June 14, 2007

குடிகாரருக்குக் கட்சியில் இடமில்லை!


பரபரப்புக்குப் பெயர் போனவர் பா.ம.க. தலைவர் ராமதாஸ். புகைப்பழக்கம், போதை மருந்துகள், கிரிக்கெட் விளையாட்டு இவற்றைத் தடை செய்ய வேண்டும் என்ற போராட்டங்களைத் தொடர்ந்து, தற்பொழுது அவர் கையில் எடுத்து இருப்பது குடியை ஒழிக்க வேண்டும் என்பதுதான். குடிகாரர் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்கிறார் அவர். கள்ளச் சாராயத்தை ஒழிக்கவே முடியாது என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவிக்க, அதைத் தொடர்ந்து ராமதாஸ் இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 'பா.ம.க. நிர்வாகிகள் யாராக இருந்தாலும், குடிப்பழக்கம் இருப்பது தெரியவந்தால் உடனடியாகக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள்' என்றும் தீர்மானம் போட்டிருக்கிறார். துணிச்சலான முயற்சிதான்.

தமிழோசை

இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டில் போட்டி. இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் பிரதிபா தேவிசிங் பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி. பிரதிபா பாடீலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பது, இந்தியக் குடியரசின் 60-வது ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார் சோனியா. சட்டத் துறையில் பட்டம் பெற்ற பிரதிபா பாட்டில் 72 வயதானவர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.மகாரஷ்டிர மாநிலத்தின் காபினட் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும், நாடாளுமன்ற மேலவை துணைத் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உள்பட காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்களை இடதுசாரிக் கட்சிகள் நிராகரித்ததை அடுத்து, பிரதிபா பாடீலுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கபடுவதற்கான ஒரு துவக்கமாக தான் கருதுவதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இன்றைய "BBC" (ஜுன் 14 வியாழக்கிழமை) செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

உயிர்த்தெழுவார்!!

இந்தக் கணினி யுகத்தில், ஒவ்வொருவரும் வாய்ப்பு மட்டும் கிடைத்தால் சந்திர மண்டலத்தில் குடியேற எண்ணிக்கொண்டிருக்கிறார்கள், குடியேறா விட்டாலும் எதிர்வரும் காலங்களில் கண்டிப்பாக நமது எதிர்கால தலைமுறையினர் அங்கு அவ்வப்போது "பிக்னிக்" சென்று பார்த்துவிட்டு வருவார்கள் என்பதில் துளியளவும் ஐயமில்லை. இப்படி நவீன காலத்தில் நாம் "இறந்து போனவன், இதோ உயிர்த்தெழுகிறான்" பார் என்று எல்லோரையும் இளிச்சவாயர்களாக்கும் கொடுமை இன்னும் நம்மூரில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. என்ன புரியவில்லையா? நான் அதிர்ந்துபோன செய்தியை நீங்களும் படியுங்கள். இவர்களையெல்லாம் நடமாட விடுவதே தவறு. கூர்ந்து கவனித்தால் இவர்களைப்போன்ற ஏராளமானவர்கள் பிடிபடுவார்கள். அனைவரும் மனநோயாளிகள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்? இவர்களின் ஜெபத்தில் மாட்டிக்கொண்டு படாத பாடு படும் பாமர மக்கள் பாவம்.... இணைப்பை அழுத்தவும்..Dinamalar.com

இன்றைய குறள்

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசிகடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்

அறத்துப்பால் : வான்சிறப்பு

பத்மஸ்ரீ கமலஹாசன் பேட்டி Part I

பத்மஸ்ரீ கமலஹாசன் பேட்டி Part II