July 08, 2007

ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படவேண்டிய தருணம்

அதே வேளையில் இணைய தளத்தின் மூலமாகவும், எஸ்.எம்.எஸ் வாயிலாகவும் இன்னும் எந்த வகையிலெல்லாம் ஓட்டளித்தீர்களோ அத்தனை உணர்வுள்ள இந்தியனுக்கும்
ஒரு இந்தியன் என்ற முறையில் நன்றியுணர்வோடு எனது பதிவின் மூலமாக கைகுலுக்குகிறேன். ஏனெனில் நான் நன்றி சொல்லக்கூடாது. அது நாகரீகமன்று.

"நல்ல கவிதைகளைப் படித்தவுடன்,நான் எழுதியது ஒன்று கூடக் கவிதை இல்லையென்று புரிந்தது. அத்தனையையும் கிழித்துப் போட்டுவிட்டேன்."

• மின் ஊடகங்கள் மீது எனக்கு அவ்வளவாக மரியாதை இல்லை. மிக உயர்ந்த அளவில் வளர்ந்துள்ள விஞ்ஞானத்தை, வெறும் சினிமாவை வரவேற்பறைக்குக் கொண்டு வருவதற்குப் பயன்படுத்திக் கொச்சைப் படுத்திவிட்டார்களே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.. பிரபஞ்சனுடன் ஒரு பேட்டி Please continue with link Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

இன்றைய குறள்

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை


அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்
அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது

- பெரியார்

தமிழோசை

பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் இருக்கின்ற செம்மசூதியை சுற்றி வளைத்துள்ள பாகிஸ்தானிய துருப்புகளுக்கும், மசூதிக்குள் இருக்கின்ற தீவிர எண்ணம் கொண்ட இஸ்லாமிய மாணவர்களுக்கும் இடையில் பதட்டமான மோதல் தொடர்ந்து வருகின்றது. இன்றைய "BBC" (ஜுலை 08 ஞாயிற்றுக்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பில் செல்க. கடந்த ஐந்து நாட்களில் மரணம் 335 பேர். தமிழோசை நிகழ்ச்சிகளைக் கேட்க கீழே 'க்ளிக்' செய்க BBCTamil.com Radio Player

"மக்களுக்கு செய்யும் சேவையே நிஜமான ஆன்மிகம்"

"தலைவனாவதற்காகவே பிறக்க வேண்டும்' இப்படி சொன்னவர் தான் வீரத்துறவி விவேகானந்தர். சொன்னதுடன் நிற்கவில்லை. மிகப்பெரிய ஆன்மிகத் தலைவராகவும் அவர் விளங்கினார். கோல்கட்டாவில் புகழ் பெற்ற தத்தா குடும்பத்தில் அவதரித்தவர் சுவாமி விவேகானந்தர். இவரது தாய் புவனேஸ்வரி காசி விஸ்வநாதரின் பக்தை. ஆண் குழந்தை இல்லாத இவர், விஸ்வநாதரிடம் தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென வேண்டிக் கொண்டார். அவர் நினைத்தபடியே, 1863, ஜனவரி 12 காலை 6.49 மணிக்கு விவேகானந்தரின் அவதாரம் நிகழ்ந்தது. விவேகானந்தரின் தந்தை வக்கீல் விஸ்வநாதன் குழந்தைக்கு வைத்த பெயர் நரேந்திரநாத் தத்தா. "நரேன்' என செல்லமாக அழைப்பார். ஆனால், தாய் புவனேஸ்வரி "விரேஸ்வரன்' என்று பெயர் வைத்தார். இது காசி விஸ்வநாதரின் மற்றொரு பெயர். ஆனால், பள்ளியில் "நரேந்திரநாத்' என்ற பெயரில் சேர்த்து விட்டனர். பள்ளிப்படிப்புக்கு பிறகு, விவேகானந்தரை ஐ.சி.எஸ். பட்டப் படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்ப விரும்பினார் தந்தை. பணக்கார பிள்ளைகள் எல்லாமே அந்தப் படிப்பின் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய பதவிகளை அடைந்து கொண்டிருந்த நேரம் அது. விவேகானந்தருக்கு படிப்பில் அதிக நாட்டமில்லை. மாறாக மத ஈடுபாடு அவரிடம் அதிகமாக இருந்தது. அப்போது "பிரம்ம சமாஜம்' என்ற இந்துமத அமைப்பு பிரபலமாக இருந்தது. ராஜாராம் மோகன்ராய் துவங்கிய இந்த இயக்கத்தில் தேசிய கீதம் தந்த ரவீந்திரநாத் தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூர், கேசவ்சந்திர சென் போன்ற சீர்திருத்தவாதிகள் இடம் பெற்றிருந்தனர். அந்த இயக்கத்தில் இணைந்தார் விவேகானந்தர்.

