July 31, 2007

எனக்கு வந்த மின்னஞ்சலை இங்கே தருகிறேன். இந்தப்பிஞ்சு ஒரு அன்னைத் தெரசாவாகலாம், அன்னை இந்திராவாகலாம்.... என்று மாறும் இந்த அவலம் நமது இந்திய மண்ணில்?





"பிடித்தவைகளைப் பிடித்துக்கொண்டு, பிடிப்போடு, பிடித்தவைகளுக்கே பெருமை சேர்க்கும் கீதாவை பல கிரீடங்கள் தேடிவரும் என்பதில் சந்தேகமில்லை"


இசையுலகில் மட்டுமல்ல எழுத்துலகிலும் கொடிகட்டிப் பறக்கும் கீதா பென்னட், சங்கீத கலாநிதி டாக்டர் ராமநாதனின் வழித் தோன்றல். வீணையிலும் வாய்ப்பாட்டிலும் வல்லவரான உலகின் பல பாகங்களிலும் இசைநிகழ்ச்சியும் பயிற்சியும் அளித்துவருகிறார். வீணை இசைக்காக அகில இந்திய வானொலி/தொலைக்காட்சியின் உச்சகட்ட விருதைப் பெற்றிருக்கிறார். நாரத கான சபாவிடமிருந்து சிறந்த வீணை வாசிப்பாளர் விருது பெற்ற கீதாவின் மகுடத்தில் இது போல் பல சிறகுகள். ஃப்யூஷன் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட கீதா, பல மேற்கத்திய இசைக் குழுக்களில் வீணை வாசிப்பாளராக இருக்கிறார். இவரது வீணை இசை இந்திய அமெரிக்க கூட்டுத் தயாரிப்பான சந்தோஷ் சிவன் இயக்கும் Road to Happiness எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் இடம்பெறுகிறது. இவர் நிலாச்சாரலுக்காகத் தந்திருக்கும் ப்ரத்யேக நேர்முகம் : Nilacharal

எஸ்.பி.பாலசுப்ரமணியன் & எஸ்.ஜானகி சேர்ந்து பாடியவை

Powered by eSnips.com

ஆர்ட் டைரக்டர் திரு.தோட்டா தரணி பகுதி 3

"தயாநிதி மாறனும் தற்போதைய மந்திரியும்" IV

மலையாள நண்பர் ஒருவரின் பாட்டைக் கேட்டு ரசியுங்கள்!!

Powered by eSnips.com

படித்ததில் கனத்தது!!


இன்றைய குறள்

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு, அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

மனிதம் ஏன் மரண தண்டனையை எதிர்க்கிறது?

"மரண தண்டனை என்பது"
  • மனித உரிமையை முற்றிலும் அழிக்கிறது.
  • மனித வதையின் (Torture) எல்லை
  • கொடூரத்தின் உச்சம்
  • சட்டப்பூர்வ அங்கீகாரத்தோடு அரசால் நடத்தப்படும் கொலை
  • குற்றம் சாட்டப் பெற்றவருக்கு மறு சீர்திருத்தம் அடியோடு இல்லாமல் போகிறது.
  • பெரும்பாலான சமயங்களில் இதற்கு ஆட்படுவோர் படிப்பறிவு அற்றவர்கள், ஏழைகள், சிறுபான்மையினர், இனப் போராளிகள் மற்றும் மதப் பற்றாளர்கள் மட்டுமே
  • சில சமயங்களில் நீதி தவறும் பட்சத்தில், தண்டிக்கப்பட்டவருக்கு மறுவாழ்வு அளிக்க வாய்ப்பே இல்லை.
- மனிதம்

சஞ்சய் தத்துக்கு ஆறு ஆண்டு கால சிறை தண்டனை

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்-துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.டி. கோடே செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்தத் தீர்ப்பை வெளியிட்டார். கடந்த 1993-ம் ஆண்டு மும்பை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில், 257 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை, சிறப்பு தடா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த வழக்கு மீதான தீர்ப்பு படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதி்க்கப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள், குண்டுவெடிப்புக்கு முன்னதாக வழங்கிய ஆயுதங்களை, சட்டவிரோதமாக தன்னிடம் வைத்திருந்ததாக சஞ்சய் தத்துக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏ.கே. 56 ரக துப்பாக்கி மற்றும் 9 எம்எம் பிஸ்டல் ஆகியவை வைத்திருந்ததாக, அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 6 ஆண்டு சிறை தண்டனையுடன், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டுக்களை ஏற்கெனவே நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத், ஏற்கெனவே 18 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்துள்ளார்.
முதல் முறை குற்றம் புரிந்தவர்களுக்கான பாதுகாப்பு சட்டப்படி தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று சஞ்சய் தத் கோரியிருந்தார். ஆனால் நீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது.

அவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனை மூலம், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.
மெசப்பட்டோமியா :

உலகின் மிகப் பழமையான் நாகரீகங்களில் மெசப்பட்டோமியா நாகரீகமும் ஒன்று. இன்றைய இராக் பகுதிதான் அன்றைய காலத்தில் மெசப்பட்டோமியா என்று அழைக்கப்பட்டது. அந்த நாகரீகம் மற்றும் வளர்ச்சியில் டைகரிஸ் மற்றும் யூபிரிட்டிஸ் நதிகள் பெரும் பங்கு வகித்தன. இவ்வாறு வரலாற்று சிறப்பு வாய்ந்த டைகரிஸ் நதியில் இன்று பிணங்கள் மிதப்பது சர்வசாதாரணமான காட்சியாக இருக்கிறது. தினம் தினம் பலரது உடல்கள் அந்த நதியில் இருந்து கண்டெடுக்கப்படுவதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். இது குறித்த பெட்டகத்தை இங்கு கேட்கலாம்.தொடர்ந்து இன்றைய தமிழோசை (ஜுலை 31 செவ்வாய்க்கிழமை) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

நாமக்கல் கவிஞர்

"இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.

அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம்;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.

புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.

July 30, 2007

செல்போனா! ஐயோ வேண்டாம்!! எச்சரிக்கை!!!

நன்றி : நண்பர் தொண்டி முகமது அலி - சவூதி அரேபியா (NPC)

செல்போன் என்பது அத்யாவசியமான ஒன்றாகிப்போன இன்றையச் சூழலில், கோவில் வாசலில் பிச்சைக்காரர்களிடம் சில்லறை இல்லையப்பா என பத்து ரூபாய் நோட்டைக் காட்டினால், அவர் "சார் கொஞ்சம் இருங்க!...... ஹலோ! தம்பி நான் கோயில் வாசல்ல இருந்து "குருசாமி" பேசுறேன், ஒரு பத்து ரூபாய்க்கி சில்லறை எடுத்துட்டு வா, நான் சாயாந்தரம் வந்து மொத்தமா கணக்க சரி பண்ணிர்றேன்" என்று தன் செல்போனில் யாரிடமோ பேசி நொடிப்பொழுதில் பையன் சில்லறையோடு வந்து நிற்க, அடுத்த நொடியில் நமது கையில் ஒரு ரூபாய் போக ஒன்பது ரூபாய் பாக்கியைக் கணகச்சிதமாகத் திணித்துவிட்டு போகச்சொல்லும் காலமாகி விட்டது. என்ன செய்ய? அனைவரும் அவரவர் தொழிலில் அதிபர்களாகி விட்டனர். ஆனால் ஆபத்து எங்கு காத்திருக்கிறதென்றால், நீண்ட நேரம் காதுகளில் செல்போனை வைத்துப்பேசி, கழுத்து ஒரு பக்கம் இழுத்து, காக்காவலிப்பு வந்தவர்போல நடப்பது போய், மூளையில் கட்டி, புற்றுநோய் அளவுக்குக் கொண்டுபோய்விடுவதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
எனது மரியாதைக்குரிய நண்பர் முகமது அலி (NPC) அவர்கள் சவூதி அரேபியாவிலிருந்து அனுப்பி வைத்த இந்தத் தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபற்றி முழுமையாகத் தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க:http://navneethsmart.googlepages.com/MobilePhoneAlert.tif

வைத்தார்கள் ஆப்பு

அமெரிக்காவில் 'ஸ்பைக்' (Spike) என்றொரு தொலைக்காட்சிச் சேனல் இருக்கிறது. அதில் "The World's Amazing Videos and The World's Wildest Police Videos” என்றொரு நிகழ்ச்சி. உலகத்தில் நடந்த மிக அபூர்வமான விசயங்களை யாராவது வீடியோவில் திட்டமிட்டோ, எதிர்பாரா விதமாகவோ பதிவு செய்து வைத்திருந்தால் அதனை இவர்கள் விலைக்கு வாங்கித் தொகுத்து வழங்குகிறார்கள். இதில் சாதாரணமாக திருடு, கொலை, கொள்ளை, கத்திமுனையில் கடத்தல், வாகன விபத்து, போலீஸ் விரட்டிப்பிடிப்பது, மழை, வெள்ளம் மற்றும் தீ விபத்துக்களின் போது சிக்கிக்கொண்டவர்களை தீயணைப்பு வீரர்கள் எப்படியெல்லாம் சிரமப்பட்டுக் காப்பாற்றுகிறார்கள் என்பதையெல்லாம் பார்க்க முடியும். மேலும் பல நாடுகளில் நடந்த அரசியல் கட்சிகளின் வேலைநிறுத்தம், ஊர்வலம், கலவரம், அவ்வப்போது நடைபெற்ற அடிதடி, பாராளுமன்ற, சட்டமன்ற வளாகங்களுக்குள் நடக்கும் கோமாளித்தனம் அனைத்தும் பார்க்க முடியும்.


இந்த நிகழ்ச்சியின் முக்கியக் காரணங்கள் : குற்றங்களைக் குறைப்பதும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்தான். இதில் பல நாடுகளின் பாராளுமன்ற சண்டைக்காட்சிகள் இடம்பெறுவதுண்டு. நான் இந்தியாவில் இருக்கும்போது நமது சட்டமன்ற, பாராளுமன்றக் காட்சிகளை சில வருடங்களுக்கு முன் செய்தித்தாள்களில் படித்ததோடு சரி, திரைப்படங்களில் சில காட்சிகளையும் பார்த்ததுண்டு. ஆனால் நடந்த உண்மைச் சம்பவங்களை நான் பார்த்ததில்லை. “நல்லவேளை! நமது இந்தியா இப்படியெல்லாம் இல்லை! நடந்திருக்கும! ஆனால் இவ்வளவு மோசமாக இருக்காது என்று சில காட்சிகளைப் பார்க்கும்போது நினைத்துப் பெருமைப்பட்டிருக்கிறேன். வைத்தார்கள் ஆப்பு. சமீபத்தில் வேறொரு ஊடகத்தின் வாயிலாக நான் அந்த வீடியோவைப் பார்த்து ஆடிப்போனேன்! உங்களுக்கு "எந்த விதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல” என்பது போல் இருந்தது. நீங்களும் பாருங்கள்!!


நாட்டில் வறுமை தாண்டவமாடிக்கொண்டிருக்கையில்.....பாராளுமன்றம் செல்பவர்களின் சொகுசு வாழ்க்கையையும் தெரிந்து கொள்வோம்.

Salary & Govt. Concessions for a Member of Parliament (MP)
Monthly Salary : 12,000

Expense for Constitution per month : 10,000
Office expenditure per month : 14,000

Traveling concession (Rs. 8 per km) : 48,000 ( eg.For a visit from kerala to Delhi & return: 6000 km)

Daily DA TA during parliament meets : 500/day

Charge for 1 class (A/C) in train: Free (For any number of times)
(All over India )
Charge for Business Class in flights : Free for 40 trips / year (With wife or P.A.)
Rent for MP hostel at Delhi : Free
Electricity costs at home : Free up to 50,000 units
Local phone call charge : Free up to 1 ,70,000 calls.
TOTAL expense for a MP [having no qualification] per year : 32,00,000 [i.e . 2.66 lakh/month]
TOTAL expense for 5 years : 1,60,00,000

For 534 MPs, the expense for 5 years :
8,54,40,00,000 (nearly 855 crores)
AND THE PRIME MINISTER IS ASKING THE HIGHLY QUALIFIED, OUT PERFORMING CEOs TO CUT DOWN THEIR SALARIES…..

This is how all our tax money is been swallowed and price hike on our regular commodities.......
And this is the present condition of our country:




நாலடியார்

1. அறத்துப்பால்

1.11 பழவினை

உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
பெறற்பா லனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை
போன பிறவியில் செய்த நன்மை தீமையின் பலனால் வந்துசேரும் துன்பத்தைப் போக்க முனிவர்களால் கூட முடியாது. பெறக்கூடிய இன்பமும் அப்படியே! விதி வசத்தால் அமையும். மழையைப் பெய்ய வைப்பாரும் இல்லை. மழை அதிகமாகப் பெய்தால் நிறுத்துவாரும் இல்லை


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை
The effect of actions done in a former birth.
To avoid those things which are to happen, or to detain those who are to depart, is alike impossible even to saints, even as there is none who can give rain out of season, or prevent its falling in season.

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

1992 ஆம் வருஷம் எவரெஸ்ட் ஏறத் தேர்வானேன். அந்த வருஷம் மே 12 ஆம் தேதியை மறக்கவே முடியாது. காயத்ரி மந்திரத்தை சொல்லிக்கொண்டு, கடவுளை நினைத்துக் கொண்டு ஒருவழியாக ஏறிவிட்டேன். அந்த உயரத்துல எனக்கு எதுவுமே புரியலை. அந்த உயரத்துக்குப் போன பிறகுதான் மனிதர்களான நமது எல்லைகள் என்னங்கிற பயம் வந்தது. கரணம் தப்பினா மரணம்-ங்கிற நிலமையில் ஒருவழியாகக் கொடியை ஏற்றி விட்டுத் திரும்பி விட்டேன். கடவுளுக்குப் பக்கத்துல போய் வந்த மாதிரி ஓர் உணர்வு
சந்தோஷ் யாதவ்
எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை கால் பதித்த உலகின் முதல் பெண்

இன்றைய குறள்

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

தமிழோசை

இன்றைய (ஜுலை 30 திங்கட்கிழமை) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க

வானம் வசப்படும்!!

"சாதனையாளர்கள் செய்வதைப் புதுமையாகச்செய்வர்"
(Winners Dont Do Different Things But They Do Things Differently) என்பார் ஷிவ் கேரா. மனிதப்பிறவி என்பது மகத்தானது, அதிலும் எந்தக் குறையுமில்லாமல் பிறப்பதென்பது கடவுள் சித்தம் என்று நாம் நினைக்கிறோம். மனிதப்பிறவி மகத்தானதுதான். ஆனால் குறை என்பது மனதில் மட்டுமே இருக்கக்கூடாது, மனதில் தன்னம்பிக்கையும், உறுதியும், விடாமுயற்சியும், பொறுமையும் இருந்தால் சிகரம் என்ன? வானமே வசப்படும்!! இது வெறும் வாய் ஜாலம் இல்லை. இந்த வீடியோப் பதிவைப்பார்க்கும்போது கண்களின் கடைசி விளிம்பில் கண்ணீர் கசிவதை நிறுத்த முடியவில்லைதான்! ஆனால் இதயத்துக்குள் எங்கோ ஒரு மூலையில் மின்சாரம் பாய்வதையும் மறுக்க முடியவில்லை. நன்றி : நெடுவாசல் சுரேஷ் - பூனா, இந்தியா

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் : ஆனால் இங்கு "உயிருக்கு உயிர்"
இந்தியா போன்ற பாரம்பரியமும், மனிதாபிமானமும் மிக்க நாடுகளில் கடும் துன்பம் இழைத்த, கொடூரமான தீவிரவாத செயல்கள் புரிந்த எத்தனையோ குற்றவாளிகளுக்குக்கூட, தூக்குத்தண்டனை மற்றும் மரணதண்டனை போன்றவற்றைக் குறைத்து தவறிழைத்தவர்களுக்கு, திருந்தி மறுபடியும் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப் பரிந்துரைத்துப் போராடிவரும் மனித உரிமை மற்றும் தன்னார்வக்குழுக்கள் அன்றாடம் முளைத்துக்கொண்டிருக்கும் இந்தக் கணினிக் காலத்தில், மனித உயிரின் மதிப்புத்தெரியாத அவலம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
மனிதாபிமானத்துக்கும் சவூதி மக்களுக்கும் தூரம் அதிகம் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது!! ஒரு குழந்தை இறந்ததற்குக் காரணம் இன்னொரு குழந்தை உண்மைதான் என்றாலும், கொலைக்குக் காரணமான குழந்தையையும் கொன்றுவிடுவதால், கொலைசெய்யப்பட்ட குழந்தை திரும்பி வரப் போகிறதா என்று ஒரு கணம் அந்தப் பெற்றோர் யோசித்திருந்தால், இன்னொரு சிறுமியின் உயிர் காப்பாற்றப்பட்டுவிடும். மேலும் மூவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்....எல்லாவற்றுக்கும் மேலாக புனிதர் நபிகள் நாயகம் நடமாடிய இந்தச் சவூதி மண்ணில் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பறிக்கப்படப்போகிறதோ??
ரிசானாவை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வி?
இலங்கைப் பணிப்பெண்ணான ரிசானாவுக்கு கருணை காட்ட உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மறுத்துவிட்டதால் அவரைக் காப்பாற்றும் இலங்கை வெளிநாட்டமைச்சின் முயற்சிகள் தோல்வியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
சவுதிஅரேபியாவில் இலங்கைப் பணிப்பெண்ணை ரிசானாவின் கவனக் குறைவால் 4 மாதக் குழந்தையொன்று உயிரிழந்ததையடுத்து அந்நாட்டு அரசு ரிசானாவுக்கு மரண தண்டனை விதித்தது.

இலங்கை பணிப் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நீக்குமாறு இலங்கை அரசும் பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக இலங்கை வெளிவிவகார பிரதியமைச்சர் உசைன் பைலா பணிப்பெண்ணின் பெற்றோருடன் சவுதி சென்றார்.

அங்கு உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து றிசானாவை மன்னித்து விடுதலையாக்கும்படி கேட்டபோதும் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். இதனால் ரிசானாவை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிசானாவின் பெற்றோரும் பிரதி அமைச்சர் உசைன் பைலாவும் நாடு திரும்பி விட்டனர்.
மூவருக்கு மரண தண்டனை:
சவூதி அரேபியாவில் ஜெட்டா நகரில் பெண் குழந்தை ஒன்றை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரு இலங்கையர்கள் உட்பட மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் பெண்ணாவார். இவர் இந்தியர் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார்.

இவர்கள் தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆட்சேபித்து சர்வதேச மன்னிப்பு சபையிடம் புகார் செய்துள்ளனர்.

இலங்கைப் பெண்ணான ஹெல்மா நிஸ்ஸா அவரது கணவன் நௌஸாப் மற்றும் இலங்கையரான கே.எம்.எஸ். பண்டாரநாயக்க ஆகிய மூவருமே சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.
இம்மூவரும் சவூதி அரேபியாவில் பொலிஸாரின் விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தடுப்புக்காவலில் இருக்கும்போது அவர் மீதான குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு மிக மோசமாக சித்திரவதைக்குள்ளான நிலையும் காணப்படுகிறது.
சவூதி அரேபிய அரசு தற்போது மரண தண்டனை குற்றவாளிகள் தொடர்பில் இறுக்கமான நடைமுறைகளைக் கையாள்வதன் காரணமாக இவ்வாண்டு இதுவரை 103 பேர் மரண தண்டனைக்குள்ளாகியுள்ளனர். இத்தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு எனவும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை, சிரச்சேதம் செய்து வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

