November 14, 2007

இன்றைய குறள்

துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்

எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்

அறத்துப்பால் : பொறையுடைமை

"மன்மத ராசா" மாலதி

தாக்குப் பிடிக்கும் தன்மையை - டோனி

"பக்கத்து ஊரில் ஆடப் போவதாக இருந்தாலும் நடந்து போய்த்தான் ஆடுவோம். அப்போது அப்படி நடந்து சென்றதுதான் இன்று எனக்கு இவ்வளவு தாக்குப் பிடிக்கும் தன்மையை (ஸ்டாமினாவை) கொடுத்துள்ளது. 5 நாட்கள் மைதானத்தில் ஓடினாலும் தளராத சக்தியைக் கொடுத்துள்ளது" - மஹேந்திர சிங் டோனி

சாக்குப் பையில் சுற்றப்பட்டு மரத்தடியில் அனாதையாக விடப்பட்ட இரண்டு வயது குழந்தை

  • தமிழ் நாட்டில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை கைவிடப்பட்டது. தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை ஒன்று, சாக்குப் பையில் சுற்றப்பட்டு மரத்தடியில் அனாதையாக விடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குழந்தையை தற்போது பராமரித்து வரும் தர்மாஸ் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் பி.எஸ் வேல்முருகன் அவர்கள் தமிழோசையிடம் பிரத்தியேகமாக வெளியிட்ட கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
  • குரங்குகளின் கருக்கள் உயிர்ப்பிரதியாக்கம் செய்யப்பட்டு சாதனை : மனிதர்கள் மற்றும் அவர்களுடைய மிக நெருங்கிய உயிரினங்கள் உள்ளடங்கிய பாலூட்டிகள் வகையைச் சேர்ந்த குரங்கு இனங்களின் கருக்களை குளோனிங் எனப்படும் உயிர்ப்பிரதியாக்கத்தின் மூலம் உருவாக்கியுள்ளதை விஞ்ஞானிககள் உறுதிப்படுத்தியுள்ளனர்
  • பாகிஸ்தானில் இம்ரான் கான் கைது : லாகூரில் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் உரையாற்ற முயன்றபோது, பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கட் ஆட்டக்காரரான இம்ரன்கானை, பாகிஸ்தான் பொலிஸார் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்
  • பிரான்ஸில் பணியாளர்கள் வேலை நிறுத்தம் : வேலை நிறுத்தம் காரணமாக ஆளில்லாமல் பாரிஸ் நகரின் சுரங்கப் பாதை ஒன்று பிரான்ஸ் நாட்டின் ரயில் மற்றும் எரிசக்தித்துறை பணியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, பரவலான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது
  • பிரான்ஸுக்கு எதிராக சாட் நாட்டில் ஆர்ப்பாட்டம் : பிரான்ஸ் நாட்டுக்கு, நூற்றுக்கும் அதிகமான ஆபிரிக்க குழந்தைகளை பிரான்ஸ் தொண்டர் அமைப்பு ஒன்று அழைத்துச் செல்ல முயன்ற விவகாரம் தொடர்பில், பிரான்ஸுக்கு எதிராக சாட் நாட்டின் தலைநகர் இன்ஞமீனாவில் பல்லாயிரக்கணகான மாணவர்கள் வன்செயல் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்
  • பர்மாவை இன்னுமொரு இராக்காக அனுமதிக்க முடியாது என்று சீனா கூறுகிறது : பர்மாவில் இயற்கை வளமான இரத்தினக் கற்கள்பர்மாவில் ஜனநாயக ஆதரவு போராட்டங்களை ஒடுக்கியதற்காக அதன் மீது பொருளாதரத் தடைகளை விதிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சீனா கடுமையாக எச்சரித்துள்ளது
  • இலங்கையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் பெருத்த துன்பங்களை எதிர்கொள்கிறார்கள் என மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது : இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைக்காக செல்பவர்கள் மிகுந்த துனபங்களுக்கு உள்ளாவதாக மனித உரிமை அமைப்பான ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து குவைத், லெபனான், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகளுக்கு பணிக்கு செல்லும் பெண்கள் நாளொன்றுக்கு 18 முதல் 20 மணி நேரம் வரை வேலை செய்யும்படி வற்புறுத்தப்படுகிறார்கள் என்றும் அவர்களது கடவுச்சீட்டு உட்பட பல ஆவணங்களை பணிக்கு அமர்த்துபவர்கள் பறித்து வைத்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் குறிப்பிட்ட வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அங்கு சென்ற பிறகு வேறொரு வேலையில் இவர்கள் அமர்த்தப்படுகிறார்கள் என்றும், இதற்கு இலங்கையிலிருந்து செயல்படும் வேலை வாய்ப்பு தரகர்களே காரணம் என்றும் அந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இது தொடர்பாக, ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் அதிகாரி, இலங்கையின் பிரதி வெளிநாட்டு அமைச்சர், பாதிக்கப்பட்ட ஒருவர் என பலதரப்பட்டவர்களின் கருத்துக்களை உள்ளடக்கி எமது கொழும்புச் செய்தியாளர் கருணாகரன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • மன்னார் பகுதியில் மக்களை வெளியேறக் கூறி துண்டுப் பிரசுரங்கள் : இலங்கையின் வடமேற்கே மன்னார் நகரம் மற்றும் வங்காலை பிரதேசத்தில் இராணுவ முகாம்களுக்கு அருகில் வசிப்பவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதியை முன்னிட்டு, உடனடியாக வெளியேறி 5 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் செல்லுமாறு விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படைப் பிரிவினர் என்று கூறப்படுபவர்களால், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகக் கோரப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
  • ஆப்பிரிக்காவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது-உலக வங்கி : ஆப்பிரிக்காவில் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன என்று உலக வங்கி கூறியுள்ளது. இந்த வளர்ச்சியானது அங்கு வறுமையை ஒழித்து சர்வதேச அளவில் முதலீடுகளைப் பெற உதவும் என்றும் அது கூறியுள்ளது. சராசரியாக அங்கு பொருளாதாரம் ஐந்து சதவீத அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது என்று அதன் அறிக்கையில் கூறியுள்ளது
  • இன்றைய (நவம்பர் 14 புதன்கிழமை 2007) "பிபிசி" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews