June 29, 2007

நாலடியார்

1. அறத்துப்பால்

1.4 அறன் வலியுறுத்தல்

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு


- சமண முனிவர்கள்
தமிழ் விளக்கவுரை


அரிதுக்கு அரிதாக கிடைத்த மானுடப் பிறவியை, அரியவை செய்யவே பயன்படுத்தவேண்டும். அப்படிச் செய்யாவிடில் இந்த உடம்பு கரும்பின் சாற்றை எடுத்துவிட்டு அதன் சக்கையைக் கெடவிடுவது போலக் கெட்டுப்போகும்.
- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை


Having obtained a human body, so difficult of attainment, so act as to procure great merit by it, for in the next birth charity will profit thee as the juice of the sugarcane when pressed, while thy body will decay like the refuse cane.

by Rev.F.J.Leeper, Tranquebar

தமிழோசை

வெள்ளிகிழமை மதியம் சிவகங்கையில் நடந்த ஒரு குண்டுவீச்சு சம்பவத்தில் அந்நகராட்சியின் தலைவரும் திமுகவைச் சேர்ந்தவருமான முருகனும் அவரது கார் ஓட்டுநரும் கொல்லப்பட்டுள்ளனர். மதுரை மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி. இன்றைய (ஜுன் 29 வெள்ளிக்கிழமை) "BBC" செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும். BBCTamil.com BBCTamil.com Radio Player

சுவாமி போதானந்த சரஸ்வதி அவர்களின் நேர்முகம் அமெரிக்கப் பண்பலை It's different - News, Views & Music (KZSU Stanford 90.1 FM radio show) வரிசையில் ஒலிபரப்பானதன் ஒலிப்பதிவை இங்கு பதிவு செய்திருக்கிறேன். நேர்முகம் கண்டவர் எனது அருமை நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள், சான் ஃபிரான்சிஸ்கோ, கலிபோர்னியா - அமெரிக்கா. Please "Play" and Listen the Speech.
Powered by eSnips.com


நம் மக்கள் நிலை!

நம் நாட்டுப் பெரும்பாலான மக்களின் சமூக நிலைமையை எடுத்துக் கொண்டால் மனிதத் தன்மையின் ஆதிநிலை என்று சொல்லப்படும் காட்டுமிராண்டித்தனமும், சாவேஜஸ் என்னும் மிக்கப் பிராயத்தன்மையும், இன்னமும் இருந்து வருவதாகத்தான் நான் காண்கிறேன். நாம் முன்னேற்றம் அடைந்த மக்களால் மதச்சண்டை, சாதிச்சண்டை, வகுப்புச் சண்டை, உயர்வு தாழ்வுக் கொடுமை பத்தாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் இருந்த மாதிரியே இன்றும் இருந்து வர முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்
- பெரியார்

இன்றைய குறள்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக்காட்டும்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை