May 31, 2007

'வெயில்' திரைப்பட இயக்குனர் திரு.வசந்தபாலன் அவர்களின் பேட்டி. Part II

வணக்கம்!
தயவுசெய்து ஆங்கிலம் சரியாக, சரளமாக வராதவர்களை தேவையில்லாமல் தர்மசங்கடத்தில் தள்ளாதீர்கள். ஒரு நல்ல இயக்குனர் தன் உணர்வைத் தெளிவாகச் சொல்ல முடியாததை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். அவருக்கு ஆங்கிலம் வரவில்லையென்பது ஒரு பெரிய விசயமே இல்லை. ஒரு நல்ல தமிழ்ப்பட இயக்குனரைத் தமிழில் பேட்டி எடுங்கள். நீங்கள் எங்கே பிறந்தீர்கள்? தமிழ்நாட்டில்தானே! ஆங்கிலத்தில் பேசினால்தான் அனைவரும் பார்ப்பார்களா என்ன? நீங்கள் பேட்டி எடுக்கும் மனிதருக்கு எந்த மொழி சரளாமாக வருகிறதோ, எந்த மொழியில் தனது உணர்வுகளை, சொல்ல வருவதைத் தெளிவாகச் சொல்லமுடிகிறதோ அந்த மொழியில் சொல்ல விடுங்கள். வேண்டுமானால் “சப் டைட்டில்” போட்டுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அப்படிப்பட்ட பேட்டியே வேண்டாம். இது தேவயில்லாத மனச்சலனத்தை அவருக்கும் ஏற்படுத்தும், பார்க்கும் எங்களுக்கும் ஏற்படுத்தும். முதலில் நீங்கள் திருத்திக்கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது. இது என்னுடைய கருத்து மட்டும் இல்லை, என்னைப்போன்று கோடிக்கணக்கானவர்களின் வேண்டுகோள்.

சென்னை-நவின், கலிபோர்னியா (அமெரிக்கா)
இது நான் பேட்டியெடுத்தவர்களுக்கும் அந்த இணையதளத்தாருக்கும் எழுதிய கடிதம். இனிமேலாவது திருத்திக்கொள்வார்களா? பார்ப்போம். இந்த வீடியோ மற்றும் ஏற்கனவே பதிவு செய்த Part I வீடியோவைப் பற்றியும் தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.

ஒளிரும் இந்தியாவும் ஒழியும் கூந்தல்களும்

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Today's Quote

Caste or no caste, creed or no creed, any person, or class, or caste, or nation, or institution which bars the power of free thought and action of an individual - even as long as that power does not injure others - is devilish and must go down.

From Chicago.
Letter to his disciples in Chennai. January 24, 1894. CW, 5: 29

"தமிழோசை"

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா அதீத பொருளாதார வளர்ச்சியடைந்திருக்கிறதென ஒரு ஆய்வு கூறுகிறது. இன்றைய 'BBC' (மே 31 வியாழக்கிழமை) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

வாழ்த்துக்கள்!

தொலைக்காட்சி என்றால் முதலில் நினைவுக்கு வருவது சினிமாவும், சினிமாவைச் சுற்றியுள்ள செய்திகளும்தான். சினிமா சம்பந்தப்பட்ட எந்த வாடையும் இல்லாமல், "யாதும் செய்தியே! யாவரும் அறிகென, மக்கள் பயனுற நன்றும் நகையும், பூக்கவென்றே பணி செய்து கிடப்போம்" என ஒரு புரட்சியே செய்து மண் பயனுற 'மக்கள் தொலைக்காட்சி' என்ற ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மொழிபற்றி ஒளிபரப்பிய ஒரு நிகழ்ச்சி பற்றிக் கேள்விப்பட்டேன். நாமனைவரும் வரவேற்கத்தக்க ஒரு சிறப்பான நிகழ்ச்சி.Makkal TV

திருமதி.வாசந்தி Part II

எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திருமதி.வாசந்தி அவர்களின் வானொலிப் பேட்டியைக் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
The Kamla Bhatt Show 2006

May 30, 2007

தாழம்பூவே! வாசம் வீசு!!

Thazam Poove.mp3

திருமதி.வாசந்தி

எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திருமதி.வாசந்தி அவர்களின் வானொலிப் பேட்டியைக் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்

The Kamla Bhatt Show 2006


இன்னும் 30 ஆண்டுகளில் மொத்த இமயமலையே உருகிப்போய்விடுமாம்....
முதலில் இதைப் படியுங்கள்!!
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

சொந்த மண்ணில் வடிவேலு

தமிழ் எண்கள்

தமிழில் நம் முன்னோர்கள் எண்களை எப்படி எழுதினார்கள் என்பது பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் இப்போது நடைமுறையில் இல்லாவிட்டாலும் நாம் அதனைத் தெரிந்துகொள்வது ஒன்றும் தவறில்லை. தமிழ் எண்களைத் தெரிந்துகொள்ள கீழுள்ள இணைப்பை அழுத்தவும். http://navneethsmart.googlepages.com/TamilNumbers1.pdf

எங்கு சென்றாலும் தமிழனின் நிலை இதுதான்

May 29, 2007

Today's Quote

I do not propose any leveling of castes.
Caste is a very good thing.
Caste is the plan we want to follow.
What caste really is,
not one in a million really understands.
There is no country in the world without caste.
In India, from caste we reach to the point
where there is no caste.
Caste is based through out on that principle.
The plan in India is to make everybody a Brahmin,
the Brahmin being the ideal of humanity.
If you read the history of India you will find that attempt shave always been made to raise the lower classes.
Many are the classes that have been raised.
Many more will follow till the whole will become Brahmin.
That is the plan.
We have to raise them without bringing down anybody.
And this has mostly to be done by the Brahmins themselves,
because it is the duty of every aristocracy to dig its owngrave;
and the sooner it does so, the better for all.
No time should be lost.Interview in The Hindu.
- Swami Vivekananda
Chennai, 1896. Complete Works, 5: 214

BBC "தமிழோசை"

(செவ்வாய்க்கிழமை மே 29) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

May 28, 2007

செல்போன் மரணவிளையாட்டு!

தீவிரவாதிகளின் திகில் டெக்னிக், சமீபத்தில் நடந்த செல்போன் குண்டுவெடிப்புப் பற்றியும், மேலும் பல பிரமிக்கத்தக்க வகையில் செல்போன் வெடிகுண்டு பற்றி விளக்கியிருக்கிறார் ஓய்வுபெற்ற திரு.இராமன், கூடுதல் செயலாளர், கேபினெட் செக்ரட்ரியெட். தவறாமல் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். கீழுள்ள இணைப்பை அழுத்துக.
Welcome to TamilanExpress.com

அரசியல் சார்ந்த பல சுவாரஸ்யமான கேள்வி பதிலுக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
Welcome to TamilanExpress.com

கலைஞர் டி.வி.

