August 22, 2007
ஜெயிப்பது யார்? கலைஞரா? மாறனா? - பகுதி : 2
Posted by Manuneedhi - தமிழன் at 3:47 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
ஜெயிப்பது யார்? கலைஞரா? மாறனா? - பகுதி : 3
Posted by Manuneedhi - தமிழன் at 3:45 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
"பாதங்கள் நடக்கலானால் பாதைகள் தடுப்பதில்லை"
Posted by Manuneedhi - தமிழன் at 3:33 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
Posted by Manuneedhi - தமிழன் at 3:14 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 82 - ம் குறள்
அமைதி எப்படி கிடைக்கும்?
Posted by Manuneedhi - தமிழன் at 3:12 PM 0 comments (நெற்றிக்கண்)
காயாத கானகத்தே
- தமிழ் நாடக வரலாறு குறித்து தொடர்
தமிழ் நாடகத்துக்கென்று தனியான ஒரு பாணிமட்டுமல்லாது, சிறப்புமிக்க ஒரு வரலாறும் உள்ளது.
தெருக்கூத்தில் ஆரம்பித்து, இலக்கியம் வரை பல்வேறாகப் பரிமாணித்துள்ள தமிழ் நாடகத்தின் வளரச்சி குறித்து பெட்டகத் தொடர் இது.
தமிழ் சினிமாவின் அடித்தளமாக இருந்த நாடகம், அரசியல் களத்திலும், சமூக களத்திலும் பெரும் பங்காற்றியுள்ளது.
தமிழ் சமூகத்தில் நாடகம் ஆற்றிய பங்கு குறித்தும், தற்போதைய உலகில் நாடகம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் நமது தமிழக செய்தியாளர் டி என் கோபாலன் இந்த நீண்ட தொடரைத் தயாரித்து வழங்குகிறார்.
நாடகத் துறையில் புகழ்பெற்று விளங்கியவர்களின் செவ்விகளுடன், தமிழ் நாடக வரலாற்றை இந்தத் தொடர் மூலம் நேயர்கள் அறிந்து கொள்ளலாம். இணைப்பில் செல்க... http://www.bbc.co.uk/tamil/news/story/2006/10/061031_streetplay.shtml - இந்தியாவுக்கும் - ஜப்பானுக்கும் இடையேயான உறவுகள் வெகுவாக மேம்படும் என்று ஜப்பானியப் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
- இராக் அரசாங்கம் குறித்த அமெரிக்க விமர்சனங்கள் பொறுப்பற்றவை என்றும், நாகரீகமற்றவை என்றும் இராக்கிய பிரதமர் நூரி அல் வர்ணித்துள்ளார். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 22 புதன்கிழமை 2007) "BBC" செய்திகளுக்கு இணைப்பில் செல்க....
Posted by Manuneedhi - தமிழன் at 3:06 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : "BBC"
"போங்கடா நீங்களும் உங்க தேசியமும்" பாமரனின் பகிரங்கக் கடிதம்!
இது கர்நாடக இந்தியர்களுக்குப் புரிபடவில்லையே என்று. காவிரி நீர் பங்கீடு குறித்த பிரச்சனை வந்தாலே போதும் நமது ‘தேசியக்’ கட்சிகளின் பாடு திண்டாட்டம்தான். கர்நாடகாவிலுள்ள காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக திரண்டு ‘சொட்டு நீர்கூட கொடுக்கக்கூடாது’ என்று போடுவார்கள் தீர்மானம். கர்நாடக காங்கிரஸ் சொல்வது சரியா…
தமிழக காங்கிரஸ் சொல்வது சரியா… இதில் எது சரி…? வாயே திறக்காது அவர்களது ‘தேசியத்’தலைமை.
ஜனதா தளம் மட்டும் சும்மாவா… ஐக்கியமோ… ஐக்கியமற்றதோ… யாருக்கும் குறைந்தவர்களா என்ன…? எடுத்துவிடு அங்கொரு அறிக்கை… இங்கொரு அறிக்கை… இது குறித்து இவர்களது தலைமையும் கப்சிப். இந்தத் ‘தேசியச்’ சிக்கலில் சிக்கிக் கொள்ள விரும்பாத மற்ற தலைமைகளோ… ‘நயாகரா நீர் வீழ்ச்சியைத் தமிழகத்திற்குத் திருப்பிவிட வேண்டும்…செவ்வாய் கிரத்தில் தண்ணீரைக் கண்டுபிடித்து தாமிரபரணியோடு இணைக்க வேண்டும்…’ என்றெல்லாம் அள்ளி வீசுவார்கள். காஷ்மீரிலுள்ள பண்டிட்டுகளுக்காக கண்ணீர் வடிப்பவர்கள் காவிரியையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்பது வேறு கதை. மொத்தத்தில் கேணையர்கள் நாம்தான். நமக்கு தேசபக்தியை டன் கணக்கில் ஊட்டோ ஊட்டென்று ஊட்டும் தேசிய ஒருமைப்பாட்டின் ஒட்டுமொத்த ஏஜண்டுகளோ இந்த விஷயத்தில் மட்டும் முக்காடு போட்டுக் கொண்டு ஓடி ஒளிந்து கொள்வார்கள்.ஆக இவர்களது தேசீயம்… ஒருமைப்பாடு… எல்லாம் தமிழகத்திற்கு மட்டும்தான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை வித்தியாசமானதொரு‘தேசிய ஒருமைப்பாட்டு’ பார்முலாவே வைத்திருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு ’40 லட்சம் தமிழர்கள் ‘பிணைக் கைதிகளாக’ கர்நாடகாவில் இருக்கிறார்கள்…பெருமூச்சையும் கொஞ்சம் மெதுவாக விடுங்கள்…’ என்கிற ரகத்தில் வேதம் ஓதுகிறார் படையப்பா. இது அரசு தூதரல்ல. தேவதூதரே போனாலும் தீர்க்கமுடியாத பிரச்சனை… ஆகவே 40 லட்சம் தமிழரின் பாதுகாப்புக்காக முறத்தால் புலி துரத்திய கூட்டம் வாயையும் மற்றதையும் மூடிக் கொண்டிருப்பது தான் தேசிய சேவை. அரசியலைப் பொறுத்தவரை… ‘தேசிய’ அரசியலில் குப்பை கொட்டி விட்டு மாநிலக் கட்சியானவைகளும் உண்டு… உள்ளூரிலேயே ஓணான் பிடிக்க முடியாத ‘ஜாம்பவான்கள்’ ‘தேசிய’ அரசியலை வெட்டி முறிக்கக் கிளம்பிய கதைகளும் உண்டு. ஆனால் அப்பாவித் தமிழர்களைப் பொறுத்தவரை… ‘தேசிய ஒருமைப்பாடு…’ ‘இறையாண்மை…’ என்பதற்கெல்லாம் அர்த்தமே வேறு. ஈழத்தைப் பொறுத்தவரை இலங்கையின் ‘இறையாண்மைக்குப்’ பங்கம் வராதவாறு உதை வாங்க வேண்டும்.
பம்பாயிலோ… கர்நாடகத்திலோ… என்றால் இந்தியாவின் இறையாண்மைக்கு எந்த பங்கமும் நேராமல் உதை வாங்க வேண்டும். எங்கு எவ்வளவு வாங்கினாலும் அங்கங்குள்ள அரசுகளின் இறையாண்மை பாதிக்கப்படாமல் வாங்கவேண்டும் என்பதே தேசபக்திக்கு அடையாளம்.
போங்கடா நீங்களும் உங்க தேசியமும்.
Posted by Manuneedhi - தமிழன் at 1:11 AM 1 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : பாமரன்