December 02, 2007

இன்றைய குறள்

அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்

அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்

அறத்துப்பால் : வெஃகாமை

பொன்மொழிகள்

  • பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை
  • வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மீன்களின் எண்ணிக்கைக் குறைந்துபோவதில்லை
  • புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால் ஒவ்வொரு மனிதனின் இதயமும் கல்லறைதான்

- சூரகுடி பாலா, சென்னை

இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்கள்

  • இலங்கை அரசுக்கான ஆதரவை மறுபரீசிலனை செய்வோம் - மலையக மக்கள் முன்ணணி : கொழும்பில் கடந்த சில தினங்களாக கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், இலங்கை அரசுக்கான தங்களது ஆதரவை மறுபரிசீலனை செய்வது குறித்து தமது கட்சி சிந்தித்து வருவதாக மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆளும் கூட்டணியில் அமைச்சராகவும் உள்ள பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்
  • ரஷ்யத் தேர்தல் : ரஷ்யத் தேர்தல் ஆணையகம், அங்கே நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பில் இதுவரை ஏராளம் பேர் கலந்து கொள்ள வந்திருக்கிறார்கள் என்று கூறுகிறது
  • இராக்கின் மேம்பட்ட பாதுகாப்பு நிலையை பயன்படுத்த வேண்டும் - அமெரிக்கா : இராக்கில் மேம்பட்டு இருக்கின்ற பாதுகாப்பு நிலைமையை, இராக் தலைவர்கள் ஆதாயமாக பயன்படுத்தி அரசியல் முயற்சியை முன்னெடுக்காவிட்டால், இராக் மீண்டும் இன வன்முறையில் வீழ்ந்து விடும் என அமெரிக்க இராஜாங்கத்துறை துணைச் செயலர் ஜான் நெக்ரபோண்டே தெரிவித்துள்ளார்
  • பசுமை வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளார் சுனி அரபு தலைவர் : இராக்கின் பிரதான சுனி அராப் தலைவரான அட்னன் அல் துலாய்மி தற்போது பசுமை வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாக்தாத்தில் இருக்கின்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
  • ஆப்கானிஸ்தானின் இராணுவ பலம் அதிகரிக்க வேண்டும் - ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானை பாதுகாப்பாக மாற்ற, தற்போது இருக்கும் இராணுவம் போல மும்மடங்கு தேவை என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பிரச்சனைகள் குறித்து புகார் : கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர் நோக்குவதாகக் கூறப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சில பிரச்சினைகள் தொடர்பாக விரைவில் தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும் என கிழக்கு மாகாண அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன் வைக்கப்பட்டுள்ளது
  • இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்கள் : இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் வெலிஓயா பிரதேசங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சனிக்கிழமை இடம்பெற்ற கடுமையான நேரடி மோதல்களில் குறைந்தது 60 விடுதலைப் புலிகளும் 6 இராணுவத்தினரும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது