November 12, 2007

"மொழி என்பது தொடர்புக்குதான் - கனிமொழி

"மொழி என்பது தொடர்புக்குதான். மொழி ஒரு இனத்தின் அடையாளமாக மாறுவதை சிலரால் ஏற்று கொள்ள முடியாததாகவுள்ளது. தமிழ் தொன்மையான மொழி. உலகிலுள்ள மற்ற மொழிகளைவிட 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்தோன்றியது. பல செம்மொழிகள் இருந்தாலும் வாழும் மொழியாக தமிழ் இன்று விளங்குகிறது. நமது கலாச்சாரத்தை சுமந்து வருவதாக தமிழ்மொழி அமைந்துள்ளது. நாம் யார் என்ற புரிதலுடன் இல்லாமல் வானம் வசப்படும் என செயல்படும் போது அடியோடு விழுந்து விடுவோம்" - கனிமொழி

இன்றைய குறள்

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று

பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்

அறத்துப்பால் : பொறையுடைமை

உயிர்காக்க உதவும் பத்து வழிமுறைகள்

நமது வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ, பெரியவர்களுக்கோ திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்படும் போது பதட்டத்துடன் மருத்துவமனைக்கு ஓடுகிறோம். அங்கே மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் அளிப்பதன் மூலம் மருத்துவ உதவிகள் தாமதமின்றி நோயாளிக்குக் கிடைக்க வழி பிறக்கிறது. பல வேளைகளில் மருத்துவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் நோயாளியோடு பல காலம் இருக்கும் உறவினர்களே தடுமாறும் நிலை ஏற்பட்டு விடுகிறது. நோயாளிகள் குறித்த சில அடிப்படைத் தகவல்களை எழுதி வைத்திருப்பது சிக்கலான நேரங்களில் பயனளிக்கும் என்கிறார் மருத்துவர் பால் தக்காஷி.
உயிர்காக்க உதவும் பத்து வழிமுறைகள் :

1. நோயாளிகள் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனை குறித்தும், மருத்துவர் குறித்தும் தெரிந்து வைத்திருங்கள். சிலருக்கு சில மருத்துவர்கள் மீது அதீத நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை நோய் தீர்க்கும் முதல் நிவாரணி. எனவே அப்படிப்பட்ட தகவல்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமன்றி பழக்கமான மருத்துவரெனின் நோயாளியைக் குறித்த பல விஷயங்கள் தெரிந்திருப்பதனால் மருத்துவ உதவிகள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களையும் தவிர்க்க முடியும்.

2. நோயாளியின் பிறந்த நாள் அல்லது வயது தெரிந்திருப்பது நல்லது. மருத்துவ படிவங்களை நிரப்பவும், மருத்துவருக்கு நோயாளியின் உடல் நிலை குறித்த அனுமானங்களுக்கும் அது மிகவும் பயன்படும்.

3. நோயாளிக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதுகுறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

4. நோயாளிக்கு தனக்குத் தரப்பட வேண்டிய மருத்துவம் குறித்து ஏதேனும் கருத்து இருந்தாலோ, மத ரீதியான ஏதேனும் கொள்கைகள் இருந்தாலோ அதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

5. மிகவும் முக்கியமாக நோயாளியின் பழைய ஆரோக்கிய நிலை குறித்த அறிவு இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக சர்க்கரை நோய், வலிப்பு, இதயம் தொடர்பான நோய் போன்றவை நோயாளிக்கு இருந்திருக்கின்றனவா என்பதைக் குறித்த அறிவு இருப்பது மிகவும் பயனளிக்கும்.

6. நோயாளி என்னென்ன மருந்துகள் உட்கொண்டிருந்தார் என்பது குறித்த தகவல்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உட்கொள்ளும் மருந்துகளுக்கான சீட்டுகளை ஒரு கோப்பில் போட்டு வைத்திருப்பது இத்தகைய சூழலுக்கு பெருமளவில் கை கொடுக்கும்.

7. நோயாளிக்கு மிகவும் நெருக்கமானவர்களின் தொடர்பு எண்கள் கைவசம் இருப்பதும், பல தகவல்களைப் பெற உதவும்.

8 நோயாளிக்கு மருத்துவக் காப்பீடு இருக்கிறதா என்பதைக் குறித்த தகவல்களை தெரிந்து வைத்திருப்பது நலம் பயக்கும்.

9. இதற்கு முன் நோயாளி ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறாரா என்பது குறித்த தகவல்கள் அறிந்திருப்பது நல்லது. குறிப்பாக தங்கள் இளம் வயதில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தால் அது பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு உண்டு. அதை அறிந்து வைத்திருப்பது நல்லது.

10. நோயாளியின் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக அவருடைய உணவுப் பழக்கம், மது, புகை போன்ற பழக்கங்கள் போன்ற தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பத்து விஷயங்களும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவசர தேவை ஏற்படும் போது தடுமாறாமல் சரியான இடத்தில் சரியான சிகிச்சையை வழங்க உதவும். இந்தத் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு மெத்தப் படித்திருக்க வேண்டியதில்லை, குடும்ப உறவுகளுடன் அன்போடும் உறவோடும் உரையாடி வாழ்ந்தாலே போதுமானது.

"மன்மதராசா" மாலதி

வைகோ மற்றும் நெடுமாறன் கைது

  • தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கப் பேரணி நடத்த முற்பட்டபோது கைதுவிடுதலைப்புலிகள் அமைப்பின் மறைந்த அரசியல்துறைப் பொறுப்பாளராகிய சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கப் பேரணி நடத்த பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை மீறி பேரணி சென்ற வைகோ மற்றும் நெடுமாறன் உட்பட 300-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பேரணி நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை மீறியதாகக் கூறி இவர்கள் தற்போது 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இன்று சென்னையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும், அத்தகைய கட்சிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
  • மேற்கு வங்க வேலை நிறுத்தத்தால் இயல்புநிலை பாதிப்பு : வேலைநிறுத்தம் சுமூக நிலைமையை வெகுவாகப் பாதித்துள்ளதுஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இடம்பெற்ற அரசியல் வன்செயல்களைக் கண்டித்து அங்கு நடத்தப்படுகின்ற வேலை நிறுத்தம் அங்கு பரந்த அளவில் பெரும் கதவடைப்பாக உருவெடுத்துள்ளது
  • இலங்கையின் வடகிழக்கு வன்செயல்களில் குறைந்தது 10 பேர் பலி : இலங்கையின் வடக்கே இன்று யாழ்குடா நாட்டில் இடம்பெற்ற வெவ்வேறு வன்செயல்களில் இரண்டு பொதுமக்கள் உட்பட 7 பேர்வரை கொல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும்செய்திகள் கூறுகின்றன
  • 2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் : 2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் இந்தியத் தலைநகரான புதுடில்லியில் நடைபெறும். இந்த முடிவானது கடந்த மூன்று தினங்களாக டில்லியில் நடைபெற்ற சர்வதேச ஹாக்கி சம்மேளத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்டது
  • பாலத்தீனக் குழுக்களுக்கிடையே மோதல்: ஐவர் பலி : பாலத்தீனத்தின் காசா நிலப்பரப்பில் நடைபெற்ற ஒரு பேரணியில், போட்டி பாலத்தீனக் குழுக்களான ஹமாஸ் மற்றும் ஃபத்தாவிற்கிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது ஐந்து பேர் பலியாகியுள்ளனர்
  • பொதுநலவாய அமைப்பு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு : பாகிஸ்தான அதிபர் ஜெனரல் பெர்வேஸ் முஷாரப்பாகிஸ்தானில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக சாத்தியமான தடைகளை விதிப்பது குறித்து விவாதிக்க காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் லண்டனில் கூடியுள்ளனர்
  • இன்றைய (நவம்பர் 12 திங்கட்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews