January 30, 2009

"அதிகாலை" இன்றைய செய்திகள்

போர்நிறுத்தமும், உத்திரவாதமான பேச்சுவார்த்தையுமே அமைதி தரும்:பா.நடேசன்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10225&Itemid=52
சென்னை - காந்தி நினைவு தினம் : அரசியில் பிரமுகர்கள் பங்கேற்பு-காணொளி

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10228&Itemid=52
தீக்குளிப்பதற்கு முன் முத்துக்குமார் வினியோகித்த துண்டுப் பிரசுரம்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10205&Itemid=52
தீக்குளித்து வீர மரணமடைந்த முத்துக்குமாருக்கு விடுதலைப்புலிகள் அஞ்சலி

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10204&Itemid=52
மும்பை தாக்குதல் : ப.சிதம்பரம் - பாகிஸ்தான் தூதரக அதிகாரி சந்திப்பு

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10220&Itemid=52
அமெரிக்கா : ஹிலாரி கிளின்டனின் வெளியுறவு அமைச்சர் பதவி செல்லாது

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10217&Itemid=52

முல்லைத்தீவு-வெளியேறும் பொதுமக்களை நாங்கள் தடுக்கவில்லை:பா.நடேசன்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10216&Itemid=52

காந்தி நினைவு தினத்தில் புழல் கைதிகளுக்கு விழிப்புணர்ச்சி வகுப்புகள்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10203&Itemid=52
பார்த்திபன் கனவு # 16 : இரண்டாம் பாகம் - அத்தியாயம் 6 : கலைத்திருநாள்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10197&Itemid=110

சென்னை - காந்தி நினைவு தினம் : அரசியில் பிரமுகர்கள் பங்கேற்பு-காணொளி

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10228&Itemid=52

காதலா? ஆக்சனா? ஆக்சன்தான் என்கிறார் அருண்விஜய்!

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10233&Itemid=67
மம்மூட்டி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10234&Itemid=67

January 13, 2009

பாலஸ்தீன் - இஸ்ரேல் : ஆவணப்படம்

January 11, 2009

காங்கிரசின் பச்சைத்துரோகமும் தி.மு.கவின் ஒட்டுத் துரோகமும்!

காங்கிரசு கட்சியானது தமிழினத்திற்குத் தொடர் துரோகங்களைச் செய்து வருகிறது என்பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவர். கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவில் காங்கிரசினும் தமிழினத்திற்கின்னல் விளைத்தார் எவரேனும் காட்டலரிது.
1956-ல் தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று மாற்றச்சொல்லி அறவழியில் உண்ணா நோன்பிருந்தார் சங்கரலிங்கனார். 76 நாள்கள் நோன்பிருந்தும் காங்கிரசின் வஞ்ச மனம் கனியவில்லை. இறுதியில் காலமானார் சங்கரலிங்கனார். இத்தனைக்கும் சங்கரலிங்கனாரும் ஒரு காங்கிரசுக்காரர்தான். காந்தியாருடன் தண்டியாத்திரை சென்றவர் அவர்.தமிழ், தமிழர் என்று வந்தால் காங்கிரசு கட்சிக்கு காங்கிரசுக் காரரும் பகையாவர் என்பதற்கு இது சான்று. அந்த சூக்குமம் புரிந்ததால்தான் எந்தத் தமிழ்நாட்டுக் காங்கிரசுக்காரரும் தமிழ் தமிழர் என்று பேசுவதில்லை என்பதை ஓர்க. வெள்ளையர் போனபின்னர் தமிழ்நாட்டிற்காக, தமிழருக்காக உயிர் ஈந்த இவரோடு காங்கிரசின் கணக்கு தொடங்கி குறி வைத்து தமிழினத்தை அது அழித்து வருகிறது.

"தமிழ், தமிழர் என்று வந்தால் காங்கிரசு கட்சிக்கு காங்கிரசுக் காரரும் பகையாவர்"
1965-ல் இந்தி மொழியை தமிழர்களிடம் வலிந்து திணித்த காங்கிரசு, அதற்கெதிராக கிளர்ந்த தமிழ் மக்களை, காவற்துறையாலும், அரணம் கொண்டும் சுட்டுப் பொசுக்கியது. அந்தக் கொடுமையான 1965 ஆம் ஆண்டின் பிப்ரவரி 8-க்கும் 12-க்கும் இடையேயான 5 நாள்களில் மட்டும் சுடப்பட்டுக் கொல்லப் பட்டவர்கள் 63 பேர். பிப்ரவரி 12 ஆம் நாள் மட்டும் கொல்லப் பட்டவர்கள் 31 பேர். பலரின் சோதனைகளும் வேதனைகளும் வெளியே வரவில்லை. திராவிடக் கட்சிகளாய் இருந்தவை சொன்ன கொல்லப் பட்டோர் எண்ணிக்கை 145. அண்ணா என்ற சிறந்த தலைவரும், அவருக்குப் பெரியவராகப் பெரியாரும் இருந்து, இராசாசி, டி.டி.கே போன்றோரெல்லாம் இந்தி திணிப்பை எதிர்த்தபோதும், காங்கிரசின் தமிழ்ப் பகைமைக்கு, இரத்த வெறிக்குப் பலியானவர்கள் நூற்றுக்கும் மேல்.

ஒவ்வொரு தமிழரைக் கொன்ற போதும், "இந்தி தெரியாவிட்டால் நீ இந்தியனே இல்லை" என்று சொல்லிக் கொன்று போட்டன காங்கிரசின் வடக்கு மூளைகள்! அந்தப் பகையோடு 1967-ல் இடுப்பொடிந்து போன காங்கிரசு 1987-ல் தமிழீழத்தில் திலீபன் உண்ணா நோன்பிற்குக் காரணமாய் இருந்து அவர் உயிரையும் காவு வாங்கியது. காங்கிரசை காந்தியார் கலைக்க வேண்டும் என்று சொன்னது அதன் இரத்த வெறியை அறிந்ததனால் இருக்கக் கூடும்.

தமிழகத்தில் சங்கரலிங்கனாரையும், தமிழீழத்தில் திலீபனையும் பலிவாங்கியது காங்கிரசு. காந்தியம் பேசும் காங்கிரசிடம் அறப்போராட்டங்களும் செல்லாது என்பதற்கு தமிழினத்தின் மேல் அது தொடுத்த இந்தத் தாக்குதல்கள் காட்டா நிற்கின்றன.

தொடரும் அதன் தமிழின இரத்த வேட்கையே, 1987-ல் ஒன்னே கால் இலக்க அரணத்தை அனுப்பி, தமிழீழத்தில் 8000 பேரைக் கொன்றதும், கண்ணில் பட்ட மகளிரை சீரழித்ததும். மற்று, 2004ல் ஆட்சிக்கு வந்த காங்கிரசு கருணாநிதியுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டு, மெல்ல மெல்ல தமிழீழத்தில் நடந்த பேச்சு வார்த்தைகளைக்கெடுத்து, தமது இத்தாலி வழி தொடர்புகளாலும், இந்தியாவின் பல்வேறு துறைசார் தொடர்புகளாலும் தமிழீழ மக்களை உலக அரங்கில் தனிமைப் படுத்தி, சிங்களன் துணையோடு இன்றைக்குப் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று வருகிறது.
தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9668&lang=ta&Itemid=62

January 10, 2009

ஐக்கிய அமீரகத்திலும் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கமா?

ஐக்கிய அமீரகத்திலும் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கமா? இப்படி ஒரு தலைப்பிட்டு என்னை வந்தடைந்தது ஒரு மின்னஞ்சல்... அதனை வாசித்ததும் நான் உறைந்துபோனேன்.... இதென்ன உண்மையா? விசமிகளின் வேலையா? எனக்குள் ஏற்பட்டவை.... சந்தேகங்கள், குமுறல்கள்... விடைகாண இயலவில்லை... என்பதைவிட 'முயற்சிக்கவில்லை' என்பதே சரியாக இருக்கும்....
எப்படியோ அதை அப்படியே உங்களிடமும் பகிர்ந்துகொள்கிறேன்....