ஆடிய ஆட்டம் என்ன? (ஐயோ....கொல்றாங்கைய்யோவ்....)
பேசிய வார்த்தை என்ன?
(டெல்லி என் கையில்)
தேடிய செல்வமென்ன?
(ஏழு டி.வி.சேனல்)

திரண்டதோர் சுற்றமென்ன? (ராதிகா, சரத்குமார்)
கூடுவிட்டு ஆவிபோனால் (தயாநிதி )
கூடவே வருவதென்ன? (கனிமொழி)
............................................

வீடுவரை உறவு
வீதிவரை டி.வி.
டில்லிவரை பேரன்
காடுவரை யாரோ

மண்ணிக்கவும்........
நா" தவறி பாடிவிட்டேன்....

வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ?
...Please 'click'..link
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

BBC "தமிழோசை"

(திங்கள் கிழமை மே 28) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

Today's Quote

WHAT A LITTLE LAMP CAN DO
THE GREAT SUN CAN NOT DO
IT CAN SHINE THE NIGHTS

YOU AND I ARE LITTLE LAMPS
DON’T INVALIDATE
WE ARE LITTLE LAMPS
WE CAN DO, THE SUN CAN NOT DO
WE CAN SHINE THE NIGHTS

Swami Sukhabhodhananda


May 27, 2007

"ANGER is nothing but ACTIVE SADNESS"

"மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" அனைவரும் படித்திருப்பீர்கள். சுவாமி சுகபோதானந்தா அவர்களைப் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டுமென்ற அவசியமில்லை. அவரின் நேர்முகப் பேட்டியை அமெரிக்கப் பண்பலை வரிசை "its.diff" (KZSU Stanford 90.1 FM radio show) இங்கு ஒலிபரப்பியதன் ஒலிப்பதிவை கேளுங்கள். மிகவும் தெளிவான, பிரமிப்பான, ஒவ்வொருவரும் அவசியம் கேட்கவேண்டிய நிகழ்ச்சி இது. பேட்டி எடுத்தவர் எனது மதிப்பிற்குரிய நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள். முதலில் அவருக்குப் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டு, வாய்ப்பினை வழங்கிய வானொலிக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம். மேலும் சுவாமி போதானந்த சரஸ்வதி, சுவாமி அனுபவானந்தா மற்றும் யோகா பற்றிய மிகச்சிறப்பான பேட்டிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியை நேரடியாகக் கேட்கக் கூடிய வாய்ப்பு பலருக்கு கிடைத்திருக்காது. பரவாயில்லை, வாய்ப்பு இப்போது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. கேட்பதற்கு இந்த இணைப்பை அழுத்தவும். Life: "(KZSU Stanford 90.1 FM radio show)" Life: "(KZSU Stanford 90.1 FM radio show)"

"கிங் சார்லஸ்"

விருதால் இவருக்குப் பெருமை என்பதைவிட இவரால் விருதுக்குப் பெருமையென்பது'தான் பொருத்தமாக இருக்கும். எந்த ஜீவராசியுமே ரசிக்கும் இந்த சிரிப்பழகனை! இவர் ஒரு மாபெரும் சகாப்தம்! இந்நூற்றாண்டின் ப்ராப்தம்!


குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு இங்கிலாந்து அரசின் "கிங் சார்லஸ்" விருது அளிக்கப்படுகிறது. லண்டனின் ராயல் சொசைட்டீ ஆஃப் லண்டன் பிற நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப சாதனையாளர்களுக்கு அளிக்கின்ற விருது இது. கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

அக்காலத்து 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' முதல் இன்று உங்களை தாளமிடவைக்கும் 'மன்மத ராசா!' வரை தமிழ்த் திரையிசை நடந்துவந்த பாதையைப் படம்பிடிக்கும் வரலாற்றுத் தொடர், சம்பத்குமார் தயாரிப்பில்...
கிட்டத்தட்ட எழுபத்தைந்து பாகங்கள் இருக்கின்றன... இந்த மனிதர் ஏறக்குறைய அனைவரைப்பற்றியும் ஆராய்ந்திருக்கிறார். மிக மிக அருமையான நிகழ்ச்சி இது. தியாகராஜ பாகவதர் தொடங்கி, கிட்டப்பா, டி.ஆர்.மகாலிங்கம், ஜிக்கி, ஜானகி, சுசீலா, பாலசுப்ரமணியன், யேசுதாஸ் மற்றும் இன்றுள்ள பாடகர்கள் வரையில் தொகுத்திருக்கிறார்...
உங்களுக்கு எது வேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்துக் கேட்டு ரசிக்கலாம். ஒரு அருமையான ஆய்வு இது....இதனைப் பாராட்டும் அளவுக்கு எனக்கு அனுபவமோ, வயதோ இல்லை... இவையனைத்தும் நான் ரசித்துப் பிரமித்தவை.. உங்களுக்கும் அதனைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்... ம்ம்... இப்ப 'கிளிக்' பண்ணுங்க.BBCTamil.com

Today's Quote


Women will work out their destinies—much better, too, than men can ever do for them. All the mischief to women has come because men undertook to shape the destiny of women.

BBC "தமிழோசை"
(ஞாயிறு மே 27) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்

BBCTamil.com Radio Player

"ஷக்தி"

அமெரிக்காவின் முதல் இந்திய
"ஹிப்-ஹாப் திவா" நடனமாடுபவர். இவர் ஒரு தமிழ், இந்துப்பெண் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா??


"ஷக்தி"

"ஷக்தி"

கவனஈர்ப்புப் போராட்டம்

இதுதான் தமிழனின் நிலை
என்று மாறும் இந்த அவலம்?

"நிலாச்சாரல்"

இணைய தளத்தில் 'நிலாச்சாரல்' என்ற சஞ்சிகையை நடத்தி வரும் திருமதி.நிர்மலா அவர்களின் 'ஜெயா' தொலைக்காட்சிப் பேட்டியை பார்க்க இங்கே உள்ள இணைப்பை அழுத்தவும்.

கவிஞர் "யுகபாரதி"

கவிதைகள் தோன்ற வேண்டும், தோன்றி வருவதே கவிதை, கவிதை செய்ய முடியாது என்பது பற்றி உங்கள் கருத்து.
உண்மைதான். பாடல்கள் வேண்டுமானால் செய்யலாம், ஆனால் கவிதைகளைச் செய்ய முடியாது. கவிதை எழுதுவதற்கு, ஊடுருவிப் பார்க்கும் படியான ஒரு மூன்றாவது பார்வை அவசியம்.Please 'click' here

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

May 26, 2007
TRUTH cannot be transferred,

truth cannot be handed over to you by somebody else,

because it is not a commodity.

It is not a thing,

it is an Experience.

- OSHO

BBC "தமிழோசை"
(வெள்ளிக்கிழமை 25.05.2007) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

Today's Quote

Be the change you want to see in the world
Mahatma Gandhi

May 25, 2007

கங்கையும் தெற்கே பாயாதா?
காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின்
தோள்களில் மாலை சூடாதா?


தமிழனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தொடர்ந்து கொண்டே இருக்கும் இந்தப் பிரச்சினை ஓயும் நாள் எந்நாளோ? பற்றாக்குறைக்கு
அருணாச்சலப் பிரதேசம் "எங்கள் நாட்டைச் சேர்ந்தது" என்று 'சீனா' புதிய பிரச்சினையைக் கிழப்பியிருக்கிறது.
இந்தியனுக்கு நான்கு திசைகளிலும் பிரச்சினைகள்தான்....

இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம். இந்த வீடியோப் பதிவு காவிரிப்பிரச்சினை பற்றிய கலந்துரையாடல்..

காவிரிப் பிரச்சினை : பகுதி 1காவிரிப் பிரச்சினை - பகுதி 2

காவிரிப் பிரச்சினை - பகுதி 3

Possessive Husband!

நாட்டில் உள்ள ஒவ்வொரு கணவனும் இப்படி மாறிவிட்டால் பிரச்சினைகள் அனைத்தும் ஒழிந்து விடும்.

Today's Quote

True humanity lies not in
returning violence for
violence, but in
forgiveness


- Ramana Maharishi

அன்னை தேசத்தை விட்டு
எண்ணை தேசத்தில்
எரியும் எண்ணற்ற
இந்தியச் சகோதரர்களுக்கு…..

பால் குடிக்கும் குழந்தையையும் மறந்து
பாதி ராத்திரி வரை தன் கணவனின்
தொலைபேசி மணிக்காகக் காத்துக்கிடந்து
மொபைல் போன்களுடனேயே
முழு வாழ்க்கையையும் வாழ்ந்து விடும்
என் தேசத்தின் கற்புக்கரசிகளுக்கு….

தள்ளாத வயதிலும்
தன் தனையன் வரவை நோக்கி
நாழிகைக் கணக்காக
நாட்களைத் தள்ளிக்கொண்டிருக்கும்
என் தாயகத்துத் தாய்மார்களுக்கு…

நிலவைக் காட்டிச் சோறு ஊட்டும்போதெல்லாம்
‘அப்பா எப்பம்மா வருவாரென'க் கேட்கும்
பச்சிளங்குழந்தையின் கண்ணில் படாமல்
கண்ணைக் கசக்கி உயிரைப் பிசைந்துத்
தொண்டை வழியாக தானும் விழுங்கும்
அந்தத் தாயுள்ளத்துக்கு….

வாழ்க்கையில் வளம் சேர்த்து
வாழ்ந்து பார்த்துவிடவேண்டுமென்ற
வைராக்யத்தோடு வையகம் விட்டு
வான்வழியே பறந்துபோய்
பொருள் தேடும் போதையில்
வாழ்க்கையை தொலைத்து விட்ட
என்னைப்போன்ற
எண்ணற்ற சகோதரனுக்கு….

இருக்கும் நாடு
வேறாக இருந்தாலும்
இதயங்கள் என்
இந்தியாவை நோக்கியே….
என்று தாய்நாட்டை எப்போதும்
தாயைப்போல் நேசிக்கும்
என் இந்தியச் செல்வங்களுக்கு…

எத்தனை யுகங்கள்
எந்தெந்த நாட்டில் இருந்தாலும்
என் கடைசி மூச்சு
என் தாய் மடியில்….
என் தாய் மண்ணில்தான்
என்ற வைராக்யத்தோடு
உயிரற்று வாழ்ந்துகொண்டிருக்கும்
உன்னதத் தோழனுக்கு….


அமெரிக்க ‘ஹைவே’யில்
அதிவேகக் கார்களில்
ஆங்கில இசைகளில்
ஆர்ப்பரிக்கச் சென்றாலும்…
ஒற்றையடிப் பாதைகளில்
சைக்கிளில் ‘விசில்’ அடித்துச் சென்று
லயித்துப்போன
என் இந்திய மண்ணை
இன்றுவரை நினைத்து நெகிழ்ந்துபோகும்
நிஜமான மனங்களுக்குத்…....

தெரியும்……………

இந்த உயரின் வலி

ஏ! இந்தியனே!
உன்னைப்பெற்ற
உன் தாய்நாடு கேட்கிறேன்!

மகனே!
நீ எப்போது வருவாய்?
குறைந்தபட்சம்
என் கடைசி நிமிடங்களிலாவது!!

நீ
உன் தாய்த்திரு நாட்டில்
விளக்கேற்ற வரவேண்டாம்…
வீதி வழி போகிற பொழுதுகளிலாவது!!

என் புதல்வனே!
நீ
இழந்தது
வாழ்க்கையை மட்டுமல்ல
உன் தாய்த்திருநாட்டையும்தான்…..

கண்ணீருடன்
இந்தியத்தாய்.


நவநீ
இதனைப்படித்துவிட்டு இந்த வீடியோவைத் தவறாமல் பார்க்கவும்...


871

இன்றைய தலைமுறையினர் கேட்கவேண்டிய ஒரு பதிவு. கேட்டுட்டு ஒங்க கருத்துக்களை மறக்காம பதிவு செய்யுங்க....ம்ம்...இப்ப 'க்ளிக்' பண்ணுங்க....871

May 24, 2007

Swamy Vivekananda

"Today's Quote"
About the women of America,
I cannot express my gratitude for their kindness.
Lord bless them.
In this country,
women are the life of every movement,
and represent all the culture of the nation,
for men are too busy to educate themselves.
From Chicago. Letter to his disciples in Chennai.
January 24, 1894. CW, 5: 28

தீவைத் தாண்டியும் தீராத துயரம்

(இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் நிலையை விளக்கும் பெட்டகத் தொடர்.)
இலங்கையில் நிலவும் யுத்த சூழல் காரணமாக உயிர் பிழைப்பதற்காக ஏராளமான மக்கள் தஞ்சம் தேடி இந்தியாவுக்கு வருகின்றனர்.

இந்தியாவுக்கு வந்த பிறகு தங்களுடைய அல்லல்கள் தீரும், புதிய வாழக்கையைத் துவக்கலாம் என்ற நம்பிக்கையுடன், தமிழகத்துக்கு வரும் பல அதிகள் தங்கள் வாழ்க்கையில் மேலும் பல இன்னல்களை இந்தியாவில் சந்திப்பதாகக் கூறுகின்றனர்.

இவை குறித்து தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டகத் தொடரின் பாகங்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
BBCTamil.com
BBCTamil.com
BBCTamil.com
BBCTamil.com
BBCTamil.com

"BBC" தமிழோசை

இன்றைய வியாழக்கிழமை 24.05.2007 செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்

BBCTamil.com Radio Player

May 23, 2007

காதல்ச்சின்னத்தின்
காலடியில்
காதலனுக்காகக்
காத்துக்கிடந்து
களைத்துப்போன
கன்னியவளின்
காதல் தாகம் தீர்க்க…..
‘குபுக்’கெனக் கொப்பளித்தது
குமுறிய குழாய்
காதலன் மேல் கோபமாக….

