October 02, 2007
சர்ச்சைமேல் சர்ச்சைகள் : சேதுசமுத்திரம் கால்வாய் ஒரு ஆய்வு - 2
Posted by Manuneedhi - தமிழன் at 11:51 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்
பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்
அறத்துப்பால் : நடுவு நிலைமை
Posted by Manuneedhi - தமிழன் at 10:39 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 120 - ம் குறள்
சுவாமி விவேகானந்தர்
"வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்"
Posted by Manuneedhi - தமிழன் at 10:22 PM 0 comments (நெற்றிக்கண்)
புவி வெப்பமடைதலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் - சுற்றுச்சூழல் ஆர்வலர் சி.இ. கருணாகரன்
- புவி வெப்பமடைதலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த அமெரிக்க அதிபரின் கருத்து: சுற்றுச்சூழல் விவகாரம் குறித்த ஆய்வாளரின் செவ்வி அதிபர் புஷ் இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், உலகின் தட்பவெப்ப நிலை குறித்த சமீபத்திய முக்கிய நிகழ்வு குறித்த செய்தியை பார்க்கலாம். புவி வெப்பமடைவதற்கு பிரதான காரணியாக கருதப்படும் கிரீன் ஹவுஸ் கேஸ் என்கிற புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பது தொடர்பில், ஐ.நா மன்றத்தின் முன் முயற்சியில் கியோட்டோ ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி உலக நாடுகளை, வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் மிகவும் பின் தங்கிய நாடுகள் என்று வகைப்படுத்தி, அதற்கேற்ப அவை வெளியேற்றும் புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் அளவை குறிப்பிட்ட கால எல்லைக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. கார்பன் வெளியேற்றத்தில் அமெரிக்காவின் பங்கு அதிகம் ஆனால், இந்த உடன்பாட்டை அமெரிக்க அதிபர் புஷ் அவர்கள் ஆரம்பம் முதலே ஏற்க மறுத்து வருகிறார். கியோட்டோ உடன்பாட்டின் அடிப்படையில் அமெரிக்கா தனது புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைத்தால், அதன் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் பொருளாதார ரீதியில் அது இழப்புகளை சந்திக்க வேண்டிவரலாம் என்பதாலும், புஷ் அவர்கள் கியோட்டோ ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்த பின்னணியில் புஷ் அவர்கள், கடந்த வாரம் வாஷிங்டனில் கூட்டிய சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச மாநாட்டில் பேசும்போது, கியோட்டோ உடன்பாட்டிற்கு பதில், ஒவ்வொரு நாடும் தனது சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு போர்வை வாயுக்களை குறைத்தால் போதும் என்று கருத்து வெளியிட்டிருந்தார். இது புவி வெப்ப மடைவதை குறைக்க போராடிவரும், சுற்றுச்சூழல் குழுக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பின்னணியில், புஷ் அவர்களின் கருத்துக்கள் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும், கியோட்டோ ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து அவதானித்து வரும் தமிழ்நாடு அறிவியல் கழகத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர் சி.இ. கருணாகரன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் கேட்கலாம்.
- கர்நாடகாவில் ஆளும் கூட்டணியில் நெருக்கடி : கர்நாடகத்தில் பாரதீய ஜனதா மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணி அரசு தற்போது நெருக்கடியான கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி, ஐக்கிய ஜனதா தளம் பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைப்பதில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இருபது மாதங்களுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படுவதில் சிக்கல் எழுந்திருப்பதால், கர்நாடக அரசியல் அரங்கம் பரபரப்படைந்துள்ளது. இரு கட்சிகளும் செவ்வாய்க்கிழமை பெங்களூரில் கூட்டங்களை நடத்தின. மதச்சார்பற்ற ஜனதா தளத்தைத் சேர்ந்த முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக அமைச்சர்கள், தங்களது ராஜிநாமா கடிதங்களை முதல்வரிடம் கொடுத்தார்கள். இதனிடையே, பெங்களூரில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கெளட பிபிசியிடம் இந்தப் பிரச்சினை குறித்துப் பேசினார். “எங்கள் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக்கூட்டம் 5-ம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக, நாளை மறுதினம் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும். அவர்களிடம் கருத்துக் கேட்கப்படும். பின்னர் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார் தேவெ கெளட.
இரு கட்சிகளின் உயர்நிலைத் தலைவர்களும் அமர்ந்து பேசுவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார் - பெனசீருடன் உடன்பாடு ஏற்படக் கூடிய நிலை : பெனசீர் பூட்டோபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவுடன் ஒரு உடன்பாட்டை எட்டக் கூடிய நிலையில் பாகிஸ்தான் அரசு உள்ளதாக பாகிஸ்தான் அரசின் சார்பில் பேசவல்ல ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கு சிலமணி நேரங்கள் முன்பு கருத்து வெளியிட்ட அந்நாட்டின் அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவுக்கு எதிரான ஊழல் வழக்குகள் கைவிடப்படும் என்று கூறியிருந்தார் - பர்மாவுக்கான ஐ.நா பிரதிநிதியின் நான்கு நாள் விஜயம் முடிந்தது : பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்களையும், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவியான ஆங்சான் சூச்சி அவர்களையும் சந்தித்துப் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் இப்ராஹிம் கம்பாரி அவர்கள், 4 நாள் விஜயத்தின் பின்னர் பர்மாவில் இருந்து புறப்பட்டுள்ளார்
- வட இலங்கையின் விமானத் தாக்குதல் தொடர்கின்றது : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகுதியில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவரது மறைவிடம் ஒன்றின் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டு அந்த இடம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது
- ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்த கீதபொன்கலனின் செவ்வி : வாக்காளர்களை ஈர்க்க சமஸ்டி என்ற விடயம் உதவாது என்ற அரசியல் யதார்த்தத்தை, ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளது என்பதையே அதன் அண்மைய அறிக்கையும், அதற்குச் சமாந்தரமாக அதன் தலைவர்கள் சிலரது உரைகளும் உணர்த்துவதாக இலங்கையின் அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்
- நோபல் பரிசுக்கு இணையான பரிசு இலங்கையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் வீரம்ந்திரிக்கு வழங்கப்படுகிறது : நோபல் பரிசுக்கு சமாமமாக சர்வதேச அளவில் மதிக்கப்படும் த ரைட் லைவ்லிஹூட் 2007 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பரிசு இம்முறை இலங்கையர் ஒருவருக்கும் வழங்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது
- இன்றைய (அக்டோபர் 02 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by Manuneedhi - தமிழன் at 5:26 PM 0 comments (நெற்றிக்கண்)
Subscribe to:
Posts (Atom)