December 06, 2007

வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துங்கள்

தினமும் அதிகாலையில் தூக்கத்திலிருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகின்றது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றது.


தலை வலி, உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிக்ஸ், வேகமான இதயத்துடிப்பு, ஈப்பிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் & சிறு நீர் வியாதிகள், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்கு, தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


மருத்துவ முறை:

 1. காலையில் துயில் நீவி நீங்கள் எழுந்ததும், பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ்) தண்ணீர் அருந்துங்கள்
 2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
 3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
 4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)
 5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
 6. மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம்.


எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம். இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமை மட்டுப்படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 1. உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்
 2. வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்
 3. சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள்
 4. மலச்சிக்கல் (Constipation) - 10 நாட்கள்
 5. புற்றுநோய் - 180 நாட்கள்
 6. காச நோய் - 90 நாட்கள்
 7. ஆத்திரட்டிக்ஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம்முறையைப் பின்பற்ற வேண்டும்.

பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது. எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிவரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும். நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பானவராகவும் இருங்கள்

இன்றைய குறள்

இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு

விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்

அறத்துப்பால் : வெஃகாமை

ஒன்பது ரூபாய் நோட்டு - 1

ஒன்பது ரூபாய் நோட்டு - 2

"சாதிப்பதற்கு துணிச்சலும் நம்பிக்கையும் தேவையே தவிர உடல் உறுப்புக்கள் பொருட்டே அல்ல" - என்னை நெகிழ வைத்தவர்களில் இவரும் ஒருவர்போலியோ தாக்கியதால் தாயாரால் அனாதையாக விடப்பட்ட கவுதம் லெவிஸ்

கொல்கத்தாவில் பிறந்த கவுதம் லெவிஸ், போலியோ தாக்கியதால் அவரது தாயாரால் அனாதையாக விடப்பட்டார். இவர் அன்னை தெரெசா ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து, தடைக்கற்கள் பல தாண்டி, ஐரோப்பிய விமான பைலட்டாக இருக்கிறார். இவர் மற்றவர்களைவிடத் திறமையாக விமானம் ஓட்டி பல விருதுகளை வென்றுள்ளார். இதைத் தவிர ஒரு பாப் இசைக்குழுவையும் நடத்திவருகிறார். ஊனம் என்பது மனதைப் பொறுத்ததுதான், உடலைப் பொறுத்ததில்லை என்பதற்கு கவுதம் லெவிஸ் ஒரு சான்று.

தீவிரவாதத்துக்கு ஆதரவாக கவிதை எழுதிய பிரிட்டிஷ் பெண்மணிக்கு தண்டனை

ஷமீனா மாலிக் : தீவிரவாதத்துக்கு ஆதரவாக கவிதைகள் எழுதிய ஒரு பிரிட்டிஷ் பெண்மணிக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஷமீனா மாலிக் எனப்படும் அந்தப் பெண்மணியின் குற்றம், குற்ற நடவடிக்கையின் விளிம்பிலிருந்ததாக நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தீவிரவாதத்துக்கு உதவியாக இருக்கும் எனக் கருதப்படும் ஆவணங்களை வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட முதல் பிரிட்டிஷ் பெண்மனி இந்த ஷமீனா மாலிக் ஆவார். அவர் தன்னை கவிதைத் தீவிரவாதி எனக் கூறிக்கொள்கிறார். அவர் தனது கவிதைகளில், முஸ்லீம்கள் அல்லாதவர்களின் தலை துண்டிக்கப்படுவதை பாராட்டியிருந்த போதிலும், தீவிரவாதத்துக்கான ஒரு ஆவணத்தை அவர் வைத்திருந்தார் என்கிற குற்றறச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளளார்

டெல்லி மதுபானக் கடைகளில் பெண்கள் பரிமாற நீதிமன்றம் அனுமதி

இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் உயர்தர உணவகங்களில், வாடிக்கையாளர்களுக்கு மது பரிமாறுவதற்கு பெண்களை பணியில் அமர்த்துவதற்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. டெல்லியில் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில், மதுபானம் பரிமாறுவதற்கான பணியில் பெண்களை ஈடுபடுத்தக்கூடாது. அதேபோல், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை மட்டுமே அந்தப் பணியில் அமர்த்த வேண்டும் என்ற சட்டம் அமலில் இருந்தது. உணவு விடுதி உரிமையாளர் சங்கம் அந்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதே நேரத்தில், அந்தச் சட்டம் நியாயமானதுதான் என்று கர்க் என்பவர் அந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்தச் சட்டம் செல்லுபடியாகாது என்று 2004-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் கர்க். அதே நேரத்தில், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களைத்தான் பணியில் அமர்த்த வேண்டும் என்ற விதியை எதிர்த்து உணவு விடுதி உரிமையாளர் சங்கம் மேல்முறையீடு செய்தது. அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், பெண்களை மதுபானம் பரிமாறுவதற்கான பணியில் அமர்த்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும், உயர்நீதிமன்ற உத்தரவு சரிதான் என்றும் தீர்ப்பளித்தது

நடிகர் விஷாலின் தமிழ்ப் புரட்சி

ஏற்கனவே புரட்சி கலைஞர் விஜயகாந்த், புரட்சி தமிழன் சத்யராஜ் ஆகியோர் ஆற்றி வரும் தமிழ்ப் புரட்சி நாம் அனைவரும் அறிந்ததே. இது போதாதென்று புரட்சித் தளபதியாக நடிகர் விஷால் உருவெடுத்துள்ளார். அப்படி என்ன தமிழ்ப் புரட்சி அவர் செய்துவிட்டார் என்ற கேள்வி உங்கள் அனைவரிடமும் எழலாம். அவர் செய்த புரட்சி குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு மிகப்பெரிய பட்டியலாக நீண்டு செல்கிறது.
 1. சண்டைகோழி என்ற படத்தில் "ஒரு நிமிஷம்" என்ற வசனத்தை மிக அழகாக "ஒனிஷம்" என்று சொல்லி அவர் ஆற்றியது மிகப்பெரும் புரட்சியன்றோ?
 2. சிவப்பதிகாரம் படத்தில் ஒரு நீண்ட வசனம் வரும். பத்துக்கும் மேற்பட்ட தமிழின் சிறப்பு "ழ" கரம் இடம் பெரும் பல வார்த்தைகளைக்கொண்ட வசனம் அது. ஒவ்வொரு தடவையும் "ழ" கரத்தை மிக அழகாக "ல" கரமாக உச்சரித்து அவர் செய்த தமிழ்ப் புரட்சிக்காகவே ஓராயிரம் புரட்சிப் பட்டங்கள் தரலாம்.


எப்பொழுது நடிகர் விஷால் புரட்சித் தளபதியாக பெயர் எடுத்தாரோ அதற்குமேல் கார்ல் மார்க்ஸ், லெனின், சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ, நேதாஜி, பகத்சிங், பிரபாகரன் போன்ற மாபெரும் புரட்சியாளர்களை இனிமேல் "புர்ச்சியாளர்கள்" என்று விஷால் பாணியில் அழைப்பதே சாலப்பொருந்தும்.

என்ன சொல்கிறீர்கள் என் இனிய தமிழ் மக்களே?