July 12, 2007

ராமபிரான் காட்டுக்கு சென்றதும் ஒரு ஆசிரமத்திலிருந்து மற்றொரு ஆசிரமத்திற்கு புறப்பட்டார். அப்போது, அந்த ஆசிரமத்திலிருந்த இரண்டு இளைஞர்கள் அவருடன் சென்றனர். இரண்டாவது ஆசிரமத்திலிருந்து மூன்றாவது ஆசிரமத்திற்கு புறப்பட்டதும், இன்னும் இரண்டு இளைஞர்கள் சேர்ந்துகொண்டார்கள். ஆக நான்கு இளைஞர்களும், ராமன், லட்சுமணன், சீதா ஆகியோர் உட்பட ஏழு பேர் மற்றொரு ஆசிரமத்தை நோக்கி சென்றனர். அந்த ஆசிரமத்திலிருந்த குருபத்தினிகள் அவர்களை வரவேற்றனர். அந்தக் கூட்டத்தில் சீதை மட்டுமே பெண் என்பதால் அவளை அடையாளம் கண்டுகொண்டனர். மற்றவர்களில் யார் ராமன், யார் லட்சுமணன் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
அவர்கள் சீதையிடம் அங்கு நின்ற ஒவ்வொருவராக காட்டி, "இவர் ராமரா?, இவர் ராமரா?' என கேட்டுக்கொண்டே வந்தனர். சீதையும் "இவர் ராமர் இல்லை. இவர் ராமர் இல்லை' என சொல்லிக்கொண்டே வந்தாள். கடைசியாக ரிஷிபத்தினிகள் ராமனைச் சுட்டிக்காட்டி, "இவர் ராமரா?' என்று கேட்டார்கள். சீதை பதில் சொல்லாமல் நாணத்துடன் தலையை கவிழ்ந்துகொண்டாள். "இவர்தான் ராமர்' என்று கூறவில்லை.
இதிலிருந்து ஒரு உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். உலகிலுள்ளவர்கள் கடவுள் தங்கள் அருகில் இருந்தும் அடையாளம் காணத் தவறி விடுகிறார்கள். அதே நேரம், பிற பொருட்கள் கடவுளாக இருக்குமோ என சந்தேகப்படுகிறார்கள். சிலருக்கு பணம் கடவுளாகத் தெரிகிறது. சிலருக்கு உலக இன்பங்கள் கடவுளாகத் தோற்றமளிக்கின்றன. ஆனால், நிஜமான பக்தன் எல்லோரையும் கடவுளாகப் பார்க்கிறான். எந்நேரமும் கடவுளுடனேயே இருக்கிறான். நாமும் எல்லாரையும் கடவுளாகப் பார்ப்போமே!
- பகவான் ரமணர்

இன்றைய குறள்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்

அறத்துப்பால் : இல்லறவியல்

நல்ல கவிதைகளைப் படித்தவுடன் நான் எழுதிய ஒன்றுகூடக் கவிதை இல்லையென்று புரிந்தது, அத்தனையும் கிழித்துப் போட்டுவிட்டேன்
- பிரபஞ்சன்

தமிழோசை

இன்றைய (ஜுலை 12 வியாழக்கிழமை) "BBC" நிகழ்ச்சிகளைக் கேட்க கீழே க்ளிக் செய்க BBCTamil.com Radio Player