுகின்றனர். கிராமத்து ஏழை மக்களிலேயே மிகவும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களடங்கிய இந்த ஊர்வலத்தினர் தமது கோரிக்கையை அதிகார உயர்மட்டத்துக்கு கொண்டுசெல்ல விழைகிறார்கள்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை அவர்கள் ஏற்கனவே சந்தித்துள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங்கையும் நாளை திங்கட்கிழமை அவர்கள் சந்திக்கவிருக்கிறார்கள். நில மறு பங்கீட்டு கோரிக்கை என்பது இந்திய அரசியல் அரங்கின் வழமையான ஒரு அங்கம்தான் என்றாலும் தற்போது கோரிக்கைகளை செவிமடுக்கும் ஒரு மனோநிலையில் அரசாங்கம் இருப்பதுபோல் தெரிகிறது. நில மறு பங்கீட்டு ஆணைக்குழு இதோ வந்துகொண்டிருக்கிறது என்று அரசு வாக்குறுதியளித்துள்ளது. தில்லி நிலச் சீர்திருத்த ஆர்ப்பாட்டம் பற்றி செய்தியாளர் ஜதிந்தர் சித்து வழங்ய தகவல்களின் தமிழ் வடிவத்தையும் இந்திய விவசாய நிலங்களின் தற்போதைய நிலைமை குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் துரை மாணிக்கம் அவர்களின் செவ்வியையும் நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம். - இலங்கை மோதல்களில் புலிகள் 14 பேர், இராணுவத்தினர் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் : இலங்கையின் வடக்கே இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் 14 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
- இராக்-துருக்கி நெருக்கடி ஆபத்தானது: இராக் வெளியுறவு அமைச்சர்
இராக் மற்றும் துருக்கி இடையிலான எல்லைப் பகுதியில் குர்த் இன பிரிவினைவாத இயக்கம் பி.கே.கே நடத்திய தாக்குதல் காரணமாக இருநாடுகள் இடையில் ஏற்பட்டுள்ள தகராறு 'மிக ஆபத்தானது' என்று இராக்கி வெளியுறவு அமைச்சர் ஹொஷ்யார் ஸெபாரி கூறியுள்ளார் - ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள் 80 பேரை கொன்றுள்ளதாக அமெரிக்க மற்றும் ஆப்கானிய படைகள் அறிவிப்பு : ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள் சுமார் 80 பேரை கொன்றுகுவித்திருப்பதாக அங்குள்ள அமெரிக்க மற்றும் ஆப்கானிய படைகள் கூறுகின்றன
- பாகிஸ்தானில் தொடரும் மோதல் : சமீப காலமாக பதற்றம் நிலவி வரும் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் தாக்குதல் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் செயல்படும பாகிஸ்தானிய படையினரும் - இஸ்லாமியத் தீவிரவாதிகளும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:22 PM
0
comments (நெற்றிக்கண்)
ஈழக்கிழவனின் கொஞ்சநேரம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:54 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Yarl.com
இதயத்தைப் பிழியும், உயிர்வலிக்கும் நம் சகோதரர்களின் சோககீதம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:39 PM
0
comments (நெற்றிக்கண்)
October 27, 2007
யுகேந்திரன் மலேசியா வாசுதேவன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:43 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:21 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 142 - ம் குறள்
கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு
- ஜனதாதளத்தில் திடீர் மாற்றம் : கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு மூன்று வாரங்கள் ஆன நிலையில் இரு கட்சிகளும் மீண்டும் ஆட்சி அமைக்க முனைந்திருக்கின்றன. பாரதீய ஜனதா ஆதரவுடன் இருபது மாதங்கள் ஆட்சி நடத்திய மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒப்பந்தப்படி பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்துவிட்டது. மக்களைச் சந்திக்கத் தயார் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் தெரிவித்தது.
அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும், சட்டப்பேரவை கலைக்கப்படாமல், இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் அதை மீண்டு்ம் இயக்கத்துக்குக் கொண்டுவர முடியும். இந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டிருக்கிறது. பாஜக-வின் யெதியூரப்பா தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து, மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் குடியரசுத் தலைவர் மற்றும் கர்நாடக ஆளுநருக்கு கடிதங்களை அனுப்பியிருப்பதாக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தேசிய தலைவர் தேவகெளடவின் மகனுமான எச்.டி. குமாரசாமி தெரிவித்தார். இந்த திடீர் அரசியல் மாற்றம் குறித்து, கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. கட்டா சுப்ரமணியத்திடம் கேட்டபோது, ஏற்கெனவே ஆதரவு தர மறுத்த மதச்சார்பற்ற ஜனதாதளத்தினர் தற்போது தாங்களாகவே ஆதரவு தர முன் வந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
கர்நாடக ஆளுநரிடம் தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரியிருப்பதாகவும், ஆதரவுக் கடிதங்களை ஆய்வு செய்துவிட்டு முடிவு அறிவிப்பதாக அவர் தெரிவித்திருப்பதாகவும் கட்டா சுப்ரமணியம் தெரிவித்தார். - இந்திய காஷ்மீரின் ஸ்ரீநகரில் இந்திய நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் : இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீர் பகுதியின் பிரதான நகரமான ஸ்ரீநகரில் இந்தியப் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடந்துள்ளது
- பாகிஸ்தானில் கடும்போக்கு மதகுரு ஆதரவாளர்கள் 13 பேரை கொன்றுள்ளனர் : வடமேற்குப் பாகிஸ்தான் பகுதியில் சுமார் 13 பேர் கடும்போக்கு முஸ்லிம் மதகுரு ஒருவருடைய ஆதரவாளர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர்
- மன்னார் மாவட்ட மடு தேவாலயப் பகுதியை பாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்க மன்னார் ஆயர் ஜனாதிபதியிடம் கோரிக்கை : மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் கஷ்டங்களைப் போக்குவது தொடர்பாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், கொழும்பு பேராயர் மற்றும் மடு தேவாலய பரிபாலகராகிய அருட்தந்தை எமிலியாஸ் பிள்ளை ஆகியோருடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்
- ஜார்க்கண்ட் மாவோயியவாதிகள் தாக்குதலில் 17 பேர் பலி : இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஜார்க்கண்டில் சனிக்கிழமை அதிகாலை மாவோயிய கிளர்ச்சிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டியின் மகன் உள்பட 17 பேர் கொல்லப்பட்டார்கள்
- சோமாலியத் தலைநகரில் கடும் சண்டை : சோமாலியத் தலைநகர் மொகதிஷுவில் பலத்த மோதல் வெடித்துள்ளது. நகரின் தென்பகுதியில் ஷெல் குண்டுகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டுள்ளன
- இன்றைய (அக்டோபர் 27 சனிக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:10 PM
0
comments (நெற்றிக்கண்)
October 26, 2007
இன்றைய குறள்
பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:42 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 141 - ம் குறள்
நான் தமிழன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:16 PM
0
comments (நெற்றிக்கண்)
இழப்பு ஒன்றரை கோடி அமெரிக்க டொலர்கள்
- அனுராதபுரம் விமானப்படை தள தாக்குதல்: ஒன்றரை கோடி அமெரிக்க டொலர்கள் சேதம் என்கிறது இலங்கை விமானப்படை
கடந்த வியாழனன்று அனுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானப்படையின் எட்டு விமானங்கள் சேதமடைந்ததில் ஏற்பட்டுள்ள இழப்பு ஒன்றரை கோடி அமெரிக்க டொலர்கள் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது - இந்தியாவில் நெல் கொள்முதல் விலையும் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது : இந்தியாவில் கோதுமைக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுபோல், நெல்லுக்கான கொள்முதல் விலையும் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்று விவசாய அமைப்புக்களும் பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன
- தவறான செய்தி வெளியிட்டமைக்காக இலங்கை ஏபிசி நிறுவன ஒலிபரப்பு சேவைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது : இலங்கை ஊடகத்துறை அமைச்சர்இலங்கையின் ஏபிசி வானொலி குழுமம் தவறான செய்தி ஒன்றை நேற்று 25ஆம் தேதி ஒலிபரப்பியதாக தெரிவிக்கப்பட்டு அதன் ஒலிபரப்பு உரிமம் ரத்துசெய்யப்பட்டுள்ளது
- இரான் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று ரஷ்யா கோருகிறது : இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய சர்வதேசத் தடைகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்
- சாட் நாட்டில் இருந்து குழந்தைகளைக் கடத்த முயன்றதை யூனிசெஃப் கண்டித்துள்ளது : ஆப்பிரிக்காவின் சாட் நாட்டிலிருந்து பிரான்சுக்கு 103 குழந்தைகளை கடத்த முயன்று, தோல்வியடைந்த சம்பவம் ஒன்றை ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியமான யூனிசெஃப் வன்மையாக கண்டித்துள்ளது
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:06 PM
0
comments (நெற்றிக்கண்)
நாம் எங்கிருக்கிறோம்? என்ன கொடுமை இது? என்று தணியும் இந்தக் கோரம்?
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:52 PM
0
comments (நெற்றிக்கண்)
நான் மூண்டாவது தரமும் காயம் பட்டிட்டன். தொடர்பைத் துண்டிக்கிறன்....." என்ற வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்கிப்போகின்றது
கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது.
விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினர், வான் புலிகளின் உதவியுடன் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்ட வெற்றிகரமான 'எல்லாளன் நடவடிக்கை" அதிரடித் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் சிங்கள அரசோ அல்லது சிங்களப் படைத்தரப்போ மீளமுடியாமல் இருக்கின்றது.
தேசியத் தலைவரினால் மிகவும் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு துல்லியமான முறையிலே குறுகிய நேரத்தினுள் சிறப்பு கரும்புலி அணியினரால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளின் தாக்குதல் தந்திரோபாயங்களையும் அவர்களது போரிடும் ஆற்றலையும் வல்லமையையும் மீண்டும் ஒரு தடவை சிங்கள அரசிற்கும் உலகத்திற்கும் நிரூபித்துள்ளதாக பல்வேறு படைத்துறை ஆய்வாளர்களும் அனைத்துலகச் செய்தி நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன.
கரும்புலிகள் வசப்படுத்திய அந்த நிமிடங்கள்...
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகளையும் இயந்திர துப்பாக்கிகளையும் பயன்படுத்தி காவலரண்களிலும் வான் தளத்தினுள்ளும் பாதுகாப்புக் கடமையில் இருந்த சிறிலங்கா படையினரின் மீது தாக்குதல்களை நடத்தி வான் படைத்தளத்தினை தமது கட்டுப்பாட்டின்கீழ் வந்தனர். அதன்பின்னர் புலிகளின் அணியினர், இளங்கோவுடன் ஒரு பகுதியாகவும் வீமனுடன் ஒரு பகுதியாகவும் இரு குழுக்களாகப் பிரிந்து வான் படைத்தளத்துள் தரித்து வைக்கப்பட்டிருந்த வானூர்திகளை அழிப்பதிலும் ரேடார் நிலையங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட நிலைகளை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
ஒரு மணித்தியால நேர இடைவெளிக்குள் மூன்று கிலோ மீற்றர் நீளத்தையும் இரண்டரைக் கிலோ மீற்றர் அகலத்தையும் கொண்ட அனுராதபுரம் பாரிய விமானப்படைத்தளத்தினை கரும்புலிகள் அணியினர் வெற்றிகரமாக தாக்கி தமது முற்றுமுழுதான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அப்போது விடுதலைப் புலிகளின் வான்படையினரின் இரண்டு வானூர்திகள், அனுராதபுரம் வான்படைத்தளத்தினுள் உள்நுழைந்து இரண்டு குண்டுகளை வீசி அப்படைத்தளத்திற்கு மேலும் பாரிய சேதங்களை ஏற்படுத்தின.
அந்த வான்தளத்தினை திங்கள் முற்பகல் 11.00 மணிவரை தமது கட்டுப்பாட்டிற்குள் கரும்புலிகள் அணியினர் வைத்திருந்ததுடன் அனுராதபுரம் வான்படை தளத்துள் தரித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து வானூர்திகளையும் தாக்கியழித்தனர். அந்த வான்படை தளத்துக்கு உதவி புரிவதற்காக வவுனியாவில் இருந்த அனுப்பப்பட்ட பெல்-212 உலங்குவானூர்தியானது மகிந்தலைப் பகுதியில் வானூர்தி எதிர்ப்பு ஆயுதத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதில் பயணம் செய்த நான்கு வான்படையினர் உலங்குவானூர்தியுடன் வீழ்ந்து உடல் சிதறிப் பலியாயினர்.
இந்த தாக்குதல்களின் போது சிறிலங்கா வான்படையின் எட்டு வானூர்திகள் அழிக்கப்பட்டதாக முதலில் செய்திகள் வெளிவந்தாலும் தற்போது கிடைக்கும் நம்பகமான தகவல்களின் படி 18 வரையிலான வானூர்திகள் அப்படைத்தளத்தின் மீதான தாக்குதலின் போது அழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன கடந்த 24 ஆம் நாள் புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது 660 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 18 வானூர்திகள் முற்று முழுதாக அழிக்கப்பட்டு அல்லது சேதமாக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
அதாவது
எம்.ஐ-24 உலங்குவானூர்திகள்- 02
எம்.ஐ-17 உலங்கு வானூர்தி - 01
பெல்-212 - 01
பீச் கிராப்ட்- 01,
மு-8 பயிற்சி வானூர்தி - 01
Pவு-6 பயிற்சி வானூர்தி - 03
ஆளில்லா வேவு வானூர்தி - 03
செஸ்னா வானூர்தி - 06
ஆகியன இத்தாக்குதலின் போது புலிகளினால் அழிக்கப்பட்டதாக தெரிவித்த செனிவிரட்ன இது தவிர மேலும் மூன்று வானூர்தி அழிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் வெளியிடப்படும் என்றும் லக்ஸ்மன் செனிவிரட்ன தெரிவித்தார்.
இத்தாக்குதல்களின் போது சிறிலங்காப் படையினர் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் சிறிலங்கா அரச தரப்பினர் செய்திகளை வெளியிட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் விங் கொமாண்டர் அமிலா மொகொட்டி, ஸ்குவார்டன் லீடர் ருவான் விஜயரட்ன மற்றும் இரண்டு பிளையிங் ஒபிசர்கள், நான்கு கோப்பரல்கள், இரண்டு லான்ஸ் கோப்பரல்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
விடியும் வரை விழித்திருந்த அனுராதபுரம் மக்கள் :
அனுராதபுர நகரமானது அதிகாலை 03:20 மணியில் இருந்தே குண்டு சப்தங்களாலும் துப்பாக்கி வேட்டொலிகளினாலும் அதிர்ந்துகொண்டிருந்தது. அந்நகர மக்கள் இச்சத்தங்களினால் நித்திரையில் இருந்து திடுக்கிட்டு எழுந்ததுடன் பயப்பீதி காரணமாக பின்னிரவு முழுவதும் விழித்திருந்தனர்.
விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் மிகவும் இரைச்சலுடன் தாழப்பறந்து குண்டுவீசியதை தாம் கண்டதாக பல மக்கள் செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்திருந்தனர். மேலும் முகாம் பகுதியில் பாரிய நெருப்புக்கோளங்களையும் தீச்சுவாலைகளையும் கண்டதாக முகாமிற்கு அருகில் வசித்தவர்கள் தெரிவித்தனர்.
அனுராதபுர வான்படைத்தள தாக்குதலின் முக்கியத்துவம்
சிறிலங்கா அரசும் சிங்கள படைத்துறையும் விடுதலைப் புலிகளை போரில் வென்று வருவதாகவும் விரைவில் புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருக்கும் வன்னி பிராந்தியத்தினையும் சிங்களப்படைகள் கைப்பற்றும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிக்கைகளை வெளியிட்டு தென்னிலங்கையிலே வாழுகின்ற சிங்கள மக்களையும் மற்றும் அனைத்துலக சமூகத்தினையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில்தான் இத்தாக்குதல் நடவடிக்கை புலிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இத்தாக்குதலின் மூலம் பல செய்திகளை விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசிற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் உணர்த்த முயன்றிருக்கின்றார்கள்.
- இலங்கைத்தீவின் அரசியல் மற்றும் படைத்துறை தொடர்பான விடயங்களை தீர்மானிப்பதில் விடுதலைப் புலிகள் செல்வாக்கு செலுத்துகின்ற பாரிய சக்தியாக தொடர்ந்தும் விளங்குகின்றார்கள் என்பது முதலாவது.
- சிறிலங்கா அரசின் பாதுகாப்பு கட்டமைப்புக்களுக்கெல்லாம் தண்ணி காட்டியபடி தென்னிலங்கையின் எப்பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி தம்மால் வெற்றிகரமாக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது இரண்டாவது.
- சிங்களப் படைத்துறையின் வடபோரரங்கு தாக்குதல் நடவடிக்கைக்கான பிரதான பின்தள மையமாக அனுராதபுரம் படைத்தளம் விளங்குவதால் அங்கு மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதல் மூலம் சிங்களப் படைத்தரப்பின் எதிர்கால மூலோபாய நடவடிக்கைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியமை மூன்றாவது.
- சிங்களப் படையினர் தமிழீழத்திலே அகலக்கால் வைப்பதனால் தமிழீழத்தில் மட்டுமல்லாது தென்னிலங்கையில் காணப்படுகின்ற சிங்கள படை முகாம்கள் எல்லாமே புலிகளினால் இலகுவாக தாக்கியழிக்கப்படும் என்ற செய்தியை தெரிவித்துள்ளமை நான்காவது.
- விடுதலைப் புலிகளின் தரைப்படையுடன் வான்படையும் இணைந்து நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்ற மரபுவழி போரியல் ஆற்றலை வெளிப்படுத்தியமை ஐந்தாவது.
- இந்த வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கையின் மூலம் தாயகம், மற்றும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்களின் மனங்களிலே வெற்றிக்களிப்பினையும் உற்சாகத்தினையும் ஏற்படுத்தியமை ஆறாவது.
இளங்கோவனின் இறுதிக் குரல்....
விடுதலைப் புலிகளினால் முற்றுமுழுதான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த அனுராதபுரம் வான்படைத் தளத்தை மீளக் கைப்பற்றுவதற்காக பலமுறை சிறிலங்கா அரச படைகளானது முயற்சித்தபோதும் கரும்புலிகளின் மூர்க்கத்தனமான எதிர்த்தாக்குதல் காரணமாக அது சாத்தியமாகவில்லை.
வான்படைத் தளத்தின் கள நிலைமைகளைத் தெளிவாக வன்னியின் கட்டளைப்பீடத்திற்கு தொடர்ச்சியாக தெரிவித்துக்கொண்டிருந்த கரும்புலிகள் அணியின் தலைவர் லெப். கேணல் இளங்கோ, மூன்றாவது முறையாகவும் காயமடைகின்றார். அந்நிலையில் தனக்கு கீழ் செயற்பட்ட கரும்புலி வீரர்களுக்குரிய கட்டளைகளைச் சரிவர வழங்கி, தலைவன் நினைவைச் செயலில் முடித்த அந்த வீரன் கட்டளைப் பீடத்திற்கு தனது இறுதி வரிகளை கூறுகின்றான்.
"தலைவர் நினைச்சதை நாங்கள் செய்து முடிச்சிட்டம். நீங்களும் தலைவரின் திட்டத்தை சரியாகச் செய்யுங்கோ. தலைவர்தான் கவனம். அவர கவனமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கோ. நான் மூண்டாவது தரமும் காயம் பட்டிட்டன். நான் தொடர்பைத் துண்டிக்கிறன்....." என்ற வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்கிப்போகின்றது.
இந்த கரும்புலிகளின் உயரிய அர்ப்பணிப்பு, தற்கொடை, தமிழ் மக்களின் மீதும் தேசியத் தலைவரின் மீதும் அவர்கள் வைத்திருந்த பாசம், அன்பு எல்லாமே போற்றுதற்குரியது. அந்த வீரர்களின் உயரிய விருப்பமான தமிழீழம் என்ற இலட்சியத்தினை அடைவதற்கு நாம் எல்லோரும் தலைவரின் பின்னால் அணிதிரண்டு சிங்கள படைகளுக்கு எதிராகப் போராடி சுதந்திர தமிழீழத்தினை விரைவில் அமைக்கவேண்டும். இதுவே இந்த மண்ணுக்காக தமது இன்னுயிர்களை ஈந்த அந்த கரும்புலி மாவீரர்களின் தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புக்களுக்கும் நாம் செய்யும் மரியாதையாக அமையும்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:13 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தமிழ்நாதம்
குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ
அகமதாபாத்: குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது. குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50-க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது. அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது. ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர். தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.
வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..
கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார். மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் கொலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.
போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...
விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்கள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.
பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....
பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார். மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார். நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார். இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன. குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ரத்தோட் என்பவர் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ மாயா பென் வீதி வீதியாக சென்று முஸ்லீம்களை விரைவாக கொல்லுங்கள், யாரையும் விடாதீர்கள் என்று வேகப்படுத்தினார் என்று கூறியுள்ளார். சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், போலீஸார் எங்களை அழைத்து சில இடங்களை சுட்டிக் காட்டி இங்கு முஸ்லீம்கள் சிலர் ஒளிந்துள்ளனர். அவர்களை விடாதீர்கள் என்று எங்களுக்கு வழி காட்டினர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று வெளியிலிருந்து கதவுகளை மூடி உள்ளேயே வைத்து அவர்களை எரித்துக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளார்.விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ரமேஷ் தவே கூறுகையில், இதை நாங்கள் இப்போது செய்யவில்லை. கடந்த 20, 25 வருடங்களாகவே எங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் (முஸ்லீம்கள்) கொன்று குவித்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவே.
