October 07, 2010

எந்திரன் முதல் நாள், முதல் காட்சி விமர்சனம் - II : அதிகாலை நவின்

எந்திரனை முதல் நாள் பார்த்துவிட வேண்டும் என்ற லட்சியமோ, ஆசையோ எனக்கில்லை. அது எனக்கு அவசியமுமில்லை. ஆனால், திரைப்படப் படப்பிற்காக இங்கு (அமெரிக்கா) வந்துள்ள நடிகர் கணேஷ் வெங்கட்ராமனுடன் நானும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதால் இந்தப் படத்தின் முதல் காட்சியைக் காணும்படி நேர்ந்தது. மகிழ்ச்சி. பார்த்தோம், ரசித்தோம். கூடவே... பத்திரிகைக்காரன் கை சும்மாவா இருக்கும்? கையில் இருந்த வீடியோ கேமராவில் படத்தைப்பற்றியும், இங்குள்ள ரஜினி ரசிகர்களின் மகிழ்ச்சிக்காகவும் 'எந்திரன்' பற்றிய கருத்துக்களையும் கேட்டு எமது அதிகாலையிலும், யூ-டியூபிலும் பதிவு செய்தோம்.
புத்திசாலி சன் தொலைக்காட்சியினர் தமது விளம்பரத்திற்காக 'அந்தக் காணொலியை' (சுட்டு) தமது எந்திரன் அமெரிக்காவில் அமெரிக்க டாலர் 30-லிருந்து 50-க்கு விற்றது. ரசிகர்கள் ஆரவாரம்... அப்படி... இப்படியென்று பெருமை பேசி தமது தொலைக்காட்சியில் விளம்பரம் செய்துள்ளனர்.

எல்லாம் சரிதான்... அவ்வளவு செலவழித்து.... பணம் சம்பாதிக்க எண்ணும் இவர்கள், இந்தத் தயாரிப்பாளர்கள், சன் தொலைக்காட்சியினர்.... ஒரு பேச்சுக்காவது, காணொலியை எடுத்து பதிவு செய்தவர்களுக்கோ, நடிகர் கணேசுக்கோ, தொண்டை கிழிய கத்தி, இங்கு நமது வண்டவாளங்களை அமெரிக்க முழுவதும் பதிவு செய்த அப்பாவி ரசிகர்களுக்கோ நன்றி என்ற ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையாம்.....

தமிழகத்திலிருந்தும், சன் தொலைக்காட்சி பார்க்கும் பல்வேறு நாடுகளிலிருந்தும் எமக்கு தகவல்கள்.....
குறைந்த பட்சம் சக ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் தரம் இல்லா இவர்களின் ஊடகங்களில் எமது ஊடகத்தின் பெயர்களை உச்சரிப்பதுகூட அவமானம்தான்!!
என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே!!

எந்திரன் முதல் நாள், முதல் காட்சி விமர்சனம் - 1 : அதிகாலை நவின்