September 17, 2007

"சங்கமம்"

உலகத்தமிழர் அனைவரையும் ஒன்று சேர்க்கும் எண்ணத்தில் ஒரு தனிப்பட்ட நபரின் முழுமுயற்சியில் உருவானதே இந்தச் "சங்கமம்" ஒளிபரப்புச் சேவை மற்றும் "சங்கமம்" என்ற இணைய இதழ். அவர்தான் நம் பாராட்டுதலுக்குரிய நண்பர் திரு.விஜய் அவர்கள். இது பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வெளிவந்துகொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கும் அதே வேளையில் தமிழ் நெஞ்சங்களாகிய நாம் அனைவரும் கைகோர்த்துக் கைகுலுக்கி வரவேற்று நமது மேலான ஒத்துழைப்பை நல்கி தமிழ்ச்சேவை செய்வோம் என்று உங்களனைவரையும் அழைக்கிறேன். வாழ்த்துக்கள்!! சங்கமம் ஒளிபரப்புப் பதிவிற்கு இங்கே செல்லவும்...http://www.sangamamlive.com/

இன்றைய குறள்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது

அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்

அன்றும் இன்றும் - மழை

* * * அக்காலம் மாதம் மும்மாரி * * *

வேதம் ஓதிய அந்தணர்க்கு ஓர் மழை
நீதி மன்னர் நெறியினுக்கு ஓர் மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர் மழை
மாதம் மூன்று மழை எனப் பெய்யுமே!

* * * இக்காலம் வருடம் மும்மாரி * * *

அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர் மழை
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை
புருஷனைக் கொன்ற பூவையர்க்கு ஓர் மழை
வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே!

(மூலம் : விவேக சிந்தாமணி)

  • சியாச்சின் பனிச் சிகரத்துக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் இந்தியத் திட்டத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் :
    இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் சர்ச்சைக்குரிய ஹிமாலய சியாச்சின் பனிமுகட்டிற்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் இந்திய அரசின் திட்டத்திற்கு பாகிஸ்தான் தனது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது - செவ்வி http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • மைக்ரோசொஃப்ட் மீது பல மில்லியன் அபராதம் :
    முன்னணி கணினி நிறுவனமான மைக்ரோசொஃப்ட் நிறுவனம், தனது சந்தை ஏகபோகத்தை துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறி, அதன் மீதான சுமார் 700 மில்லியன் டொலர்கள், அபராதத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது உயர்நிலையில் உள்ள நீதிமன்றம் உறுதி செய்துள்ளது
  • உயர்ஜாதி நாய்களைக் கோரும் பொலிஸார் : இலங்கையில் உயர்ஜாதி நாய்களை வளர்ப்போர், அவற்றை பாதுகாப்புப் படையினருக்கு பல்வேறு தேவைகளுக்காக வழங்கி உதவுமாறு இலங்கைப் பொலிஸார் கோரியுள்ளனர்
  • செர்னோபில் அணு உலையை எஃகின் மூலம் மூட முடிவு : இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்னர் செர்னோபிலில் அணு அனர்த்தம் இடம் பெற்ற கதிரியக்கப் பகுதியை முழுமையாக மூடுவதற்காக, எஃகினால் ஆன கவசம் ஒன்றை உக்ரைன் அதிகாரிகள் நிர்மாணிக்கவுள்ளனர்
  • பிரான்ஸ் அமைச்சரின் கருத்துக் குறித்து இரானிய செய்தி நிறுவனம் கண்டனம் : இரானின் அணுத் திட்டம் தொடர்பாக உலகம் ஒரு போருக்கு தயாராக வேண்டும் என்று பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பெர்ணார்ட் குஷ்ணர் வெளியிட்டுள்ள கருத்துக்களை, இரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் கடுமையாக விமர்சித்துள்ளது
  • பிரிட்டனிடமிருந்து விமானங்களை சவுதி வாங்குகிறது : யூரோபைட்டர் விமானம் ஒன்றுபிரிட்டனிடமிருந்து 72 யூரோபைட்டர் விமானங்களை வாங்குவதற்கு சவுதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் நாற்பது பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியில் இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. பிஏஇ நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம், பிரிட்டனின் மிகப்பெரிய ஏற்றுமதிக்கான பரிவர்த்தனையாகக் கருதப்படுகிறது
  • பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமம் ரத்துச் செய்யப்பட்டது :
    இராக்கில் ஞாயிறன்று பல பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, ஒரு தனியார் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமத்தை இராக்கின் உள்துறை அமைச்சகம் ரத்துச் செய்துள்ளது
  • இன்றைய (செப்டம்பர் 17 திங்கட்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews