August 06, 2007

இன்றைய குறள்

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழழைச்சொல் கேளா தவர்

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்

அறத்துப்பால் : மக்கட்பேறு

கீதோபதேசத்தின் துவக்கம் இது தான்.

"பண்பட்ட மனதும், சிறந்த வாழ்க்கை முறையும் எவனிடத்துளதோ அவனே ஆரியன். இது போன்று துரை, ஜென்டில்மேன், அந்தணன், சாஹிப் முதலிய சொற்கள் மேன் மக்களது பண்பைக் குறிக்கும்"
- சுவாமி சித்பவானந்தர்

தமிழோசை

இன்றைய (ஆகஸ்ட் 06 திங்கட்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

டாக்டர் அலர்மேலு ரிஷி அவர்கள், வளைகுடாப் பகுதியில் உள்ள தமிழ்ப் பண்பலை வரிசையில் (KZSU Stanford 90.1 FM radio show) சமீபத்தில் தொகுத்து வழங்கிய "இசையும் ரசனையும்" என்ற நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. அவரைப்பற்றி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். அவர், நான் சமீபத்தில் 'நிலாச்சாரல்' இணைய சஞ்சிகைக்காக எடுத்த நேர்முகத்தில், அவரைப்பற்றி ஏராளமான விசயங்கள் பகிர்ந்து கொண்டார். நீங்களும் படித்திருப்பீர்கள். அவருக்கு தற்போது வயது 72, இந்த வயதிலும் அவருடைய சுறுசுறுப்பு, தெளிவு, குரல்வளம், மொழிப்பற்று, தேர்ந்த அறிவு இன்னும் எவ்வளவோ! ரத்தினச்சுருக்கமாகச் சொல்லப்போனால் அவர் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு முன்னோடி மற்றும் வழிகாட்டி என்று சொல்லலாம். அவர் ஏற்கனவே தொகுத்து வழங்கிய 'பழமொழி' என்ற நிகழ்ச்சியும் மிகவும் சிறப்பான, குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியையும் கேட்டுத் தங்களின் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அருமை நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள். பாராட்டுக்கள் நண்பர் ஸ்ரீ அவர்களே!
Powered by eSnips.com