December 16, 2007
இன்றைய குறள்
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் 
தீதுண்டோ மன்னு முயிர்க்கு
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:28 PM
0
comments (நெற்றிக்கண்)
 
Labels: 190 - ம் குறள்
ஹைக்கூ கவிதைகள்
1.வாழ்க்கைச் சுமைகளை
வரிசையாகச் சுமக்கும்
ஏழை விவசாயி….
குட்ஸ் வண்டி
2.வண்டுக் காதலனைக் கண்டதும்
மலருக்குப் பதட்டம்
வியர்வையாய்….
பனித்துளிகள் 
3.அழுதவானம் எழுதிப்பார்க்கும்
அந்தரங்க வரிகள்….
நீரோடை 
4.இந்தியத் தாயின்
இறுதிக் கண்ணீர்த்துளி....
இலங்கை 
5.சொந்தமண்ணிலிருந்து
துரத்தப்பட்ட அகதி
துடுப்பற்ற பரிசல்
பிறைநிலா 
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:22 PM
0
comments (நெற்றிக்கண்)
 
Labels: நன்றி : வார்ப்பு
விவாகரத்து : இலக்கிய ஆர்வம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:17 PM
0
comments (நெற்றிக்கண்)
 
இலங்கையில் நிரந்தர சமாதானம் எனது இறுதி ஆசைகளில் ஒன்று: சர் ஆர்தர் சி.கிளார்க்
 கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இனமோதல் வன்முறைகளினால் அல்லலுறும் இலங்கைத் தீவில் நிரந்தர சமாதானம் மலரவேண்டுமென்பது தனது இறுதி ஆசைகளில் ஒன்று என்று இங்கிலாந்தினைப் பிறப்பிடமாகவும், இலங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வானியல் விஞ்ஞான ஆய்வு எழுத்தாளர் சர் ஆர்தர் சி.கிளார்க் இன்று தெரிவித்திருக்கிறார்.  1917 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பிரித்தானியாவில் பிறந்த "செய்மதி தொழினுட்பத்தின் தந்தை" என்று வர்ணிக்கப்படும் சர் ஆர்தர் சி.கிளார்க் கடந்த 50 வருடங்களிற்கும் மேலாக இலங்கையில் தங்கியிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வானியல் ஆய்வுக் கட்டுரைகளையும், நூற்றிற்கும் மேற்பட்ட புத்தகங்களையும் இதுவரை வெளியிட்டிருப்பதோடு பிரபலமான பல சர்வதேச விருதுகளையும், உள்ளூர் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.  தனது 90வது பிறந்த தினத்தினையொட்டி கருத்து வெளியிடும்போதே இவர் இலங்கையில் நிரந்தர சமாதானம் குறித்த தனது ஆதங்கத்தினை வெளியிட்டிருக்கிறார்.  செய்தித் தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்திய முன்னோடி என்ற ரீதியில் உலகப் புகழ்பெற்ற இவர், ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக 1950 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கைக்கு வந்திருந்தார்.  1979 ஆம் ஆண்டு தொடக்கம் 2002 ஆம் ஆண்டுவரை இவர் கொழும்பு மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணிபுரிந்திருப்பதோடு, இலங்கைப் பிரஜை ஒருவரிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதியுயர் விருதுகளான "சாஹித்ய ரத்னா", "வித்யா ஜோதி", மற்றும் "லங்கா அபிமான்ய" போன்ற விருதுகளும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருக்கிறார்.  கொழும்பில் இன்று இடம்பெறும் இவரது பிறந்த தினக் கொண்டாட்டங்களில், 1965 ஆம் ஆண்டு முதன்முதலில் விண்வெளியில் இறங்கி நடந்த புகழ்பெற்ற ரஷ்ய வானியல் விஞ்ஞானியான டாக்டர் அலெக்ஸே லினோவ் விசேட அதிதியாகக் கலந்துகொள்கிறார் என்பது இங்கு சிறப்பம்சமாகும்.

8:01 PM
0
comments (நெற்றிக்கண்)
 
Labels: Courtesy : BBC "Tamilosai"
டாக்டர் பத்மஸ்ரீ PB.ஸ்ரீனிவாஸ்
| Powered by eSnips.com | 
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:20 AM
0
comments (நெற்றிக்கண்)
 
"ஒசாமாவுடன் பணியாற்றியது கட்டுக்கடங்காத சந்தோஷம்'* சொல்கிறான் முன்னாள் கார் டிரைவர்
 குவான்டனாமோ: "ஒசாமாவுடன் பணியாற்றியபோது, கட்டுக்கடங்காத சந்தோஷத்தில் இருந்தேன்' என்று, அவனுடைய முன்னாள் கார் டிரைவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, உலக வர்த்தக மையம் விமானம் கொண்டு தகர்க்கப்பட்ட பின், அதற்கு காரணமான ஒசாமா பின்லாடனை அமெரிக்கா தீவிரமாக தேட தொடங்கியது. ஆனால், இதுவரை அவன் சிக்கவேயில்லை. அதே ஆண்டில் நவம்பர் 24ம் தேதி, ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் நகரில் அமெரிக்க வீரர்கள் பல சோதனை சாவடிகளை அமைத்து வாகனங்களை சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது பிடிபட்டவன் தான் சலீம் அகமது ஹாம்தான். கியூபாவில் குவான்டனாமோ என்ற இடத்தில் அமெரிக்க கடற்படை தளம் உள்ளது. இங்குள்ள தனிமை சிறையில் ஹாம்தான் அடைக்கப்பட்டுள்ளான். அவன் மீது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடவடிக்கையின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இரண்டு முறை அவன் மீது வழக்கு நடத்தப்பட்டு, அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது முறையாக அவனை மீண்டும் நீதிபதி முன் நிறுத்த ராணுவ வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதற்கு முன் அவனிடம் விசாரணை நடத்தி, அவனது வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். அதில் அவன் கூறியிருப்பதாவது:நான், ஒசாமா பின்லாடனின் டிரைவர் மற்றும் பாதுகாவலன். 2001ம் ஆண்டு அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் விமானம் மூலம் தகர்க்கப்பட்ட போது, காந்தகாரில் உள்ள ஒரு இடத்தில் தங்கி இருந்தார். அவரையும், அவரது மகன் ஒட்டமானையும், நான் தான் காரில் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றேன். அமெரிக்கர்கள் பிடியில் அவர் சிக்கி விடக் கூடாது என்பதற்காக பல வாரங்கள், ஒவ்வொரு நகராக அவரை நான் தான் அழைத்து சென்றேன். உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட போது, குறைந்தது ஆயிரத்து 500 பேராவது இறப்பர் என ஒசாமா எதிர்பார்த்தார். ஆனால், அதற்கு மேலும் இறப்பு எண்ணிக்கை இருந்ததால், மிகவும் திருப்தி அடைந்தார். அவருக்கு விசுவாசமாக இருப்பதாக நான் பிரமாணம் எடுத்துள்ளேன். கட்டுக்கடங்காத சந்தோஷத்துடன் அவரிடம் பணியாற்றினேன்.இவ்வாறு ஹாம்தான் கூறியுள்ளான்.

2:10 AM
0
comments (நெற்றிக்கண்)
 
கடிகார முட்களைப்போல் தி.மு.க.,வில் அழகிரி, ஸ்டாலின் செயல்பட கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:58 AM
0
comments (நெற்றிக்கண்)
 
Labels: நன்றி : தினமலர்