June 14, 2008
"பெண்களுக்கு விடுதலை கொடுக்காத தலித் கட்சிகள்" - கவிஞர் சுகிர்தராணி
கவிஞர் சுகிர்தராணி-நம் நவீன தமிழ் இலக்கிய உலகில் சில அதிர்வுகளின் அடையாளம். "கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை.
"என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன.
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது.
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய் சொல்லியவாறு
சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்"
என்பதைப் போல உடல் மொழி கவிதைகளையும்
"செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும்
ஆண்டு வருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடி வாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசையிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று"
என்கிற தலித்தியம் சார்ந்த கவிதைகளையும் மிகவும் துணிச்சலாகவே எழுதி ஒரு பெரும் கவனிப்புக்கு உள்ளாகி இருப்பவர் சுகிர்தராணி.
வேலூர் மாவட்டம்- லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாகப் பணியாற்றிவரும் சுகிர்தராணியை சமீபத்தில் சென்னையில் சந்தித்துப் பேசினோம்.உடல் மொழி பற்றி பேட்டிகளில் கேள்விகள் தொடுப்பதுகூட ஒருவிதமான பாலியல் வன்முறைதான் என்று ஆத்திரப்படும் சுகிர்தராணி தன்னுடைய தலித் அரசியலைப் பற்றி ஆழமான முறையில் இந்த நேர்காணலில் பதிவு செய்தார். அவருடைய பேட்டி ஒலி வடிவில்... http://www.adhikaalai.com/index.php?/en/அதிகாலை-ஸ்பெஷல்/அதிகாலை-ஸ்பெஷல்/பெண்களுக்கு-விடுதலை-கொடுக்காத-தலித்-கட்சிகள்
Posted by Manuneedhi - தமிழன் at 1:21 AM 0 comments (நெற்றிக்கண்)
தந்தையர் தினம்! - ஆல்பர்ட்
"ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம்! லாட்டரிச் சீட்டில் லட்சம் விழுந்தால் அது கிடைத்தவருக்கே சுபதினம்..." இப்படியாகப் போகும் அந்தப் பாடல். பாடல் உணர்த்துவதிலிருந்து ஒன்றை நாம் நிச்சயமாக அறிந்துகொள்ள இயலும்.
தன்னை வளர்த்த தந்தை, என்ற பாசமிகுதியால் மனம் கோணாமல் கவனித்துக் கொள்கிற மகன்கள் இருக்கும்வரை அந்தத் தந்தையர்களுக்கு என்றும் சுபதினம்தான்! எல்லா அப்பாக்களுக்கும் இப்படி மகன்கள் அமைவதில்லை; மகனின்,மகளின் அன்பு கிடைக்காத அப்பாக்களுக்கு சுபதினம்?
முதியோர் இல்லம் என்றில்லை, வீட்டுக்குள் நுழைந்தால் மருமகள் என்ன சொல்வாளோ? இல்லைமருமகள் பேச்சைக்கேட்டு மகன் என்ன சொல்வானோ என்று கால்வயிற்றையும் அரைவயிற்றையும் நிரப்பிக்கொண்டு திண்ணையே கதி என்றிருக்கும் தந்தைமார்களுக்கு வருடத்தில் இந்த ஒருநாளாவது சுபதினமாக இருக்கட்டுமே,என்றால் "தந்தையர் தினம்" இருந்துவிட்டுப் போகட்டுமே!
அன்னையர் தினம் வரும், பின்னே..... தந்தையர் தினமும் வரும் என்பது இப்போது உலக வழக்கமாகி வருகிறது. தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமுமில்லை என்ற வைர வரிகளை வழங்கிய அவ்வை மூதாட்டி வாழ்ந்த காலத்தில் தோன்றியதா இந்த தந்தையர் தினம்? தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/தந்தையர்-தினம்-ஆல்பர்ட்
Posted by Manuneedhi - தமிழன் at 1:15 AM 0 comments (நெற்றிக்கண்)