May 13, 2007

கலைஞர் அவர்களின் முதல் சட்டமன்றப் பேச்சு!

1957 – ல் குளித்தலைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவைக்குக் கலைஞர் 8 – ஆம் மாதம், நான்காம் நாள் கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தனது ‘கன்னி உரையை’ ஆற்றினார்.


“அவைத்தலைவர் அவர்களே! இன்று மேன்மை தங்கிய கவர்னர் அவர்களுடைய உரையைப் பற்றி நான் போற்றவும் வரவில்லை, தூற்றவும் வரவில்லை. என்னுடைய கருத்துரையை ஆற்றவே வந்திருக்கிறேன்”


என்பதுதான் அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பேசிய முதல் வாக்கியம்.

அன்னையே! வாழ்த்துகிறோம்

இந்த உலகத்தில் மனித ஜீவராசிகள் மட்டுமின்றி
எவை எவைகளுக்கெல்லாம்,
யார் யாருக்கெல்லாம்
"தாய்மை"
என்பதை என்னவென்று உணர முடிகிறதோ!
அவர்களுக்கெல்லாம், அவைகளுக்கெல்லாம்
"அன்னையர் தின வாழ்த்துக்களை"ச்சொல்லி
நாம் அனைவரும் அன்போடு கொண்டாடி மகிழ்வோம்.

எனது வேண்டுகோள்!

தயவு செய்து
உங்களனைவருக்கும்
அம்மாவின் பக்கத்தில் இருக்கும்
பாக்கியம் கிடைத்திருந்தால்...


தயவு செய்து இன்று மட்டுமாவது,
அந்த தாயைக் கட்டியணைத்துக்கொண்டு
அவள் காதுகளுக்குள்
அம்மா!
என்று அடிவயிற்றிலிருந்து சொல்லிப்பாருங்கள்....
அந்த உணர்வு சொல்லும்.....
இந்தப்
பிரபஞ்சத்துக்கும், தாய்க்கும், நமக்கும்
என்ன பந்தம் என்று....
முயற்சித்துப்பாருங்கள்!!

அம்மா நான்
உன்னை நினைத்துப்பார்க்கிறேன்.
ஏங்கித்தவிக்கிறேன்...
இன்று, இப்போது
நீ
என் அருகில்
இல்லையே என்று.......
- நவநீ