அரசு, நீதித்துறை, காவல்துறையின் கூட்டுச் சதி:
குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில், கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார். கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். முஸ்லீம்களைக் கொன்ற தினத்தை ஆண்டுதோறும் இந்துக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதே சமயம் அவர்களைக் கொல்வதை விட நசுக்குவதுதான் மிகவும் சிறந்தது. இதன் மூலம் முஸ்லீம்கள் காலம் பூராவும் இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள். முஸ்லீம்களைக் கொல்வதைப் போல அவர்கள் மீது பொருளாதார நெருக்கடியைத் திணிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாண்ட்யா இதை விட பயங்கரமாக, இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஷா கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டன பாஜக மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், நீதிபதி நானாவதியுடன் கூட்டாக விசாரித்த கே.ஜி.ஷா (இவர்தான் கமிஷனின் தலைவர்) ஒரு பாஜக அனுதாபி என்றும் கூறியுள்ளார் பாண்ட்யா. வி.எச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்கு சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக அவர்கள் வாதாடினர் என்றார்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:42 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தட்ஸ் தமிழ்
October 25, 2007
கற்றது தமிழ் / தமிழ் எம்.ஏ. இயக்குனர் ராம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:58 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:57 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 140 - ம் குறள்
திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் சட்டம் குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு
- இந்தியாவில் திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்குள் உரிய சட்ட விதிகளை ஏற்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்துக்கு வந்த ஒரு விவாகரத்து வழக்கு, தற்போது தேசிய அளவில் இதுபோன்ற உத்தரவை நீதிமன்றம் பிறப்பிப்பதற்கு வழி ஏற்படுத்தியிருக்கிறது. சீமா என்பவர், தனது கணவர் அஸ்வினிகுமாரிடமிருந்து விவாகரத்து கோரி கடந்த 2005 ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்தபோது, திருமணம் நடந்ததற்கான ஆதாரத்தை நீதிமன்றம் கேட்டது. அதை அவர்களால் தர முடியவில்லை. இதையடுத்து, திருமணங்கள் பதிவு செய்வதைக் கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார் சீமா. இந்திய திருமணம் ஒன்றில் குதிரையில் வரும் மணப்பெண்அதே நேரத்தில், குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், இருதரப்பினரின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் திருமணங்களைத் தடுக்கவும், குறைந்தபட்ச திருமண வயதை உறுதி செய்யவும் திருமணப் பதிவுகள் உதவிகரமாக இருக்கும் என்று தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளும் கருத்துத் தெரிவித்திருந்தன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அனைத்து மதத்தினரும் திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும், அது தொடர்பாக மாநிலங்கள் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. மூன்று மாதங்களுக்குள் அதைச் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், அந்த வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் நீதிமன்ற உத்தரவின்படி செயல்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அந்த உத்தரவைச் செயல்படுத்தவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், திருமணப் பதிவைக் கட்டாயமாக்கும் வகையில் உரிய சட்டத்திருத்தம் செய்து, அதற்குரிய விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என்று நீதிபதி அரிஜித் பசாயத் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. பல மாநிலங்கள், திருமணப் பதிவை இந்துக்களுக்கு மட்டும் கட்டாயமாக்கியிருப்பது குறித்து சுட்டிக்காட்டிய நீதிமன்றம்,இந்த திருமணப் பதிவுகள் இந்துக்களுக்கு மட்டுமன்றி, அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
- இராணுவ அரசின் பிரதிநிதியை சந்தித்துள்ளார் அங் சான் சூ சீ: பர்மாவின் ஜனநாயக ஆதரவு தலைவி அங் சான் சூ சீ கடந்த இருபது ஆண்டுகளில் பெரும்பான்மையான காலத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தன் வீட்டிலிருந்து இராணுவ அரசின் உறுப்பினர் ஒருவரை சந்திப்பதற்காக வெளியில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்
- பிபிசி செய்தியாளர் கடத்தப்பட்ட அனுபவம் குறித்த பெட்டகம் : மத்திய கிழக்கின் காசா பிராந்தியத்தில் செயற்படுகின்ற ஜிகாத் அமைப்பான இஸ்லாத்தின் இராணுவம் என்னும் அமைப்பால் கடத்தப்பட்ட பிபிசியின் முன்னாள் காசா நிருபர் அலன் ஜோண்ஸ்டன் அவர்கள், தான் கடத்தப்பட்டபோது தனக்கேற்பட்ட அனுபவங்களை முதல் தடவையாகப் பேசியுள்ளார்
- இரான் மீது அமெரிக்கா புதிய தடைகள் : இரான் மீது அமெரிக்கா ஒருதலைபட்சமான மேலதிக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இரானிய இராணுவத்தின் சில பிரிவுகள் மீதும், மூன்று வங்கிகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள இத்தடைகள் அமெரிக்காவின் நலன்களை காப்பதாக இருக்கும் என்று அரசுத்துறைச் செயலர் கொண்டலீசா ரைஸ் தெரிவித்தார்
- பிகேகேயின் நடவடிக்கைகளை சகிக்க முடியாது என்கிறார் துருக்கிய அதிபர் : வட இராக்கில் இருந்து செயல்படும் துருக்கிய குர்து இன இயக்கமான பிகேகே துருக்கி பிரதேசத்துக்கள் நடத்தும் எவ்வித தாக்குதலையும் தன்னால் சகித்துக்கொள்ளமுடியாது என்று துருக்கிய அதிபர் அப்துல்லா குல் கூறியுள்ளார்
- பாகிஸ்தான் தாக்குதலில் 33 பேர் பலி : பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு வாகனம் ஒன்றை இலக்குவைத்து நடத்தப்பட்டுள்ள குண்டுத் தாக்குதலில் 29 படையினர் உட்பட குறைந்தபட்சம் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
- இன்றைய (அக்டோபர் 25 வியாழக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:04 PM
0
comments (நெற்றிக்கண்)
சர்க்கரை குறைபாடு
- குழறலாகப் பேசுதல்
- தலை சுற்றல்
- மயங்கி விழுதல்
- கண் பார்வை மங்குதல்
- வலிப்பு ஏற்படுதல்
- இதயத் துடிப்பு அதிகரித்தல்
- படபடப்பு
- கை உதறுதல்
- வியர்வை பெருகுதல்
- பசித்தல்
- மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போட்ட பின்பு சாப்பிடத் தாமதமாதல் வழக்கத்தை விட அதிகமாக உடற்பயிற்சி செய்தல்
- சரியான சமயத்தில் சாப்பிடாமல் இருத்தல் (இன்சுலினில் அதிக நேரச் செயல்பாடு உடையவை உண்டு)
- சிறுநீரகக் கோளாறு
- ஈரல் கோளாறு (liver failure)
- அதிகமாக மது அருந்துதல்
- கணையம் என்ற நாளமில்லாச் சுரப்பியில் கட்டி ஏற்படுதல் (Insulinoma).
- பிட்யூட்டரி, அட்ரினல், தைராய்டு போன்ற சுரப்பிகள் குறைவாக வேலை செய்தல்
பரிசோதனைகள்:
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:41 PM
0
comments (நெற்றிக்கண்)
நம்முடைய தனித்துவம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:39 PM
0
comments (நெற்றிக்கண்)
October 24, 2007
இன்றைய குறள்
ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:43 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 139 - ம் குறள்
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 31 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை, பாப்ரி மசூதி இடிப்பு : 15 இந்துக்களுக்கு ஆயுள் தண்டனை
- தமிழகத்தின் கோயம்புத்தூரில் 1998 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் கோவை அமர்வு நீதிமன்றத்தினால் இன்று அறிவிக்கப்பட்டது. கூட்டுச் சதி, கொலை மற்றும் கொலை முயற்சி, வெடிமருந்துகள் தடைச் சட்டத்தை மீறியது ஆகியவற்றுக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்ட 70 பேரில், 35 பேருக்கு இன்று தண்டனைகள் அறிவிக்கப்பட்டன. அல் உமா அமைப்பின் தலைவர் பாஷா மற்றும் செயலாளர் அன்சாரி உட்பட 31 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஏனைய நால்வருக்கு ஏற்கனவே அனுபவித்த தண்டனைக்காலம் போதுமானது என்று கூறி, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். எவருக்கும் மரண தண்டனை கிடையாது
- இந்தியாவில் 15 இந்துக்களுக்கு ஆயுள் தண்டனை : இந்தியாவில், 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்த சர்ச்க்குரிய பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட பிறகு நடந்த கலவரங்களில் பங்கேற்று, கொலை மற்றும் பிற குற்றங்களை செய்தமைக்காக 15 இந்துக்களுக்கு வட இந்தியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
பதினோரு முஸ்லீம்களை இவர்கள் உயிருடன் கொளுத்தியதாக நீதிமன்றம் குற்றம் கண்டுள்ளது. கொலை செய்தது, கலவரத்தில் ஈடுபட்டது, தீ வைத்தது போன்ற குற்றங்களைப் புரிந்ததாக 25 பேர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சுமார் 15 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டவர்களில் ஒருவர் இறந்து விட்டார். மற்ற 9 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் என்று தண்டனை பெற்றவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் யோகேஷ் பாஷின் கூறியுள்ளார் - குரானின் தங்கத்தால் ஆன பிரதி : இஸ்லாமியர்களின் புனித மறையான, திருக்குரானின் 800 ஆண்டு பழமை வாய்ந்த பிரதி ஒன்று லண்டனில் நடைபெற்ற ஏலத்தில், இருபது லட்சம் டாலர்கள் விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது
- விடுதலைப்புலிகளின் சடலங்கள் அநுராதபுரத்திலேயே அடக்கம் : இதற்கிடையே, அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதலின்போது கொல்லப்பட்ட 20 கரும்புலிகளின் சடலங்களும் அநுராதபுரம் மாவட்ட நீதவானின் உத்தரவுக்கமைய அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது
- ஆசியாவில் ஒரு புதிய விண்வெளிப் போட்டி : சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்கு செய்மதி ஒன்றை காவிச் செல்லும் திட்டத்துடன் இன்று சீனா ராக்கட் ஒன்றை வெற்றிகரமாக ஏவியுள்ளது.
சீனாவின், விண்வெளித் திட்டத்தில் தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சாதனை இது
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:14 PM
1 comments (நெற்றிக்கண்)
கருணை கொலைக்காக காத்திருக்கும் எய்ட்ஸ் நோயாளி
அரியானாவை சேர்ந்தவர் நந்த் கிஷோர் (70). இவரது மகன் மோகன் (30). லாரி டிரைவர். பஞ்சாபில் லாரி ஓட்டி வந்தார். பல பகுதிகளுக்கு சரக்கு ஏற்றி சென்று வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன் சந்தோஷ் என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.கடந்த ஆண்டு மோகனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பல டாக்டர்களை பார்த்தும் நிலைமை சீரடையவில்லை. வருமானத்துக்கு வழியில்லாததால், மூதாதையர் வீட்டை விற்று நந்த் கிஷோர், மகனுக்கு சிகிச்சை அளித்தார். அதன் பிறகும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு தான் மோகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிய வந்தது. இதன் பிறகு அவரது மனைவி சந்தோஷ் தனது மகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.பதேஹாபாத் அரசு மருத்துவமனையில் மோகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத் தில், மோகனுக்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை என்று கூறி, டாக்டர் கள் கைவிரித்து விட்டனர். மருத்துவமனையை விட்டு மோகனை அழைத்து செல்லும்படியும் கூறி விட் டனர். இந்த நகரில் உள்ள ஒரு தர்மசாலாவில் தான் நந்த் கிஷோர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். எனவே, தனி வீடு பார்த்து மகனை கவனித்து கொள்ள வசதி இல்லை.எனவே, மருத்துவமனை வெளியே வெட்டவெளியில் சாலை ஓரம் ஒரு மெத்தையை போட்டு மோகனை படுக்க வைத்துள்ளார். மோகனின் உடலின் மேற்புறத்தில் கொப்புளங்கள் தோன்றியுள்ளன. அவரால் நடந்து செல்லக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது. அவர் அருகே கூட செல்ல யாரும் விரும்புவதில்லை. அதையும் மீறி அருகே வரும் நபர்களிடம் தன்னை கருணை கொலை செய்து விடும்படி மோகன் கதறி அழுகிறார். ஆனால், அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மோகன் தங்கள் பகுதியில் படுத்து இருப்பதை மிகவும் அசவுகரியமாக கருதுகின்றனர். எனவே, மோகனை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என நந்த் கிஷோருக்கு கெடு விதித்துள்ளனர். தனது மகன் விரைவில் இறந்து விடுவான் என்பது நந்த் கிஷோருக்கு நன்கு தெரியும். டாக்டர்களும் இதை உறுதி செய்துள்ளனர். மரணம் தனது மகனுக்கு நிம்மதியை அளிக்கும் என்ற நம்பிக்கையில், தள்ளாத வயதில் நந்த் கிஷோர் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்து வருகிறார்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:35 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
October 23, 2007
பார்வையற்றோர் பயன்படுத்த வசதியாக கம்ப்யூட்டர் மென்பொருள் கண்டுபிடிப்பு
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:06 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
முஸ்லிம் அமைப்புகள் ஒரே அணியில் செயல்பட வேண்டும்: ஒசாமா அழைப்பு
கெய்ரோ: "ஈராக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் அமைப்புகள் ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டும்" என அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் வேண்டுகோள் விடுத்துள்ள `ஆடியோ டேப்' வெளியாகி உள்ளது. அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பேசிய `ஆடியோ டேப்' அல்-ஜசீரா `டிவி'யில் ஒளிபரப்பானது. அதில், பின்லேடன் பேசியிருப்பதாவது: ஈராக்கில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு முஸ்லிம்கள் அமைப்புகள் தனித்து செயல்படுவது கவலையளிக்கிறது. கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, அனைவரும் ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டும். அவர்கள் தவறு செய்கின்றனர். உங்களில் சிலர் கடமைகளை மறந்து செயல்படுவது கவலையளிப்பதாக உள்ளது. இது சரியான நடவடிக்கை அல்ல. இதனால், நமது சகோதரர்களுக்கு இடையே பிரிவினை ஏற்படும். தனித்தனியாகச் செயல்படுவோர் ஒரே அணியில் இணைவதைக் காண முஸ்லிம்கள் காத்திருக்கின்றனர். உங்களுக்கான கடமையிலிருந்து தவற வேண்டாம். அனைத்து இடங்களிலும் உள்ள அல்-குவைதா அமைப்பின் சகோதரர்கள் குழுக்களாக பிரிந்து பயங்கரவாதத்தைச் செயல்படுத்தக் கூடாது. தலைவர்கள் தங்களது தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக போராடக் கூடாது. அதற்கு பதிலாக முஜாகிதீன்களின் வழியை பின்பற்ற வேண்டும். முஜாகிதீன்கள் இந்த நாட்டின் செல்வங்கள். இறைவன் கட்டளையை மீறுவோர் அதற்கான தண்டனையை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு பின்லேடன் பேசியுள்ளார். சமீபகாலமாக ஈராக்கில் போராடி வரும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் அமெரிக்க ராணுவத்தோடு இணைந்து கொண்டு, அல்-குவைதாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டே, பின்லேடனின் பேச்சு அடங்கிய `டேப்' வெளியிடப்பட்டுள்ளது என அமெரிக்க ராணுவ தரப்பில் கூறப்படுகிறது. இந்த `ஆடியோ டேப்' எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது பற்றிய விவரங்களை அல்-ஜசீரா வெளியிடவில்லை. இது பற்றி அமெரிக்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:00 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
ஜெயலலிதாவின் வீட்டுக்குள் தெரியாத நபர் நுழைந்தது சரியா? : சட்டம் ஒழுங்கு எங்கே?
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:46 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
விடுதலைப்புலிகள் விசயத்தில் திமுக மற்றும் அதிமுக-வின் நிலை
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:40 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
கற்றது தமிழ் / தமிழ் எம்.ஏ : இயக்குனர் ராம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:36 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும், தீயொழுக்கம் தீராத துன்பம் தரும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:18 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 138 - ம் குறள்
புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்தில் அவரை இந்தச் சமுதாயம் அங்கீகரிக்கவில்லை
"சாமானிய மக்களையும் சிந்திக்க வைக்கும் வகையில் கதைகளை எழுதியவர் புதுமைப்பித்தன். அவர் வாழ்ந்த காலத்தில் அவரை இந்தச் சமுதாயம் அங்கீகரிக்கவில்லை. அவர் எழுதியது வட்டாரத் தமிழ், சுத்தத் தமிழ் அல்ல என்று விமர்சனம் செய்தனர். ஆனால் பேச்சுத் தமிழ்தான் ஜீவ சக்தி என்று புதுமைப்பித்தன் அனைவருக்கும் உணர்த்தினார். இளைய தலைமுறையினர் புதுமைப்பித்தன் எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும்" - ஆர். நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழாவில்...
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:12 PM
3
comments (நெற்றிக்கண்)
கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்துகொண்டிருக்கும் காட்டுத்தீ : கலிபோர்னியா மாகாணம், சான்டியாகோ - 1
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:38 PM
0
comments (நெற்றிக்கண்)
கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்துகொண்டிருக்கும் காட்டுத்தீ : கலிபோர்னியா மாகாணம், சான்டியாகோ - 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:30 PM
0
comments (நெற்றிக்கண்)
கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்துகொண்டிருக்கும் காட்டுத்தீ : கலிபோர்னியா மாகாணம், சான்டியாகோ - 3
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:24 PM
0
comments (நெற்றிக்கண்)
படியில் பயணத்தைத் தவிர்க்க தமிழக அரசு புதிய அதிரடி நடவடிக்கை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:06 AM
0
comments (நெற்றிக்கண்)
October 22, 2007
இன்றைய குறள்
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:24 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 137 - ம் குறள்
தமிழ்நாட்டில் அனைத்தும் அரசியலாக்கப்படுகிறது - மருத்துவர் இராமதாசு
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:13 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழ் நாட்டைச் சேர்ந்த ரோஸ் என்கிற அரவாணி, தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக செயல்பட இருக்கிறார்
வழக்கமாக ஆண் அல்லது பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மாத்திரமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழி நடத்தி வருகிறார்கள். போட்டி நிறைந்த இந்த துறையில், ஆணாக பிறந்து பால் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய அரவாணியான ரோஸ் நுழைந்திருப்பது, ஒதுக்கப்பட்ட பாலினத்தவரின் முன்னேற்றத்தில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. தமிழ் சமூகத்தில் மூன்றாம் பாலினமான அரவாணிகள் குறித்து மிகவும் மலிவான கருத்துருவாக்கம் நிலவுவதாக கூறும் ரோஸ் அவர்கள், இந்த தவறான புரிதலைப் போக்குவதற்காகவே, தாம் ஊடகத்துறையை தேர்ந்தெடுத்ததாக தமிழோசையிடம் தெரிவித்தார். தாம் வழி நடத்த இருக்கும் வாராந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி, சமூகத்தின் அனைத்து விதமான பிரச்சினைகளைப் பற்றியும் விவாதிக்கும் என்றாலும், அரவாணிகள் மற்றும் பாலினமாறிகள் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமாக இடம்பெறும் என்கிறார் ரோஸ். தமிழோசைக்கு ரோஸ் அவர்கள் அளித்த பிரத்யேக செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம். http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2007/10/071018_transrose?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1- தமிழகத்தில் உயர்நிலைப்பள்ளிகளில் ஒரே மாதிரியான பாட நெறிக்கான பரிந்துரைகள் : மாணவிகள்தமிழகத்திலுள்ள உயர்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருந்த கல்வியாளர் முத்துகுமரன் தலைமையிலான குழுவின் அறிக்கை இன்று சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
- அநுராதபுரம் விமானப் படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகள் பெரும் தாக்குதல் : இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் புராதன நகராகிய அனுராதபுரத்தில் அமைந்துள்ள வடபகுதிக்கான கேந்திர முக்கியத்துவம் மிக்க விமானப்படைத்தளத்தின் மீது தரையிலும், வான்பரப்பிலும் ஊடுருவிய விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்
- குர்து போராளிகள் பிரச்னைக்கு ராஜீய தீர்வுக்கு துருக்கி முயற்சி : துருக்கி நிலப்பரப்பில் குர்த் இன போராளிகளின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவதற்காக இராக்கிற்குள் துருப்பினரை அனுப்புவதற்கு முன்பாக ராஜீய முறையில் பிரச்சினைக்கு தீர்வுகாண அனைத்து வழிகளையும் துருக்கி முயன்று பார்க்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி பாபகன் கூறியுள்ளார்
- கென்ய நாடாளுமன்றம் கலைப்பு, 90 நாட்களில் தேர்தல் : கென்யாவின் அடுத்த நாடாளுமன்றத்தேர்தல்கள் நடப்பதற்கு வழிசெய்யும் முகமாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கென்ய அதிபர் ம்வாய் கிபேகி அவர்கள் இன்று கலைத்திருக்கிறார்
- நியூயார்க் பங்குச்சந்தையில் பங்குகளின் விலை மீண்டும் சரிவு : அமெரிக்க பொருளாதாரத்தின் ஆரோக்கியம் குறித்து கவலைகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து நியூ யார்க் பங்கு சந்தையில் பங்குகளின் விலை மீண்டும் சரிந்துள்ளது. இன்று திங்கட்கிழமை காலை டவ் ஜோன்ஸ் பங்கு சந்தை திறந்தபோது தொழிற்சாலை பங்குகள் சராசரி கிட்டத்தட்ட ஒரு சதவீதம் வீழ்ச்சி கண்டது. கடந்த வெள்ளிக்கிழமை இது 2.6 ஆறு சதவீதம் சரிந்திருந்தது
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:01 PM
0
comments (நெற்றிக்கண்)
October 21, 2007
இன்றைய குறள்
ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:38 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 136 - ம் குறள்
எனது ஆட்சியை விரும்பாவிட்டால் நான் ஒதுங்கிக் கொள்ளத் தயார் - தமிழக முதல்வர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:27 PM
0
comments (நெற்றிக்கண்)
மேற்குலக நாடுகளின் ஆபத்தான கழிவுகளுக்கு இந்தியா குப்பைக்கூடையா?
- அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் நச்சுத்தன்மை படைத்த கழிவுப்பொருட்களை கொட்டும் இடமாக இந்தியாவைக் கருதுகின்றனவா என்ற கேள்வி இப்போது மீண்டும் எழுந்திருக்கின்றது. காகிதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கழிவுப்பொருட்கள் என்று கூறி கேரள மாநிலம் கொச்சியில் ஒரு தனியார் நிறுவனம் இறக்குமதிசெய்த சரக்குப்பெட்டகங்களை சோதித்துப்பார்த்தபோது, 60 டன் பொருட்களில் ஏறத்தாழ 40 டன்கள், மருத்துவமனை மற்றும் இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கழிவுகளாக இருந்ததாக நேற்று முன்தினம் அம்மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஸ்ரீமதி செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். வந்த சரக்குப்பெட்டகங்கள் திருப்பி அனுப்பப்படுவது மட்டுமல்ல, சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார். இதனிடையே மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இவ்வாறு ஆபத்தான கழிவுப்பொருட்கள் இந்தியாவுககு அனுப்பப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் சம்பவம் பற்றி ஆய்வுசெய்து விவரங்களை திரட்டி பின்னர் அரசாங்க மட்டத்தில் நடவடிக்கை எடுககப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநிலத்தில், மேலை நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படாத பழைய கப்பல் உடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு நச்சுப்பொருட்களை உள்வாங்கி, தொழிலாளர்கள் பல்வேறு நோய்களால் பீடிககப்படுவது குறித்து அடிக்கடி இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாவது உண்டு.
ஓரிரு சந்தர்ப்பங்களில் அத்தகைய கப்பல்கள் திருப்பி அனுப்பட்பட்டாலும் அத்தொழில் தொடரவே செய்கிறது. ஆனால் காகிதக் கழிவென கூறி ஆபத்தான மருத்துமனை கழிவுப்பொருட்களை அனுப்பிவைப்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் தூய்மை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் நிலையில், மேலை நாட்டு நிறுவனங்கள் நச்சுத்தன்மைபடைத்த இயந்திர தொழிற்சாலை அல்லது மருத்துவமனை கழிவுகளை இந்தியா உள்ளிட்ட பல்வேறு வளரும் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த சுற்றுப்புறச்சுழல் ஆர்வலர் நித்தியானந்தன் ஜெயராமன். இது தொடர்பான அவரது செவ்வியை நேயர்கள் கேட்கலாம். - இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்கள் : இலங்கையின் வடக்கே, மன்னார் தம்பனை, பெரியதம்பனை மற்றும் யாழ்ப்பாணம் நாகர்கோவில் ஆகிய இராணுவ முன்னரங்க பகுதிகளில் நடந்த மோதல்களில் ஒன்பது விடுதலைப்புலிகளும், இரண்டு ராணுவத்தினரும் கொல்லப் பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
- நெஞ்சம் மறப்பதில்லை - பாகம் ஐந்து : தமிழ் திரையுலகில் புராண பக்தி கதைகள் ராஜா ராணிக் கதைகள் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலை மாறி சமுதாய விழிப்புணர்வு, பகுத்தற்றிவுக் கொள்கைகள் ஆகியவற்றைக் கதைக்களமாக கொண்ட திரைப்படங்கள் வரத்தொடங்கியது தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் வேரூன்றிய காலகட்டமான ஐம்பதுகளின் துவக்கத்தில்தான்
- இராக் தாக்குதலில் 49 சந்தேக நபர்களை கொன்றுள்ளதாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது : இராக் தலைநகர் பாக்தாதில் நடந்த ஆக்ரோஷமான சண்டையில் தீவிரவாத சந்தேகநபர்கள் 49 பேரை கொன்றிருப்பதாக இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவம் கூறுகிறது.
