October 07, 2007

இன்றைய குறள்

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்

அறத்துப்பால் : அடக்கம் உடைமை

நம் சமூகம் குழப்பத்தில் இருக்கிறது

"சமூக நீதியைக் காப்பதா, திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு திறமையானவர்களை ஊக்குவிப்பதா என்பதே அது. சமுதாய அளவில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன. சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களை மேலே கொண்டு வர இடஒதுக்கீடு அவசியம்தான். அதே நேரத்தில் மிகச் சிறந்த மேதைகளை உருவாக்குவதற்குத் திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சீர்மிகு மையங்களை ஏற்படுத்த வேண்டும்"


ஐராவதம் மகாதேவன், தொல்லியல் வல்லுநர், தினமணியின் முன்னாள் ஆசிரியர்

கிழக்குக் கடற்கரைச்சாலை

நெஞ்சம் மறப்பதில்லை

  • திரைப்படங்கள் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலம் நெஞ்சம் மறப்பதில்லை தொடரின் இன்றைய மூன்றாவது பாகத்தில் தமிழ் திரையுலகின் ஒரு காலத்தில் கோலோச்சிய வெளிநாட்டு இயக்குனராகிய எல்லிஸ் ஆர் டங்கன் அவர்களைப் பற்றிக் கூறுகிறார் "BBC" சம்பத்குமார். அமெரிக்கரான டங்கன் அவர்கள் மந்திரிகுமாரி, சதிலீலாவதி மற்றும் பொன்முடி போன்ற பல திரைப்படங்களை இயக்கியவர். பல முன்னணி நடிகர்கள் இவரது படங்களின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாகியுள்ளனர்.
    இதிகாச, புராண காப்பியங்கள் முதல் நவீன சமூகக் கதைகள் வரை இவரால் படமாக்கப்பட்டன.
  • விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பலை தாக்கியழித்திருப்பதாக இலங்கை கடற்படை கூறுகிறது : இலங்கையில் விடுதலைப் புலிகளிற்கு கனரக ஆயுதங்களையும், வெடிப்பொருட்களையும் ஏற்றிச்செல்லப் பயன்படுத்தப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் மற்றுமொரு ஆயுதக்கப்பலை அழித்திருப்பதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது. இலங்கையின் தென்கடல் எல்லையில் இருந்து சுமார் 1700 கிலோமீட்டர்கள் தொலைவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது
  • இராக்கில் இருக்கின்ற இரானியத் தூதுவர் மீது புகார் : பாக்தாதில் உள்ள இரானியத் தூதுவர், இரானிய புரட்சிகர இராணுவத்தின் சிறப்புப் பிரிவு ஒன்றின் உறுப்பினராகச் செயற்படுவதாக, இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளின் உயர் தளபதியான ஜெனரல் டேவிட் பெட்ரியஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்
  • பேச்சுவார்த்தைக்கான முன்நிபந்தனைகளை பர்மா கைவிட வேண்டும் - மலேசியா : பர்மாவின் ஜனநாயக எதிர்க்கட்சித் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்நிபந்தனைகளைக் கைவிடுமாறு பர்மிய இராணுவ ஆட்சியாளர்களை, மலேசியா கேட்டுள்ளது
  • சூடானில் அரச கட்டுப்பாட்டு நகரம் நாசமாக்கப்பட்டுள்ளது : சூடானின் பிரச்சனைக்குரிய டார்பூர் பகுதியில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நகரம் ஒன்று முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது