November 09, 2007

இப்பிரபஞ்சப்பாலைவனத்தில் வாழ்க்கை என்பது சிறிது நேரச் செருப்புக்கள்! அதற்குள் இத்தனை அவலங்களா? என்று தணியும் இந்த ரத்தவேட்கை??

இன்றைய குறள்

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்
அறத்துப்பால் : பொறையுடைமை

"மன்மதராசா மாலதி"

"அருள் கிடைக்கும்" - சத்யசாய்

"தோளில் சுமையைத் தூக்கிச் செல்லும் ஒருவர், செல்லுமிடத்திற்கு விரைவாகச் சென்று சுமையை இறக்கி வைக்கவே விரும்புவார். காலையில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர், மாலையில் எப்போது வீடு திரும்பலாம் என தனக்குள் கேட்டுக்கொள்வார். அதுபோல நாமும் நம்மை வழிநடத்திச் செல்லும் இறைவனின் அருளை பெற சிந்திக்க வேண்டும். அப்போதுதான் விரைவில் அவரது அருள் கிடைக்கும்" - சத்யசாய்

சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை போன்ற வறட்சியான மாவட்டங்களுக்கு காவிரி-வைகை இணைப்பு நீர்வரத்து?!

  • காவிரி-வைகை இணைப்புத் திட்டம்: பூர்வாங்க ஆய்வுப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்கிறது : காவிரியையும் வைகையையும் வாய்க்கால் மூலம் இணைப்பது குறித்து தமிழக அரசு ஆராய்ந்துவருகிறதுகாவிரியையும் வைகையையும் இணைத்து வரண்டு கிடக்கும் தென்மாவட்டங்களில் பாசன வசதியைப் பெருக்கலாம் என்று முடிவுசெய்து அதற்கான ஆயத்தப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளைக் கணக்கிலெடுத்துப் பார்க்கையில், பெரும்பாலனா வருடங்களில் காவிரியில் தேவைக்கு அதிகமான நீர்வரத்து இருந்துள்ளது. ஆதலால் இராமநாதபுரம், மதுரை, விருதுநகர் புதுக்கோட்டை போன்ற வறட்சியான மாவட்டங்களுக்கு இந்த உபரி நீரை கொண்டுசென்று பயன்படுத்துவது பற்றிய ஒரு விரிவான ஆய்வறிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலர் ஆதிசேஷையா தெரிவித்தார். திட்ட அளவில் இந்த முயற்சி வரவேற்கத்தக்கதுதான், ஆனால் இருக்கின்ற காவிரிக் கால்வாய்களே சரிவர பராமரிக்கப்படாத நிலையில் புதிய நீர் இணைப்பை உருவாக்கி அதைப் பேணுவதென்பது பெரும் சிரமமென்று சென்னை வளர்ச்சி ஆய்வுமையத்தின் நீர் ஆதாரங்கள் நிபுணர் டாக்டர் ஜனகராஜ் கூறுகிறார்
  • சிங்கள தேசிய வாதம் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இடைஞ்சலாய் இருப்பதாக சர்வதேச நெருக்கடிகள் ஆய்வுக்குழு கருத்து : இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் காணப்படும் இடைஞ்சல்களில் ஒன்றாக, தென்னிலங்கையில் காணப்படும் சிங்கள தேசிய வாதம் மற்றும் தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை இல்லாமை ஆகியவை இருப்பதாக பிரஸ்ஸல்சில் இருந்து இயங்கும் சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான குழுவான 'ஐ.சி.ஜி', இலங்கை நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது.
    ஆனாலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது, இனவாதப் போக்குடையது என்று கூறி இந்த சிங்கள தேசியவாதத்தை புறந்தள்ளிவிட முடியாது என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. சிங்கள தேசியவாதத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் நிலையிலேயே, இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு நீண்ட காலத் தீர்வைக் காண அது உதவியாக இருக்கும் என்றும் சர்வதேச நெருக்கடிகள் குறித்த குழு கூறியுள்ளது. இந்த கருத்து குறித்து தனது அபிப்பிராயத்தைக் கூறிய இலங்கை அரசியல் பகுப்பாய்வாளரும் தற்போது டோக்யோவில் ஐ.நா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பவருமான பேராசிரியர் கீத பொன்கலன் அவர்கள், கடந்த பல வருடங்களாக இனப் பிரச்சினை தீர்க்கப்படாததற்கான முக்கிய காரணங்களில் மிகத் தீவிரமான தேசியவாதப் போக்கும் ஒன்று என்று கூறினார். சிங்கள தேசியவாத நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கின்ற, ஆனால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை மதிக்கக்கூடிய சில குழுக்களும் இருக்கின்றன என்று கூறுகின்ற கீதபொன்கலன் அவர்கள், மிகத் தீவிரமான சிங்கள தேசியவாதமே பிரச்சினைத் தீர்வுக்கு காரணமாக இருப்பதாகவும் கூறுகிறார்
  • பிரிட்டன்-சௌதியரேபியா ஆயுத வர்த்தக ஊழல்: விசாரணையை நிறுத்திய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முடிவு மறுபரிசீலிக்கப்பட வேண்டுமென்கிறது நீதிமன்றம் : பிரிட்டனுக்கும் சௌதியரேபியாவுக்கும் இடையே பல பில்லியன் டாலர்கள் பெறுமதியான ஆயுத வர்த்தகத்தில் நடந்த ஊழல்கள் குறித்து நடந்துகொண்டிருந்த விசாரணையை கடந்த ஆண்டு பிளேர் அரசு நிறுத்தும்படி உத்தரவிட்டது
  • பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்களுடன் பேசுவதில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவி : பர்மாவில் இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் முயற்சிகள் பற்றி தமக்கு நம்பிக்கை இருப்பதாக தடுத்துவைக்கப்பட்டுள்ள பர்மிய எதிர்க்கட்சி தலைவி ஒங் சான் சூ சீ அம்மையார் தமது கட்சிக்காரர்களிடம் கூறியிருக்கிறார்
  • புலிகளின் ஆதரவாளர் என்று கூறப்படும் நபர் மீது லண்டனில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் : தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அருணாச்சலம் கிருஷாந்தக்குமார் (சாந்தன்) என்பவர் மீது இன்று லண்டனின் பிரதான குற்றவியல் நீதிமன்றமான ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் பயங்ககரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன