July 29, 2007

முதல்வர் கருணாநிதியின் மகனும், நடிகருமான மு.க.முத்து உடல் நலக்குறைவுக் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதிக்கும், முதல் மனைவி பத்மாவதிக்கும் பிறந்த ஒரே மகன் மு.க.முத்து. இளம் வயதில் திரைப்படத்தில் நடிக்க விரும்பிய மு.க. முத்து, முரசொலி மாறனின் பூம்புகார் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட "பிள்ளையோ பிள்ளை' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அப்போது, எம்.ஜி.ஆருக்கு இணையாக மு.க. முத்துவை களம் இறக்க கருணாநிதி முயற்சிப்பதாக கூறப்பட்டது. அதன் பின்பு, "பூக்காரி', "சமையல்காரன்', "அணையா விளக்கு' உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்தார். அதன்பின்பு, திரைத்துறையில் இருந்து விலகினார். அரசியல் வானில் தனது தந்தை மின்னினாலும், அதன் கவர்ச்சியில் ஈர்க்கப்படாமல் ஒதுங்கியே இருந்தார். 1991-96 ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுகவில் சேர்ந்தார் மு.க.முத்து. அப்போது, அவருக்கு ஜெயலலிதா ரூ. 5 லட்சம் நிதி வழங்கினார். அதிமுகவில் இணைந்தாலும், கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தார். மு.க.முத்துவின் மகன் அறிவுநிதி, டாக்டராக உள்ளார்.
உடல்நலக் குறைவு: கடுமையான காய்ச்சல் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை மு.க.முத்து சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்தவுடன் காலை 10.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி மருத்துவமனைக்கு நேரில் சென்று மு.க.முத்துவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, டாக்டர் அறிவுநிதி, அவரது மனைவி பூங்கொடி, தங்கை தேன்மொழி ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சிகள் ரத்து: மு.க.முத்துவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை மாலையில் இருந்து தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். மு.க. முத்துவின் அருகிலேயே இருக்க வேண்டியுள்ளதால் நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என எழும்பூர் நீதிமன்ற விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

"கடலைக் கலக்கிச் சேறுபடுத்த யாராலும் முடியாது. முனியின் நிறை மனது கலங்கிய மனது ஆவதில்லை. சாந்தம் அல்லது ஜீவன் முக்தி என்ற பெருநிலையும் அவனுக்கே உரியது"

- சுவாமி சித்பவானந்தர்

ஒரே குடியரசுத்தலைவன்!

இவன்
முதல்க்குடிமகன் மட்டுமல்ல,
கடைசிக்குடிமகனும்கூட
ஆம்!
எங்களுக்கு வேண்டாம்
இனியொரு குடியரசுத்தலைவன்,
இந்த சிரிப்பழகன்,
சிகரம் தொட்டவன் போதும்
எங்கள் இந்தியாவை
நாங்கள் கற்பனைக்கெட்டாத்
தூரத்துக்குக்கொண்டு செல்வோம்!
இந்த வாழும் தெய்வம்
பிறந்த மண்ணில் பிறந்ததற்காகவும்,
அவனருகிலேயே
வசிக்க முடிந்ததற்காகவும்
பெருமையடைகிறேன்! பேறு பெற்றேன்!!
ஜெய்ஹிந்த்!!
ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த அன்றே சென்னைக்கு அப்துல் கலாம் வந்திறங்கிய போது முகம் கொள்ளாத சிரிப்போடு இருந்தார். அவரைச் சந்திக்க வரிசையில் நின்றிருந்த விசிட்டர்களில் ஒரு பெண்மணி, கலாமிடம் உற்சாகமாக சில வார்த்தகளைச் சொன்னபடியே, அழகிய ஜரிகைக் காகிதத்தில் சுற்றிய ஏதோ ஒரு பரிசுப் பொருளை அவரிடம் அளிக்க... "என்ன இது" என்று கேட்டார் அப்ல்கலாம். ஏதோ "ஒரு விலை மதிக்கமுடியாத பரிசு" என்று அந்தப் பெண்மணி சொல்ல... படக்கென்று கலாமின் முகத்திலிருந்த சிரிப்பு மாறியது. “இப்படியெல்லாம் செய்யக் கூடாது” என்று சற்றே கடுமயாகச் சொல்லி... பரிசை அந்தப் பெண்மணியிடமே திருப்பிக் கொடுத்து விட்டு, வேகமாக அவரைத் தாண்டிப் போனாராம். அன்று இரவே கிண்டி அண்ணா பல்கலக்கழகத்தின் விருந்தினர் மாளிகைக்குப்போன கலாம், மறுபடி ஜாலி மூடுக்குத் திரும்பியிருந்தார். ஜனாதிபதி “புரோட்டோகால்” இல்லாத அந்தச் சுதந்திரத்தை வெகுவாகவே ரசித்து அனுபவிக்க ஆரம்பித்தார். தன்னை நெருங்கிய பேராசிரியர் கஷீம் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் உற்சாகமாகக் கை குலுக்கி, மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தார். சிலர் பாசத்தோடு கட்டியணைக்க... அதற்கும் பிகு எதுவும் இல்லாமல் அனுமதித்தார். உளவுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர், “ஐயா! அஞ்சு வருஷத்க்கு முன்னாடி, குடியரசுத் தலைவர் பதவிக்கு, உங்க பெயர் பரிந்துரைக்கப்பட்டதுமே அதை முதல்ச் செய்தியாகச் சொன்னது நான்தான். அதுவும் இதே இடத்தில்தான் சொன்னேன்... டெல்லிக்கு உங்களுக்கு லைன் போட்டுக் கொடுத்ததும் நான்தான்” என்று மலரும் நினவூட்ட... கலாம் கண்கள் லேசாகப் பனித்தன. ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கே உரிய பாதுகாப்பு ஏற்பாடு கள் அனத்தும் அண்ணா பல்கலைக் கழக விருந்தினர் வளாகத்தில் செய்யப்பட்டிருக்க, அந்த ஏரியா டெபுடிபோலீஸ் கமிஷனர் சேஷசாயியை அழைத்த கலாம்... “நீங்கதான் எல்லாம் கவனிக்கப் போறீங்களா... குட்! நான் மாதத்தில் சில நாட்கள் மட்டும்தான் இங்கே இருக்க வேண்டி வரும். அந்தச் சமயத்தில் என்னைத் தேடி வர்றவங்களில் பெரும்பாலும் மாணவர்கள்தான் இருப்பாங்க. சந்தேகம் கேட்கணும்-னு என்னிடம் வந்துகிட்டே இருப்பாங்க. பாகாப்புக் கெடுபிடி என்ற பெயரில் அவங்க மனசு நொந்து போயிடக்கூடாது. நீங்கதான் எல்லா காவலர்களுக்கும் அத எடுத்துச் சொல்லணும்” என்று நட்புடன் சொன்னார்.

"டாக்டர் அப்துல்கலாம் இணைய தளம்

புதுதில்லி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தனக்கான தனி இணைய தளத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். அதன் முகவரி: http://www.abdulkalam.com
இதில் அவரைப் பற்றிய தகவல்களும் படங்களும் அவரின் படைப்புகளும் கேள்வி பதில்களும் மேலும் பலவும் இடம்பெற்றுள்ளன. அவரைத் தொடர் புகொள்ளும் வாய்ப்பினையும் இந்த இணைய தளம் அளிக்கிறது. அப்துல்கலாம் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த போது www.presidentofindia.nic.in என்ற வெப்சைட்டில் ஏராளமான கட்டுரைகள், கவிதைகள் வெளியிட்டிருந்தார். இவை தவிர மாணவ- மாணவியர்கள், பொதுமக்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களைப் படித்து அவர்களுக்குப் பதில் அனுப்பி வந்தார். இதில் குழந்தைகளுக்கான பகுதியையும் உருவாக்கியிருந்தார். இதனால் அந்தத் தளத்தை லட்சக்கணக்கானோர் பார்த்து வந்தனர். இந்த நிலையில் அப்துல் கலாம் 3 நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். புதிய ஜனாதிபதியாக பிரதீபா பட்டீல் பதவி ஏற்றார். அப்துல்கலாம் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதால் குடியரசுத் தலைவருக்கான அந்த இணைய தளத்தில் இருந்த அவரது கட்டுரைகள், கவிதைகள், மாணவர், ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் அனைத்தும் அதிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டன.

இன்றைய குறள்

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

தமிழோசை

இன்றைய (ஜுலை 29 ஞாயிற்றுக்கிழமை) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பில் செல்க BBCTamil.com Radio Player

இசையை ரசிக்கக் கூடிய ஒவ்வொரு தமிழனும் மறக்க முடியாத ஒரு வானொலி நிலையம் இலங்கை வானொலி நிலையம்தான். இலங்கை ஒலிபரப்புக்கூட்டு ஸ்தாபனம் தமிழ்ச்சேவை என்று சொல்லி நிகழ்ச்சிகளைத் தொகுத்தும் வழங்கும் விதத்தில் மயங்காத தமிழ் நெஞ்சங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. தொலைக்காட்சி, சினிமாக்கள் இன்றைய அளவுக்குப் பிரபலமடையாத அந்தக்காலத்தில் ஒரே ஒரு பொழுது போக்குச் சாதனம் வானொலி ஒன்றுதான். இலங்கை வானொலி ஒலித்துக்கொண்டிருந்தால் நம்மையறியாமலே மனதில் ஒரு திருமண வீடு போன்ற குதூகலம் பிறக்கும். நெடுநாளைக்குப்பின் அந்த அனுபவத்தை இப்போதும் இந்த ஒலிப்பதிவைக் கேட்கும்போது உணரமுடிகிறது. அப்படிப்பட்ட அற்புதமான, இனிமையான மலரும் நினைவுகளை நம் செவிகளுக்கு விருந்தாக்கியிருக்கிறார் அருமை நண்பர் திரு.யாழ் சுதாகர். அந்த இனிமையான குரல்களில் இவருடைய குரலும் ஒன்று. இப்போது இலங்கை வானொலியில் இவருடைய குரலைக் கேட்க முடியாவிட்டாலும், நமது தமிழகத்தில் "சூரியன் பண்பலை" வரிசையில் இரவு நேரத் தொகுப்பாளராக மிக அருமையாகவும், அற்புதமாகவும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளைக் கேட்க முடிவது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இவர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியைக் கேட்போம். திரு.யாழ் சுதாகர் அவர்களுக்கு நன்றி

Powered by eSnips.com

இலங்கை வானொலி நினைவலைகள் பகுதி II

Powered by eSnips.com