"கறுப்பு தினம்"
எத்தனை அப்துல் கலாம்,
எத்தனை அன்னைத் தெரெசா,
எத்தனை காந்தி மகான்,
எத்தனை இந்திரா காந்தி,
எத்தனை விவேகானந்தர்,
எத்தனை ஆல்வா எடிசன்,
எத்தனை ஜான்சிராணி,
எத்தனை பாரதி,
எத்தனை பகத்சிங்??
கருகிப்போயினரோ??
கருவுக்குள் இருக்கும் போதே காலம்
கருக்கிவிட்டதே
அந்தக் கருப்புத் தினத்தை
கண்களை விட்டும் இதயத்தை விட்டும்
என்றென்றும் அழிக்க முடியாத நாள்.
இந்த நாள் இனி வேண்டாம்!
என் இளைய சமுதாயமே!
எத்தனை ஏக்கங்கள்! லட்சியங்கள்!
இவையத்தனையும் உங்களோடு
சேர்ந்தே பொசுங்கி விட்டதே!
உங்களின் மறைவால் எனது பாரதம்
முன்னேற்றத்தில் பத்தாண்டுகள் தள்ளிப் போனதே! வேண்டாம் இந்த விபரீதம்!
இனியும் வேண்டாம்!
அஞ்சலி செலுத்தவேண்டாம் இந்த ஆத்மாக்களுக்கு!
ஒரு சொட்டுக்கண்ணீர் விடுங்கள்
அவையனைத்தும் சேர்ந்துபோய்
அந்தக் கொடூரத் தீயை அணைக்கட்டும். பச்சிழங்குழந்தையைத் தாயின்
கையைவிட்டுப் பறித்துக் கண்முன்னே நெருப்பில் தூக்கியெறிந்த இயற்கையின் கொடூரம் என்றுமே இப்பாருக்கு வேண்டாம்.
கண்ணீருடன் கடந்தபோன ஆண்டுகளின்
இதே நாளை நினைவலைகளை நிறுத்தி….