August 07, 2007

  • 'நான்' எங்கிருந்து வருகிறேன்?
  • 'நான்' எதனை நோக்கிப் பயணிக்கிறேன்?
  • இந்த 'முதலுக்கும்' 'முடிவுக்கும்' இடையில் 'நான்' யார்?
  • எத்தனை கல்பகாலத்திற்கு 'நான்'?
  • விரஹத்தில் உழல்வது மட்டுமே இந்த 'நான்' லீலைகளின் பிரதானமா?
  • பிரளயமற்றவனா?
  • முடிவென்பதில்லையா?
  • அனந்த சயனமற்ற உயிரா 'நான்'?
  • 'பிறவி பற்றிய பிரக்ஞையற்று என்னை 'நீ' 'சுமந்து செல்கிறாய்.
  • உன் எண்ணம், பார்வை, குரல், இயக்கம் அனைத்தும் நான். நீ விழும்போது விழுந்து எழும்போது எழுந்திருக்கிறேன். ம்..
  • 'நீ ' ஓடுவது எதற்காகவென்றும் எனக்குப் புரிகின்றது.
  • ஜீவாத்மாவில் பாசி படிந்துவிடக்கூடதென்கின்ற அக்கறை

அசட்டுப்பிள்ளையே! உன் பாதை முழுக்க பாசியாகவுள்ளதை அறிவதெப்போது? என்னைத் துலக்க நீ துலங்கியாகவேண்டும். துலக்க உதவும் பொருட்களுக்கா பஞ்சம்? கொஞ்சம் முனைப்பு வேண்டும். 'நாம் இருவருமே பிரம்மத்தின் கூறுகள்.. நிலையற்ற இன்பங்கைளைத் தேடி பிறவிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளாதே. ஞானம் பெறு! கட்டுகளை விலக்கு! உண்மை இன்பம் விளங்கும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல் செயற்பாடுகளில் எனக்கு முத்தி கொடு. எல்லாம் பிரம்மம் எனபதை 'நீ' அறிவாயாக!

- நீலக்கடல்

நாகரத்தினம் கிருஷ்ணா

இன்றைய குறள்

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்

அறத்துப்பால் : மக்கட்பேறு

தமிழோசை

இன்றைய (ஆகஸ்ட் 07, செவ்வாய்க்கிழமை) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

ஓவிய(ம்)த்தில் பெண்க(ளில்)ள்!!