July 29, 2007

முதல்வர் கருணாநிதியின் மகனும், நடிகருமான மு.க.முத்து உடல் நலக்குறைவுக் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதிக்கும், முதல் மனைவி பத்மாவதிக்கும் பிறந்த ஒரே மகன் மு.க.முத்து. இளம் வயதில் திரைப்படத்தில் நடிக்க விரும்பிய மு.க. முத்து, முரசொலி மாறனின் பூம்புகார் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட "பிள்ளையோ பிள்ளை' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அப்போது, எம்.ஜி.ஆருக்கு இணையாக மு.க. முத்துவை களம் இறக்க கருணாநிதி முயற்சிப்பதாக கூறப்பட்டது. அதன் பின்பு, "பூக்காரி', "சமையல்காரன்', "அணையா விளக்கு' உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்தார். அதன்பின்பு, திரைத்துறையில் இருந்து விலகினார். அரசியல் வானில் தனது தந்தை மின்னினாலும், அதன் கவர்ச்சியில் ஈர்க்கப்படாமல் ஒதுங்கியே இருந்தார். 1991-96 ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுகவில் சேர்ந்தார் மு.க.முத்து. அப்போது, அவருக்கு ஜெயலலிதா ரூ. 5 லட்சம் நிதி வழங்கினார். அதிமுகவில் இணைந்தாலும், கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தார். மு.க.முத்துவின் மகன் அறிவுநிதி, டாக்டராக உள்ளார்.
உடல்நலக் குறைவு: கடுமையான காய்ச்சல் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை மு.க.முத்து சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்தவுடன் காலை 10.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி மருத்துவமனைக்கு நேரில் சென்று மு.க.முத்துவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, டாக்டர் அறிவுநிதி, அவரது மனைவி பூங்கொடி, தங்கை தேன்மொழி ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சிகள் ரத்து: மு.க.முத்துவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை மாலையில் இருந்து தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். மு.க. முத்துவின் அருகிலேயே இருக்க வேண்டியுள்ளதால் நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என எழும்பூர் நீதிமன்ற விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

"கடலைக் கலக்கிச் சேறுபடுத்த யாராலும் முடியாது. முனியின் நிறை மனது கலங்கிய மனது ஆவதில்லை. சாந்தம் அல்லது ஜீவன் முக்தி என்ற பெருநிலையும் அவனுக்கே உரியது"

- சுவாமி சித்பவானந்தர்

ஒரே குடியரசுத்தலைவன்!

இவன்
முதல்க்குடிமகன் மட்டுமல்ல,
கடைசிக்குடிமகனும்கூட
ஆம்!
எங்களுக்கு வேண்டாம்
இனியொரு குடியரசுத்தலைவன்,
இந்த சிரிப்பழகன்,
சிகரம் தொட்டவன் போதும்
எங்கள் இந்தியாவை
நாங்கள் கற்பனைக்கெட்டாத்
தூரத்துக்குக்கொண்டு செல்வோம்!
இந்த வாழும் தெய்வம்
பிறந்த மண்ணில் பிறந்ததற்காகவும்,
அவனருகிலேயே
வசிக்க முடிந்ததற்காகவும்
பெருமையடைகிறேன்! பேறு பெற்றேன்!!
ஜெய்ஹிந்த்!!
ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த அன்றே சென்னைக்கு அப்துல் கலாம் வந்திறங்கிய போது முகம் கொள்ளாத சிரிப்போடு இருந்தார். அவரைச் சந்திக்க வரிசையில் நின்றிருந்த விசிட்டர்களில் ஒரு பெண்மணி, கலாமிடம் உற்சாகமாக சில வார்த்தகளைச் சொன்னபடியே, அழகிய ஜரிகைக் காகிதத்தில் சுற்றிய ஏதோ ஒரு பரிசுப் பொருளை அவரிடம் அளிக்க... "என்ன இது" என்று கேட்டார் அப்ல்கலாம். ஏதோ "ஒரு விலை மதிக்கமுடியாத பரிசு" என்று அந்தப் பெண்மணி சொல்ல... படக்கென்று கலாமின் முகத்திலிருந்த சிரிப்பு மாறியது. “இப்படியெல்லாம் செய்யக் கூடாது” என்று சற்றே கடுமயாகச் சொல்லி... பரிசை அந்தப் பெண்மணியிடமே திருப்பிக் கொடுத்து விட்டு, வேகமாக அவரைத் தாண்டிப் போனாராம். அன்று இரவே கிண்டி அண்ணா பல்கலக்கழகத்தின் விருந்தினர் மாளிகைக்குப்போன கலாம், மறுபடி ஜாலி மூடுக்குத் திரும்பியிருந்தார். ஜனாதிபதி “புரோட்டோகால்” இல்லாத அந்தச் சுதந்திரத்தை வெகுவாகவே ரசித்து அனுபவிக்க ஆரம்பித்தார். தன்னை நெருங்கிய பேராசிரியர் கஷீம் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் உற்சாகமாகக் கை குலுக்கி, மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தார். சிலர் பாசத்தோடு கட்டியணைக்க... அதற்கும் பிகு எதுவும் இல்லாமல் அனுமதித்தார். உளவுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர், “ஐயா! அஞ்சு வருஷத்க்கு முன்னாடி, குடியரசுத் தலைவர் பதவிக்கு, உங்க பெயர் பரிந்துரைக்கப்பட்டதுமே அதை முதல்ச் செய்தியாகச் சொன்னது நான்தான். அதுவும் இதே இடத்தில்தான் சொன்னேன்... டெல்லிக்கு உங்களுக்கு லைன் போட்டுக் கொடுத்ததும் நான்தான்” என்று மலரும் நினவூட்ட... கலாம் கண்கள் லேசாகப் பனித்தன. ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கே உரிய பாதுகாப்பு ஏற்பாடு கள் அனத்தும் அண்ணா பல்கலைக் கழக விருந்தினர் வளாகத்தில் செய்யப்பட்டிருக்க, அந்த ஏரியா டெபுடிபோலீஸ் கமிஷனர் சேஷசாயியை அழைத்த கலாம்... “நீங்கதான் எல்லாம் கவனிக்கப் போறீங்களா... குட்! நான் மாதத்தில் சில நாட்கள் மட்டும்தான் இங்கே இருக்க வேண்டி வரும். அந்தச் சமயத்தில் என்னைத் தேடி வர்றவங்களில் பெரும்பாலும் மாணவர்கள்தான் இருப்பாங்க. சந்தேகம் கேட்கணும்-னு என்னிடம் வந்துகிட்டே இருப்பாங்க. பாகாப்புக் கெடுபிடி என்ற பெயரில் அவங்க மனசு நொந்து போயிடக்கூடாது. நீங்கதான் எல்லா காவலர்களுக்கும் அத எடுத்துச் சொல்லணும்” என்று நட்புடன் சொன்னார்.

"டாக்டர் அப்துல்கலாம் இணைய தளம்

புதுதில்லி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தனக்கான தனி இணைய தளத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். அதன் முகவரி: http://www.abdulkalam.com
இதில் அவரைப் பற்றிய தகவல்களும் படங்களும் அவரின் படைப்புகளும் கேள்வி பதில்களும் மேலும் பலவும் இடம்பெற்றுள்ளன. அவரைத் தொடர் புகொள்ளும் வாய்ப்பினையும் இந்த இணைய தளம் அளிக்கிறது. அப்துல்கலாம் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த போது www.presidentofindia.nic.in என்ற வெப்சைட்டில் ஏராளமான கட்டுரைகள், கவிதைகள் வெளியிட்டிருந்தார். இவை தவிர மாணவ- மாணவியர்கள், பொதுமக்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களைப் படித்து அவர்களுக்குப் பதில் அனுப்பி வந்தார். இதில் குழந்தைகளுக்கான பகுதியையும் உருவாக்கியிருந்தார். இதனால் அந்தத் தளத்தை லட்சக்கணக்கானோர் பார்த்து வந்தனர். இந்த நிலையில் அப்துல் கலாம் 3 நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். புதிய ஜனாதிபதியாக பிரதீபா பட்டீல் பதவி ஏற்றார். அப்துல்கலாம் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதால் குடியரசுத் தலைவருக்கான அந்த இணைய தளத்தில் இருந்த அவரது கட்டுரைகள், கவிதைகள், மாணவர், ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் அனைத்தும் அதிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டன.

இன்றைய குறள்

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

தமிழோசை

இன்றைய (ஜுலை 29 ஞாயிற்றுக்கிழமை) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பில் செல்க BBCTamil.com Radio Player

இசையை ரசிக்கக் கூடிய ஒவ்வொரு தமிழனும் மறக்க முடியாத ஒரு வானொலி நிலையம் இலங்கை வானொலி நிலையம்தான். இலங்கை ஒலிபரப்புக்கூட்டு ஸ்தாபனம் தமிழ்ச்சேவை என்று சொல்லி நிகழ்ச்சிகளைத் தொகுத்தும் வழங்கும் விதத்தில் மயங்காத தமிழ் நெஞ்சங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. தொலைக்காட்சி, சினிமாக்கள் இன்றைய அளவுக்குப் பிரபலமடையாத அந்தக்காலத்தில் ஒரே ஒரு பொழுது போக்குச் சாதனம் வானொலி ஒன்றுதான். இலங்கை வானொலி ஒலித்துக்கொண்டிருந்தால் நம்மையறியாமலே மனதில் ஒரு திருமண வீடு போன்ற குதூகலம் பிறக்கும். நெடுநாளைக்குப்பின் அந்த அனுபவத்தை இப்போதும் இந்த ஒலிப்பதிவைக் கேட்கும்போது உணரமுடிகிறது. அப்படிப்பட்ட அற்புதமான, இனிமையான மலரும் நினைவுகளை நம் செவிகளுக்கு விருந்தாக்கியிருக்கிறார் அருமை நண்பர் திரு.யாழ் சுதாகர். அந்த இனிமையான குரல்களில் இவருடைய குரலும் ஒன்று. இப்போது இலங்கை வானொலியில் இவருடைய குரலைக் கேட்க முடியாவிட்டாலும், நமது தமிழகத்தில் "சூரியன் பண்பலை" வரிசையில் இரவு நேரத் தொகுப்பாளராக மிக அருமையாகவும், அற்புதமாகவும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளைக் கேட்க முடிவது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இவர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியைக் கேட்போம். திரு.யாழ் சுதாகர் அவர்களுக்கு நன்றி

Powered by eSnips.com

இலங்கை வானொலி நினைவலைகள் பகுதி II

Powered by eSnips.com

July 28, 2007

அமைதி எப்படி கிடைக்கும்?

"பொய் பேசுதல், புறங்கூறுதல், இழித்துரைத்தல், பயனற்ற சோம்பல் பேச்சு இவைகளால் மனிதர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே, இவற்றில் இருந்து விலகியே இருங்கள்"

கொட்டாவி நல்லதா கெட்டதா?

ஆவ்வ்வ்வ்... என்று, கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பவர்களை பார்த்தால், "என்ன, சரியா துங்கலியா?" என்று சிலர் கேட்பர்.
கொட்டாவி மனிதர்கள் மட்டுமல்ல, எந்த உயிரினத்துக்கும் வரும்.

