February 21, 2011

பூங்காத்து திரும்புமா? ஏம்பாட்ட விரும்புமா?

"மலேசியா வாசுதேவன் நலமாக உள்ளார்" என்ற செய்தியைக் கேட்டு ஆனந்தத்தில் கண்கள் கலங்கியதும், உடனே அந்த மாமனிதன் பாடிய, நானும் என் தந்தையும் சேர்ந்து கடைசியாகப் பார்த்த, என் தந்தைக்கும், கிட்டத்தட்ட அனைவருக்கும் பிடித்த "முதல் மரியாதை" படத்தின் "பூங்காத்து திரும்புமா" என்ற பாடலையும், "ஆகாய கங்கை" என்ற பாடலையும் உடனே திரும்பத் திரும்பக் கேட்டேன். அதனை என் தளத்தில் பிரசுரித்து என் சந்தோசத்தையும் பகிர்ந்து கொண்டேன். ஆனால், அந்தச் சந்தோசம் நிலைக்காமல், சில தினங்களிலேயே.... "பூங்காற்று திரும்புமா?" என்றாகிவிட்டது. அவர் குரலில் உள்ள கம்பீரமும், கொஞ்சலும் அப்பப்பா.... மனிதர் வில்லனாக நடிக்கும்போது அவர் குரலில் உள்ள நக்கலும், திமிறும்.... நேரில் பார்க்கும்போது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். சில ஆண்டுகளுக்கு முன் நேரில் பார்த்தபோது எந்தவித பந்தாவும் இல்லாமல் ஒரு குழந்தையாய் சிரித்துப் பேசியவர்... இன்று நம்மிடம் இல்லை. மனிதர் வாழ்க்கையில் நொந்து மன உளைச்சலுடன் இருந்தபோது இந்தத் திரையுலக பிரம்மாக்கள் எவரும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. இன்று வரிந்துகட்டிக்கொண்டு வாய் கிழியப் பேசுகிறார்கள்.... என்ன உலகம்.... சாயம் பூசுபவர்கள் என்பதை நிச வாழ்விலும் நிரூபிக்கின்ற இந்தக் கூட்டத்தில் இல்லாமல் "ஆகாய கங்கை"யில் அந்த மாமனிதனின் புனிதமான ஆத்மா கலந்து போகட்டும்.

- அதிகாலை நவின்