May 31, 2007

'வெயில்' திரைப்பட இயக்குனர் திரு.வசந்தபாலன் அவர்களின் பேட்டி. Part II

வணக்கம்!
தயவுசெய்து ஆங்கிலம் சரியாக, சரளமாக வராதவர்களை தேவையில்லாமல் தர்மசங்கடத்தில் தள்ளாதீர்கள். ஒரு நல்ல இயக்குனர் தன் உணர்வைத் தெளிவாகச் சொல்ல முடியாததை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். அவருக்கு ஆங்கிலம் வரவில்லையென்பது ஒரு பெரிய விசயமே இல்லை. ஒரு நல்ல தமிழ்ப்பட இயக்குனரைத் தமிழில் பேட்டி எடுங்கள். நீங்கள் எங்கே பிறந்தீர்கள்? தமிழ்நாட்டில்தானே! ஆங்கிலத்தில் பேசினால்தான் அனைவரும் பார்ப்பார்களா என்ன? நீங்கள் பேட்டி எடுக்கும் மனிதருக்கு எந்த மொழி சரளாமாக வருகிறதோ, எந்த மொழியில் தனது உணர்வுகளை, சொல்ல வருவதைத் தெளிவாகச் சொல்லமுடிகிறதோ அந்த மொழியில் சொல்ல விடுங்கள். வேண்டுமானால் “சப் டைட்டில்” போட்டுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அப்படிப்பட்ட பேட்டியே வேண்டாம். இது தேவயில்லாத மனச்சலனத்தை அவருக்கும் ஏற்படுத்தும், பார்க்கும் எங்களுக்கும் ஏற்படுத்தும். முதலில் நீங்கள் திருத்திக்கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது. இது என்னுடைய கருத்து மட்டும் இல்லை, என்னைப்போன்று கோடிக்கணக்கானவர்களின் வேண்டுகோள்.

சென்னை-நவின், கலிபோர்னியா (அமெரிக்கா)
இது நான் பேட்டியெடுத்தவர்களுக்கும் அந்த இணையதளத்தாருக்கும் எழுதிய கடிதம். இனிமேலாவது திருத்திக்கொள்வார்களா? பார்ப்போம். இந்த வீடியோ மற்றும் ஏற்கனவே பதிவு செய்த Part I வீடியோவைப் பற்றியும் தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.

ஒளிரும் இந்தியாவும் ஒழியும் கூந்தல்களும்

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Today's Quote

Caste or no caste, creed or no creed, any person, or class, or caste, or nation, or institution which bars the power of free thought and action of an individual - even as long as that power does not injure others - is devilish and must go down.

From Chicago.
Letter to his disciples in Chennai. January 24, 1894. CW, 5: 29

"தமிழோசை"

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா அதீத பொருளாதார வளர்ச்சியடைந்திருக்கிறதென ஒரு ஆய்வு கூறுகிறது. இன்றைய 'BBC' (மே 31 வியாழக்கிழமை) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

வாழ்த்துக்கள்!

தொலைக்காட்சி என்றால் முதலில் நினைவுக்கு வருவது சினிமாவும், சினிமாவைச் சுற்றியுள்ள செய்திகளும்தான். சினிமா சம்பந்தப்பட்ட எந்த வாடையும் இல்லாமல், "யாதும் செய்தியே! யாவரும் அறிகென, மக்கள் பயனுற நன்றும் நகையும், பூக்கவென்றே பணி செய்து கிடப்போம்" என ஒரு புரட்சியே செய்து மண் பயனுற 'மக்கள் தொலைக்காட்சி' என்ற ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மொழிபற்றி ஒளிபரப்பிய ஒரு நிகழ்ச்சி பற்றிக் கேள்விப்பட்டேன். நாமனைவரும் வரவேற்கத்தக்க ஒரு சிறப்பான நிகழ்ச்சி.Makkal TV

திருமதி.வாசந்தி Part II

எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திருமதி.வாசந்தி அவர்களின் வானொலிப் பேட்டியைக் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
The Kamla Bhatt Show 2006