June 30, 2007

பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்? அவர்களுக்கு அறிவு இல்லை! ஆற்றல் இல்லை! என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக


- பெரியார்

பாசப்பிணைப்பு : கவிஞர் சிநேகன்

பாசப்பிணைப்பு : கவிஞர் சிநேகன்

நான் கேட்ட கேள்வி "ரமேஷ்,சுரேஷ்,தினேஷ் என்று உனது தம்பிகளுக்குப் பெயர் வைத்துள்ளீர்கள். அதன் உண்மையான அர்த்தம் தெரியுமா என்பது தான் அந்தக் கேள்வி. "பேர் அழகா இருக்குன்னு வைச்சிருப்பாங்க..இதுக்கெல்லாம் அர்த்தம் எதுக்கு? சும்மா கூப்பிடத்தானே"..என்று சொன்ன மனைவியிடம் நான் அதற்கு அர்த்தம் சொல்லவா என்று கேட்டேன். மிகவும் ஆவலுடன் பதிலை எதிர்பார்த்த மனைவியிடம் வேடிக்கையாக அச்சில் ஏற்ற முடியாத ஒரு அசிங்கமான ஒரு பதிலைச் சொன்னேன்.அதுசமயம் நான் படித்த ஓஷோவின் சுயசரிதை தமிழாக்கத்தில் "பாபு" என்பதற்கு நாற்றம் என்று ஏதோ ஒரு இந்திய மொழிகளில் அர்த்தம் இருப்பதாக நான் படித்ததை சொல்லி ரமேஷ்,சுரேஷ்,தினேஷ் என்பதற்கு மூன்று வகை நாற்றங்களை வரிசைப்படுத்தினேன். பிறகு தமிழ் மொழியின்சுவையையும்,இனத்தின் பெருமையையும் பல்வேறு நேரங்களில் சொல்லி, பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு தமிழில் தான் பேர் வைக்க வேண்டும் என்று சொல்லி அதன்படி நான் எனது குழந்தைக்கு உதயநிலவன் என்று தமிழில் பெயர் சூட்டினேன்.பட்டப்படிப்பு அதுவும் சமூகவியல் படித்தவர் என்பதால், திராவிட இயக்கங்கள் குறித்த ஒருவகை அறிமுகம் இருந்ததால் எனது பணி இலகுவானது.அதன் பின்பு எனது மாமனார் இல்ல வாரிசுகள் பலரும் தமிழில் அகிலன்,எழில்,முகில் எனப் பெயர் சூட்டிகொண்டது எனக்கு ஒருவகை வெற்றியே எனலாம். தொடர்ந்து படிக்க இணைப்பை அழுத்தவும். Thinnai

உலகத்தில் சம்பாதிக்க எத்தனையோ நல்ல வழிகள் இருக்கின்றன. உலக அளவில் பிச்சைக்காரர்கள் குறைந்துகொண்டு வருகிறார்கள். பிச்சை எடுப்பதைத் தொழிலாக வைத்திருப்பவர்கள் கையாளும் உத்திகள் ஏராளம். அந்த உத்திகளில் அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்கும் உத்திகள் என்று கொஞ்சம் இருக்கிறது. இரக்கப்படுவதற்காகவே சில உத்திகள் வைத்திருப்பார்கள். சிலர் புகை வண்டிகளில் செல்லும்போது நாம் அமர்ந்திருக்கும் இடங்களைச் சுத்தம் செய்து இறுதியாகக் கையேந்துவார்கள். சிலர் சிக்னல்களில் வாகனங்கள் நிற்கும்போது கைக்குழந்தைகளோடு பிச்சையெடுப்பார்கள். அமெரிக்கா போன்ற வளர்ந்துள்ள நாடுகளில் கூட ஸ்டைலாக உடையணிந்து கையில் ஒரு போர்டுடன் நின்றுகொண்டிருப்பார்கள். அந்தப் போர்டில் 'தயவு செய்து உதவி செய்யுங்கள், என்னால் எந்த வேலையும் செய்யமுடியாத நிலையிலிருக்கிறேன்" என்றெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு நிற்பார்கள். இன்னும் சிலர் கையில் பூங்கொத்துடன் நின்றுகொண்டிருப்பார்கள். இனாமாகக் காசு கொடுத்ததாக இருக்கவேண்டாமென்ற உத்தி இது. இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.


சமீப காலங்களாக, எனக்குத்தெரிந்து 6 – 7 வருடங்களாக சிலர் இ-மெய்ல் மூலம் பிச்சையெடுக்கிறார்கள். இது ஒரு ரூபாய்க்கோ, ஒரு டாலருக்கோ அல்ல. பில்லியன் கணக்கான டாலர்களுக்கு. அதாவது இணையத்தை உபயோகிக்கும் ஒவ்வொருவரும் இது போன்ற அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். முதலில் நண்பர்கள்போலத் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் விசயத்தை மெதுவாக ஆரம்பித்து, கடைசியில் கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள பணம் வங்கியில் யாரோ போட்டுவிட்டு மறைந்துவிட்டதாகவும், இவர்தான் அந்த வங்கி, மேலாளர் அல்லது அந்தப் பணம் போட்டவருக்குத் தூரத்துச் சொந்தம் என்றெல்லாம் பல கதைகள் கூறி நம்மை அதற்கு உதவி செய்யச்சொல்லி, பிறகு நமது அடையாள அட்டை, வங்கிக் கணக்கு எண் வரை கேட்டு இறுதியில் நமது வங்கியில் இருக்கக் கூடிய பணத்தைச் சுருட்டிக் கொண்டு சென்றுவிடும் கூட்டம் இன்றைய கணிணி யுகத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு முதற்கண் நாம் இ-மெய்ல் மூலமாகப் பதில் அளிப்பதே தவறு. நமது ஐபி அட்ரஸ் என்று சொல்லக்கூடிய நமது இணையதள விவரங்களைச் சேகரித்துப் பின் நம்மை ஆழ்கடலில் தள்ளி விடுவார்கள். இதற்குப் பெயர் முகவரித்திருட்டு என்றுகூட சொல்லலாம். அவர்கள் அனுப்பும் மெய்ல் நைஜீரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்துதான் அதிகம் வரும். இவர்களை ஒழிக்க ஏராளமான நடவடிக்கைகள் எடுத்துவரப்படுகின்றன. இன்னும் சிலர் லாட்டரி மோசடி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். நமக்கு ஏராளமான பணம் விழுந்திருப்பதாகவும், நமது இ-மெய்ல் ஐடி தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் பில் கேட்ஸ், அம்பானி, பின் லேடன், ஜார்ஜ் புஷ் போன்ற பிரபலங்களின்
இ-மெய்ல் முகவரியும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் சொல்லி ஏமாற்றுவார்கள்.

எது எப்படியோ இதில் பலர் ஏமாற்றம் அடைந்து பல லட்சக்கணக்கான பணத்தை இழந்தவர்களும் உண்டு. இதனை ஒழிக்கவும், இது போன்ற தகவல்களைப் பதிவு செய்யவும், எப்படியெல்லாம் மோசடி செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவும் ஏராளமான சேவை செய்யக்கூடிய இணையதளங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நரிகளையும், நாய்களையும் விடக் கேவலமான மாடர்ன் மந்திரவாதிகளைப் “பிச்சைக்காரர்கள்” என்று சொல்லாமல் வேறென்ன சொல்லமுடியும். எனவே இதையெல்லாம் கண்டு தயவு செய்து ஏமாந்து விடாதீர். இப்படி மெய்ல் உங்களுக்கு வந்தால் தயவு செய்து பதிலளிக்காதீர்கள். உடனே "Spam" ஃபோல்டருக்கு அனுப்பி விடுங்கள். உங்களுக்கு வரும் இ-மெய்லில் உள்ள ஒரு தலைப்பையோ, லட்டரி பேரையோ, உதாரணத்துக்கு "லோட்டோ லாட்டரி" ஆஸ்திரேலியா என்று கூட வரும். இவற்றை கூகிள் இணையத்தில் போட்டுத் தேடிப்பார்த்தீர்களென்றால் பெரிய கூத்தே நமக்குத் தெரியவரும். சமீபத்தில் எனக்கு வந்த ஒரு இ-மெய்லை உங்களுக்குத் தருகிறேன்.
Dear Winner,
This Email is to inform you that you emerged a winner of (£2,500.000.00 Million Pounds sterling in cash) on our online draws which was played on the 2nd JULY 2007.YOUR
DETAILSREFERENCE NUMBER:
UK/9420X2/68BATCH
NUMBER:074/05/ZY369TICKET
NUMBER:56475600545 188SERIAL NUMBER:5368/02
contacting our fiduciary agent using the details as given below:
Agent Name:Mr David Spencer.
Fiduciary/ Claims Agent.
Tell:(+44) 703 192 5024
Email Enquiry:info_lottoswinningcenter@yahoo.co.uk
Yours Truly,
Sir.Brian Hunt,
Co-ordinator
(Online Promo Co-Ordinator)

Dear Navneeth,

Compliments of the season. Please do not be dismayed over this letter since you do not know me or spoken to each other. With trust and mutual understanding,I write this letter of an appeal for assistance to you.

I am Mr Modiboh Sow Jnr, the son of late Chief Modiboh Sow,a one time minister of agriculture in the first government of Robert Mugabe and the former president general of Zimbabwe farmers Association( Z.F.A)who was murdered in a land crisis in Zimbabwe, Southern Africa Region.

The crisis erupted when the President Mr. Robert Mugabe introduced a new Land Reform Act that is currently affecting the white farmers and some black farmers who did not support his dictatorial regime. This resulted in killing, burning of houses and confiscation of properties. Probably you must have seen and heard these crises across the Cable Network News (CNN) and British Broadcasting Cooperation (BBC).

At the early stage of this crisis, my father sold most of our properties including Houses, agricultural equipments and the savings from our Gold and Diamond business of Seven Million, four hundred thousand US Dollars (US$7,400,000}and deposited it with a security firm in a form of consignment and valuables in the Republic of Ghana. This money was meant for refurbishing of poultry and animal husbandry buildings and to foster the implementation of agricultural equipments to a mechanized farming
At the time when the social, economic and political situation becomes deteriorated and the crisis reached its climax, unemployment have risen to 720% and inflation to 70% respectively. I, my brother and my mother moved to the Republic of Ghana , where we sought for political asylum.

My mother had been sick since because of the shock she got from my father's death and we have ben battling to see that she recovered but unfortunately, she died 3 months ago.

We have done the funeral ceremony as we can since we are not in our country and now we have decided to move out of Ghana to invest this money and settle down.
We are asking you to assist us in moving this money out of Ghana , since we encounter difficulties with the Ghanaian Exchange policy and bank regulations because of our refugee status.

The monetary law here does not permit refugees like me and my brother such a financial right to operate any form of bank account with their commercial banks and we are working on our travel document to come over to your country to settle there once this fund is transferred into your account.We have agreed to offer you twenty percent of this fund (20%) for your assistance and guidance. And we hope that you well be sincere and honest to us.
Thanking you in anticipation for your positive response.

Yours Sincerely,
Modiboh Sow Jnr.

இதயத்திற்கிதமானவை

இந்த வீடியோவை இங்கே பதிவு செய்ய இயலவில்லை, கீழுள்ள இணைப்பின் மூலம் நீங்கள் காணமுடியும்.2.En_Munnurai.wmv

கனடா - கலாபம் தொலைக்காட்சி சார்பாக பிரபல நாடகக் கலைஞர் திரு.பாலேந்திரா, திருமதி.பாலேந்திரா அவர்களின் நேர்முகம். நேர்முகம் செய்தவர்கள் கனடத்தமிழ்க்கவிஞர் திரு.கந்தசாமி மற்றும் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள். ஒரு நேர்முகம் எப்படியிருக்கவேண்டும்? எப்படி நேர்முகம் செய்யவேண்டும் என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் தேவையில்லையென நினைக்கிறேன். தொடர்ந்து பாருங்கள்! கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்!!

காதலித்துப்பார்!

இந்த வீடியோவை இங்கே பதிவு செய்ய இயலவில்லை, கீழுள்ள இணைப்பின் மூலம் நீங்கள் காணமுடியும். 4.kadal_sei.wmv

தமிழோசை

சேது சமுத்திரக்கால்வாய் பற்றிய ஒரு செவ்வி மற்றும் இந்தியாவில் வெள்ளப்பெருக்கு. இன்றைய (ஜுன் 30 சனிக்கிழமை) 'BBC' செய்தி கேட்க இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

கவிப்பேரரசு வைரமுத்துவின் நான் ரசித்த கவிதைகளில் ஒன்று
எரிக்கத் தெரிந்த நெருப்பு


கிழக்கே தீர்ந்தது வழக்கு -
இரண்டாய்க் கிழிந்து விடிந்தது கிழக்கு -
அட உழைத்த பிறகும் நிரம்ப வில்லையே
உழவன் வீட்டு உழக்கு.
கட்டி இருப்பது கந்தை -
அதுவும் ஒட்டி இருப்பது விந்தை -
இதைத் தட்டிக் கேட்கும்
தைரிய மில்லை மானுட மா இது? மந்தை.
கரும்பும் இங்கே இருக்கும் -
விலை கண்ணீர்போலக் கரிக்கும் -
இங்கே வருஷத் துக்கொரு திவசம்
மாதிரி பொங்கல் வைப்பது வழக்கம்.
வேர்வை வருமே அதைத்தான் -
நிஜ விதையாய் பூமியில் விதைத்தான் -
புது ஆர்வத் தோடவன் விளைத்த
பயிரை அறுத்தவனோ ஒரு சைத்தான்.
என்ன உழுதவன் நிலமை? -
அவனோ இறகை விற்கும் பறவை -
போடா புண்ணியம் என்ன பாவம் என்ன
பூவை விற்பவள் விதவை.
பொங்கி எழட்டும் நெருப்பு -
அந்த நெருப்புக் கென்ன பொறுப்பு? -
அட இங்கே தோழா
இனிமேல் வேண்டும்
எரிக்கத் தெரிந்த நெருப்பு.

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகின்றானே ஒழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.


- பெரியார்

யூஸ்ஃபுல் டிப்ஸ்

  • செல்லில் பேட்டரி குறைவாக இருப்பதாக வைத்துக் கொள்ளுவோம். *3370# என்று அழுத்தினால் செல்லில் 50% பேட்டரி அதிகரிக்கும். அடுத்து எப்போது சார்ஜ் செய்கிறீர்களோ அப்போது இந்த 50% வீதமும் சார்ஜ் ஆகிவிடும்.
  • உலகளவில் அவசர கால அழைப்புக்கு 112 என்ற எண் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக வைத்துக் கொள்ளுவோம். ஆபத்தான நேரங்களில் 112 எண்ணை அழைத்தால், அருகிலுள்ள தொடர்பு எல்லையின் அவசரகால எண்ணை அறியலாம். உங்களின் செல்போன் பூட்டப்பட்டிருந்தாலும் 112 என்ற எண்ணை அழைக்கலாம். தொடர்ந்து படியுங்கள்...
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

காலத்தால் அழியாத கருத்துள்ள பாடல்கள் எத்தனையோ பாடகர்களால் பாடப்பட்டிருக்கிறது. அதில் "திருச்சி லோகநாதன்" அவர்களும் ஒருவர். அவர் பாடிய சில பாடல்களை இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
Powered by eSnips.com

இன்றைய குறள்

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது

அறத்துப்பால் : நீத்தார் பெருமை