September 20, 2007
பின்னனிப் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா - 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:22 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
பின்னனிப் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா - 3
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:20 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை
அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:12 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 110 - ம் குறள்
பதிலுக்குப் பதில்
இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு 1920-ஆம் வருடம் பெர்னாட்ஷா ஒரு கடிதம் எழுதினார். அதில், "என் புதிய நாடகம் ஒன்றின் முதல் நாள் ஆட்டம் நடக்கிறது. அதற்கு இரண்டு டிக்கெட்டுகள் அனுப்புகிறேன். ஒன்று உங்களுக்கு. இன் னொன்று உங்கள் நண்பருக்கு, அப்படி ஒருவர் இருந்தால்" என்றிருந்தது. அதற்கு சர்ச்சில் கொஞ்சங்கூட தாமதிக்காமல், "உங்கள் புதிய நாடகத்தின் முதல் நாள் ஆட்டத்திற்கு நான் வர இயலாததற்கு வருந்துகிறேன். தயவு செய்து இரண்டாவது நாள் ஆட்டத்திற்கு எனக்கு இரண்டு டிக்கெட்டுகள் அனுப்புங்கள், அப்படி ஒன்று நடக்குமேயானால்" என்று பதில் எழுதினார்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:04 PM
0
comments (நெற்றிக்கண்)
- ராமர் கட்டிய பாலம் குறித்து கருணாநிதி - அத்வானி வார்த்தைப் போர் : இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில், சேதுக் கால்வாய் தோண்டப்படும் கடலின் அடியில் இருக்கும் மணல் திட்டுக்கள், ராமர் கட்டிய பாலம் என்பதற்கான ஆதாரம் இல்லை என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். மு. கருணாநிதிஇதனை பாரதீய ஜனதாகட்சித் தலைவர் எல்.கே.அத்வானி அவர்கள் கண்டித்திருக்கிறார். இந்த மோதல்கள் தொடருகின்ற அதேவேளையில்,சேதுக்கால்வாய் தோண்டப்படும் கடற்பகுதியில் இருக்கும் மணல் திட்டுக்கள், ராமர் கட்டியபாலம் என்று வாதிட்டு வரும் இந்துத்துவ அமைப்புகள், இதனை பாதுகாப்பதற்காக ஒருங்கிணைப்புக்குழு ஒன்றை அமைத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குழுவில் இருக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில இந்திய துணைத்தலைவர் வேதாந்தம் அவர்கள் இது குறித்து ஒரு செவ்வியையும் வழங்கியுள்ளார்
- இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் 20 வருடங்கள் : இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆயினும், அதனைத் தொடர்ந்த, இந்த இருபது வருட காலத்தில், இலங்கையின் இரு தரப்புக்களும் அரசியல் மற்றும் போர் ஆகியவற்றில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளன. அதேவேளை இலங்கை மக்களைப் பொறுத்த வரை, குறிப்பாக அங்கு வாழும் தமிழ் மக்களைப் பொறுத்த வரை, அங்கு இடம்பெற்ற தொடர்ச்சியான மோதல்கள் காரணமாக பல இழப்புகளையும், இடப்பெயர்வுகளையும் சந்தித்துள்ளனர். இந்த நிலையில் இந்த நிறுத்த ஒப்பந்தம் மற்றும் அதன் காரணமாக உருவான மாகாண சபைகள் மூலமான அதிகாரப் பரவலாக்கல் முயற்சிகள் ஆகியவை குறித்த இலங்கையின் பல தரப்பினரின் கருத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/indolankaagree.ram
- பாகிஸ்தான் அதிபர் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு : பாகிஸ்தானின் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் திகதி நடத்தப்படும் என்று அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
- கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள வங்கிகளுக்கு நிதி வழங்கியது சரியே' -பிரிட்டனின் மத்திய வங்கி ஆளுனர் : சர்வதேச கடன் நெருக்கடிகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் வங்கிகளுக்கு, 20 பில்லியன் டொலர்களை வழங்குவது என்ற தமது முடிவை, இங்கிலாந்தின் மத்திய வங்கியான, பாங்க் ஆஃப் இங்கிலண்டின் ஆளுனர், மேர்வின் கிங் அவர்கள் உறுதிப்படுத்தி வாதாடியுள்ளார்
- இரானிய அதிகாரியைக் கைது செய்ததாக அமெரிக்கா அறிவிப்பு : இராக்கின் வடபுறத்தே, இரான் நாட்டின் புரட்சிப் படையின் விசேட பிரிவு அதிகாரி ஒருவரைத் தாம் தடுத்து வைத்துள்ளதாக, அமெரிக்க இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்
- மேலும் இன்றைய (செப்டம்பர் 20 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:56 PM
0
comments (நெற்றிக்கண்)
Subscribe to:
Posts (Atom)