June 26, 2007



  • சினிமா தமிழை விட்டு விலகி பல காலமாகிவிட்டது.
  • இன்றைய புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மற்ற எழுத்தாளர்களால் எழுத முடியாதவைகளை எழுதும் வாய்ப்புகள் உண்டு. அதை அவர்கள் எழுதவேண்டும். தமிழ்ச் சமூகத்தைப்பற்றி மட்டுமே எழுதவேண்டுமென்ற அவசியமில்லை. மற்றைய சமூகத்தவர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிக்கூட எழுதலாம். அந்தவகையில் அவர்கள் நல்ல படைப்புகளை உருவாக்கவேண்டும். மேலும் தொடர்ந்து படிக்க இணைப்பைக் 'க்ளிக்' செய்யவும் http://www.nilacharal.com/tamil/specials/tamil_malan_192.html

கர்ணனாக, வீரபாண்டிய கட்டபொம்மனாக, வ.உ.சியாக, நெற்றிக்கண் காட்டும் சிவனாக, தமிழக பராம்பரியக் கலையின் நாயகன் சிக்கல் சண்முகசுந்தரமாக, பிரிஸ்டிஜ் பத்மனாபனாக, பாரிஸ்டர் ரஜினிகாந்தாக, முதல் மரியாதை பெரிசாக திரையில் வாழ்ந்து காட்டிய அந்த மகா கலைஞனுக்கு, ஏதாவது ஒரு விஷயத்திலாவது இப்படம் மரியாதை செலுத்தியுள்ளதா? அல்லது வெறும் கவர்ச்சிக்காக அவரது பெயர் பயன்படுத்த்ப் பட்டுள்ளதா?
நாம் அனைவரும் நினைப்பதுபோல், அந்த மாபெரும் கலைஞன் 'சிவாஜி' பெயரைப் பயன்படுத்தியதாக எனக்குத்தெரியவில்லை. இவரின் இயற்பெயர் கூட 'சிவாஜிராவ்' தானே. அதைத்தான் உபயோகித்திருப்பார். மேலும் தொடர்ந்து படிக்க இணைப்பைக் 'க்ளிக்' செய்க Thinnai

எங்கே போகிறோம்?

நாய்க்கும், "மொபைல்' போன் வந்து விட்டது. அமெரிக்காவில் இது பிரபலமாக உள்ளது. நாயின் கழுத்தில் பட்டை போல இதை அணிவித்து விட்டால் போதும்... நாய் எங்கு ஓடினாலும், அதனுடன் பேசலாம். என்னவெல்லாம் கண்டுபிடிக்கின்றனர் பாருங்கள்... ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ பகுதியை சேர்ந்த விஞ்ஞானி கேமரூன் ராப் என்பவர் தான் இந்த, "நாய் மொபைல்' கண்டுபிடித்துள்ளார். நாய் மொபைல் போனுக்கு பெயர், "ஜியோ போன்" கழுத்துப்பட்டை போலத்தான் இருக்கும். இதை நாயின் கழுத்தில் அணிவித்து விட்டால், போதும், அப்புறம் , நாய் எங்காவது நம்மை விட்டுச்சென்று விட்டால், நாம் அதை மொபைலில் கூப்பிட்டு பேசலாம் அதன் பாஷையில். இந்த மொபைல் போனில், பல வசதிகள் உள்ளன. இரண்டு வழி ஸ்பீக்கர் உள்ளது. போனில் எஜமான் கூப்பிட்டால், அவர் பேசும் நாய் பாஷைக்கு, நாய் பதில் சொல்லும். போனில் எஜமானன் குரல் கேட்டவுடன், அவர் கட்டளையை கேட்கும். இந்த போனில், ஜி.பி.எஸ். என்ற செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய இடத்தை காட்டும் கருவி வசதி உள்ளதால், நாய் எங்கு போனாலும், அது போன இடத்தை துல்லியமாக ஜி.பி.எஸ். கண்டுபிடித்து கொடுத்துவிடும். போனில் உள்ள திரையில், எஜமான், தன் நாயை , காணலாம். அதன் மூலம், நாயை பின்தொடர்ந்து சென்று பிடிக்கவும் முடியும். இப்போது அமெரிக்காவில் உள்ள பலரும் இந்த நாய் மொபைல் வாங்கி வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு நாயை கண்டு பிடிப்பதில், இது மிகவும் சவுகரியமாக உள்ளது. இந்த நாய் மொபைல் போன் பயன்படுத்தும் நாய் பயிற்சியாளர் ஹாரிஸ் கூறுகையில், "நாயை "வாக்கிங்' அழைத்துப் போகும் போது, அது எங்காவது ஓடினால், அதை கண்டுபிடிக்க, கட்டளை போட இந்த போன் உதவும்!' என்கிறார்.

தமிழோசை

கடல் தளத்தின் மீது சீனா 36 கி.மீ. நீளமுள்ள பாலம் கட்டிச் சாதனை படைத்துள்ளது. நம்மூரில் 16 வயதுப் பையன் 'சிசேரியன்' அறுவை சிகிச்சை செய்ததையும் சாதனை வரிசையில் சேர்த்துக்கொள்ளலாமா? உலகிலேயே மிகப்பெரிய அமெரிக்க அனுசக்திக் கப்பல் சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தலாமா? நிறுத்தக்கூடாதா? தமிழக அரசியல் கட்சிகள் போர்க்கொடி. இன்றைய "BBC" தமிழோசை செய்தி (ஜுன் 26 செவ்வாய்க்கிழமை) கேட்க கீழுள்ள இணைப்பை 'க்ளிக்' செய்யவும். BBCTamil.com Radio Player

த்யான் விமல் நேர்முகம்

மனிதன் சந்தோசத்தை மட்டுமே தேடுகிறான். ஆனால் கஷ்டத்தை?
S'ness to Life


நாலடியார்

1. அறத்துப்பால்

1.3 யாக்கை நிலையாமை

கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.

- சமண முனிவர்கள்
தமிழ் விளக்கவுரை

அழையாது தோன்றி செழுமையான உறவுகளை உண்டாக்கி, நிலையாது மறைந்து போகும் மனிதர்காள், தான் கட்டிய கூட்டை விட்டுப் பறந்து தூர இடம் போகும் பறவை போல தன் உடலை விட்டு, உறவுகளிடம் சொல்லாது மறைந்து போவார்.


- ஆதியக்குடியான்


ஆங்கில விளக்கவுரை

Men come into the world unasked for, appear in the house as relations and quietly depart, as the bird which goes far off, its nest-tree being forsaken, leaving their body without saying a word to relatives.


by Rev.F.J.Leeper, Tranquebar

இன்றைய குறள்

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

பாமரரின் ஞானசூனியம்,
சுயநலக்காரனின் எதிர்ப்பு -
என்னும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு
கலங்காமல் வேலை செய்வோரே!!!
இனிவரும் உலகச் சிற்பிகளாக முடியும்.



- பெரியார்