சோர்வு மற்றும் துõக்கத்துக்கான அறிகுறி என்று தான் இதுவரை, கொட்டாவியை பற்றி டாக்டர்கள் பலரும் சொல்லி வந்தது! ஆனால், சமீபத்தில் அமெரிக்க நிபுணர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், புது தகவல்கள் கிடைத்துள்ளன.

நியூயார்க் அல்பேனி பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கூறிய தகவல்கள், உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

அவர்கள் கூறியது :

கொட்டாவி, நல்லது தான். துõக்கமில்லாமல் இருப்போருக்கு வருவது தான் கொட்டாவி, அதனால், சோர்வு தான் ஏற்படும் என்று சொல்வதெல் லாம் சரி தானா என்ற கேள்வியை, இப்போது கிடைத்துள்ள மருத்துவ உண்மைகள் வெளிப்படுத்தியுள்ளன.

உடலில், ரத்தத்தில் ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடு அளவில் மாற் றம் ஏற்படும் போது, கொட்டாவி ஏற் படும். கொட்டாவி விடுவதில் இருந்து தான் இந்த இரண்டின் அளவுகள் சீராகின்றன என்று முன்பு கூறப்பட்டது.

ஆனால், கொட்டாவி ஏற்பட, ஆக்சிஜனோ, கார்பன்-டை-ஆக்சைடோ காரணம் அல்ல என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூளை இயக்கத்தை சீராக்கவே, கொட்டாவி வருகிறது. மூளை இயக் கம் துவண்டு போகாமல், அதை மேலும், வலுப்படுத்தவே, கொட்டாவி வருகிறது என்பது தான் உண்மை என்று நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

நாங்கள் 44 பேரை வைத்து, இதற்கான சோதனையை செய்தோம். அவர்களில் சிலர், சிரித்தபடி இருந்தனர். சிலர், வீடியோ படம் பார்த்தபடி இருந்தனர். இப்படி ஆளாளுக்கு ஒரு வேலையில் ஈடுபட்டிருந்தனர். எல்லாரும் சில முறையாவது கொட்டாவி விட்டனர். மூக்கில் வெற்றிடம் உள்ளது. அதில் உள்ள ரத்த நாளங்கள், மூளைக்கு குளிர்ந்த ரத்தத்தை அனுப்பும் போது, இப்படி கொட்டாவி ஏற்படுகிறது என்பது தான் எங்கள் ஆய்வு முடிவு. ஏ.சி. அறையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு அடிக்கடி கொட்டாவி வரும். வீடியோ பார்ப்பது, படிப்பது, எழுதுவது போன்ற செயல்களின் போதும், கொட்டாவி வரும்.

சங்கீத ஜாதிமுல்லை பாடலைப் பாடிய இந்தச் சிறுவன் கிருஷ்ணமூர்த்திக்கு, சங்கீதக் கலாநிதி, பத்மபூசன் டாக்டர் திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் விருதும், ஐந்து லட்சம் ரூபாய் பரிசும் கொடுத்துப் பாராட்டியிருக்கிறார். ஆனால் இந்தச் சிறுவனுக்கு இதைவிட பெரிய பரிசே கொடுத்தாலும் தகும்

அபர்ணா

இன்னொரு திறமையான பாடகி உருவாகிக்கொண்டிருக்கிறார்

குதிரை வண்டி தான் இவரின் சொகுசு கார் புதுச்சேரி
உலக உருண்டையின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், வாகனங்களை பயன் படுத்துவதை குறைக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல வெளிநாடுகளில் சைக்கிள்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ருத்ரமூர்த்தி என்பவர், தனது போக்குவரத்திற்கு தன்னுடைய மூதாதையர்கள் பயன்படுத்திய ரேக்ளா குதிரை வண்டியை பயன் படுத்தி வருகிறார். "எங்கள் குடும்பத்தில் தாத்தா காலத்தில் இருந்தே குதிரை வண்டிகளை பயன்படுத்தி வருகிறோம். ஒரு நாளைக்கு, காருக்கு ஆகும் டீசல் செலவுத் தொகையை பயன்படுத்தி, குதிரை வண்டியில் ஒரு மாதத்திற்கு பயணம் செய்யலாம். கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, திண்டிவனம் என எங்கு செல்ல வேண்டி இருந்தாலும் குதிரை வண்டி சவாரிதான். தொடர்ச்சியாக 50 கி.மீ. பயணம் செய்து விட்டு, குதிரைக்கு சற்று ஓய்வு கொடுத்துப் பின்னர் பயணத்தை தொடர்கிறேன். குதிரைக்கு அரை கிலோ கொள்ளு மற்றும் ஏழு கிலோ அருகம்புல் ஆகியவைதான் உணவு' என்கிறார் ருத்ரமூர்த்தி

இன்றைய குறள்

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

தமிழோசை

இன்றைய (ஜுலை 28) "BBC" செய்திகள்கேட்க இணைப்பில் செல்க
BBCTamil.com Radio Player

நாலடியார்

1. அறத்துப்பால்

1.10 ஈகை

நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்

இடுகாட்டுள் ஏற்றைப் பனை


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை

எல்லோருக்கும் கொடுத்துத் தானும் இசைபட வாழும் நற்பண்பைக் கொண்டவர், மக்கள் நிறைந்த ஊரின் நடுவே உள்ள, நல்ல பழம் கொடுக்கும் பெண் பனை மரம் போன்றவர். தான் மட்டும் உண்டு பிறருக்குக் கொடுத்து உதவாத மனிதர்நட்ட நடுக்காட்டில் உள்ள ஆண் பனை மரம் போன்றவர்

- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை

Those who give are like the female palm tree surrounded by the terrace in the midst of the village. They live beloved by many. Men who eat without giving to others, though their family is flourishing, are like the male palm in a burning-ground


Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

July 27, 2007

டாக்டர் மேதகு அப்துல் கலாம் பேட்டி

கேள்வி:- நீங்கள் ஜனாதிபதியாக இருந்தபோது, பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை பெற்ற அப்சல் குரு தாக்கல் செய்த கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காதது ஏன்? இதுதொடர்பாக உங்கள் மீது விமர்சனமும் எழுந்ததே?
பதில்:- அப்சல் குருவின் கருணை மனுவை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை அறிய, அந்த அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் கடைசிவரை, உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை. ஒருவேளை பதில் வந்திருந்தால், அதை நான் பரிசீலித்து இருப்பேன்.
கேள்வி:- அதுபோல், நீங்கள் வெளிநாட்டில் இருந்தபடி, பீகார் ஆட்சி கலைப்புக்கு ஒப்புதல் அளித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியதே?
பதில்:- அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அப்போது நான் ரஷியாவில் இருந்தேன். அங்கிருந்தபடியே, பிரதமர் மன்மோகன்சிங்குடன் ஆலோசனை நடத்தினேன். அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். அவர் இரண்டு தடவை என்னுடன் அதுபற்றி விவாதித்தார். எனக்கு தேவையான விவரங்கள் எல்லாம் ஈ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில், நான் ஆட்சி கலைப்புக்கு ஒப்புதல் அளித்தேன்.
கேள்வி:- ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவை நீங்கள் திருப்பி அனுப்பியதும் சர்ச்சை உண்டாக்கியதே?
பதில்:- அதுவும் சரியான முடிவுதான். முதலில் அதை நான் பாராளுமன்றத்துக்கு திருப்பி அனுப்பினேன். மத்திய அரசு அதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தியது. அந்த மசோதா தேவையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
கேள்வி:- எதிர்காலத்தில், பிரதமர் பதவிக்கு பொது வேட்பாளர் தேவை என்ற நிலை ஏற்பட்டால், பிரதமர் பதவியை ஏற்பீர்களா?
பதில்:- இந்த கேள்வி உங்களுக்கு இனிமையாக இருக்கலாம். ஆனால் எனக்கு கற்பனையாக தோன்றுகிறது. எனக்கு 5 கல்வி நிறுவனங்களில் கற்பிக்க வேண்டிய வேலை இருக்கிறது.
கேள்வி:- முதல்முறையாக பெண் ஜனாதிபதி கிடைத்து இருப்பது பற்றி?
பதில்:- இது உண்மையிலேயே நல்ல செய்தி.
கேள்வி:- வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகிய இரண்டு பிரதமர்களுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- இருவருமே திறமையானவர்கள், சிந்திக்கும் வகையை சேர்ந்தவர்கள், பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுபவர்கள். அவர்களுடன் எனக்கு சிறப்பான உறவு நிலவியது. மகிழ்ச்சியாக பணியாற்றினேன்.
கேள்வி:- ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மாற்றி அமைக்க வேண்டுமா?
பதில்:- தேவை இல்லை. அரசியல் சட்டம் 50 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சோதனைகளை தாங்கி நிற்கிறது. என்னை பொறுத்தவரை எனது பணியில் எந்த முட்டுக்கட்டையும் இருக்கவில்லை.
கேள்வி:- 27 சதவீத இட ஒதுக்கீடு பிரச்சினையை சமாளிக்க வழி என்ன?
பதில்:- கல்வி நிறுவனங்களில் `சீட்'களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
கேள்வி:- இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதே?
பதில்:- அணுசக்திக்கு நம்மை நாமே சார்ந்திருப்பதுதான் ஒரே வழி. நம்மிடம் நிறைய தோரியம் இருக்கிறது. அதை வைத்து அணுசக்தி உற்பத்தி செய்ய ஈனுலைகள் அமைக்க வேண்டும்.
கேள்வி:- தற்போதைய அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- அரசியல் நிலைமை கவலை அளிக்கிறது. முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படுவது இல்லை. வளர்ச்சி பற்றி போதுமான அளவு பேசப்படுவது இல்லை. அதற்கு உயர் முன்னுரிமை கொடுப்பது இல்லை. உதாரணமாக, எந்த ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று எந்த கட்சியும் இலக்கு நிர்ணயிப்பது இல்லை.எல்லா அரசியல் தலைவர்களும், வளர்ச்சிரீதியான அரசியலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால் நிலைமை முற்றிலும் மாறாக உள்ளது. வளர்ச்சி பணி அடிப்படையில் தலைவர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

* மனிதர்களை களங்கப்படுத்தும் செயல்களில் எல்லாம் அச்சம் பிரதானமாக இருக்கிறது. அது, இறைவன் உங்களுக்கு கொடுத்த கடமையைக்கூட எளிதாக முடிக்க விடாமல் தடுக்கிறது. இறைவன் ஒவ்வொருவருக்கும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும், வலிமையையும் கொடுத்திருக்கிறார். மனதில் பயம் இருப்பவர்களுக்கு இறைவனின் அருளும் கிடைப்பதில்லை

- ஸ்ரீஅன்னை

இன்றைய குறள்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்

கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக்கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

ஆர்ட் டைரக்டர் திரு.தோட்டாதரணி நேர்முகம் பகுதி II

கேபிள் டிவி-யும் ஆளும் கட்சியும்

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுலை 27 வெள்ளிக்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பில் செல்க BBCTamil.com Radio Player

பதவியிலிருந்து ஓய்வு பெறும் அப்துல் கலாமின் பத்து கட்டளைகள்

வளரும் நாடாக இருக்கும் இந்தியா வல்லரசாக மாற,
10 கட்டளைகளைத் தெரிவித்தார் குடியரசுத் தலைவர்.


மக்களின் தேவைகளை, கோரிக்கைகளை நிறைவேற்றுகிற வகையில் அரசு செயல்பட வேண்டும், அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையாக அமைய வேண்டும், லஞ்சம்-ஊழல் அறவே இல்லாத நிலைமை ஏற்பட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

5 ஆண்டு பதவிக்காலம் முடிவு பெறுவதை ஒட்டி நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை வானொலி, தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக உரை நிகழ்த்தினார்.

"நம் நாட்டின் நூறு கோடி இதயங்களையும் எண்ணங்களையும் இணைத்து, "நம்மால் முடியும்'' என்ற நம்பிக்கையை வளர்த்து, நாட்டை வல்லரசாக்குவதே என்னுடைய எஞ்சிய வாழ்நாளின் லட்சியம்.

குடியரசுத் தலைவராக நான் பதவி வகித்த ஐந்து ஆண்டுகளும் அழகானதாகவும், அடுக்கடுக்கான பல சம்பவங்கள் நிறைந்ததாயும் வேகமாகக் கழிந்தன. 2020-க்குள் இந்தியாவை வல்லரசாக்கும் நல்ல முயற்சியில் நாட்டு மக்களாகிய உங்களுடன் நானும் சேர்ந்துகொள்வேன்.

பதவி வகித்த ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் நன்கு ரசித்தேன். அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், சிறப்புக் குழந்தைகள் என்று பலதரப்பட்டவர்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் நான் கழித்த நாள்களை மறக்க முடியாது.

இந்தியாவை வல்லரசாக்க 10 அம்சங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

நகர்ப்புற மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் வாழ்க்கைத் தரத்தில் வித்தியாசம் இருக்கக்கூடாது.

அத்தியாவசியமான பண்டங்களையும் சேவைகளையும் அனைவரும் பெறும் வகையில் சமத்துவம் நிலவ வேண்டும்.

மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள்களும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

அரசு நிர்வாகமானது மக்களின் தேவைகளை, விருப்பங்களைப் புரிந்து அவற்றை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

அரசின் நிர்வாக நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். யாருக்கும், எதற்கும் சலுகை காட்டப்படுவதாக மக்கள் நினைக்கக் கூடாது.

அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவது போன்ற குறைகள் இருக்கக்கூடாது.

எல்லா வகையிலும் வாழ்வதற்குச் சிறந்த இடம் என்ற பெயரை நமது நாடு பெற வேண்டும்.

நம்நாட்டு அரசியல் தலைமையையும் மற்ற துறைகளில் உள்ள தலைமையையும் நினைத்து நாம் பெருமைப்படும் விதத்தில் அவை தங்களை மேலும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

விரைவான பொருளாதார வளர்ச்சிக்காக, நமது தொன்மையான-பலதரப்பட்ட கலாசாரத்தையும் நாகரிகத்தையும் தொலைத்துவிடக்கூடாது. எதிர்கால சந்ததிக்காக அவற்றைப் பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

ஏழைகள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் நமது தேசத்தின் செல்வச் செழிப்பை நாம் கணக்கிட வேண்டும்.

மொத்த பொருளாதார உற்பத்தி அளவு எப்படி உயர்ந்திருக்கிறது, மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி மேம்பட்டிருக்கிறது, பழைய மரபுகளை, பண்புகளை நாம் இன்னமும் எப்படி கட்டிக்காத்து வருகிறோம் என்பதையும் கணக்கிட வேண்டும்.

நம் நாட்டிலிருந்தே வறுமையை ஒழிக்க வேண்டும், படிக்காதவர்களே இல்லை என்ற வகையில் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும், பெண்களுக்கும்-குழந்தைகளுக்கும் குற்றம் இழைக்கும் கொடுமைகள் மறைய வேண்டும்.

திறமைசாலிகளான அறிஞர்கள், அறிவியலாளர்கள், முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தேடிவரும் வகையில் நம் நாடு முன்னேற வேண்டும்.

அனைவருக்கும் கல்வி: சமூக, பொருளாதார வித்தியாசம் பாராமல் தகுதி வாய்ந்த எல்லா மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பும் கல்வி பயில வாய்ப்பு தரப்பட வேண்டும்.

அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும்.

வேளாண்மை, தொழில், சேவைத்துறை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதி செய்ய வேண்டும்.

நாட்டின் 6 லட்சம் கிராமங்களுக்கும் அதிகாரம் அளிப்பதும், 7 ஆயிரம் மையங்களில் நகர்ப்புற வசதிகளை, கிராமங்களுக்கே கொண்டு செல்லும் மையங்களை (புரா) நிறுவதலும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

முப்படையினர் தியாகம்: நமது ராணுவத்தின் முப்படையினரும் இரவிலும் கண்விழித்து நாட்டைப் பாதுகாப்பதால், நாமெல்லாம் கண்மூடி நிம்மதியாகத் தூங்க முடிகிறது.

சியாசின் பனி முகட்டில் குமார் முனை என்ற இடத்துக்குச் சென்றேன்; சிந்துதர்சக் நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கடியில் சாகசப் பயணம் மேற்கொண்டேன். ""சுகோய்-30'' ரக போர் விமானத்தில் படுவேகமாகப் பறந்து சென்றேன். இந்த 3 அனுபவங்கள் மூலம் நம்முடைய ராணுவ வீரர்களின் அறிவு, திறமை, உள்ள உறுதி, தியாகம், வீரம் ஆகியவற்றை நன்கு உணர்ந்துகொண்டேன்.

ஆப்பிரிக்க தொலைத்தகவல் தொடர்பு: ஆப்பிரிக்க நாடுகளின் தொலைதூரப் பகுதிக்கும் தகவல்-தொழில்நுட்பத்தின் நவீன பலன்கள் கிடைக்க, "அனைத்து ஆப்பிரிக்க ஈ நெட்வொர்க்'' என்ற இணையதள வசதியைச் செய்துதரும் இந்திய அரசின் திட்டம் மகோன்னதமானது.

இதன் மூலம் இந்தியாவின் 7 பல்கலைக்கழகங்களும் ஆப்பிரிக்காவின் 5 பல்கலைக்கழகங்களும், 17 சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும், 53 தொலை-மருத்துவ மையங்களும், 53 தொலைக்கல்வி நிலையங்களும் இணைக்கப்படும்.

இந்தியாவின் பன்முகத்தன்மையும், கலாசார வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மக்களின் அருங்குணமும் எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

25 வயதுக்குக் குறைவான 54 கோடி இளைஞர்கள் வாழும் ஒரே நாடு இந்தியாதான்; இப்பூவுலகில் மிகப்பெரிய சொத்தாக இதையே கருதுகிறேன். இவர்களுக்கு நல்ல கல்வி, தலைமைப்பண்பு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்து, நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும்' என்றார் கலாம்.

July 26, 2007

இழுக்க இழுக்க இன்பம்!!

ஆர்ட் டைரக்டர் திரு.தோட்டாதரணி அவர்களின் நேர்முகம் பகுதி I

இசையையும் தமிழையும் எப்படிப் பிரிக்க முடியும்? எத்தனையோ இசைப் பாரம்பரியங்களையும், இசைத்தலைமுறைகளையும் பார்த்த நம் தமிழ் திரையுலகம், தொடர்ந்து நல்ல முத்துக்களைக் கண்டெடுத்துக் கொண்டுதானிருக்கிறது. அடுத்தொரு அருமையான இளம் பாடகி மதுமிதா பகுதி I

மதுமிதா பகுதி II

பாட்டாளி மக்கள் கட்சியின் இன்றைய காய் நகர்த்தல், டாடா நிறுவனத்திற்காக வாங்க இருக்கும் நிலத்திற்கும் தமிழக அரசுக்கும் உள்ள பங்கு குறித்து திரு.முருகன் ஐ.ஏ.எஸ். அவர்களின் ஆய்வு : பகுதி I

பாட்டாளி மக்கள் கட்சியின் இன்றைய காய் நகர்த்தல், டாடா நிறுவனத்திற்காக வாங்க இருக்கும் நிலத்திற்கும் தமிழக அரசுக்கும் உள்ள பங்கு குறித்து திரு.முருகன் ஐ.ஏ.எஸ். அவர்களின் ஆய்வு : பகுதி II

இன்றைய குறள்

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை

கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி, நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

* பயமில்லாமல், உண்மையைக் கூறுவதால், உங்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வரும் எனத் தெரிந்தாலும், அதற்காக கலங்கிவிடாதீர்கள். மனதில் இறைவனை எண்ணி, பயமின்றிச் சத்தியத்தையே பேசுங்கள். அப்போதுதான் உண்மையான வெற்றி கிடைக்கும்

- ஸ்ரீஅன்னை

தமிழோசை

கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பாக இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு
இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து அண்மையில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பான வழக்கை மேலெடுத்துச் செல்ல இன்று இலங்கையின் உச்சநீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இராக் அகதிகளுக்கு சர்வதேச உதவி கோரப்படுகிறது
லட்சக்கணக்கான இராக்கிய அகதிகளை ஏற்றுக்கொண்ட நாடுகள், அவசர சர்வதேச உதவிகளுக்காக கோரிக்கை விடுத்துள்ளன. தொடர்ந்து "BBC" இன்றைய (ஜுலை 26 வியாழக்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பில் செல்க..
BBCTamil.com Radio Player

புவி வெப்பத்திற்கெதிராய் நம்மால் முடிகின்ற 20 செயல்கள்
கீழ்கண்ட அருமையான 20 விஷயங்களை தந்திருப்பவர் பெயர் திரு. விண்சென்ட். முன்னாள் வங்கிப் பணியாளர், இந்நாள் விவசாயி. கோவையைச் சேர்ந்தவர்.


