திருமாவளவனை கைது செய்ய உத்தரவு

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள குமாரக்குடி பகுதியில் கடந்த 11.05.1997-ல் தேர்தல் பிரசாரத்தின்போது விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், அத்து மீறி பேசியதாகவும் திருமாவளவன் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சிதம்பரம் சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் இந்த வழக்கு நீதிபதி பிரகாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு விசாரணைக்காக தொல்.திருமாவளவன் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி பிரகாசன் உத்தரவிட்டார்.