May 05, 2011

"அதிர்வு" இணையத்தை நடத்தும் கண்ணன் என்பவர் தமிழர்களின் எதிரிதான்!

இப்போது கண்ணனின் அதிர்வு இணையதளம், அன்மையில் மிக குறைந்த வயதில் கனடா பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழரான ராதிகா சீறிசபைஈசனைப் பற்றி தன்னுடைய அரிப்பை கொட்டி தீர்த்திருக்கிறது. கண்ணன் ஒரு பேட்டி கேட்டாராம், கொடுக்கவில்லையாம், உடனே, ஒரு கட்டுரை. அரிப்புக் கட்டுரை. கடல் அரிப்பைப்போல, தமிழ் இனத்தின் பிரிப்பதற்கான அரிப்பு இது.

யாழ்பாணம் குரும்பசிட்டியை சொந்த ஊராகக் கொண்டவரும், தற்போது லண்டனில் கணினித் துறையை சேர்ந்தவருமான சிவகணேசன் தில்லையம்பலம் (எ) கண்ணன் என்பவர் நடத்தி வரும் அதிர்வு இணையம், ஏதோ பல்லாண்டு காலமாய் தமிழர்களுக்கு அறிமுக இருப்பது போலவும், தமிழர்களின் குரல் போலவும் கற்பனையாக நினைத்துக் கொண்டு தறிகெட்டு, தான்தோன்றித்தனமாய் அவ்வவ்போது செய்திகளை வெளியிட்டு வருகிறது. 2009-ம் ஆண்டல்தான் இப்படி ஒரு இணையம் இருக்கிறது என்று தமிழ் மக்களுக்கு தெரியும்.

கடைசி கட்ட போரின் போது உலக கவனத்தை ஈர்த்து லண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் என்ற தமிழ் இளைஞனை, உண்ணாவிரதத்தின் போது 'பர்கர்' சாப்பிட்டார் என்று பணத்தை வாக்கிக் கொண்டு பெயர் தெரியாத சில ஆங்கில ஏடுகள் எழுதியவுடனேயே, கண்ணன் தன்னுடைய அதிர்வு இணையத்தில், தானே ஏதோ கண்டுபிடித்தது போல், இத்தனை டாலருக்கு பரமேஸ்வரன் பர்கரை மறைந்திருந்து சாப்பிட்டார் என்று செய்தி வெளியிட்டு உலகத் தமிழினத்துக்காக ஒரு சிறு தியாகம் புரிந்தவரை பற்றி தவறான செய்தியை பரப்பியது. இதனால் மனமுடைந்த பரமேஸ்வரன், லண்டனில் உள்ள நீதித்துறையை நாடி, செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகத்தின் மீது பொய் குற்றச்சாட்டை எதிர் கொண்டு, கடைசியில் பரமேஸ்வரன் நேர்மையானவர் என்பதை நிருபித்தார். ஏதோ பாவம் தமிழராய் பிறந்துவிட்ட கண்ணன் மீது பரமேஸ்வரன் வழக்கு தொடுக்கப்படவில்லை. அன்று வழக்கு போட்டிருந்தால், தான் மறைமுகமாய் சிங்களத்திடம் பெற்ற அனைத்து பணத்தையும் இழந்திருப்பார். ஆனால், பரமேஸ்வரன் தற்போது தனக்கேன் வம்பு என தமிழர் பிரச்சனைகளிலிருந்து ஒதுக்கி வைத்ததில், கண்ணனின் பங்கு வெற்றி பெற்றது. புத்தியிருந்தால் அப்போதே கண்ணன் திருந்தி இருப்பார். ஆனால்....


தமிழகத்திலிருந்து வரும் நக்கீரனில் எழுதிய ஜெகத் கஸ்பர் என்ற திருட்டு சாமியார், உலகத் தமிழினத்திற்க துரோகம் இழைத்து வந்தபோது, உலக மக்களும் பல ஊடகங்கள் வழியேவும், பல அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் திருட்டு சாமியாரின் செயல்பாடுகள் தெரிந்த போதும், இவரைப் பற்றிய ஒரு கட்டுரையை எழுதியதினால், இவரை தாக்கி அந்த திருட்டு சாமியார் நக்கீரனில் 4 வரிகளை எழுதினார். இதை பயன்படுத்தி, விளம்பரப்படுத்திக் கொண்டவர்தான் இந்த திருட்டு அதிர்வு கண்ணன். புத்தியிருந்தால் அப்போதே கண்ணன் திருந்தி இருப்பார். ஆனால்....


கனடா நாட்டில் இப்போது வாழ்ந்து வரும் நக்கீரன் என்ற புனைப்பெயருடைய பெரியவர், வேலுபிள்ளை தங்க வேலு என்பவர், ஆரம்ப காலம் தொட்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாய் இருந்து வருபவர். இன்று வயதாகி விட்டாலும், தான்னால் ஏதாவது ஈழ மண்ணிற்கு செய்ய இயலுமா என தேடித் தேடி எழுதியும், செயல்பட்டு வருபவர். அவருடைய அனுபவம் கூட இல்லாதா, கண்ணன், தன்னுடைய அதிர்வு இணையத்தில் தவறாய் எழுதினார். இந்த எழுத்தைப்பற்றி, முதிர்ந்த அந்த பெரியவர், ஒரு வார்த்தையை கூட பதிலாய் தரவில்லை. சரியாக குட்டை வைத்தார். புத்தியிருந்தால் அப்போதே கண்ணன் திருந்தி இருப்பார். ஆனால்....

தமிழர் புனர்வாழ்வு கழகத்தை நிர்வகித்து வரும் ரெஜியின் முக்கியத்துவம், ஈழத்தை கடல் சீற்றம் கொண்டு, சுனாமி வந்தபோது, பலலாயிரம் ஈழ மக்களுக்கு அத்தனை உதவிகளையும் செய்து காப்பாற்றியதும், 2008, 2009 கடைசிகட்ட போர் முடியும் வரை ஈழ மண்ணில் உதவி புரிந்து வந்த மிகப் பெரிய அமைப்பை நிர்வகித்து வந்தும், வணங்காமண் என்கிற நிவாரணக் கப்பலை மறைமுகமாய் இருந்து இயக்கி, மக்களை சென்றடைய வேண்டும் என எண்ணி கடைசி வரை போராடியவருமான, புலிகளுக்கு உதவி செய்தவர் என்பதற்காக இன்டாபோல் தேடி வரும் நிலையில், ரெஜியால் நேரிடையாக பதில் சொல்ல முடியாததை தெரிந்து கொண்டு, ரெஜியை பற்றிய தவறான கட்டுரையை பரப்பியதோடு விடாமல், அவர் பெரும் பணத்தை கொள்ளையாடித்து விட்டார் என்ற பெய்யான பரப்புரையை மேற்கொண்டவர்தான் இந்த அதிர்வு கண்ணன். புத்தியிருந்தால் அப்போதே கண்ணன் திருந்தி இருப்பார். ஆனால்....


லண்டனுக்கு தமிழர்களின் விரோதியான மகேந்த ராஜபக்சே வந்தபோது, தன்னுடைய அதிர்வு இணையம் செயல்பட வில்லை என்ற பொய்யை சொல்லி, எதிர்ப்பாய் எவ்வித கட்டுரைகளையும் எழுதாமல், ராஜபக்சே லண்டனிலிருந்து திரும்பும் வரை காணாமல் போனவர்தான் இந்த அதிர்வு கண்ணன். இதை தமிழ் மக்கள் உணர்ந்த போதும், புத்தியிருந்தால் அப்போதே கண்ணன் திருந்தி இருப்பார். ஆனால்....


ஈழத்தின் கிழக்கு பகுதி இந்த வருடம் ஜனவரியில் மழையால் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்பட்ட போது, அதற்காக லண்டன் தமிழர்கள் ஒன்று கூடி, அப்பகுதியில் நிவாரணம் மேற்கொள்ள என்ன செய்யலாம் என்று ஒன்று கூடிய போது, தான் ஊடக அமைப்பை ஒழுங்கு செய்வதாய் கடைசி வரை வாக்களித்து விட்டு, கடைசியல் ஒன்று கூடிய அந்த நிகழ்வையே உடைத்துவிட்டு, பின்னர் ஓடி ஒளிந்து கொண்டதோடு மட்டுமல்லாது, ஒன்று கூடிய தமிழர்கள் மேல் பழி சொல்லி அதிர்வில் கட்டுரை ஒன்றை தீட்டினர். இதனால், மழையால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு துரோகமிழைத்தவர்தான் கண்ணன் என்கிற தமிழ் துரோகி. புத்தியிருந்தால் அப்போதே கண்ணன் திருந்தி இருப்பார். ஆனால்....


தமிழினத்தின் மீது பற்று கொண்டு செயல்பட்டு வரும் பலரையும், உண்மையாக இருந்து வருபவர்களையும், சிங்களத்திடம் காசை வாங்கிக் கொண்டு, தன்னுடைய அதிர்வு என்ற இணையத்தில் தவறாய் தொடர்ந்து எழுதி வருகிறார். இவருடைய இணையத்திற்கு, பல்லாயிரம் பேர் வருகை தருவதாகவும் பொய்யான கணக்கையும் காட்டி வருகிறார். இதெல்லாம் விட கேவலமாய், ஆபாசங்களுக்கு முன்னுரிமையை கொடுத்து காணொளி காட்சி முதல் பதிவிட்டு வருகிறார்.

தற்போது, கனடாவில் முதன் முறையாக இளைய சமூகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், தன்னுடைய அதிர்வு இணையத்திற்கு செவ்வி வழங்கவில்லை என்றவுடன், தமிழர் என்றும் பாராமல், கேவலமாய் ராதிகா சீறிசபைஈசனைப் பற்றி எழுதியுள்ளார்.

இப்போது கே.பி என்ற சிங்கள அடிமையிடம் வேளை செய்து வரும் புலம் பெயர் துரோககளுடன் கண்ணன் கைகோர்த்துக் கொண்டு, அவர்களுக்கு சாதமான சூழலைப் பற்றி மெதுவாய் எழுத்தின் மூலம் ஊடூருவி எழுதி வருகிறார். தமிழகத்திலும் சில தமிழ் துரோகிகளோடு சேர்ந்து கொண்டு, தமிழகத்தில் உள்ளவர்களைப் பற்றியும் பொய்யை பரப்பியும் எழுதியும் வருகிறார்.

தமிழினம் பிளவுபட்டிருக்கும் சமயத்தில், நாம் அதிர்வைப்பற்றிய கட்டுரையை எழுத வேண்டாம், கண்ணன் திருந்தி விடுவார் என்று தப்பான கணக்கில் இருந்து விட்டோம். ஆனால், இவரின் சிங்கள முளையை உலகத் தமிழர்களிடம் காட்டியாக வேண்டிய சூழலை திரும்பவும் ஏற்படுத்தியானாலேயே இப்படியான ஒரு கட்டுரையை நாம் எழுதினோம். இப்படிப்பட்டவரை தமிழர்கள் முற்று முழுதாய் நிராகரிக்க வேண்டும். இவரின் முகத்திரை விரைவில் கிழியும் சமயம் வெகு தூரத்தில் இல்லை.


- வீரத்தமிழ்மகன்