ஐக்கிய அமீரகத்திலும் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கமா? ஐக்கிய அமீரகத்தில் உள்ள ஷார்ஜா ஒளிபரப்பு சேவையில் வெளிநாட்டு இலக்கியங்கள் என்ற பெயரில் ஒளிபரப்பும் நிகழ்ச்சியை நடத்துபவரான ராயத் அமான் என்பவர் இதை வெளிப்படுத்தியுள்ளார். டாக்டர் ஆர்.சிங் எழுதியுள்ள "அனைத்து இந்துக்களும் விழிப்படையுங்கள்" - இந்து தலைவர்களின் உடன்படிக்கை குறிப்பேடு : என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் மற்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்படியான அந்த 13 கட்டளைகள் என்ன?
1. இஸ்லாமியர்களை குறிவைத்து எதிர்மறையான செயல்களை இஸ்ரேல் தொடர்ந்து செய்து வருவதால் அந்நாட்டை இந்துக்கள் மிகவும் நேசமுடைய ஒரு நாடாக கருதவேண்டும்......
இப்படித் தொடர்கிறது இந்தச் செய்தி. இதைத்தொடர்ந்து வாசித்துவிட்டு.... நண்பர்களே உங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்! தொடர்ந்து வாசிக்க சுட்டியில் பிரயாணிக்க..... http://manuneedhy.googlepages.com/PAGE1.pdf
http://manuneedhy.googlepages.com/PAGE2.pdf

January 06, 2009

அதிகாலை இன்றைய செய்திகள்

ஐயப்ப பக்தர்கள் தங்குவதற்கு மசூதியில் இடமளிக்கும் முஸ்லிம்கள்

சபரிமலை ஜன 07 : திருச்சூர் அருகே உள்ள ஒரு மசூதியில் ஐயப்ப பக்தர்கள் தங்குவதற்கு முஸ்லிம் மக்கள் வசதி செய்து கொடுக்கும் சம்பவம், மத நல்லிணக்கத்திற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9497&lang=ta&Itemid=52


சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி: பழ.நெடுமாறன்

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9461&lang=ta&Itemid=52


பாகிஸ்தான்:"நாங்களும் போருக்குத்தயார்"-ஷெர்ரி ரெஹ்மான் (Sherry Rehman)

இஸ்லாமாபாத் ஜன 06 : பழி சுமத்தும் விளையாட்டை இந்தியா முதலில் நிறுத்தவேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்க எப்படி முயற்சிக்கலாம் என்பதை விட்டுவிட்டு பாகிஸ்தான் மீது எப்படியெல்லாம் பழிசுமத்தலாம் என்பதில் மட்டுமே இந்தியா கவனமாக இருக்கிறது

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9453&lang=ta&Itemid=52


சென்னையில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் விழா:

பிரதமர் இன்று வருகை வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று (புதன்கிழமை) டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9460&lang=ta&Itemid=52


லாரிகள் வேலை நிறுத்தம் :உரிமங்களை அரசிடம் ஒப்படைக்க உரிமையாளர்கள் தயார்

மத்திய அரசு எச்சரிக்கையை மீறி லாரிகள் வேலை நிறுத்தம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. வெளிமாநில லாரிகள் வராததால் சர்க்கரை மூட்டைக்கு ரூ.40 உயர்ந்தது.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9459&lang=ta&Itemid=52


இலங்கை பிரச்சனை - மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: நல்லகண்ணு

இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தொடரும் என்று, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9458&lang=ta&Itemid=52


வெளிநாட்டு விமானக்கட்டணம் குறைக்கப்படமாட்டாது : ஜெட் ஏர்வேஸ்

மும்பை ஜன 07 : வெளிநாட்டு விமானக்கட்டணம் தற்போது குறைக்கப்படமாட்டாது என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கச்சா எண்ணைய் விலை அதிகரிப்பு : கடந்த வருடம் கச்சா எண்ணையின் விலை ஒரு பேரலுக்கு 140 டாலருக்கு மேல் உயர்ந்தது.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9455&lang=ta&Itemid=52


அபுதாபியில் முதன்முறையாக இலவச பேருந்து சேவை

அபுதாபி ஜன 07 : குறிப்பாக வளைகுடா நாடுகளில் போக்குவரத்துப் பிரச்சினைகளை சந்திப்பது பெரும்பாலும் புலம்பெயர்ந்து அங்கு வாழும் வெளிநாட்டவர்களே. காரணம் அங்கு நிரந்தரமாக வசிப்பவர்கள் அனைவருமே கார் போன்ற வாகனங்கள் சொந்தமாக வைத்திருப்பவர்கள்தான்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9469&lang=ta&Itemid=52


இஸ்ரேலிய‌ தாக்குத‌ல் : ச‌வுதி அரேபியாவில் ர‌த்த‌தான‌ முகாம்க‌ள்

மனிதர்களுக்குள் பாகுபாடு, பிரிவினை போன்றவைகள் இருப்பினும் ஆபத்துக் காலங்களில் தேவையறிந்து செய்யும் சேவைகளில் இரத்ததானம் என்பது விலை மதிப்பற்ற ஒரு தானம் என்பது நாமனைவரும் அறிந்ததே!

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9466&lang=ta&Itemid=52


திருமங்கலம் பிரசாரம் இன்றுடன் முடிகிறது திருமங்கலம்

இடைத்தேர்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை (ஜன.7) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9468&lang=ta&Itemid=52


பாகிஸ்தான் அரசின் கொள்கையே தீவிரவாதம்தான்: பிரதமர் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் அரசின் கொள்கையே தீவிரவாதம்தான் என்றும் மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், பாகிஸ்தான் அரசு அமைப்புகளின் உதவியுடன் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு ஆதாரம் கிடைத்து உள்ளதாகவும் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9463&lang=ta&Itemid=52


Honey, I Shrunk the Kids - திரைப்பட விமர்சனம்

Wayne Szalinski என்ற குறும்பு விஞ்ஞானி ஒருவர் செய்யும் விஷப்பரிட்சைகளால் குழந்தைகள் சுறுங்கி எறும்பை விட சிறியதாய் உருமாறி விடுவதே Honey, I Shrunk the Kids வெளி வந்தது 1989. பொருட்களை மிகச் சிறியதாய் உருமாறச் செய்யும் ஒரு நவீன கருவி கண்டுபிடிக்கிறார் Wayne Szalinski.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9451&lang=ta&Itemid=71


Honey I Blew Up the Kid - திரைப்பட விமர்சனம்

விஞ்ஞானி Wayne Szalinski. ஆனால் இந்த முறை மின்சாரம் மூலம் பொருட்களை மிகப்பெரியதாய் உருமாறும் கருவியை கண்டுபிடிக்கிறார். இந்த முறையும் சரியாக வேலை செய்யவில்லை.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9450&lang=ta&Itemid=71

January 05, 2009

சேதுசமுத்திரமும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம்!

சிங்களரை ஆதரித்தும், தமிழரை எதிர்த்தும், அழித்தொழித்தும் படு நாசம் புரியும் தமிழ்க் குலப் பகைவரான காங்கிரசுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கேட்டால், கருணாநிதியும் தமிழக மக்கள் பலரும் காங்கிரசோடு ஒப்புறவாய் இருந்து தமிழக நலன்கள் பலவற்றையும் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று சொன்னதுண்டு. அப்படி என்ன பெரிதாய்ச் செய்தாய், செய்யப் போகிறாய் என்றால் செம்மொழி என்பார்கள்; அப்புறம் 5,6 பாலங்கள் என்பார்கள்; அப்புறம் வேறு சில சில்லரை விதயங்களைச் சொல்லி, அண்ணாவின் கனவான சேது சமுத்திரத்தை நிறைவேற்ற வேண்டும் என்பார்கள்.

கன்னடத்தான் வெளிப்படையாகச் சொல்லிவிட்டான் - 'எங்கள் கட்சி தமிழர்களை ஒழிக்க முழுமனதோடு சிங்களவனுக்கு உதவுகிறது' என்று. சிங்களனின் கட்சியாகிவிட்ட காங்கிரசின் தயவும், அக்கட்சியின் எந்த உதவியும் இனி தமிழகத்திற்குத் தேவையில்லை. காங்கிரசே அந்நியன் கட்சியாக, பகைவனின் கட்சியாகப் போய்விட்ட பின்னர் அந்தக் கட்சி தமிழகத்தில் எதுவும் செய்யமுடியாமல் ஒழிந்து போக வேண்டும். அது மட்டுமல்ல, அவர்கள் தயவால் தமிழருக்குப் பயன் எதுவும் தேவையில்லை. தமிழனுக்கு இன்னும் கொஞ்சம் மானமும் சூடு சொரனையும் இருக்கவே செய்கிறது.என்னையும் உள்ளிட்ட பலர் சேது சமுத்திர திட்டத்தினை எதிர்பார்த்தவர்கள்தான். தமிழக மக்களின் ஞாயமான எதிர்பார்ப்புதான் அது என்பதில் ஐயமில்லை. ஆனால், சிங்களனின் கைப்பாவையான சோனியா காந்தியின் தயவாலோ, மன்மோகன் என்ற துரோகியின் ஆதரவாலும், ப.சிதம்பரம் என்ற தமிழ்க் குலக் கருங்காலியாலும் இந்த சேது சமுத்திர திட்டம் தமிழர்களுக்கு நடை பெற வேண்டாம். இவர்களினால் இந்தத் திட்டம் தமிழ்நாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்ற போதிலும், இதையெல்லாம் வைத்து கருணாநிதியோ மற்ற தமிழக அரசியல்வாதிகளோ காங்கிரசிற்குப் போவார்களே ஆனால், அது தமிழ் மக்களுக்கு அவமானம். சேது சமுத்திரம் என்பது தமிழ்நாடு மேலும் வளர்ச்சி பெற நடைபெறுகின்ற ஒரு முனையல். அவ்வளவுதான். தமிழ் இனமே புல் பூண்டு இல்லாமல் காங்கிரசுக் காரர்களால் அழிக்கப் படும்போது, அந்தப் பேரழிவைச் செய்யும் காங்கிரசுக்கட்சியின் தயவால் எந்த ஒரு பயனும் தமிழகத்திற்கு வேண்டியதில்லை. சேது சமுத்திர முனையல் இல்லாவிடில் தமிழகத்தில் எதுவும் குடி முழுகிப் போகப் போவதில்லை. ஒரு இனம் உயிர் வாதையில் இருக்கும்போது உயிர் காப்பது முக்கியமா? அல்லது அந்த உயிர்களை வாங்கும் காங்கிரசுக்கட்சியை நக்கிக் கொண்டு இருப்பது முக்கியமா?
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் சேது சமுத்திர திட்டம் என்பது ஒரு சிறு மயிர்! அந்த மயிரைப் பிடுங்க காங்கிரசுக்காரன் தேவையில்லை!
தமிழ் மக்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ச் சிந்தனைக் களங்கள் எவ்வளவு விரைவாக காங்கிரசைப் புறக்கணிக்கின்றனவோ, எவ்வளவு விரைவாக காங்கிரசை ஆதரிப்பவரைப் புறக்கணிக்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவாவது தமிழ் மக்களில் சிலரேனும் உயிர் பிழைப்பார்கள்.தமிழ் நாட்டில் தமிழன் உயிருக்குப் பாதுகாப்பு தரும் கட்சிதான் நிலைக்க வேண்டும். அழிப்பவர்களின் கட்சி மக்கள் மனதில் இருந்து அழிந்து பட வேண்டும். தமிழ் மக்களைச் சாகடிக்கும் காங்கிரசுக்காரர் ஒவ்வொருவரும் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் அரசியல் முகவரி இல்லாமல் போகவேண்டும். 1972-ல் இடுப்பொடிந்து போன காங்கிரசே! உன் வேரிழந்து, விழுதிழந்து சவலையாய் நாயாய் திரிவாய் தமிழ்நாட்டில்... காத்திரு!
- நாக.இளங்கோவன்