June 28, 2007

சேதி வந்தது : சிறுகதை - வாஸந்தி

அடுப்பில் அரிசியும் பருப்பும் சேர்ந்து வெந்ததும் கனகம்மா தயாராக இருந்த புளிக்குழம்பை அதில் ஊற்றி நன்றாகக் கலக்கினாள். கொப்பரையுடன் கூடிய மசாலாக் குழம்பின் வாசனை மிகச் சரியான பதத்தில் இருப்பதைக் கண்டு திருப்தி ஏற்பட்டது. எல்லாம் சேர்ந்து கொதித்து சுருளும்போது இறக்கி நெய்யில் கடுகையும் முந்திரிப்பருப்பையும் ஒரு பிடி கருவேப்பிலையும் தாளித்துப் மேலாகப் பரப்பியபோது ரமணா இதைச் சாப்பிட வந்தே ஆகவேண்டும் என்று தோன்றிற்று. அவனுக்குப் பிடித்த சேமியா பாயசம் தயாராகியிருந்தது.சேமியாவுடன் நான்கு கிராம்பையும் நெய்யில் வறுத்து பாலில் வேகவிடவேண்டும் அவனுக்கு.சாப்பாட்டில் அத்தனை வக்கணைப் பேசும் பிள்ளை. இதையெல்லாம் மறந்திருக்கமுடியாதுமைன்று காலை எழுந்திருக்கும்போது கனகம்மாவுக்குக் காரணம் புரியாமல் மனசு பரபரத்தது. நேற்று பின்னிரவிலோ இல்லை இன்று விடியலிலோ கண்ட கனவின் நினைவு ரம்யமாக மனசில் அமர்ந்திருந்தது.கனவு வீட்டில் கல்யாணக்களைக் கட்டியிருந்தது.தோரணமும் விளக்குகளுமாக.ரமணா கழுத்தில் மாலையுடன் நின்றான்.கனவு கலைந்த பிறகும் அந்தக் கனவுக் காட்சியில் அவள் மீண்டும் மீண்டும் திளைக்க முயன்றாள்.Please click the link
Thinnai

என்று மாறும் இந்த அவலம்??

ஒரு சினிமாவை எப்போது மனிதன் சினிமாவாகப் பார்க்கிறானோ அப்போதுதான் நமது தேசம் முன்னேறும். இன்றும் இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய பைத்தியக்காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இங்கு அமெரிக்காவில் 'சிவாஜி' பார்க்க வந்த அனைவருக்கும் ஒருவர் பொங்கல் வழங்கினார் என்றால் பாருங்கள்! திரைகடலோடியும் திரவியம் தேடச்சொன்னால், இவர்கள் தியேட்டர் வாசலில் பொங்கல் வழங்குகிறார்கள். படித்த மேதாவிகளே இப்படி என்றால், பாவம் பாமரன் என்ன செய்வான்?

காலையிலிருந்து இரவுவரைக் கணவனின் வரவை நோக்கி பற்றவைத்த அடுப்போடு காத்துக்கிடக்கும் மனைவி, தந்தையின் மடிபார்த்து தட்டோடு காத்துக்கிடக்கும் குழந்தைகளை விட்டு திரையரங்கு வாசலிலும், வானவேடிக்கையிலும் தன்னை மறந்து திரியும் தமிழா! உன்னுடைய வியர்வையை வெள்ளிப்பணமாக்கி உயர்ந்த சினிமா நட்சத்திரங்களையும், அரசியல்வாதிகளையும் என்று நீ புறக்கணிக்கிறாயோ! அன்றுதான் தரணிபோற்றும் தமிழ் மண்ணில் ஏழ்மை மறையும்.
ஃப்ளாட்பாரங்களில் வாழ்க்கை நடத்தும் எனதருமைத் தோழனே! அடை மழைவந்தால் குழந்தை குட்டிகளோடு, பெட்டி, படுக்கையோடு எங்கே ஒதுங்குவதென்று சிந்தித்தாயா? உயரத்தில் இருக்கும் கூட்டத்தை உயர உயர உயர்த்திவிட்டு என் தோழனே நீ பாதாளம் நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறாயே! என்று மாறும் இந்த அவலம்?

"சிவாஜி" பற்றி சங்கரின் நேர்முகம் 1


"சிவாஜி" பற்றி சங்கரின் நேர்முகம் 2

"சிவாஜி" பற்றி சங்கரின் நேர்முகம் 3

"சிவாஜி" பற்றிய "ரஜினி"யின் நேர்முகம்

திருமாவளவன்

முறுக்கிய மீசையுடன் முஷ்டி மடக்கி கர்ஜிக்கிறார். துப்பாக்கியால் எதிரியை குறி பார்க்கிறார். இரத்தம் வழியும் உடையுடன் கண் சிவக்கிறார். இவையெல்லாம் 'கலகம்' படத்துக்காக சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் காட்டும் திருமுகங்கள். இநதப் படத்தில் பாலசிங்கம் என்ற பேராசிரியராக நடிக்கிறார். ஏற்கனவே இவர் நடித்த 'அன்பு தோழி' சிக்கலில் உள்ளது. புலிகள் ஆதரவு பேச்சு மற்றும் காட்சிகள் இருப்பதாக சான்றிதழ் தர மறுக்கிறது சென்ஸார். இந்நிலையில் 'கலகம்' படத்தில் இவரது பெயர் பாலசிங்கம். புலிகளின் அரசியல் ஆலோசகர் மறைந்த ஆண்டன் பாலசிங்கத்தின் பெயர். Please click the link http://www.tamilbird.com/June'07/230607thiruma.html

Secret behind Rajini's colour

If you have watched Sivaji..You have observed the fair complexion of Rajinikanth in the song Oru Koodai Sunlight. Everyone thought it was make-up that made Superstar Rajinikanth look like a European in that song, but the secret is about a year of computer graphics.

"We used cutting edge grafting technology and it was Shankar's brain child," revealed the film's cinematographer KV Anand. "For the first time grafting technology has been used for an Indian film which was made possible by a Chennai based company Indian Arts who had worked in Shankar's earlier films," he said.

One of the dancers, Jacky, was chosen by Shankar and Rajini's skin tone was matched with her's. The six and a half minute song was shot in Spain. "Each shot of Rajni's in the song was once again shot with Jacky and was sent to Indian Arts.


Since the lighting varies in indoor and outdoor, to match the skin tone, expressions, lip and body movements of the two was a challenging task,"
explained Anand. A total of 6700 frames were been for post production. Rajinikanth himself was amazed after watching the song.

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுன் 28 வியாழக்கிழமை) செய்தி கேட்க இணைப்பை அழுத்துக BBCTamil.com Radio Player

கன்னியாகுமரி கடலோரக் கடலரிப்பு பற்றிய ஒரு பதிவு

இன்றைய குறள்

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

வைத்தியத்திலேயே இரண்டு முறை சொல்வார்கள்
1 - Physicians Cure. 2 - Surgeons Cure. அதாவது மருந்து கொடுத்து வியாதியை சொஸ்தப்படுத்துவது ஒருமுறை. கத்தியைப் போட்டு அறுத்து ஆபரேஷன் செய்து நோயாளியைப் பிழைக்க வைப்பது இன்னொரு முறை. என்னைப் பொறுத்தவரையில் நான் நோயாளி செத்துப் போனாலும் பரவாயில்லை, நோய்க்குக் கஷ்டமில்லாமல் மருந்து மட்டுமே கொடுத்து சொஸ்தப்படுத்தலாம் என்று கருதுபவன் அல்ல. நோயாளிக்குக் கஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, அவன் சாகக்கூடாது என்று கருதி அறுத்து ஆபரேஷன் செய்யும் இரண்டாவது முறையில் நம்பிக்கை உள்ளவன். எனது இலட்சியமெல்லாம் கஷ்டமாக இருந்தாலும் ஆள் பிழைக்க வேண்டுமே என்பது தான். நம்முடைய தோல் அப்படி லேசான தோல் அல்ல. 2 000- 3,000 வருஷங்களாக தடித்துப்போன கெட்டியான தோல். அதில் உறைக்க வேண்டுமென்றால் சிறிது கடினமாகத்தான் சொல்லியாக வேண்டும். உங்கள் நாட்டு மக்களைப் பாருங்கள்! உலகத்தையும் பாருங்கள்!சிந்தியுங்கள்! பரிகாரம் தேடுங்கள்!

- பெரியார் "குடிஅரசு"- 1947