October 03, 2007

இன்றைய குறள்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கிவிடும்

அறத்துப்பால் : அடக்கம் உடைமை

சுவாமி விவேகானந்தர்

"வீரர்களே கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தடைகளிலிருந்து விடுபடுங்கள்"

ஜனநாயக நாடுகளில் வாரிசு அரசியல் - ஒரு பார்வை

  • இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ராகுல் காந்தி சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார் : மோதிலால் நேரு முதல், அவரைத் தொடர்ந்து ஜவஹர்லால் நேரு, அவருடைய மகள் இந்திரா காந்தி, இந்திராவின் மகன் ராஜிவ் காந்தி, இன்று ராஜிவின் மகன் ராகுல் காந்திவரை, இந்தக் குடும்பத்தின் ஐந்து தலைமுறையினர், காங்கிரஸ் கட்சியிலும், இந்திய அரசியலிலும் முக்கியத்துவம் மிக்கவர்களாகத் திகழ்ந்துள்ளனர். நவீன ஜனநாயக காலத்திலும், இந்த பரம்பரை (வாரிசு) அரசியல் எந்த அளவுக்குப் பொருந்துகிறது, உலகின் ஏனைய பாகங்களிலும் இந்த நிலை காணப்படுகிறதா, அதன் சாதக பாதகங்கள் என்ன என்பது குறித்து பிபிசியின் ஆய்வாளர் நிக் மைல் அவர்கள் தயாரித்த பெட்டகத்தின் தமிழாக்கத்தை நேயர்கள் இன்றைய சிறப்புப் பெட்டகமாகக் கேட்கலாம்
  • முஷாரப்புடனான பேச்சுக்கள் இடை நிறுத்தப்பட்டதாக புட்டோ அறிவிப்பு : பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் முஷாரப், தான் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே,அவருடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்து தான் நடத்திய பேச்சுவார்த்தைகள் முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டதாக தற்போது நாடு கடந்து வாழும் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ கூறியுள்ளார்
  • பாகிஸ்தான் செம்மசூதி மீண்டும் திறப்பு : பாகிஸ்தானின் செம்மசூதி
    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதிலுள்ள செம்மசூதியை அந்நாட்டு அதிகாரிகள் மீண்டும் திறந்துள்ளார்கள்
  • வட இலங்கை மோதலில் 8 படையினர் பலி : இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்களில், வவுனியா ஓமந்தைக்கு மேற்கே கல்மடு பிரதேசத்திலும், மன்னார் கட்டுக்கரை பகுதியில் இரண்டு இடங்களிலும் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 7 விடுதலைப் புலிகளும் இராணுவ சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன், 3 இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஆக்கிரமிப்பதைத் தடுக்கும் சட்டம் : தமிழ்நாட்டில் இருக்கும் ஏரி, குளம், ஆறு மற்றும் கடல் போன்ற நீர்நிலைகள், அதன் கரைகள் மற்றும் அவற்றின் நீர்வரத்து மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் தமிழக அரசு புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்திருக்கிறது
  • பர்மா மீதான தடைகள்--ஐரோப்பிய ஒன்றியம் தீவிரம் : பர்மாவில் நடைபெற்ற ஜனநாயக ஆதரவு போராட்டங்களை அங்குள்ள இராணுவ ஆட்சி ஒடுக்கியதை அடுத்து, அந்நாட்டின் மீது கடுமையான தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர்கள் இணங்கியுள்ளனர்
  • வட இந்திய ரயில் நிலைய விபத்தில் 14 பெண்கள் பலி : வட இந்தியாவின் ஜனசந்தடி மிக்க ஒரு ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மிதிபட்டு குறைந்தது 14 பெண்கள் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 47 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாயினர்

சேது சமுத்திரம் ஆய்வு : 3