நவநீ

"BBC" தமிழோசை

இன்றைய புதன்கிழமை 23.05.2007 செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்

கணக்கு, மணக்கு, பிணக்கு மற்றும் ஆமணக்கு

உலகம் மிகப்பெரியது - ஆனால்
பூமி மிகச்சிறியது

'இளம் இசையமைப்பாளர்'

ஜி.வி.ப்ராகாஷ் Part II

May 22, 2007

Today's Quote

God is not found in the soul by adding anything,
but by a process of subtraction.
Meister Eckhart
உன் ஆத்மாவோடு எதையும்
சேர்த்துக்கொள்வதால் இல்லை
உன் ஆத்மைவை சுத்தமாகப்
பிரித்தெடுப்பதால்தான் - நீ
கடவுளை அடைவாய்

தமிழாக்கம் - நவின்

"பதவி பறிப்பு" ஓர் அலசல்

மதுரையில் மேயர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
பத்திரிகை தாக்குதலும் பதவி பறிப்பும்
தமிழகத்தில் மதுரையிலுள்ள தினகரன் அலுவலகம் மீது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் மகன் அழகிரியின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுபவர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் பலியாயினர். இவையனைத்தும் நீங்கள் அறிந்ததே! இதுபற்றி பல்வேறு செய்திகளும், பேட்டிகளும், மேலும் இலங்கைத் தமிழர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் இடையே நடக்கும் சண்டை, தமிழக மீனவர்களைக் கடத்தியவர்கள் விடுதலைப்புலிகளே' என்ற திடுக்கிடும் தகவல்கள் மற்றும் ஏராளமான செய்திகளைப் படிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.
BBCTamil.com

"BBC" தமிழோசை இன்றைய செய்தி

கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.
BBCTamil.com Radio Player
உங்களுடைய மேலான கருத்துக்களையும், யோசனைகளையும் எமக்கு மறக்காமல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்

குழு - மனுநீதி

"விக்கிப்பீடியா"

விக்கிப்பீடியா'வின்
இணை நிறுவனர் 'ஜிம்மி வேலஸ்' பேட்டி
விக்கிப்பீடியா பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்களுக்குத் தெரிந்திருக்கும் இது ஒரு உபயோகமான வீடியோப் பதிவு. முடிந்தால் தமிழ் விக்கிப்பீடியாவையும் பயணிக்கவும்.

புதிய அமைச்சர் 'ராதிகா செல்வி'

'இளம் இசையமைப்பாளர்'

ஜி.வி.ப்ராகாஷ்

May 21, 2007

Today's Quote


It is true that God is infinite, but not in
the sense in which the word "infinite" is
generally understood. The idea of God's
infinity is not to be confounded with the
materialistic idea of vastness. When you say
that God cannot take a human form, you
understand that a very large substance or
form (as if material in nature) cannot be
compressed into a very small compass. God's
infinitude refers to the unlimitedness of a
purely spiritual entity, and as such, does
not suffer in the least by expressing itself
in a human form.


Selections from the Belur Math Diary. Complete Works, 5: 318

வயது 7, எடை 141 கிலோஇரும்புத்திரை

என்று பெயர் எடுத்த, உலகத்தில் தன்னிகரற்று விளங்கிய ரஷ்யாவின் இன்றைய குழந்தை!


Russian Child Smoking - More free videos are here

புது விஷயம்!AMAZING FACTS - video powered by Metacafe

Dr.P.B.Srinivas

அவர்களின் நேர்முகப் பிரத்யேகப் பேட்டி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தமிழ் பண்பலை வானொலியில் ஒலிபரப்பானது. {It's different - News, Views & Music (KZSU Stanford 90.1 FM radio show)} (பயணிக்க : http://www.itsdiff.com/) அதனை இங்கு கேட்போம்.
1.காலங்களில் அவள் வசந்தம்
2.ரோஜா மலரே ராஜகுமாரி
3.மயக்கமா கலக்கமா
4.ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்
5.பார்த்தேன் சிரித்தேன்
6.எந்த ஊர் என்றவனே
7.பொன்னென்பேன்
8.ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
9.நிலவே என்னிடம் நெருங்காதே
10.நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

இன்னும் எத்தனை யுகம் ஆனாலும் இந்தப்பாடல்களுக்கென்று ஒரு தனி மகத்துவம் உண்டு. இவற்றையெல்லாம் பாடிய மாபெரும் திரைப்படப் பின்னனிப் பாடகர் குரலைக் கேட்போம்.
.வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வானொலி நண்பர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்...Please 'click'..
Tamil

May 20, 2007

Today's Quote

Do you know who is the real

Shakti-worshipper?

It is he who knows that

God is the omnipresent force in the universe

and sees in women the manifestation of that force

From Chicago.

Bengali letter to Haripada Mitra.

December 28, 1893. CW, 5: 26

"இடி"

இடி, மின்னல் நேரங்களில் மரத்தடியில் அல்லது அருகில் நிற்கக் கூடாது என்று பெரியவர்கள் சொன்னால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?Lightening Strikes A Tree - The most popular videos are a click away

என் கவிதைக் கிராமம்!

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் அன்று என் கிராமத்துக்குச் சென்றேன், காளையார்கோவிலிலிருந்து 15 கி.மீ. தொலைவில், தென்கிழக்கில் இருக்கும் என் கிராமத்தின் பெயர் சூரகுடி. என் கிராமமே நிராயுதபாணியாக நின்றது. இன்றுபோய் நாளை வா! என்று என்னால் சொல்லமுடியாது! ஏனெனில் அது என் தாய்க்கு இணையான என் கிராமம். எனை வளர்த்த மண்! நான் தவழ்ந்த மடி! நான் அமிலக்கண்ணீர் வடித்தேன்! தன் கருவுக்குள் சுமந்து பிரசவித்த ஒவ்வொரு குழந்தையும் பக்கத்திலில்லாது துடித்துக்கொண்டிருந்தது என் கிராமம்.
நான் உள்பட அனைவருமே வெளியூர் சென்றுவிட்ட வருத்தத்தில் என் கிராமம் கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டிருந்தது. நான் துள்ளித்திரிந்த அந்த ஈரவயல்கள் வெடிப்போடிக்கிடக்கிறது. நான் நீச்சலடித்த என் குளங்கள் கொக்குகள் நிறைந்து கிடக்கின்றன. அந்தி சாயும் நேரத்தில் கேட்ட பறவைகளில் குரல்கள் நிறைந்த அந்த ஆலமரம் எங்கே போயிற்று? கலகலப்பான என் கிராமத்துக்குள் ஏன் இந்த மயான அமைதி? கண்மாய் நிறைந்து காணப்பட்ட என் கிராமம் எப்போதாவது வரும் குழாய்த் தண்ணீருக்குக் காத்துக்கிடக்கிறது.
போர்க்களத்தில் கணவனை இழந்த கற்புக்கரசி தன் கைக்குழந்தையோடு போர்க்களம் நோக்கி புழுதி கிளம்பக் கதறி ஓடும்போது எதிரியின் அம்பால் மாண்டுபோய்க் கைதவறிய குழந்தை செய்வதறியாது அலறித்துடிக்கும் அந்த கொடூரச்சூழல் என் கிராமத்துக்கு ஏன் வந்தது? இதற்கு நானும் ஒரு காரணமா? நிழலும் நிஜமும் மட்டுமே நிறைந்து கிடந்த என் கிராமத்திற்கு, மரங்களே இல்லாமல் உயிரற்று, வறண்டுபோகுமளவிற்கு வந்த துயர்தான் என்ன? என் கிராமத்தின் மொத்த வேதனையும் ஒரு மாமனிதனின் மரணத்தினால்தானா?
என் தாய்க்கும் என் கிராமத்துக்கும் எந்த வித்யாசமும் எனக்குத் தெரியவில்லை. என் கிராமத்தை பார்க்கும்போதெல்லாம் நான் கண்ணீர் வடிக்கிறேன். நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிப்போன ஒரு கிராமம் போல எனக்குத் தோன்றுகிறது. நான் வளர்ந்த அந்த மண், அந்த என் தாய் மடி எதற்காகவோ ஏங்குகிறது! என் மண் என் கண் முன்னே காணாமல் போய்விடுமோ? என்ற பயம் வந்துவிட்டது. நாம் நேசிப்பதற்கு வேண்டாம் அங்கு சுவாசிப்பதற்குக் கூட மனிதர்கள் இல்லை. எப்போதுமே கூட்டம் நிறைந்து கலகலப்பாக கலைகட்டும் என் கிராமம் ஆள் அரவமின்றி அடங்கிப்போனதே! மழை பெய்து ஓய்ந்ததும் தலை காட்டும் காளான்கள் போல் அவ்வப்போது தலை காட்டும் ஒரு சில மனிதர்கள். என் மக்கள்! என்ன ஆயிற்று என் கிராமத்திற்கு? “ஐயோ! புன்னகை புரியும் தமிழ் மண்ணே! உன்னை விட்டுப் பிரிவது ஒன்றுதான் எனக்கு வருத்தம்!” என்று கதறிய அந்த மாவீரன் கட்டப்பொம்மனின் வேதனை இன்றல்லவா எனக்குப் புரிகிறது. மண்ணை நேசிக்கும் எவனும் தன் மண்ணின் அருமையை உணர்கிறானோ இல்லையோ! வெறுமையை உணரவேண்டும்! துள்ளிக்குதித்த என் கிராமம், மாதம் ஒரு குழந்தையைப் பிரசவித்த என் கிராமம் மாபெரும் மனிதர்களை உருவாக்கிய என் கிராமம் இன்று நிற்கதியாய் நிற்கிறது. என் கிராமத்துக்கு எல்லாம் இருக்கிறது ஆனால் உயிர் மட்டும் இல்லை. என் கிராமம் நாளுக்கு நாள் ஒவ்வொரு உறுப்பாய் இழந்து கொண்டிருக்கிறது. என் கிராமத்தின் கிழக்கு எல்லையில் கம்பீரமாய் நிற்கும் ‘மருதநாயகி’ அம்மன் கோயில்கூட செயலிழந்து, வழிபட யாருமின்றி வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
மக்களன்றி ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. வசதிகள் எல்லாம் பெருகி இருக்கிறது. வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த வள்ளல் மட்டும் இன்று உயிரோடு இல்லை. அதனால்தான் என் கிராமத்துக்கும் உயிர் இல்லை. வாழ்க்கை நடத்த வாரிசுகள் இல்லை. மேற்கு எல்லையில் ‘வீரபத்திரர்’ கோயில் வெட்ட வெளியில் வெறுங்கையோடு நிரந்தர அமைதியாய் நிற்கிறது. கோயில் இருக்கிறது, கும்பிட மக்கள் இல்லை. உடல் இருக்கிறது என் அழகான கிராமத்திற்கு! ஆனால் உயிர்? எப்போது என்ன திட்டம் வகுத்தாலும் வீண் வம்பு பேசும் மனிதர்கள் போய் இப்போது திட்டமிட மட்டுமில்லை வம்புக்குக்கூட வாய்கள் இல்லை. எத்தனையோ பிள்ளைகளைப் பெற்றெடுத்து இன்று உயிரற்ற ஒரு அஃறிணையாய் காட்சியளிக்கும் என் கிராமத்தை உயர்ப்பிக்க எனக்கு ஆயிரம் கைகள் வேண்டாம். ஒரே ஒரு மாமனிதன் போதும்! அவன் மட்டும் என்னை ஆசீர்வதிக்கட்டும். சமீபத்தில்கூட இரண்டு மூன்று மரணம். ஆனால் அவை தற்கொலைக்குத் தள்ளப்பட்டவை. மரணத்தின் விளிம்பில்கூட கடைசியாகக் கதறிப் புலம்பியது அந்தக் கல்லறையில்தானாம்... ஆம் வேறு யாரிடம் சொல்வது? கேட்பதற்கு எந்தச் செவிகளும் தயாராயில்லை. அந்த ஒரு மனிதனின் மறைவு மட்டும் நிறுத்தப்பட்டிருந்தால் இத்தனை உயிர்களின் மரணத்ததை என் கிராமம் பார்த்திருக்காது. என் கிராமமே இன்று வெறுங்கையோடு வெறிச்சோடிக் கிடக்கிறது. இவையனைத்தையும் பொறுமையோடு பார்த்துக்கொண்டு, சிவப்புக்கொடி பறக்க, அந்த மாமனிதன் அமைதியாகத் உறங்குகிறான். தொண்டால் துயிலிழந்த அந்த தூயவனை இழந்து துடிக்கும் என் கிராமத்தின் துயர் துடைப்பார் யாரோ?
ஆம்!
நான் இழந்தது
என் தந்தையை மட்டுமல்ல!
மகனை இழந்து தவிப்பது
என் கிராமமும்தான்!
விதவையானது
என் தாய் மட்டுமல்ல!
என் கிராமமே! நீயும்தான்!!
சூரகுடி பாலா

May 19, 2007

இன்ப அதிர்ச்சி!

திடீரென்று சுய நினைவு வந்து கண்ணை மட்டும் விழிக்கமுடியாமல் காதால் மட்டும் கேட்டுணரும்போது, தன்னை "இறந்துவிட்டதாகக் கருதி, அனைவரும் பக்கத்தில் உட்கார்ந்து அழுகும் குரல் கேட்டால், இன்னும் சற்று நேரத்தில் தனது உடல் தீயில் வெந்து போகப் போகிறது" என உணரும் தருவாயில் திடீரென விழித்துக்கொண்டால்......அந்த உணர்வு இங்கே.......அழுத்தவும்Dinamalar.com

சுவாமி விவேகானந்தர்

No knowledge comes from outside; it is all inside.
What we say we "know" should-in strict psychological
language-be what we "discover" or "unveil"
What we "learn" is really what we "discover" by taking the
cover off our own soul, which is the mirror of
infinite knowledge.

Karma Yoga. New York, 1895. Complete Works, 1: 28

"சும்மா" ஒரு change'க்கு இதையுந்தான் கொஞ்சம் கேட்டுப்பாப்போமே!!

இயக்குனர் திரு.ஞானராஜசேகரன் அவர்களின் சமீபத்தில் வெளிவந்த "பெரியார்" திரைப்படம் பற்றிய ஒரு கலந்துரையாடல். இது 'BBC' வானொலியில் ஒலிபரப்பப் பட்டது.Please 'click' here.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்-ஐ ஒருத்தர் எப்படி கிண்டல் பண்றாரு பாருங்க!

வினாடிக்கு 4.17 குழந்தைகள்

உலகத்தில் ஒவ்வொரு வினாடிக்கும் 4.17 குழந்தைகள் பிறக்கின்றனர். இறப்பு வினாடிக்கு 1.80 என்றும் அவற்றுள் சராசரியாக பிழைத்து வளரக்கூடிய குழந்தைகள் வினாடிக்கு 2.37...... இது பற்றி மேலும் அறிய கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்
World Population Counter

"சுவாமி விவேகானந்தர்"

  • Women will work out their destinies—much better, too, than men can ever do for them. All the mischief to women has come because men undertook to shape the destiny of women.
  • “The earth is enjoyed by heroes”—this is the unfailing truth. Be a hero. Always say, “I have no fear.”
  • A few heart-whole, sincere, and energetic men and women can do more in a year than a mob in a century.
  • As soon as I think that I am a little body, I want to preserve it, to protect it, to keep it nice, at the expense of other bodies; then you and I become separate.
- சுவாமி விவேகானந்தர்"Are you a God?" they asked the Buddha.
"No," he replied.
"Are you an angel, then?"
"No."
"A saint?"
"No"
"Then what are you?"
Replied the Buddha,
"I am awake."

May 18, 2007

"Do Not Believe"

Do not believe because you read it in a book,
Do not believe because you saw it on television,
Do not believe because science says so,
Do not believe because a famous person says so,
Do not believe because a wise person says so,
Do not believe because a wise person believes it,
Do not believe because your best friend believes it,
Do not believe because everyone else believes it,
Do not believe because others have believed it for a thousand years,
Do not believe because you've heard it many times before,
Do not believe because you are told you must,
Do not believe because others expect you to,
Do not believe because it gets you accepted
Do not believe because it will make your parents happy,
Do not believe because it will get you noticed,
Do not believe because you want to believe,
Do not believe because you can't afford not to,
Do not believe because it helps you cope,
Do not believe because you'd go mad if you didn't,
Do not believe because you must believe something
Do not believe because there's nothing else to believe,
Do not believe because it feels good to believe,
Do not believe because it makes sense,
Do not believe because your eyes tell you it is so,
Do not believe because it is your own experience,
Do not believe because it feels true,
Do not believe because you know it is true,
Do not believe any of this, Believe only that you are,
And do not even believe that,
For that is beyond belief.
- Peter Russel

May 15, 2007

"நான் மனிதனே!"

நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.
"நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்"
என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.

சுயமரியாதை மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும். மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும். சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம் மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும். மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
நான் யார்?

நான் எனக்கு தோன்றிய, எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்îதாடு கூடி உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல. எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல. எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு, பார்ப்பனரல்ல èதார் ஆட்சி என்றால் வலியப்போய் ஆதரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்ப்பதில்லை. நான் என் ஆயுள் வரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு நல்ல (புகழ்) வார்த்தைகள் சொல்லும்படி யாரிடமும் எதிர்பார்க்கமாட்டேன்.
"நீ ஒரு கன்னடியன் எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்?"
என்று என்னைக் கூடக் கேட்டார்கள். "தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா" என்றேன். இதற்குக் காரணம், ஒரு தமிழன், இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்.

பெரியார்

1879 - 1973


"கலாநிதி மாறனின் பதவியிறக்கம்"

"தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,
தருமம் மறுபடி வெல்லும்"

பாரம்பரியம் மிக்கத் தமிழகம், தமிழக அரசியல் களம் இன்னும் என்னென்ன கேலிக்கூத்துக்களைச் சந்திக்கப் போகிறதோ!பொறுத்திருந்து பார்ப்போம்!

May 14, 2007

காளையார்கோயில்

இங்குள்ள திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கது. நான் பிறந்த மண்ணும் இதுதான். இது சிவகங்கை மாவட்டத்திலுள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமரணம் எய்திய மருது சகோதரர்கள் ஆண்ட பூமி இது. 13 மற்றும் 14-ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர், சேக்கிழார், அப்பர், சுந்தரர் மற்றும் அருணகிரிநாதர் போன்றோர் இத்திருத்தலத்திற்கு வந்து ஆண்டவனைப் பாடி அருள் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, பார்க்கவேண்டிய, படிக்கவேண்டிய ஒரு திருத்தலமாகும். இதுபற்றி மேலும் அறிய தயவுசெய்து கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
Dinamalar.com


May 13, 2007

கலைஞர் அவர்களின் முதல் சட்டமன்றப் பேச்சு!

1957 – ல் குளித்தலைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவைக்குக் கலைஞர் 8 – ஆம் மாதம், நான்காம் நாள் கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தனது ‘கன்னி உரையை’ ஆற்றினார்.


“அவைத்தலைவர் அவர்களே! இன்று மேன்மை தங்கிய கவர்னர் அவர்களுடைய உரையைப் பற்றி நான் போற்றவும் வரவில்லை, தூற்றவும் வரவில்லை. என்னுடைய கருத்துரையை ஆற்றவே வந்திருக்கிறேன்”


என்பதுதான் அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பேசிய முதல் வாக்கியம்.

அன்னையே! வாழ்த்துகிறோம்

இந்த உலகத்தில் மனித ஜீவராசிகள் மட்டுமின்றி
எவை எவைகளுக்கெல்லாம்,
யார் யாருக்கெல்லாம்
"தாய்மை"
என்பதை என்னவென்று உணர முடிகிறதோ!
அவர்களுக்கெல்லாம், அவைகளுக்கெல்லாம்
"அன்னையர் தின வாழ்த்துக்களை"ச்சொல்லி
நாம் அனைவரும் அன்போடு கொண்டாடி மகிழ்வோம்.

எனது வேண்டுகோள்!

தயவு செய்து
உங்களனைவருக்கும்
அம்மாவின் பக்கத்தில் இருக்கும்
பாக்கியம் கிடைத்திருந்தால்...


தயவு செய்து இன்று மட்டுமாவது,
அந்த தாயைக் கட்டியணைத்துக்கொண்டு
அவள் காதுகளுக்குள்
அம்மா!
என்று அடிவயிற்றிலிருந்து சொல்லிப்பாருங்கள்....
அந்த உணர்வு சொல்லும்.....
இந்தப்
பிரபஞ்சத்துக்கும், தாய்க்கும், நமக்கும்
என்ன பந்தம் என்று....
முயற்சித்துப்பாருங்கள்!!

அம்மா நான்
உன்னை நினைத்துப்பார்க்கிறேன்.
ஏங்கித்தவிக்கிறேன்...
இன்று, இப்போது
நீ
என் அருகில்
இல்லையே என்று.......
- நவநீ

May 12, 2007
M - O - T - H - E - R
"M" is for the million things she gave me,
"O" means only that she's growing old,
"T" is for the tears she shed to save me,
"H" is for her heart of purest gold;
"E" is for her eyes, with love-light shining,
"R" means right, and right she'll always be,

Put them all together, they spell
"MOTHER,"
A word that means the world to me.
Howard Johnson (c. 1915)

May 11, 2007

கவனிக்கவேண்டியவை

வாகனம் ஓட்டும்பொழுது கவனிக்கவேண்டியவை ஏராளம் இருக்கிறது. ஆனால் நாம் அவற்றைக் கடைப்பிடிக்கிறோமா? குறைந்தபட்சம் தெரிந்துகொள்ளவாவது முயற்சிப்போம். இன்று "REAR VIEW MIRROR, SIDE MIRRORS" மற்றும் "BLIND SPOT" பற்றித் தெரிந்துகொள்வோம்.Driving: Mirrors, Signal And Manoeuvre - video powered by Metacafe

"BLIND SPOT"Learning To Drive: Blind Spots - video powered by Metacafe

"YIELD" or

"விட்டுக்கொடுத்தல்" அதாவது ஒருவர் அல்லது அளவான நபர்கள் செல்லும் இடங்களில் இன்னொருவருக்கு விட்டுக்கொடுத்தல் என்பது பொதுவான ஒன்று. அது வாகன ஓட்டுதலிலும் உண்டு. இங்கு அமெரிக்காவில் அதனை ஆங்கிலத்தில் 'YIELD' என்று சொல்வார்கள். அநேகமாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். இது தொடக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று குழப்பமாகவும், கோபமாகவும் இருக்கும். போகப்போக பழகிவிடும். ஆனால் நம் இந்தியாவில் இதற்கென்று தனி விதிமுறையோ, அறிவிப்புப் பலகையோ, சிக்னலோ இல்லை. ஆனால் இங்கு வந்த பிறகு மிகத் தெளிவாக ஒன்று புரிகிறது. இவர்களால் அமெரிக்காவைத் தவிர வேறெங்கும் வாகனம் ஓட்ட முடியாது. குறிப்பாக இவர்கள் இங்கு 'கியர்' இல்லாத 'ஆட்டோ கியர்' வாகனங்கள் ஓட்டுபவர்கள்.
இதையெல்லாம் சொன்னால் "இந்தியன் தாத்தா" "COUNTRY FRUIT" "தேசத்தந்தை" என்று நம் இந்தியர்களே என்னைக் கேலி பேசுகிறார்கள். என்ன செய்ய? சரி அது போகட்டும்... இதனைத் தெளிவாக நீங்கள் புரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவைப் பாருங்கள். அவர்களாகவே 'YIELD' கொடுத்துச் செல்வார்கள், இதனைக் கண்ட அமெரிக்கர்கள் சிலர் கிண்டலாகவும், கேலிக்கூத்தாகவும் படமெடுத்துக் கொண்டுவந்து இங்கு அரங்கேற்றுவதுண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த வீடியோ. அமெரிக்காவில் அனைத்துமே சீர்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்..ஆனாலும் அத்துமீறல்கள், அகோர விபத்துக்கள் அதிகமாவே நடந்து கொண்டிருக்கிறது நாம் கண்கூடாக பார்க்கும் விசயம். ஆனால் இந்த வீடியோவில் யாருமே இல்லாமல் தாங்களாகவே விதிமுறைகளை வகுத்துக்கொண்டு, விட்டுக்கொடுத்து விபத்தில்லாமல் செல்வதைப் பார்க்கும் போது சற்று உதறலாக இருந்தாலும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மறக்காமல் அடுத்த பதிவையும் பார்க்கவும். ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டு, மேலும் அது உங்களுக்குத் தெளிவு படுத்தும் என்று நம்புகிறேன்.கார் மற்றும் வாகனம் ஓட்டுவதென்பது ஒரு கலை. அதுவும் அமெரிக்க நெடுஞ்சாலைகளில் மிகக் கவனமாக ஓட்ட வேண்டும். விபத்துக்கள் அதிகம் நடக்கும், எல்லாமே மிக மோசமான விபத்துக்களாகத்தான் இருக்கும். முக்கியக் காரணம், அதிவேகம், வாகன நெருக்கங்கள் போன்ற பல காரணங்கள். எவ்வளவு கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டும் தினந்தோறும் நடப்பவை நடந்துகொண்டுதான் இருக்கிறது.

நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் : 1.இங்கு அனைவருமே போக்குவரத்து விதிகளைக் கடுமையாக மதிப்பவர்கள். 2.குறிப்பாக இந்தியர்கள் மிக ஒழுக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 3.விதிகளை அதிகம் மீறுபவர்கள் அமெரிக்கர் மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள். 4.அதற்கும் முக்கியக் காரணங்கள் மது மற்றும் போதைப்பொருள் உட்கொள்வதுதான், கடுமையான தண்டனைகள், அபராதங்கள், சட்ட விதிமுறைகள் இருந்தும் குறைந்தபாடில்லை.

இதையெல்லாம் நினைக்கும்போது நம் இந்தியா ஆயிரம் மடங்கு சிறந்ததாகத் தோன்றுகிறது என்பது உண்மையே! இவையெல்லாம் ஒரு புறமிருக்க நாம் இந்தியாவில் எப்படி வாகனங்கள் ஓட்டுகிறோம் என்று நினைத்துப்பார்த்தால் தலை சுற்றுகிறது. அங்கு நம் சாலைகளில் ஓட்டும்போழுது எதுவுமே தெரியவில்லை. ஆனால் இங்கிருந்து அதை உன்னிப்பாகக் கவனிக்கும்போதுதான் மிக பிரமிப்பாகவும் அதே வேளையில் பயமாகவும் இருக்கிறது.

இங்கு நம் இந்திய நண்பர் டாக்டர் திரு.ஆதிராஜ் என்பவர் இதற்காக ஒரு தனி வளைப்பதிவையே வைத்திருக்கிறார். அவரின் வீடியோப் பதிவின் சிலவற்றை நான் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இது அமெரிக்க வாழ் மக்களுக்கு மட்டுமல்ல, அகில உலக நண்பர்களுக்கும். சரி... இன்று 'ஹெட்லைட்' உபயோகிப்பது தொடர்பான ஒன்று.

May 10, 2007

அம்மா!

அடிவயிற்றில் இருந்து
சொல்லிப்பார்...
அழுகை வரும்..
அவள்தான் அம்மா...

அதென்ன விந்தை
நானுண்ண
அவள் பசியடங்குகிறது......


May 09, 2007

“அன்னையர் தினம்”

அதிகாலையில்
அழைத்து வாழ்த்துச் சொன்னால்
அன்னையின்
அயர்ந்த தூக்கம்
கெட்டுவிடும் என்று
அலுவலகம் சென்றவன்
அனுமதி பெற்று
அவசர அவசரமாகக் காரில்
பறந்து வந்தான்....

பார்வையாளர் நேரம் முடிவதற்குள்…
ஆதரவற்றோர் இல்லம் நோக்கி!நவநீ

நான் ரசித்தது!
You can close the windows and darken your room
AND
You can open the windows and let light in
It is a matter of choice
Your mind is your room
Do you darken it
OR
Do you fill it with light?
- (Unknown) எங்கோ படித்தது!

அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தில் வளைகுடாப் பகுதியில் (It's different - News, Views & Music(KZSU) Stanford 90.1 FM radio show) உள்ள வானொலி பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அங்கு ஒலிபரப்பான பல நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்டவைகளை இங்குள்ள இணைப்பின் மூலம் கேட்கலாம். அதாவது பலருக்கு இதைக்கேட்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. காரணம் அமெரிக்க வாழ்க்கை அப்படி. மேலும் நீங்கள் கேட்க இருப்பது ஒன்றல்ல, இரண்டல்ல...ஒரே நேரத்தில், கவிஞர் மு.மேத்தா அவர்களின் பேட்டி, இசைஞானி இளையராஜாவின் இசைத்துவம், திரைப்பட இயக்குனர் கௌதம் மேனன் பேட்டி, டாக்டர் ஞானசம்பந்தம் அவர்கள் நடுவராக பட்டிமன்றம், பாடகர் உன்னி கிருஷ்ணன், திருக்குறள், ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி... இன்னும் எவ்வளவோ எல்லாம் ஒரே நேரத்தில் ஒவ்வொன்றாகக் கேட்டு மகிழ இங்கே 'க்ளிக்' செய்யவும்.Tamil

May 08, 2007

ப்ரகாஷ்ராஜ் பேட்டி

வேற்றுமொழிக்காரராக இருந்தாலும் மொழியின் முக்கியத்துவத்தை மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதானால்தான் இன்றும் அவரால் தனக்கென ஒரு இடத்தைப் பற்றிக்கொள்ள முடிகிறது. என்னைப் பொருத்தவரையில் அவர் ஒரு நல்ல நடிகன், கலைஞன் என்பதையும் தாண்டி நல்ல ஒரு ரசிகன். நான் நேரில் பார்த்த ஒரு காட்சி, நான் கடந்த ஆண்டு சென்னையிலிருந்த போது எனது நண்பனின் படத்திற்கு 'கால்ஷீட்' சம்பந்தமாக பார்க்கப் போயிருந்தோம். அன்று பலத்த மழை, காரை நிறுத்திவிட்டுப் பார்த்தால் 'மனிதர் மழையில் நனைந்துகொண்டு' எதையோ நினைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். இது வெளித்தோற்றத்துக்கு வேண்டுமானால் அதிகப்பிரசிங்கித்தனமாக இருக்கலாம். ஒரு நல்ல கலை ரசனையுடைய, இந்த உலகத்தை ரசிக்கக் கூடிய ரசிகன் என்பதற்கு இதைவிட வேறென்ன சொல்ல முடியும்? சரி அவர் 'மொழி' பற்றி என்ன சொல்கிறார்....Please click'Heading'

புதிய கட்சி

எதிர்பார்த்தபடியே நடிகர் சரத்குமார் வெகுவிரைவில் (இரண்டு மாதத்திற்குள்) புதிய அரசியல் கட்சி துவங்குகிறார்.

"வீதிக்கொரு கட்சி உண்டு
ஜாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி கேட்க மட்டுமிங்கு நாதி இல்ல
இது நாடா இல்ல வெறுங்காடா?
இதைக்கேட்க யாருமில்லை தோழா"

வேறென்ன பாடுவது?...சரி பொருத்திருந்து பார்ப்போம்.

சுதந்திரம் எப்போது?? - திபெத்

திபெத்

சுதந்திரம் எப்போது?? - திபெத்

May 07, 2007

"சென்னை சங்கமம்" - 1

"சென்னை சங்கமம்"
கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய நம் தமிழ்மொழி, நமது கலாச்சாரம், கலை, இலக்கியம், இசை, பண்பாடு, வேதம், நமது கிராமியக்கலை இவற்றையெல்லாம் பார்க்கும்போது, நம்மையறியாமலேயே ஒரு வித ஈர்ப்பு, உணர்வு உண்டாகும். இவைகளையெல்லாம் நினைத்துப் பெருமைப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி இது. இவற்றைப் பார்த்துப் பிரமித்துப் போனதோடு, தயவுசெய்து இதே பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இன்னொரு வீடியோவையும் பார்க்கத் தவறாதீர்கள்! அது "கலாச்சாரச் சீர்கேடு" என்ற தலைப்பில் இருக்கும்.

"சென்னை சங்கமம்" - 2

"சென்னை சங்கமம்" - 3

"சென்னை சங்கமம்" - 4

"சென்னை சங்கமம்" - 5

"சென்னை சங்கமம்" - 6

"கலாச்சாரச் சீர்கேடு"

நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?
எதிர்வரும் 20 - 25 ஆண்டுகளில் "இந்தியா உலக நாடுகளில் முதன்மையான நாடாக இருக்கும்" என்ற நமது கனவுகள் எங்கே? இந்தத் தலைமுறைகள் போய்க்கொண்டிருக்கும் பாதைகள் எங்கே? எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்பது உண்மைதான். அதே கையில் இருக்கக் கூடிய சிகரெட்'டைப் போல ஊதித் தள்ளிவிடுவார்களோ என ஒரு புறம் அச்சமாகவும் உள்ளது. எது எப்படியோ? நமது இந்தியா முன்னேறி உலக நாடுகள் வியக்கும் வண்ணம் உயர்ந்து நிற்கும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. அதே நேரத்தில் அமெரிக்க மங்கையர்கள் போல அனைவரின் கையிலும் சிகரெட்-களும் உயர்ந்து நிற்கும். பிறகு அனைவரும் சொல்வார்கள் "தாயைப்போல பிள்ளை நூலைப்போல ஜீன்ஸ்" என்று. சிகரெட் பிடிப்பதென்று முடிவெடுத்தபின் யார் பார்த்தாலென்ன? சவூதி அரேபிய மோக்கா என நினைத்துக்கொண்டு கலாச்சாரத்தை சந்திசிரிக்க வைக்கும் இந்தத் தலைமுறையை .......ம்ம்...ஒன்றும் சொல்வதற்கில்லை. வாழ்க பாரதம்!!

May 06, 2007

இந்த வாரம் ஹரிஹரனின் குரலில்..தவிப்பு

கையிலொரு குழந்தை
இடுப்பிலொரு குழந்தை - அந்தத் தாய்
சாலையின்

பாதியைக் கடக்கும்போது
'க்ரீன்' சிக்னல்...........

- நவநீ

உன்னி கிருஷ்ணன்

கர்நாடக இசையும் திரைப்பட இசையும் அவ்வப்போது சங்கமித்துக்கொண்டாலும், முழுக்க முழுக்க கர்நாடக இசையாகவே திரைப்படம் இருந்தால், 'பார்க்கும் கூட்டம் புரியாமலே தலையாட்டும் கூட்டமாக மட்டுமே இருக்கும்' என்று சொன்ன ஒரு கவிஞனின் வார்த்தை நிரூபனமாகிவிடும். எனவே இரண்டுக்கும் உள்ள வேறுபாடு, எந்தவகையில் கலந்திருந்தால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் என்று கர்நாடக இசை மற்றும் திரைப்படப் பின்னனிப் பாடல் என்ற இரண்டிலுமே தேர்ந்த திரு.உன்னி கிருஷ்ணன் சொல்வதைப் பார்ப்போம்.