November 08, 2007
இன்றைய குறள்
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது
அறத்துப்பால் : பொறையுடைமை
Posted by Manuneedhi - தமிழன் at 5:24 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 153 - குறள்
ஆன்மிகம் என்பது..
"ஆன்மிகம் என்பது வாழ்க்கையை முழுமையாக வாழக் கற்றுக் கொடுக்கும் ஒரு கலை. ஆசைகளைத் துறப்பதல்ல. முறையான ஆசைகளோடு வாழ்வதும், அதை வாழ்க்கை நலன்களாக மாற்றிக் கொள்வதும் ஆன்மீகம்" - வேதாத்திரி மகரிஷி
Posted by Manuneedhi - தமிழன் at 5:21 PM 0 comments (நெற்றிக்கண்)
இலங்கை ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் வெட்டிக் காயங்களுடன் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன
- கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்ய: மத்திய அமைச்சரவை பரிந்துரை : கர்நாடக மாநிலத்தில் தற்போது அமலில் இருக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம், தென்னிந்தியாவில் முதல் முறையாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க வழி ஏற்பட்டிருக்கிறது
- வரும் பிப்ரவரி 15ஆம் தேதி வாக்கில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் : பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல்கள் வரும் பிப்ரவரி 15-ம் தேதி வாக்கில் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் அறிவித்துள்ளார்
- இலங்கை ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் வெட்டிக் காயங்களுடன் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன : இலங்கையின் தென்மாகாணத்தின் ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலுள்ள திஸ்ஸமஹாராம பகுதியிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள ஒசுவின்ன எனும் கிராமத்திலிருந்து வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு சிவிலியன்களின் சடலங்களை வியாழக்கிழமை காலை பொலிசார் கண்டுபிடித்திருக்கிறார்கள்
- பிரிட்டனில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முதல்முறையாய் ஒரு பெண் குற்றவாளியாய் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார் : பிரிட்டனில் அண்மையில் சட்டமாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் முதல் பெண் குற்றவாளியாக முஸ்லிம் யுவதி ஒருவர் இன்று குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார்
- கருணா பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரும் பட்சத்தில் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுமா? பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் பதில் : லண்டனில் கைதான இலங்கையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கருணா பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன
- விடுதலைப் புலிகள்-நோர்வே போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இடையே கிளிநொச்சியில் சந்திப்பு : இலங்கையின் வடக்கே கிளிநொச்சியில் கடந்த வாரம் அரச படைகளின் விமான குண்டு வீச்சில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டிருக்கும் நிலையிலும் சமாதான ஏற்பாட்டாளர்களாகிய நோர்வே தரப்பினர் அமைதிகாப்பது குறித்து விடுதலைப் புலிகள் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் கண்டனமும் கவலையும் வெளியிட்டுள்ளனர்
- அமெரிக்கா இலங்கை கடற்படைக்கு புதிய ராடார் கருவி மற்றும் படகுகளை வழங்கியுள்ளது : இலங்கை கடற்படையின் கரையோர ரோந்து மற்றும் காவல் நடவடிக்கைகளுக்கு மேலதிக வலுச்சேர்க்கும் நோக்கில் அமெரிக்கா இன்று வியாழக்கிழமை ராடார் பொருத்தப்பட்ட கரையோரக் கண்காணிப்பு கருவியொன்றினையும் ஒரு தொகுதி நவீன படகுகளையும் வழங்கியிருக்கிறது
- 40 வயதுக்கு மேற்பட்டவர்களே இலங்கையிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளமுடியும் என முஸ்லிம் மத விவகார அமைச்சகம் அறிவிப்பு : இலங்கையிலிருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் செய்பவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என முஸ்லிம் மதவிவகார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் முஸ்லிம்களிடையே பொதுவாக கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது
Posted by Manuneedhi - தமிழன் at 4:35 PM 0 comments (நெற்றிக்கண்)
Subscribe to:
Posts (Atom)