விஸ்வநாதன் தன் மகனின் மனதை மாற்றுவதற்காக, திருமண முயற்சியில் ஈடுபட்டார். ஒரு செல்வந்தக் குடும்பம் நரேந்திரனுக்கு மிகப்பெரிய வரதட்சணையுடன் பெண் கொடுக்க முன்வந்தது. ஆனால், பணம், பெண் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டிருந்த விவேகானந்தர் ஒரேயடியாக மறுத்து விட்டார். ஒருமுறை, விவேகானந்தர், பிரம்ம சமாஜத்தலைவர் ராஜாராம் மோகன்ராயிடம், "தலைவரே! நான் உங்கள் அமைப்பில் உறுப்பினர். இந்த அமைப்பு கடவுள் பற்றை வலியுறுத்துகிறது. யாரைப் பற்றி நாம் மக்களிடம் பேச வேண்டுமோ, அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். கடவுளைப் பற்றி பேசப்போகும் நாம், மக்கள் நம்மிடம் "கடவுள் எங்கே இருக்கிறார்' என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர் களா?'' என்று கேட்டார். எதிர்பாராத இந்தக் கேள்வியால், மோகன் ராய் அசந்துவிட்டார். "இந்த இளைஞன் பிற்காலத்தில் சிறந்த ஞானியாவான்' என்று மட்டும் அவரது வாய் முணுமுணுத்தது. ஆனாலும், இந்த கேள்விக்கு மோகன் ராயால் பதில் சொல்ல முடியவில்லை. விடை கிடைக்காததால், பிரம்ம சமாஜத்தின் மீது விவேகானந்தருக்கு இருந்த பிடிப்பு தளர்ந்தது. "கடவுள் இல்லை என ஒரு கூட்டத்தார் சொல் கின்றனரே. அது உண்மைதானோ?' என்ற ரீதியில் அவரது மனம் சிந்திக்கத் தொடங்கி விட்டது. தனது உறவினரான ராமச்சந்திரதத்தரிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டார் விவேகானந்தர்.

அவர் விவேகானந்தரிடம், "நரேன்! நீ தட்சிணேஸ்வரம் போ. அங்கே ஒரு காளி கோயில் இருக்கிறது. அங்கே ராமகிருஷ்ணர் என்ற மகான் இருக்கிறார். அவரிடம் சென்றால், உன் கேள்விக்கு விடை கிடைக்கும்' என்றார். விவேகானந்தர் ராமகிருஷ்ணரிடம் சென்றார். ராமகிருஷ்ணர் அவரைத் தொட்டார். மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. அவரிடமும் அதே கேள்வியைக் கேட்டார் விவேகானந்தர். "கடவுளைப் பார்த்திருக்கிறேன். நரேன். பார்த்ததென்ன...பேசவும் செய்திருக்கிறேன்' என்றார். "கடவுள் என்பவர் யார்? அவரிடம் கேட்க வேண்டியது என்ன?' என்பது பற்றி அவர் போதித்தார். அவரது போதனை விவேகானந்தருக்கு பிடித்து விட்டது. அதுவரை "நரேன்' என்ற பெயருடன் திகழ்ந்த அவர், தனக்கு "விவீதிஷானந்தா' என பெயர் சூட்டிக் கொண்டார். இந்தியாவை முழுமையாகச் சுற்றினார். கன்னியாகுமரி கடலில் குதித்து நடுவிலுள்ள பாறைக்குச் சென்று, மூன்று நாட்கள் அங்கேயே தியானத்தில் அமர்ந்து, "மக்களுக்கு செய்யும் சேவையே நிஜமான ஆன்மிகம்" என்ற உண்மையை உணர்ந்தார். இந்த விவேகம் தனக்கு கிடைத்ததற்கு அறிகுறியாக "விவேகானந்தர்' என்று பெயர் சூட்டிக்கொண்டார்.

அந்தப் பெயரே உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானது. இந்தப் பெயருடனேயே சிகாகோ சென்று சர்வதேச மகாசபை நடத்திய, உலகின் அனைத்து மத தலைவர்களும் பங்கேற்ற கூட்டத்தில், இந்துமதத்தின் பெருமையை எடுத்துரைத்து, உலக மதங்களுக்கெல்லாம் இந்துமதமே வழிகாட்டியாக இருக்கிறது என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொன்னார். அங்கேயே நிதிதிரட்டி, தன் குருநாதரின் பெயரால் "ராமகிருஷ்ண மடம்' என்ற அமைப்பை உருவாக்கினார். உலகெங்கும் அந்த மடத்தின் கிளைகள் உருவாயின. அவர் வாழ்ந்த காலம் 39 ஆண்டுகள் தான். ஆனால், செய்த பணிகள் அளவில்லாதவை. 1902 ஜூலை 4ல், அவர் காலமானார். "நாம் செலுத்துகின்ற பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக இறைவன் ஏதேனுமொரு நலனைத் தரவேண்டுமென்று, நாம் எதிர்பார்க்கும் வரை இறைவன் மீது உண்மையான பக்தி உண்டாகாது' என்கிறார் சுவாமிஜி.

நல்லதை மட்டுமே பேசுங்கள்

* உலகில் பிறந்துள்ள மனிதர்கள் அனைவரும் ராஜகுமாரர்களே. அவர்கள் எதற்காகவும், யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த உலகம் மனிதர்களின் பயன்பாட்டிற்காகவே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதை ரசித்து அனுபவியுங்கள். ஆனால், எதன் மீதும் பற்று மட்டும் வைத்து விடாதீர்கள். ஏனெனில், அதுவே உங்களது பலவீனமாக மாறிவிடும். ஆசை என்ற விதையை மனதில் விதைத்து விட்டால், அதுவே பல துன்பங்களை விளைவிப்பதாக அமைந்து விடும்.


* சமுதாயத்தை சீர்திருத்தும் முயற்சியை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். தீய வழிகளில் செல்வோரிடம் அவர்களது செயலால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்லுங்கள். அப்போது, அவர்களை "தீயவனே' என்று சொல்லாமல், "நீ நல்லவன்' என்று சொல்லி, அதைவிட இன்னும் நல்லவனாக மாறும்படி தன்மையாக எடுத்துக்கூறுங்கள். ஏனெனில், பலவந்தமாக செய்யப்படும் சீர்திருத்த முயற்சிகள், அதன் வேகத்தை தணித்து எதிர்மறை விளைவுகள் தருவதாகவே இருக்கும். எனவே, சொல்லப்படும் கருத்தின் தன்மை இனிதாக இருக்க வேண்டியது அவசியம்.


* இன்பம் இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கிறது. இன்பமானது, தனது தலையில் துன்பம் எனும் மகுடத்தை சூட்டிக்கொண்டுதான் வருகிறது. எனவே, இன்பத்தை அனுபவிக்க தெரிந்தவர்கள் துன்பத்தையும் அனுபவிக்கும் அளவிற்கு பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுவே மனோபலத்தைக் கொடுக்கும்.