ஷியா போராளிகள் வலுவாக உள்ள இடமென்று அறியப்படும் சதர் நகர் பகுதியில் நடந்த மூன்று வெவ்வேறு சம்பவங்களில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என அது தெரிவிக்கிறது
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:23 PM
0
comments (நெற்றிக்கண்)
அதிசயம் : இரண்டு கன்றுகள் பிரசவித்த பசு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள கொன்னையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், சாந்தாமணி தம்பதியர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பால் கறப்பதற்காகக் கடந்த வருடம் வாங்கி வந்த சிந்து இனப்பசு ஒன்று கடந்த புதன் இரவு பத்துமணியளவில் அனைவரும் வீட்டிற்குள் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் புதைந்து மெகாசீரியல்களில் அழுதுகொண்டிருக்கும்போது, திடீரெனச் சத்தம் கேட்டு அனைவரும் ஓடிவந்து பார்த்தனர். வெளியில் உள்ள தெருவிளக்குக் கம்பத்தில், கட்டாந்தரையில் லேசான தடுமாற்றத்தோடு துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்த கன்றுகளைப் பார்த்ததும் தன்னை மறந்து அனைவரும் சந்தோசக்களிப்பில் துள்ளிக்குதித்தனர். அந்தச்சுற்றுவட்டார மக்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு வந்து பார்த்துச் செல்கின்றனர். கன்றுகளில் ஆண் ஒன்று பெண் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக ஒரு பசு ஒரு கன்று ஈனுவதே வழக்கம். செய்தி : நண்பர் விஜய் - திருச்செங்கோடு
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:01 AM
0
comments (நெற்றிக்கண்)
October 20, 2007
தமிழகத்தின் கோவையில் வீடு இடிந்து வீழ்ந்து 13 பேர் பலி
- தமிழகத்தில் கோயம்புத்தூர் நகரில் வெள்ளிக்கிழமை இரவு, 24 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தார்கள்
- காஷ்மீரில் பள்ளி ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் : இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா பகுதியில் பள்ளி ஆசிரியர் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்
- இரான் அணுசக்தி விவகார தலைமை பேச்சாளர் அலி லாரிஜானி பதவி விலகல் : இரானின் அணு விவகாரங்களுக்கான தலைமை பேச்சாளரான அலி லாரிஜானி எதிர்பாராதவிதமாக இராஜினாமா செய்துள்ளார்
- குர்த் கிளர்ச்சிக்காரர்களை துருக்கி தாக்க எத்தனிப்பதற்கு சிரியா ஆதரவு தெரிவித்திருப்பதை இராக் அதிபர் விமர்சித்துள்ளார் : வடக்கு இராக்கிலுள்ள குர்த் இன கிளர்ச்சிக்காரர்களுக்கெதிராக நடக்ககூடிய துருக்கியின் ராணுவ நடவடிக்கைக்கு சிரியா ஆதரவு தெரிவித்திருப்பதை இராக் அதிபர் ஜலால் தாலிபானி விமர்சித்துள்ளார்
- இராக்கில் அல்கொய்தா சந்தேகநபர்கள் 11 பேரைக் கொன்றதாக கூறுகிறது அமெரிக்க இராணுவம் : இராக்கின் சமர்ரா நகரத்தில் கடந்த சில நாட்களாக நடத்திய வான்தாக்குதலில் பதினோரு அல்கொய்தா சந்தேகநபர்களை கொன்றிருப்பதாக இராக்கில் இருக்கின்ற அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது
- ரஷ்யாவில் புதிய அரசியல் இயக்கம் தொடங்கியுள்ளார் முன்னாள் சோவியத் ஒன்றியத் தலைவர் கோர்பசேவ் : புதிய இயக்கம் தேர்தலில் போட்டியிடப்போவதில்லைமுன்னாள் சோவியத் ஒன்றியத் தலைவர் மிக்காயல் கோர்பசேவ் ரஷ்யாவில் ஜனநாயகத்துக்கெதிரான துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ளார்
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:41 PM
0
comments (நெற்றிக்கண்)
பின்னனிப் பாடகர் ரஞ்சித் - 1
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:02 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
October 19, 2007
கற்றது தமிழ் / தமிழ் எம்.ஏ : இயக்குனர் ராம் - 1
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:44 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
நம்ம சென்னை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:37 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:30 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 135 - ம் குறள்
தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்திலுள்ள பழமைவாத சக்திகள் மீது பெனாசிர் பூட்டோ பழி
- 130 பேர் பலியான கராச்சி குண்டுவெடிப்பு - தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்திலுள்ள பழமைவாத சக்திகள் மீது பெனாசிர் பூட்டோ பழி : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தன் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சியை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறி கண்டித்துள்ளார். நாடு கடந்த நிலையில் வாழ்ந்துவந்த பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் திரும்பியதை கொண்டாடும் முகமாக கராச்சியில் நடந்த வரவேற்பு ஊர்வலத்தில் ஏராளமான ஆதரவாளர்கள் மத்தியில் நடந்த தாக்குதலில் 130 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். தன் மீதான இஸ்லாமியவாதிகளின் கொலைத் திட்டங்கள் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தான் ஏற்கனவே தெரிவித்திருந்ததாகவும் ஆனாலும் தான் அரசாங்கத்தின் மீது குற்றம்சுமத்தவில்லை என்றும் பூட்டோ இன்று செய்தியாளர்களிடம் கூறினார். தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார். தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளன என்று எச்சரிக்கைகள் வந்தும் நாள் முழுக்கவுமாக பூட்டோ ஏன் ஊர்வலம் சென்றார் என்று கேள்விகள் கேட்கப்படுவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்
- விடுதலைப்புலிகளிடம் இருந்து தப்பவே இந்தியா செல்ல முற்பட்டதாகக் கூறுகிறார் வியாழக்கிழமையன்றைய மன்னார் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத் தலைவர் : இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் பேசாலை கடற்பரப்பில் வியாழக்கிழமையன்று கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத் தலைவரான ஜேசுதாஸ் ஜீன் மக்சிமச அவர்கள், விடுதலைப்புலிகள் தனது பிள்ளைகளை பலவந்தமாக இயக்கத்துக்கு ஆட்சேர்த்துவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாக தனது பிள்ளைகளை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல விளைந்தபோதே தம்மீது இலங்கைக் கடற்படை சுட்டுவிட்டதாக தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்
- துருக்கி தாக்குதலை எதிர்கொள்ளத் தயார்: வடக்கு இராக்கில் தளமமைத்துச் செயற்படும் குர்து இன பிரிவினைவாதப் போராளிகளை தாக்குவோமென்ற தமது எச்சரிக்கை துருக்கி நடைமுறைப்படுத்த முற்பட்டால், தமது பிராந்தியத்தைப் பாதுகாக்க தமது மக்கள் தயாராக இருப்பதாக, வடக்கு இராக்கின் குர்து இன பிராந்தியத்தின் அதிபர் தெரிவித்துள்ளார்
- மணிலா குண்டுவெடிப்பில் 8 பேர் பலி : பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் மக்கள் நடமாட்டம் நிறைந்த கடை வளாகம் ஒன்றில் குண்டொன்று வெடித்துள்ளதை அடுத்து நாட்டின் பொலிஸ்துறையும் ராணுவமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நாட்டின் அதிபர் கிளோரியா அர்ரோயோ கூறியுள்ளார்
- இன்றைய (அக்டோபர் 19 வெள்ளிக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:21 PM
0
comments (நெற்றிக்கண்)
"நான் பாட்டெழுத வந்தகாலம்" - கவிஞர் வைரமுத்து
"நான் பாட்டெழுத வந்தகாலம் - திரையுலகில் சுதந்திரப் போராட்டத்தின் சூடு குறைந்துபோன காலம்; பொதுவுடைமைச் சித்தாந்தம் வெளிநடப்புச் செய்த காலம்; திராவிட இயக்கத்தின் தீவிரம் தீர்ந்துபோன காலம்; வீரியத் தமிழ் பேசும் இதிகாசப் படங்கள் சரிந்துபோன காலம்; அண்ணன்-தங்கை, அன்னை-பிள்ளை, அண்ணன்-தம்பி என்ற உறவுகளை உள்ளடக்கம் கொள்ளலாம் என்றால் கூட்டுக் குடும்பங்கள் கலைந்து வந்த காலம், என் கையில் திணிக்கப்பட்டதும், என் பேனாவில் நிரப்பப்பட்டதும் காதல், காதல், காதல். அதுவும் நுகர்வுக் கலாசாரத்தில் நொறுங்கிப் போன காதல்" - கவிஞர் வைரமுத்து
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:02 PM
1 comments (நெற்றிக்கண்)
கானல் குறும்படம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:54 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Dailymotion
October 18, 2007
இன்றைய குறள்
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:59 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 134 - ம் குறள்
சமுதாய அளவில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன
நம் சமூகம் குழப்பத்தில் இருக்கிறது. சமூக நீதியைக் காப்பதா? திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு திறமையானவர்களை ஊக்குவிப்பதா? என்பதே அது. சமுதாய அளவில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன, சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களை மேலே கொண்டு வர இடஒதுக்கீடு அவசியம்தான். அதே நேரத்தில் மிகச் சிறந்த மேதைகளை உருவாக்குவதற்குத் திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சீர்மிகு மையங்களை ஏற்படுத்தவேண்டும். - ஐராவதம் மகாதேவன், தொல்லியல் வல்லுநர், தினமணியின் முன்னாள் ஆசிரியர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:51 PM
0
comments (நெற்றிக்கண்)
தவறு செய்தவனே தண்டனை பெறவேண்டும்?!
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:29 AM
0
comments (நெற்றிக்கண்)
October 17, 2007
இன்றைய குறள்
ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:08 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 133 - ம் குறள்
சென்னையில் தினசரி ஐந்து கொலைகள் நடக்கின்றன
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:12 PM
0
comments (நெற்றிக்கண்)
யால சரணாலயப் பகுதியில் தேடுதல் தொடர்கிறது
- யால வன விலங்கு சரணாலயப் பகுதியில், இலங்கை இராணுவ நிலை ஒன்றை தாக்கிய விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை, அங்கு அந்த தேசியப் பூங்காவெங்கிலும் தேடும் நடவடிக்கையில், இலங்கை சிறப்புப் படைப்பிரிவினர் உட்பட சுமார் 500 படையினர் ஈடுபட்டுள்ளனர்
- வறுமை ஒழிப்புக் கோரி பாரிய ஆர்ப்பாட்டங்கள் : உலகில் வறுமையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக உலக நாடுகளின் தேசிய அரசுகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரி - உலக சர்வதேச நடவடிக்கை கோரும் நாளில் - நடைபெற்ற ஆர்பாட்டங்களில் பல லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்
- இந்திய பங்கு விலைகளில் வீழ்ச்சி : இந்திய பங்குத் தரகர் ஒருவர்வெளிநாட்டவர்கள் செய்யும் முதலீட்டில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்த திட்டத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் பங்குகளின் விலை பெரிதும் குறைந்தது.
- குர்து பிரிவினைவாதிகள் மீது எல்லை கடந்து தாக்க துருக்கிய நாடாளுமன்றம் அங்கீகாரம் : வட இராக்கில் குர்து இன பிரிவினைவாதிகளின் தளங்களின் மீது எல்லை கடந்த தாக்குதல்களை நடத்த, துருக்கிய இராணுவத்துக்கு அனுமதி அளித்து, துருக்கிய நாடாளுமன்றம் பெரும் ஆதரவுடன் வாக்கெடுப்பு ஒன்றை நிறைவேற்றியுள்ளது
- கவலையில் அமெரிக்கா : நிச்சயமாக அமெரிக்கா கவலையில் இருக்கிறது. இராக்கில் இதற்கு மேலும் இராணுவ சவால்களை சந்திக்க அதற்கு வசதிகள் இல்லை.
மேலும்,அங்கு அது இருப்பதற்கே, துருக்கியின் ஆதரவு அமெரிக்காவுக்கு பெருமளவில் தேவைப்படுகிறது - மொகதீசுவுக்கான உணவு விநியோகத்தை ஐ. நா நிறுத்தியது : சோமாலியாவின் தலைநகர் மொகதீசுவில் உள்ள தனது அலுவலகத்துக்குள், அரச துருப்புக்கள் நுழைந்து, உலக உணவுத் திட்டத்தின் உள்ளூர் தலைமை அதிகாரியை கைது செய்ததன் பிறகு, சோமாலியத் தலைநகருக்கான உணவு விநியோகத்தை தாம் நிறுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது
- தென் ஆபிரிக்க எய்ட்ஸ் நிலவரம் குறித்து யூனிசெப் எச்சரிக்கை : தென் ஆப்ரிக்காவில், எய்ட்ஸ் நோய் தொற்றி இறப்போரின் எண்ணிக்கை, அந்த நோய் தொற்றி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், எய்ட்சுக்கு எதிரான போரில் தென் ஆப்ரிக்கா தோற்று வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சிறார்கள் நிதியம், யூனிசெப் கூறுகிறது
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:00 PM
0
comments (நெற்றிக்கண்)
October 16, 2007
இன்றைய குறள்
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகையத் துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்
அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:59 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 132 - ம் குறள்
தேர்தல் வருமா? - 1
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:57 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
தேர்தல் வருமா? - 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:54 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
தேர்தல் வருமா? - 3
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:52 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
எடிட்டர் அந்தோணி
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:44 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:40 PM
0
comments (நெற்றிக்கண்)
இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்த நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
- பல ஆண்டுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையே எட்டப்பட்ட அணு ஒப்பதத்தை, இடைநிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் இடது சாரிகள் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். ஒப்பந்தத்தை செயற்படுத்தினால், மத்திய அரசுக்குத் தரும் ஆதரவைத் திரும்பப்பெறப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், உள்நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் காரணமாக இந்த ஒப்பந்தத்தை மேலெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்ததன் காரணமாக, இந்தியாவின் நம்பகத்தன்மை பாதிக்கும் என்று தமிழோசையிடம் தெரிவித்த பாதுகாப்பு ஆய்வாளர் கே. சுப்பிரமணியம், இந்திய அமெரிக்க உறவுகளில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறினார். இதே விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் உறுப்பினரான, உ ரா வரசராசன், நாடாளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்காத நிலையில், அக் கருத்துக்களை ஏற்று செயற்படும் ஆட்சியாளர்களின் மதிப்பு உலக அரங்கில் உயரும் என்றார். - இலங்கை மோதல்களில் 30க்கும் அதிகமான புலிகளை கொன்றதாக இராணுவம் அறிவிப்பு : இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் திங்கள் கிழமையன்று இடம்பெற்ற கடுமையான வெவ்வெறு மோதல்களின் போது 30க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளும் ஒரு இராணுவச் சிப்பாயும் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
- அனைவருக்கும் அறிவியல் : டைனோசாரின் நீளம் 100 அடியை விட அதிகம் அர்ஜென்டினாவின் தென் மேற்குப்பகுதியில் சமீபத்தில் மிகப்பெரிய டைனோசார் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசோர்களிலேயே, இது மிகப்பெரிய எலும்புக்கூடு என்று இதைக் கண்டு பிடித்த விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்
- ரஷ்ய- இரானிய அதிபர்கள் முக்கியச் சந்திப்பு : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அவர்கள், இரானிய அதிபர் மஃமுட் அஹமதி நெஜாத் அவர்களுடன் தெஹ்ரானில் பேச்சு நடத்தியுள்ளார்
- இரானிய மனித உரிமை ஆர்வலர் கைதுக்கு சர்வதேச கண்டிப்பு : இரானில் மிகவெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்த மனித உரிமை ஆர்வலர் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதை இரானிலும் வெளிநாடுகளிலும் செயற்பட்டு வரும் மனித உரிமை குழுக்கள் கண்டித்திருக்கின்றன
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:30 PM
0
comments (நெற்றிக்கண்)


