July 04, 2007

ஒரு சேஞ்சுக்கு இதையுந்தான் கேட்டுப்பாப்போமே!!


நண்பர் தீபன் அவர்களின் தமிழ் ஈழம் பற்றிய பாடலைக் கேட்டுப்பாருங்கள்

தமிழோசை

இஸ்லாமியப் படையால் கடத்தி நான்கு மாதம் பிணையக் கைதியாக வைக்கப்பட்ட ஆலன் ஜான்ஸ்டன் விடுவிக்கப்பட்டார். மேலும் இன்றைய "BBC" (ஜுலை 04 புதன்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பைத் தொடரவும் BBCTamil.com Radio Player

இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்துவரும் வேதனையையும், இழிவையும், அடிமைத்தனத்தையும் விட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.

- பெரியார்.

இன்றைய குறள்

ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

இந்தியா 2020

"அப்துல்கலாமின் இந்தியா 2020 ஏதோ அணுகுண்டாலும், ராணுவ பலத்தாலும் அடையப்பட வேண்டிய ஒன்று என்றும் அது ஏழைகளுக்கானது அல்ல என்றும் ஒரு திட்டமிட்ட பொய் பிரச்சாரம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. முதலில் கலாம் சொன்ன இந்தியா 2020 என்பது என்ன என்பதை பார்ப்போம்.

"2020ம் ஆண்டுக்குள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மகக்ளின் எண்ணிக்கை பூஜ்யமாக வேண்டும். எழுதப்படிக்க தெரிந்தோர் எண்ணிக்கை 100% ஆக வேண்டும்.இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு குறியீடு 127லில் இருந்து 50க்கு உயரவேண்டும்.ஒவ்வொரு இந்தியனும் ஒரு பல்கலைகழக டிகிரி படிப்பது சாத்தியமாக வேண்டும்.ஈ கவர்னன்ஸ் திட்டம் மூலம் அரசாங்கத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.ஒவ்வொரு கிராமத்துக்கும் இடையறா மின்சார சப்ளை கிடைக்க வேண்டும்.ஒவ்வொரு கிராமத்துக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கழிவறை மற்றும் சுகாதாரம் கிடைக்க செய்திடல் வேண்டும்.பொறுப்பான செயல்திட்டம் மூலம் தொழிற்சாலைகளை நிறுவி நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.இந்தியாவின் மூலை முடுக்குகளில் இருக்கும் ஏழைகளுக்கும் மருத்துவ வசதி மிகக்குறைந்த செலவில் கிடைக்க செய்திடல் வேண்டும்.மேலே சொன்ன மக்கள் நல திட்டங்களை அடைந்தபின் இந்தியா உலக அமைதிக்கும் பாடுபடல் வேண்டும்.

மேலே சொன்ன திட்டங்களை அடைய ஒவ்வொரு இந்தியனும் பாடுபட வேண்டும். இதுவரை அரசு திட்டங்கள் சென்றடையாத ஏழைகளை நாம் சென்று அடைய முயலவேண்டும்.

விவசாயிகளுக்கு நபார்ட் மற்றும் பல வங்கிகள் மூலம் கடன் வழங்கி அவர்களை கடன்சுமையிலிருந்து மீட்க வேண்டும். ஆராய்ச்சியாளர்கள், அறிவாளிகள், பல்கலைகழகங்கள், தொழிற்சாலைகள் ஆகியோர் விவசாயிகளுடன் சேர்ந்து வேலை செய்து உனவு உற்பத்தி, தானியம் பதப்படுத்துதல், விவசாய உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.இன்சூரன்ஸ் கம்பனிகள் மைக்ரோ கிரெடிட், பயிர் இன்சூரன்ஸ் ஆகியவற்றை விவசாயிகளுக்கு செய்து தரவேண்டும்.

கார்ப்பரேட்டுகள் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதை தமது சமுதாய கடமையாக நினைக்கவேண்டும். தொலைதொடர்பு யுகம் என்று நாம் பெருமைகொள்வது உண்மை எனில் இதுவரை அணுகப்படடாத மக்களை நாம் அணுகவேண்டும்"

இதுதான்யா கலாம் சொல்லும் இந்தியா 2020. இதில் என்னய்யா மேட்டுகுடித்தனமும் இந்துத்வமும் இருக்கிறது? தொடர்ந்து இணைப்பில் செல்க..பூங்கா - இணையத் தமிழின் முதல் வலை�

வலதுசாரி இந்துத்துவவாதிகளின் கனவை மெய்ப்பித்த "முஸ்லிம்". அதுவும் எப்படிப்பட்ட முஸ்லீம் - ராமபிரானின் பக்தர். அதை அவரே வெளிப்படுத்திக் கொண்டார். ஆனாலும் இரண்டு வேளை தொழுபவர். காலை எழுந்தவுடன் அவர் படிப்பது "பகவத் கீதை". ஆனாலும் குரான் படித்து தொழுகை செய்யும் முஸ்லீம். இந்துத்துவவாதிகள் ஒரு "இந்திய முஸ்லீம்" இப்படித் தான் இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்ட நினைத்ததை விட அப்துல் கலாமிடம் அளவுக்கு அதிகமாகவே இந்துத்துவவாத தன்மைகள் காணப்பட்டன.இந்திய முஸ்லீம்கள் இப்படியாக இருந்தால் தான் அவர்களை வலதுசாரி இந்துத்துவவாதிகள் "இந்தியர்களாக" ஒப்புக்கொள்வார்கள். கலாம் அவ்வாறு இருந்ததால் தான் அவர் "200% இந்தியராக" ஒப்புக்கொள்ளப்பட்டார். இந்திய முஸ்லீம்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறவே 2002ல் அவரை ஆதரித்த ஆர். எஸ்.எஸ், இன்றைக்கும் அவரை ஆதரிக்கிறது.தொடர்ந்து இணைப்பில் செல்க..பூங்கா - இணையத் தமிழின் முதல் வலை�

திருமதி.சபீதா IAS நேர்முகம் Part I

இன்றைய சூழலில் இந்தியாவில் IAS அதிகாரிகள் நிலை என்ன? IAS அதிகாரிகளின் முக்கியத்துவம் என்ன? இந்தியப் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியின் நிலைபாடு மற்றும் எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று மிகத்தெளிவாக விளக்கியிருக்கிறார். இது ஒரு உபயோகமான வீடியோப் பதிவு என்பதில் ஐயமில்லை

திருமதி.சபீதா IAS நேர்முகம் Part II

திருமதி.சபீதா IAS நேர்முகம் Part III