August 02, 2007
தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி
பாரதி பட்ட துயரங்களைக் கண்டு நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். இன்றுவரை அவன் கவிதைகளை இந்த உலகம் ரசித்து ரசித்துச் சுவைக்கிறது. அவன் கவிதை வரிகளை நுகர்ந்து எழுச்சிபெற்று சிறப்பு வாழ்க்கை காண்கிறது. ஆனால் அவனை மட்டும் வாழவிடவில்லை. தொழில் என்று கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு தமிழனும் பலகோடி ரூபாய்கள் அவருக்குக் கடன்பட்டிருக்கிறான். ஆனால் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை. ஆகையால்தான் கவிதை எழுதுகிறேன் என்று தன் ஆசை மகன் ஓடிவந்து சொன்னால், மகிழ்ச்சியடையாமல், பெற்றோர்கள் கவலையில் மூழ்கிவிடுகிறார்கள்.
நான் எழுதிப் பிழைக்கவில்லை. ஆனால் அது எனக்குப் பிழைப்பாய்க் கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். கிடைக்காது என்ற வரலாறுகளை அறியாத வயதிலேயே அறிந்திருந்ததாலோ என்னவோ, நான் எழுத்தைத் தொழிலாய் ஏற்கும் இதயத்தைப் பெறவில்லை. எழுத்தைத் தொழிலாக ஏற்றால், அவனுக்கு அதில் தோல்வி வந்துவிடக் கூடாது. அப்படி வந்துவிட்டால், அந்த எழுத்து அவமதிப்புக்கு உள்ளாகுமே என்ற கவலை உண்டெனக்கு. கவிதை எழுதுவதைப் போலவே நான் செய்யும் கணினிப் பணியையும் நேசிக்கிறேன் என்பதால், இதுவே எனக்கு இதய சுகமாய் இருக்கிறது."வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை"
இலக்கியச் சுடரொளி - தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி அவர்களுடன் ஒரு ரசனை மிகுந்த நேர்முகம் இங்கே உங்களுக்காக: "நிலாச்சாரல்"
Posted by Manuneedhi - தமிழன் at 11:34 PM 0 comments (நெற்றிக்கண்)
அமெரிக்கா : மினியாபொலிஸ் I 35 என்ற நெடுஞ்சாலை பாலம் இடிந்தபோது எடுத்த வீடியோ
Posted by Manuneedhi - தமிழன் at 7:31 PM 0 comments (நெற்றிக்கண்)
அமெரிக்கா : மினியாபொலிஸ் பாலம் இடிந்தபோது எடுத்த வீடியோ
Posted by Manuneedhi - தமிழன் at 7:28 PM 0 comments (நெற்றிக்கண்)
அமெரிக்கா : மினியாபொலிஸ் பாலம் இடிந்த.... வீடியோ
Posted by Manuneedhi - தமிழன் at 7:26 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 4:56 PM 0 comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
Posted by Manuneedhi - தமிழன் at 4:49 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 62 - ம் குறள்
சில மணி நேரங்களுக்கு முன்...
மிகவும் பரிதாபத்துக்குரிய அமெரிக்க விபத்துக்களில் இதுவும் ஒன்று. இதுபற்றிய செய்தியை முழுவதுமாகப் பார்க்க இந்த இணைப்பில் செல்க...http://abcnews.go.com/
Posted by Manuneedhi - தமிழன் at 4:29 AM 0 comments (நெற்றிக்கண்)