1.தேவைபடும் நேரம் மட்டும் மின் விளக்கு, மின் விசிறி, தொலைகாட்சி, கணினி இவைகளை உபயோகிப்போம்.

2.குளிர்சாதன பெட்டி, குளிரூட்டிகளை முடிந்த வரை தவிர்ப்போம்.

3.ஒளிர் மின் விளக்கிற்கு (CFL) மாறுவோம்.

4.சூரிய சக்தியை பயன்படுத்தி சுடுநீர் பெறுவோம், விளக்கு எரிப்போம்.

5.புதுபிக்கும் வகை மின்கலங்களை (Rechargeable Battery) பயன்படுத்துவோம்.

6.நீண்ட தூர பயணத்திற்கு ரயில், பேருந்து போன்றவைகளை பயன்படுத்துவோம்.

7.குறைந்த தூர பயணத்திற்கு சைக்கிளை பயன்படுத்துவோம்.

8.கடித தொடர்பிற்கு மின்னஞ்சலை அதிகம் பயன்படுத்துவோம்.

9.பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து காகித பைகளை பயன்படுத்துவோம்.

10.கொசு வலையை பயன்படுத்தி கொசுவர்த்தி சுருள்,வில்லை போன்றவைகளை தவிர்ப்போம்.

11.வீடுகளில் காம்பவுண்ட் முழுவதும் தளம் அமைப்பதை தவிர்த்து சற்று மண் பகுதியை விடுவோம்.

12.இரு குப்பை தொட்டி முறையை சமையலறையிலிருந்து தொடங்குவோம்.

13.நாமே மண்புழு உரம் சமையலறை கழிவிலிருந்து தயாரிப்போம்.

14.இயற்கை விவசாயத்திற்கு ஆதரவு தந்து ஊக்கப்படுத்துவோம்.

15.மூலிகை தாவரங்கள் மற்றும் மரங்களை வீட்டருகில் வளர்ப்போம். (கவனம் தேவை)

16.விஷேச நாட்களில் மரம் நடுவதை கொள்கையாக பின்பற்றுவோம்.

17.மழை நீர் சேகரிப்பு முறையை எங்கிருந்தாலும் அமல் செய்வோம்.

18.நீரை குறைவாகவும், மறுஉபயோகமும், மறுசுழற்சியும் செய்வோம்.

19.திறன்நுண்ணுயிரை (Effective microorganisms(EM) அன்றாடவாழ்வில் பயன்படுத்துவோம். (விபரம் இங்கே)

20.இந்தச் செய்திளை நண்பர்களுக்கு தெரிவிப்போம்.

1983 கறுப்பு ஜுலை

1983 கறுப்பு ஜுலை

எதிர்வரும் நாட்களில் நாம் உபயோகிக்கப் போகும் கம்ப்யூட்டர்கள்

July 25, 2007

தமிழோசை

இன்றைய குறள்

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

சரவணா ஸ்டோர்ஸ் "தில்லுமுல்லு"

எப்படியெல்லாம் ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். பாவம் அப்பாவி மக்கள். விளம்பரங்களை மட்டுமே நம்பிக் கடைக்குள் செல்லும் கபடமற்ற நம் உடன்பிறப்புக்களை இந்த முதலைக்கூட்டம் முழுங்குவது எத்தனை நாள் நீடிக்கும்?? காலம் பதில் சொல்லும்!! என்ன செய்துவிட முடியும்? என்ற திமிறில் செய்கின்ற ஊழலும், மெத்தனமும் இணையத்தளத்தில் முதலில் நாறட்டும், பிறகு தெரியும் இந்தத் தலைமுறையின் வேகமும், வீச்சும்!!
கூகிள் குரூப்-பில் வந்த செய்தியை அப்படியே உங்களுக்குத் தருகிறேன். முடிந்தால் இதனை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி வையுங்கள்.
Dear All,

This is an useful information about Saravana Stores in T Nagar.

Before two months I purchased a Transcend pendrive and a Samsung keyboard .
In the keyboard three keys were not working, to complain this I called
Samsung customer care. To my surprise the customer care officer says they
never manufactured keyboard. Then I called Saravana stores, they gave a
samsung customer care number. But that number is not Samsung customer care
no, its a shop in Richi street. Then I had a deep look at my keyboard and
noticed that the symbol of Samsung is different from the original symbol
which in my mobile. This happened befor two days.

Yesterday the pendrive gave me trouble. I was not able to copy pictures in
it. If i copy, some of them cannot be opened and some them will be
collapsed. For this also when I called Saravana stores, Another surprise,
they gave me the same number of the shop in richi street. When i shouted
saying my conversation with Samsung, after a long hold, he gave me another
number saying that its also a customer care number, I dont know which
number is that, Nobody is picking the phone in that number.

So what i want you to do is, forward this mail to all of ur friends, Let
this msg reach all and atleast after this incident to me, we will avoid
purchasing any electronic items in Saravana stores.

Please forward this to all. Consider this is a well wish that u r doing for
ur friends.

Thank you.

"சிந்தையைச் சிதறவிடும் யோகி ஒருவன் மலைக்குகையில் தியானம் செய்கிறான். கடைத்தெருவில் செருப்புத் தைக்கும் சக்கிலியன் குவிந்த மனத்துடன் திறம்படத் தன் தொழிலைச் செய்கிறான். இவ்விருவரில்
சக்கிலியனே கரும யோகத்தில் சிறந்தவன்"

- சுவாமி சித்பவானந்தர்

இணையத்தில் "தில்லுமுல்லு"

இன்டர்நெட் உலகில் பிராட் பேண்ட் வசதி வந்ததிலிருந்து இணையம் வழியாக முகம் தெரிந்த மற்றும் தெரியாத யாருடனும் அரட்டை அடிப்பது பலருக்கு வழக்கமாகிவிட்டது. முதலில் பொழுது போக்காகத் தொடங்கி நல்ல நட்பாக மாறும் அரட்டைகளும் உண்டு. அதே நேரத்தில் பல அரட்டைகள், ஏமாற்றுதல், திருட்டு திருமணங்கள், பாலியியல் பலாத்காரங்கள் என முடிந்த செய்திகளும் நாம் காண்கிறோம். இவை தவிர இணையத் தொடர்பிற்குப் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களும் பலவிதமான பாதிப்பிற்கு உள்ளாவதும் பரவலாக ஏற்படுகிறது. முதலில் சொல்லப்பட்ட பாதிப்புகளுக்கு தனி மனித ஒழுக்கம் தேவை. ஆனால் கம்ப்யூட்டரைப் பாதுகாக்க சில பாதுகாப்பு வழிகள் தேவை. இவை இரண்டையும் இங்கு காண்போம்.

1.சேட்டிங்கில் ஈடுபடுபவர்கள் பெரும் பாலும் அபாயகரமானவர்கள் என்ற பய உணர்ச்சி உங்களிடம் எப்போதும் இருக்க வேண்டும். எனவே அறிமுகம் தெரியாத எவரிடமும் உங்களின் பெயர், முகவரி, இமெயில் முகவரி, தொலைபேசி எண் போன்ற எதனையும் தர வேண்டாம்.
2.நீங்கள் வழக்கமாகச் செல்லும் அல்லது மேற்கொள்ளும் பணிகள் எதனையும் அரட்டை அறையில் தெரிவிக்க வேண்டாம். குறிப்பாக பள்ளி அல்லது கல்லூரி செல்லும் நேரம், பணிக்குச் செல்லும் நேரம், இன்டர் நெட்டில் அரட்டை அறைக்கு வரும் நேரம் ஆகியவற்றைச் சொல்லவே கூடாது.

3.உங்களுடைய கம்ப்யூட்டர் வாழ்க்கையையும் நிஜ வாழ்க்கையையும் இணைக்க வேண்டாம். கூடுமானவரை அரட்டை அறையில் அறிமுகமாகும் நபர்களை வெளியே சந்திப்பதனைத் தவிர்க்கவும். முக்கியமாக சந்திக்க வேண்டுமானால் தனியானதொரு இடத்தில் இந்த நண்பர்களைச் சந்திப்பதனைத் தவிர்த்திடுங்கள். சுற்றிலும் ஆட்கள் இருக்கும் இடமாகத் தேர்ந்தெடுத்து சந்தியுங்கள். உடன் யாரையாவது அழைத்துச் செல்லுங்கள். முக்கியமாக உங்கள் வீட்டில் நீங்கள் எங்கு யாரைச் சந்திக்கச் செல்லுகிறீர்கள் என்பதனைச் சொல்லிச் செல்லுங்கள்.

4.சேட் செய்திடுகையில் ஏதேனும் இணையத் தளத்திற்கான லிங்க்குகள் இருந்தால் அவற்றில் கிளிக் செய்து அத்தளம் செல்வதனைத் தவிர்த்திடுங்கள். அதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்கு வைரஸ் வரலாம். அல்லது உங்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் பாலியியல் சமாச்சாரங்கள் அடங்கிய தளமாக அது இருக்கலாம்.

5.மாடரேட்டர் (Moderator) இருக்கும் சேட் அறைக்கே செல்லுங்கள். இதனால் யாரும் உங்களைப் பயமுறுத்திவிட்டோ அல்லது ஏமாற்றிவிட்டோ சென்றுவிட முடியாது. மேலும் உங்கள் அரட்டையை ஒருவர் கண்காணிக்கிறார் என்கிற பாதுகாப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

6.உங்களுடைய புகைப்படத்தினை எந்த காரணத்தைக் கொண்டும் தர வேண்டாம். இதனால் அடுத்த முனையில் இருப்பவர் உங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய வாய்ப்புண்டு. அவர் தான் அவருடைய படத்தினை அனுப்பி விட்டாரே நாம் அனுப்பினால் என்ன என்று எண்ண வேண்டாம். அவர் அனுப்பிய படம் அவருடையது தான் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

இங்கே கூறிய எல்லா விஷயங்களும் உங்களுக்கு பொருந்தும் என்று சொல்லமுடியாது. ஆனால் இந்த அறிவுரைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம்.

கார்களில் செல்லும்பொழுது "சீட் பெல்ட்" அணிவது எவ்வளவு அவசியம் என்பதையும், அப்படி அணியாமல் அதிகப்பிரசிங்கித்தனமாகச் சென்றால் ஏற்படும் விளைவு என்ன என்பதையும் இந்த இணைப்பில் சென்று வீடியோவைப்பதிவைக் காணவும்.

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக, ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

''ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே'' என்றான் துடைக்க வந்தவன். 'கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!' என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கையில் பத்து டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான். பத்து டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பது சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடைய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, 'ஈமெயில் முகவரி இல்லை' என்று பதிலளிக்க, ''ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்...?'' என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

''அதெல்லாம் தெரிந்திருந்தால் தான் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்'' என்றார் வியாபாரி.

Amazing Global Incident Map

தமிழில் தரமுடியாததற்கு மண்ணிக்கவும். இது ஒரு முக்கியமான விசயம். ஒவ்வொரு நாடு, நகரங்களில் என்னென்ன குற்றங்கள், தவறுகள் நடக்கிறதென்பதற்கான புள்ளி விபரங்கள், ஒவ்வோரு 300 வினாடிகளுக்கொரு முறை உடனுக்குடன் பதிவு செய்யப்படுகிறது. கீழுள்ள இணைப்பில் செல்க.
Thought you might find this of interest.
When you click on the website link below (or copy and paste it to your browser), a world map comes-up showing what strange and dangerous things are happening right now in every country in the world. This updates every few minutes. You can move the map around, zero in on any one area and actually up-load the story re: the incident in question. It is amazing when you can see the things that are happening, sometimes even your city. There is a lot happening in our world every minute. This "map" updates every 300 seconds...constantly& lt; FONT face="Timeshttp://www.globalincidentmap.com/home.php Click on any icon on the map for text update information.

July 24, 2007

வானொலி மற்றும் தொலைக்காட்சி வர்ணனையாளரும், எழுத்தாளரும், கவிஞரும் எல்லாவற்றுக்கும் மேலாக எனது மதிப்பிற்குரிய நண்பருமான திரு.யாழ் சுதாகர் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள கே.ஜே.ஏசுதாஸ் அவர்களின் செவிக்கினிய பாடல்களைக் கேட்டுப்பாருங்கள்!!
Powered by eSnips.com

இன்றைய குறள்

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை

நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

"பிரார்த்தனை செய்கின்ற உதடுகளைவிட உதவி செய்கின்ற கரங்கள் உயர்வானவை"

- சாயிபாபா

தமிழோசை

இன்றைய (ஜுலை 24 செவ்வாய்க்கிழமை) "BBC" செய்திகள் கேட்க 'க்ளிக்' செய்க BBCTamil.com Radio Player

July 23, 2007

"வாழ்க்கையில் என் சிறகுகள் கவிந்து கொண்டு இருக்கும். எந்த நேரமும் இவை விரியும். சலனம் இல்லாமல், சபலம் இல்லாமல் அவை பறந்து போகும். முடிவின் எல்லை நோக்கி அவை பயணம் போகும் போது, நான் இன்னொரு முறை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். நான் மீண்டும் பிறப்பேன் பிறந்து முதலில் இருந்தே துவங்குவேன். மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே வாழ்வேன்"
- கவியரசு கண்ணதாசன்

இன்றைய குறள்

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்

நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

ஜனாதிபதி மாளிகையில் தங்கி சாப்பிட்டதற்கு பணம் கட்டிய பண்பாளர் அப்துல்கலாம்


ஜனாதிபதி மாளிகையில் தனது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் தங்கி சாப்பிட்டதற்கு கூட பணம் செலுத்திய பண்பினை பெற்றவர் அப்துல் கலாம் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிறப்பு அலுவல் அதிகாரியாக இருந்த சுதீந்திர குல்கர்னி கருத்து தெரிவித்துள்ளார். தற்போது பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் செயலாளராக இருக்கும் சுதீந்திரி குல்கர்ன், அப்துல் கலாமின் குணநலன்கள் குறித்து வியந்து எழுதியுள்ள ஒரு கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு:
அரசியலின் தரம் குறைந்து கொண்டு வந்த இந்திய வானில், இக்கால இளமையான இந்தியர்களுக்கு அரசியலின் மீது ஒரு புது நம்பிக்கையை அவர் ஏற்படுத்தி வந்தார். அப்துல்கலாம் நாட்டின் கடைகோடியில் இருக்கும் குடிமகனுக்கும் நாட்டின் வளர்ச்சியின் பயனை எட்டச் செய்யும், "வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறவேண்டும்" என்ற அவரது கொள்கையானது, சரியான கோணத்தில் சிந்திக்கும் எல்லா இந்தியர்களின் உணர்வையும் தட்டி எழுப்பக் கூடியதாக இருந்தது. அவரது நன்நடத்தையும், அவரின் எளிமையுமே ஆகும்.
அவரது ஈடில்லா பண்புகளுக்கு எடுத்துக்காட்டாக, "ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் என்பது போல்'' ஒரே ஒரு சிறந்த உதாரணத்தை இங்கு குறிப்பிடலாம். கடந்த ஆண்டில் ஜனாதிபதி மாளிகைக்கு அப்துல் கலாமின் சொந்த கிராமத்தில் இருந்து 60 உறவினர்களும், நண்பர்களும் வந்தார்கள். அவர்கள் சுமார் ஒரு வாரம் தங்கியிருந்தார்கள். அவர்கள் டெல்லியை சுற்றி பார்க்க விரும்பினார்கள். ஜனாதிபதி மாளிகையில் ஏராளமான கார்கள் இருந்தாலும், டெல்லி மாநகரை அவரது உறவினர்கள் சுற்றி பார்க்க சென்றபோது ஒரு காரைக் கூட அவர்களுக்காக அப்துல் கலாம் அனுப்ப உத்தரவிடவில்லை. அவர்களுக்காக ஒரு பஸ்ஸை ஏற்பாடு செய்தார். அதற்கு தனது சொந்த கணக்கில் இருந்தே பணம் செலுத்தினார். அவர்கள் தங்கியதற்கான அறை வாடகை, உணவுக்கான செலவினையும் அவரே செலுத்திவிட்டார். அப்துல் கலாமின் தனி பங்களாவில் அவரது 90 வயது சகோதரர் ஏ.பி.கே. முத்து மரைக்காயர் அப்போது தங்கினார். அவர் தங்கியதற்காக பணம் செலுத்த அப்துல் கலாம் முன்வந்தார். அப்போது, மிகுந்த உணர்ச்சி பெருக்கால் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, "ஐயா, தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள். இதற்கு மட்டும் எங்களால் கட்டணம் வாங்கவே முடியாது'' என்று ஜனாதிபதி மாளிகை ஊழியர்கள் நெகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டார்கள். இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

நாலடியார்

1. அறத்துப்பால்

1.9 பொறையுடைமை

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றும் துணையும் பொறுக்க பொறானாயின்
தூற்றாதே தூர விடல்


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை
மனவேறுபாடில்லாமல் கலந்து வாழும் நண்பருக்குள்ளே அந்த நண்பர் ஒருவராலே களங்கம் உண்டாகுமெனின் சிறிது அமைதி காக்க! அப்படி முடியாத போது அவதூறு பேசாமல் விலகிபோவது நல்லது

- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை
Patience
When two persons are friends, mixing without variance, should there be misconduct on the part of one, let the other be patient, as far as he can bear it. If he cannot take it patiently, let him not speak evil, but withdraw to a distance.

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

தமிழோசை

இன்றைய (ஜுலை 23 திங்கட்கிழமை) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும். BBCTamil.com Radio Player

கணிணியுடம் இணைக்கக்கூடியதா உங்கள் மொபைல்?இணைய வசதியுடன் இருக்கிறதா.. உங்கள் மொபைல்?
இதோ ஈ-புக் மாதிரி வந்து விட்டது மொபைல் புக்! அதுவும் நம் தாய் மொழி தமிழில்! தமிழகத்தை சேர்ந்த கணேஷ்ராம் என்ற இளைஞரின் மொபைல்வேதா என்ற நிறுவனம் இச்சேவையை வழங்கி வருகிறது. சக பதிவரான தம்பி என்னாரெசு மூலம் இவர்கள் முதலில் பெரியார் வாழ்க்கைச் சுருக்கத்தினை தமிழ், ஆங்கிலத்தில் பென்நூலக்கி இருக்கிறார்கள். அதற்கு கிடைத்த வரவேற்பு இவர்களை தொடர்ந்து தமிழ் மென்நூல்களின் பக்கம் கவனம் செலுத்தத்தொடங்கி இருக்கிறார்கள்.
இப்போது இவர்களின் இணையதளத்தில் 150 தமிழ் நூல்களை மொபைல்-புக் ஆக்கி இருக்கிறார்கள். பெரியாரின் வாழ்க்கை சுருக்கத்திற்குப் பின் பழந்தமிழ் இலக்கியங்களில் தங்களின் சேவையை தொடங்கி இருக்கிறார்கள். பாரதியார், பாரதிதாசனின் கவிதைகளை இம்மாத இறுதிக்குள் கொண்டு வந்து விடுவதாகவும் சொல்கிறார் கணேஷ்ராம். ஒரு எம்.பி3 பாடல் உங்கள் மொபைலில் பிடிக்கும் இடத்தில் குறைந்தது 100 மொபைல் நூல்களை நீங்கள் சேமிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. காப்புரிமை பிரச்சனை இல்லாத எழுத்துக்களை இலவசமாக தொடர்ந்து கொடுக்கப்போவதாகவும் சொல்கிறார். கூடவே பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புக்களை காப்புரிமை பெற்று.. அதை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்.



இப்பாதைக்கு இந்த இலவச மொபைல் நூல்களை பெறுவதற்கு இந்த தளத்தில் உங்களுக்கான ஒரு பயணர்கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின் நீங்கள் விரும்பும் நூல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சோதித்துப் பாருங்கள்.

ஆகஸ்ட் 5ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் பதிவர் முகாமில் கணேஷ்ராம் வந்து.. இது பற்றிய டெமோ கொடுக்கவும் நேரம் ஒதுக்கித்தரும் படி கேட்டிருக்கிறார். பட்டறையில் நாம் கொடுக்கப்போகும் இறுவட்டிலும்.. தங்களின் மொபைல் நூல்களைத் தர சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

July 22, 2007

"யாழ் சுதாகர்"

"யாழ் சுதாகர்" பெயரில் மட்டுமல்ல இனிமை, கோபுரக் கலசங்களாக இருப்பினும் கீழுள்ள குடிசைகளைத் தன்னோடு கை சேர்த்து மேலிழுக்க முயற்சிக்கும் மனித நேயம், தமிழனுக்கேயுரிய தனித்துவம், எளிமை, கருணை இவையனைத்துக்கும் சொந்தக்காரர்தான் அந்த "யாழ் குரலோன்". இந்த மூக்கொழுகும் மூன்று வயதொத்த மழலையின் மண்கோபுர விளையாட்டான, எனது வலைத்தளைத்தைப் பற்றி, அவர் வாயால் வாழ்த்திய வார்த்தைக்காவியம் இது.

"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையத் தளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துனையிருப்பானாக"


என்னே யான் பேறு! பிறவிப்பலனை அடைந்துவிட்டேன்! நன்றி! அந்த மாமனிதனுக்கும்! பிறகு கடவுளுக்கும்!! அவரின் வலைத்தளத்தை நீங்களும் பிரயாணித்துப் பிரமிப்படையுங்கள். இது என் பாக்கியம்!!
http://www.blogger.com/profile/14507708154159068336

இன்றைய குறள்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை


இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுலை 22 ஞாயிற்றுக்கிழமை) செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பில் செல்க BBCTamil.com Radio Player

"மனித உன்னதம், மனித அற்பத்தனம், மனித இனிமை, மனித பொதுத்தன்மை எல்லாம் மகிழ்ச்சியையும், கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறபோது எழுத முடிகிறது"

- பிரபஞ்சன்

"தலைக்குமேலே வெள்ளம் போனா சான் என்ன முழம் என்ன" - பழமொழி, "மெகா சீரியல் டிவி-ல போனா சுனாமி என்ன பூகம்பம் என்ன?" - புதுமொழி

ஒன்றுபட்டுப் போராடினால் சிங்கமென்ன ஜெகத்தையே வெல்லலாம். இந்த வீடியோவைப்பாருங்கள்!

July 21, 2007

* உலகில் அனைத்துமே நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப் பார்ப்பவர்களின் கோணத்தில்தான் அதில் வேறுபாடு தெரிகிறது. வெள்ளை நிறப்பொருளை எந்த நிறத்தில் கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தாலும், அதன் நிறத்தில்தான் அது தெரியும். இதைப்போலவே கடவுளை, மனம் எனும் கண்ணாடி வழியாக பார்ப்பவர்களின் தன்மைக்கு ஏற்றவாறு அவர் காட்சி கொடுக்கிறார். மனதுக்குள் மாயக் கண்ணாடி அணியாமல், பரிசுத்தமானதான, உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கக் கூடியதாக அணிந்து கொள்ள வேண்டும்.
* மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியான மனமே புத்துணர்வுடனும், செயலாக்கம் மிக்கதாகவும் இருக்கும். சோர்வடைந்த உள்ளத்தால் எவ்வித பயனும் இல்லை. அவர்களால் அடுத்தவருக்கும் நன்மைகள் செய்ய முடிவதில்லை. அத்துடன் உடன் இருப்பவர்களுக்கும் துன்பம்தான் விளைகிறது. சோர்வுடன் இருக்கும் ஒருவரைக் காணும் மற்றொருவர், தனக்கும் துன்பம் வந்துவிட்டது போலவே கவலை கொள்கிறார். எனவே, துன்பத்துடன் இருப்பவர்கள், யாரையும் சந்திக்காமல் தனிமையில் இருப்பதே நல்லது. அந்த வேளையில் தனக்கு துன்பம் நேர்ந்ததற்கான காரணத்தை அவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சிறிது நேரம் தனிமையில் அதற்கான காரணத்தை சிந்தித்து விட்டாலே, அதனால் பயன் ஒன்றுமில்லை என்பது புலப்பட்டுவிடும். ஆகவே, ஒன்றுமில்லாத சோர்வை விரட்டி, மகிழ்ச்சியுடன் இருங்கள்.
-தாயுமானவர்

"புத்தி தெளிவாகவும், மனம் சமநிலைப்பட்டும் ஒரு பேனாவைப் பிடிக்கும் அளவு உடலில் தெம்பு இருக்கும் வரை எழுதிக்கொண்டே இருப்பேன்"

- பிரபஞ்சன்

இன்றைய குறள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்


தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்திற்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்


அறத்துப்பால் : இல்லறவியல்

தமிழோசை

இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். தேர்தல் முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. 72 வயதான பிரதீபா பாட்டீல் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மேலும் இன்றைய (ஜுலை 21 சனிக்கிழமை) 'BBC' செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

பாடல்களைக் கேட்கும்போது நம்மையறியாமலே மனதுக்கு ஒரு இனம் புரியாத உணர்வு கிடைக்கும் என்றால் அவை நல்ல இசையென்று பொருள். "நல்ல இசையைக் கேளுங்கள், உங்களின் ஆத்மாவை அது எங்கோ ஓர் இடத்துக்கு எடுத்துச்செல்லும்" என்று "இசைஞானி" சொல்வார். அவற்றில் இவைகளும் அடங்கும். கேட்டுப்பாருங்கள்.
Powered by eSnips.com

நாலடியார்

1. அறத்துப்பால்

1.8. சினம் இன்மை

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயால்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - ஈர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு

- சமண முனிவர்கள்


தமிழ் விளக்கவுரை

வெறி பிடித்த நாய் தன்னைக் கடித்துவிட்டால், அதைத் திருப்பிக் கடிப்பார் யாருமில்லை. அது போல சீரிய குணம் இல்லாதவர்கள், தீய வார்தைகளைத் தன்மீது உபயோகித்தால், கற்று உணர்ந்த பெரியவர்கள் அதே வார்தைகளைத் தம் வயால் அவர் மீது சொல்லமாட்டார்கள்


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை

Placidity
There is none here who, though they see a dog snap angrily at them, will in return snap at the dog again with their mouth. When base born persons mischievously utter base things, will the noble repeat such words with their mouths in return?

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

July 20, 2007

மனத்தின் சமநிலையோடு, மனக் கொந்தளிப்பைச் சாட்சியாக விலகி நின்று எழுத்தாளன் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும்

- பிரபஞ்சன்

இன்றைய குறள்

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று


பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்


அறத்துப்பால் : இல்லறவியல்

தமிழோசை

July 19, 2007

வரலாற்றின் நீண்ட சரித்திரத்தில் வன்முறையுடன் எந்த ஒரு நாடு மீதும் படை எடுக்காத ஒரே நாடு இந்தியா தான் என்பது உண்மை


- சுவாமி விவேகானந்தர்

"வேதாந்த் பரத்வாஜ்" இளம் இசைக்கலைஞர் பகுதி 3

இன்றைய குறள்

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்போரின் நோன்மை உடைத்து


தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்


அறத்துப்பால் : இல்லறவியல்

தமிழோசை

பாடல் இயற்றுபவரைப் பாடலாசிரியர் என்போம். பாடுபவரைப் பாடகர் என்போம். படத்தை இயக்குபவரை இயக்குனர் என்போம். படத்தில் நடிப்பவரை நடிகர் என்போம். படத்தில் நடனமாடுபவரை, நடனக் கலைஞர் என அழைப்போம். சாதாரணமாக ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவர் சிறந்த புலமை பெற்றிருப்பது வழக்கம். அபூர்வமாகச் சிலர் தம்முள் பன்முகத் திறனை வளர்த்துக் கொண்டு அஷ்டவதானியாகவும், சதாவதானியாகவும் திகழ்வதுண்டு. மனோரஞ்சித மலர் யார் எந்தப் பழத்தை நினைத்துக் கொண்டு முகர்ந்தாலும் அந்த மணத்தை அளிப்பதாகச் சொல்வார்கள். தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க
Tamil movie links presenting cinema news,movie reviews,song reviews,actors,actresses&pictures

July 18, 2007

திரு.யாழ் சுதாகர் அவர்களைப் பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. அவர், தான் வானொலி அறிவிப்பாளராக இருந்தபோது நடந்தவைகளையும், அனுபவங்களையும் அழகாகப் பாடல்களோடு தொகுத்து வழங்கியிருக்கிறார். நீங்களும் கேட்டு ரசியுங்கள்.
Get this widget | Share | Track details

இன்றைய குறள்

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை

நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்

அறத்துப்பால் : இல்லறவியல்

"இந்திய விடுதலைக்காகப் பிசாசின் உதவியைப் பெற வேண்டியிருந்தால் கூட நான் அதனோடு பேசுவேன்"

- நேதாஜி

தமிழோசை

இன்றைய (ஜுலை 18 புதன்கிழமை) "BBC" செய்திகள் கேட்கக் கீழுள்ள இணைப்பில் செல்க BBCTamil.com Radio Player

வேதாந்த் பரத்வாஜ் இசைக்கலைஞர் பகுதி 2

July 17, 2007

எழுத்தாளனுக்குக் கொந்தளிப்புத் தேவைதான், ஆனால் அந்தக் கொந்தளிப்பிலேயே அவன் ஆழ்ந்துவிட்டால் நல்ல இலக்கியம் படைக்க முடியாது

- பிரபஞ்சன்

நாலடியார்

1. அறத்துப்பால்

1.7. சினம் இன்மை

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து



- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை


சினத்துடன் கூடிய சுட்டெரிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்திய ஒருவனை, அந்தச் சினமே சுட்டெரிந்து கொல்லுவதால், கற்றுணர்ந்த பெரியவர்கள் அப்படிப்பட்ட வார்த்தைகளை எப்போதும் பயன்படுத்த மாட்டார்கள்

- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை
Placidity

As the angry words which a man speaks, opening his mouth unguardedly, continually burn him, so those who possess that knowledge which arises from oral instruction and incessant search after truth will never be angry and utter burning words of fury.

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar