December 01, 2007

இன்றைய குறள்

அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்
யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?
அறத்துப்பால் : வெஃகாமை

ஐ.நா.மன்ற கௌரவ தூதராக கமல்

எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமைகளின் பாதுகாப்பதற்கான புதிய பிரச்சார நடவடிக்கையில் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள சினிமா நட்சத்திரம் கமலஹாசன், "ஹெச்.ஐ.வி. தொற்று வந்தவர்கள் பாவிகள் அல்ல" என்கிறார். http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2007/12/071201_kamal?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1 தமிழகத்தின் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஐ.நா.மன்றத்தின் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் கமலஹாசன், பிபிசி பண்பலை ஒலிபரப்புக்காக பேட்டி காணப்பட்டார். எய்ட்ஸ் வந்தவர்களை அங்கீகரிக்காத சமூகம் 'ஜன்னல் இல்லா வீடு' என்றும் அங்கு சுவாசிக்க முடியாது என்றும் அவர் அப்பேட்டியில் தெரிவிக்கிறார். எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதோடு மனிதாபிமான உணர்வையும் தூண்டிவிடுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்

ஞானிகள் இத்தகைய காந்தம் போன்றவர்கள்

"காந்தத்தை தரையில் தேய்த்தால், அதன்மீது மண்ணில் இருக்கும் இரும்புத் துகள்கள் ஒட்டிக்கொள்ளும். அதேசமயம் மண், காந்தத்துடன் ஒட்டுவதில்லை. இவ்விடத்தில் காந்தம் தன்னுடன் இரும்புத்துகளை ஈர்க்க வேண்டும் என்றோ, இரும்புத்துகள் தான் காந்தத்திடம் செல்ல வேண்டுமென்றோ எண்ணுவதில்லை. ஆனால், இவ்விரண்டின் விருப்பம் இல்லாமலேயே அவை ஒன்றிவிடுகின்றன. இரும்புத்துகளை ஈர்க்கும் அளவிற்கு, காந்தம் சக்தி பெற்றிருப்பதால், இயல்பாகவே இந்நிகழ்வு நடந்து விடுகிறது. அப்போது, காந்தத்தின் சக்தி இரும்புத்துகளுக்குள் பாய்கிறது. எனவே, இரும்புத்துகளும் காந்த தன்மை பெறுகிறது. ஞானிகளும் இத்தகைய காந்தம் போன்றவர்களே. ஒருவர் தான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஞானிகள் அருகில் செல்லும்போது, தானாகவே அவருடன் ஒன்றிவிடுகிறார். ஞானியிடம் ஒன்றிச் செல்பவர்கள் மனதில் நல்ல எண்ணங்களோடும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பவர்கள் இரும்புத்துகளுக்கு ஒப்பானவர் ஆவர். இவர்கள் எளிதில் ஞானிகளிடம் விரும்பி ஒட்டிக்கொள்வர். அதேசமயம் மண் போன்று மந்த தன்மை உடையவர்கள் ஞானிகளை ஆரத்தழுவிக் கொண்டாலும்கூட அவர்களுக்குள் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. ஆகவே, மனதை இறைவனிடம் செல்லும்படியாக வைத்துக்கொள்ள வேண்டும்" - பரமஹம்ச நித்யானந்தர்

எங்கள் உள்விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டாம் - மலேசியா

மலேசியாவின் உள் விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டாம் என மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வம்சாவழியினர் மலேசியாவில் நடத்தப்படும் விதம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கவலை வெளியிட்டதை தொடர்ந்து மலேசியா இவ்வாறு கூறியுள்ளது. கடந்த ஞாயிறன்று, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமஉரிமை மற்றும் பாரபட்சம் இருக்கக் கூடாது என கோரி தடை செய்யப்பட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான இந்திய பூர்வீகத்தினர் மீது மலேசிய பொலிஸார் தடியடி நடத்தியதோடு தண்ணீரையும் பீய்ச்சியடித்தனர். இதனை அடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கவலை வெளியிட்டார். இதற்கிடையே, தங்களுடைய பிரஜைகள் எந்த பூர்வீகத்தை கொண்டிருந்தாலும், அவர்களை தங்களுடைய சட்டத்திட்டத்தின்படி கவனித்துக் கொள்வோம் என மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் ஹமீது அல்பர் கூறியுள்ளார். மலேசிய ஜனத்தொகையில் இந்திய வம்சாவளியினர் சுமார் ஏழு சதம் ஆகும்.

எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக இந்தியாவில் சிறப்பு இரயில்

  • இன்று உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, உலகிலேயே மிகப்பெரிய அளவில் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, இந்தியாவில் சிவப்பு ரிப்பன் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் சனிக்கிழமையன்று புதுடெல்லியில் துவக்கிவைக்கப்பட்டது. சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை வர்ணம் தீட்டப்பட்ட இந்த சிறப்பு ரயிலை, ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி துவக்கி வைத்தார். அடுத்த ஓராண்டுக்கு இந்த ரயில், இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் செல்லும். 180 ரயில் நிலையங்களில் நிற்கும் இந்த ரயில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாகச் செல்லும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், அந்த ரயிலில் உள்ள எய்ட்ஸ் தடுப்பு பிரசார தன்னார்வலர்கள், பாதுகாப்பான உடலுறவு குறித்தும், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் விளக்குவார்கள். அப்போது, ஆணுறைகளும் இலவசமாக வழங்கப்படும். நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் அதிகபட்சமாக சுமார் 25 லட்சம் பேர் எய்ட்ஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
    சிவப்பு ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் துவக்க விழாவில் கலந்துகொண்ட இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், இந்த ரயிலின் நோக்கம் குறித்து விளக்கினார்.
  • இலங்கையின் தெற்குப்பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் : இலங்கையின் தலைநகர் கொழும்பில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, கொழும்பு உட்பட இலங்கையின் தெற்குப் பிரதேசங்களில் இருக்கும் தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன
  • இலங்கை இனப்பிரச்சனைக்கு அதிகார பகிர்வுத் திட்டம் முக்கியப் பங்காற்றும் - இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் : இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, நம்பகத்தன்மை கொண்ட அதிகாரப் பகிர்வுத் திட்டம் முக்கியப் பங்காற்றும் என்று இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கருத்து வெளியிட்டிருக்கின்றன
  • இராக்கில் அல்கைதாவின் தாக்குதலில் 14 பேர் பலி : பாக்தாத்துக்கு வடக்கேயுள்ள ஒரு கிராமத்தில் அல்கைதா தீவிரவாதிகள் நடத்தியுள்ள ஒரு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராக்கிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • இராக் சுனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு : இராக் சுனி தலைவர் ஒருவரை வீட்டுக் காவலில் வைத்ததாக கூறி இராக் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பான்மை சுனி அராப் குழுவினர் நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்
  • இருபதாம் உலக எய்ட்ஸ் தினம் : இருபதாம் உலக எய்ட்ஸ் தினமான இன்று, எய்ட்ஸை தடுப்பதில் அதிகரித்து வரும் கவனமின்மை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக கூறியுள்ள ஐ.நா வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், எய்ட்ஸை ஒழிப்பதற்கு உலகளாவிய ரீதியில் ஒரு வலுவான தலைமை தேவை எனக் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஜோஹனஸ்பெர்க் நகரத்தில் எய்ட்ஸ் நிவாரண உதவிக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியை காண்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் கூடியுள்ளனர்
  • இன்றைய (டிசம்பர் 01 சனிக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

நந்திகிராம் பிரச்சினை - ஓர் ஆய்வு

மலேசியத் தமிழர்களின் போர்க்கொடி தேவையா?