May 27, 2007

"ANGER is nothing but ACTIVE SADNESS"

"மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" அனைவரும் படித்திருப்பீர்கள். சுவாமி சுகபோதானந்தா அவர்களைப் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டுமென்ற அவசியமில்லை. அவரின் நேர்முகப் பேட்டியை அமெரிக்கப் பண்பலை வரிசை "its.diff" (KZSU Stanford 90.1 FM radio show) இங்கு ஒலிபரப்பியதன் ஒலிப்பதிவை கேளுங்கள். மிகவும் தெளிவான, பிரமிப்பான, ஒவ்வொருவரும் அவசியம் கேட்கவேண்டிய நிகழ்ச்சி இது. பேட்டி எடுத்தவர் எனது மதிப்பிற்குரிய நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள். முதலில் அவருக்குப் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டு, வாய்ப்பினை வழங்கிய வானொலிக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம். மேலும் சுவாமி போதானந்த சரஸ்வதி, சுவாமி அனுபவானந்தா மற்றும் யோகா பற்றிய மிகச்சிறப்பான பேட்டிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியை நேரடியாகக் கேட்கக் கூடிய வாய்ப்பு பலருக்கு கிடைத்திருக்காது. பரவாயில்லை, வாய்ப்பு இப்போது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. கேட்பதற்கு இந்த இணைப்பை அழுத்தவும். Life: "(KZSU Stanford 90.1 FM radio show)" Life: "(KZSU Stanford 90.1 FM radio show)"

"கிங் சார்லஸ்"

விருதால் இவருக்குப் பெருமை என்பதைவிட இவரால் விருதுக்குப் பெருமையென்பது'தான் பொருத்தமாக இருக்கும். எந்த ஜீவராசியுமே ரசிக்கும் இந்த சிரிப்பழகனை! இவர் ஒரு மாபெரும் சகாப்தம்! இந்நூற்றாண்டின் ப்ராப்தம்!


குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு இங்கிலாந்து அரசின் "கிங் சார்லஸ்" விருது அளிக்கப்படுகிறது. லண்டனின் ராயல் சொசைட்டீ ஆஃப் லண்டன் பிற நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப சாதனையாளர்களுக்கு அளிக்கின்ற விருது இது. கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

அக்காலத்து 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' முதல் இன்று உங்களை தாளமிடவைக்கும் 'மன்மத ராசா!' வரை தமிழ்த் திரையிசை நடந்துவந்த பாதையைப் படம்பிடிக்கும் வரலாற்றுத் தொடர், சம்பத்குமார் தயாரிப்பில்...
கிட்டத்தட்ட எழுபத்தைந்து பாகங்கள் இருக்கின்றன... இந்த மனிதர் ஏறக்குறைய அனைவரைப்பற்றியும் ஆராய்ந்திருக்கிறார். மிக மிக அருமையான நிகழ்ச்சி இது. தியாகராஜ பாகவதர் தொடங்கி, கிட்டப்பா, டி.ஆர்.மகாலிங்கம், ஜிக்கி, ஜானகி, சுசீலா, பாலசுப்ரமணியன், யேசுதாஸ் மற்றும் இன்றுள்ள பாடகர்கள் வரையில் தொகுத்திருக்கிறார்...
உங்களுக்கு எது வேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்துக் கேட்டு ரசிக்கலாம். ஒரு அருமையான ஆய்வு இது....இதனைப் பாராட்டும் அளவுக்கு எனக்கு அனுபவமோ, வயதோ இல்லை... இவையனைத்தும் நான் ரசித்துப் பிரமித்தவை.. உங்களுக்கும் அதனைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்... ம்ம்... இப்ப 'கிளிக்' பண்ணுங்க.BBCTamil.com

Today's Quote


Women will work out their destinies—much better, too, than men can ever do for them. All the mischief to women has come because men undertook to shape the destiny of women.

BBC "தமிழோசை"
(ஞாயிறு மே 27) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்

BBCTamil.com Radio Player

"ஷக்தி"

அமெரிக்காவின் முதல் இந்திய
"ஹிப்-ஹாப் திவா" நடனமாடுபவர். இவர் ஒரு தமிழ், இந்துப்பெண் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா??


"ஷக்தி"

"ஷக்தி"

கவனஈர்ப்புப் போராட்டம்

இதுதான் தமிழனின் நிலை
என்று மாறும் இந்த அவலம்?

"நிலாச்சாரல்"

இணைய தளத்தில் 'நிலாச்சாரல்' என்ற சஞ்சிகையை நடத்தி வரும் திருமதி.நிர்மலா அவர்களின் 'ஜெயா' தொலைக்காட்சிப் பேட்டியை பார்க்க இங்கே உள்ள இணைப்பை அழுத்தவும்.

கவிஞர் "யுகபாரதி"

கவிதைகள் தோன்ற வேண்டும், தோன்றி வருவதே கவிதை, கவிதை செய்ய முடியாது என்பது பற்றி உங்கள் கருத்து.
உண்மைதான். பாடல்கள் வேண்டுமானால் செய்யலாம், ஆனால் கவிதைகளைச் செய்ய முடியாது. கவிதை எழுதுவதற்கு, ஊடுருவிப் பார்க்கும் படியான ஒரு மூன்றாவது பார்வை அவசியம்.Please 'click' here

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews