"விட்டுக்கொடுத்தல்" அதாவது ஒருவர் அல்லது அளவான நபர்கள் செல்லும் இடங்களில் இன்னொருவருக்கு விட்டுக்கொடுத்தல் என்பது பொதுவான ஒன்று. அது வாகன ஓட்டுதலிலும் உண்டு. இங்கு அமெரிக்காவில் அதனை ஆங்கிலத்தில் 'YIELD' என்று சொல்வார்கள். அநேகமாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். இது தொடக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று குழப்பமாகவும், கோபமாகவும் இருக்கும். போகப்போக பழகிவிடும். ஆனால் நம் இந்தியாவில் இதற்கென்று தனி விதிமுறையோ, அறிவிப்புப் பலகையோ, சிக்னலோ இல்லை. ஆனால் இங்கு வந்த பிறகு மிகத் தெளிவாக ஒன்று புரிகிறது. இவர்களால் அமெரிக்காவைத் தவிர வேறெங்கும் வாகனம் ஓட்ட முடியாது. குறிப்பாக இவர்கள் இங்கு 'கியர்' இல்லாத 'ஆட்டோ கியர்' வாகனங்கள் ஓட்டுபவர்கள்.
இதையெல்லாம் சொன்னால் "இந்தியன் தாத்தா" "COUNTRY FRUIT" "தேசத்தந்தை" என்று நம் இந்தியர்களே என்னைக் கேலி பேசுகிறார்கள். என்ன செய்ய? சரி அது போகட்டும்... இதனைத் தெளிவாக நீங்கள் புரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவைப் பாருங்கள். அவர்களாகவே 'YIELD' கொடுத்துச் செல்வார்கள், இதனைக் கண்ட அமெரிக்கர்கள் சிலர் கிண்டலாகவும், கேலிக்கூத்தாகவும் படமெடுத்துக் கொண்டுவந்து இங்கு அரங்கேற்றுவதுண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த வீடியோ. அமெரிக்காவில் அனைத்துமே சீர்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்..ஆனாலும் அத்துமீறல்கள், அகோர விபத்துக்கள் அதிகமாவே நடந்து கொண்டிருக்கிறது நாம் கண்கூடாக பார்க்கும் விசயம். ஆனால் இந்த வீடியோவில் யாருமே இல்லாமல் தாங்களாகவே விதிமுறைகளை வகுத்துக்கொண்டு, விட்டுக்கொடுத்து விபத்தில்லாமல் செல்வதைப் பார்க்கும் போது சற்று உதறலாக இருந்தாலும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மறக்காமல் அடுத்த பதிவையும் பார்க்கவும். ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டு, மேலும் அது உங்களுக்குத் தெளிவு படுத்தும் என்று நம்புகிறேன்.