July 05, 2007

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது நடிகர் திலகத்துக்கு பிறகு அவருடைய கலை வாரிசான கலைஞானி கமல் ஹாசனுக்கு வழங்கப்படவிருப்பதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தி கேள்விப்பட்டேன். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் இத்தகைய சிறப்பை நடிகர் திலகத்தை தொடர்ந்து பெறுவதற்கு கமல் ஹாசனை விட தகுதி படைத்தோர் இந்தியாவில் வேறு எவருமில்லை என்பதை மறுக்க முடியாது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஒரு நடன இயக்குநராக பின்னர் நடிகனாக வளர்ந்து கமல் படைத்த சாதனைகள் மலைக்க வைப்பவை. இன்று ஒரு தயாரிப்பாளராக, இயக்குநராக, கதை வசன கர்த்தாவாக, பாடலாசிரியராக, பாடகராக பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்த ஒரு முழுக்கலைஞன், தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் வெற்றிக்கொடி கட்டிய மாபெரும் கலைஞன் என்பதை அவரது விமர்சகர்கள் கூட ஒத்துக்கொள்வார்கள். நடிகர் திலகத்தை அடுத்து செவாலியே விருதை கமல் பெறப்போவது உண்மையானால் கண்டிப்பாக தமிழர்க்கும் தமிழகத்துக்கும் பெருமையே!

தசாவதாரம் கதை - வழக்கு : கமல் கடிதம்

பெரிதாக்கிப் படிக்கப் பதிவின் மீது 'க்ளிக்' செய்து படிக்கவும்.



என் ஆசான், தந்தை, நடிப்புலகச் சக்ரவர்த்தி நடிகர் திலகம் அந்த "சிவாஜி" எங்கே! இன்றைய சிவாஜி எங்கே! அன்று நடந்தது ஆவி துடித்தது....இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது!!

அன்றல்ல, இன்றல்ல "தமிழன்" என்றுமே இளிச்சவாயன்தான்

தமிழ்த் திரையுலகில் ஒரு படத்தால் கடந்த 3 மாதங்களாக பீதி ஏற்பட்டது. இதனால் மற்ற படங்களைத் திரையிடுவதில் பாதிப்பு நீடிக்கிறது என "சிவாஜி' பற்றி நடிகர் நாசர் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நியூ டவுன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நாசர் பேசியதாவது: தமிழ் சினிமாவில் வன்முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டால் குறைந்தபட்சம் 1,000 பக்கங்களுக்கு மேல் எழுதலாம்.

சுதந்திரப் போராட்டக் காலத்தைவிடவும் மிக முக்கியமான ஒரு நெருக்கடியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; அதிகமான பிரச்னைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. ஆனால், இங்கு சினிமா என்பது வியாபாரம் மட்டுமே. பணத்தைப்போட்டு பணத்தை அள்ளுவதற்கான ஒரு கருவி.

ஒரு சினிமா முழுமையாக கலைஞனுடைய ஆளுமைக்குள் வரும்போதுதான் அவனால் சாதிக்க முடியும். சில பேர் சேர்ந்து இதற்காக முயற்சி செய்து வருகிறோம். நான் ஒட்டுமொத்த சினிமா உலகத்தைப் பிரதிபலிப்பவன் அல்லன். இதற்கு மாறாக ஏதேனும் செய்தால் என்னை சாதியைவிட்டு (சினிமா) விலக்கி வைத்து விடுவார்கள்.

சிறந்த படங்கள் கேன்ஸ் விருது பெற வாய்ப்புள்ளது. விருதுக்காக படம் எடுக்க முடியாது. நல்ல படமாக இருந்தால் விருது கிடைக்கும். 'அவதாரம்' நல்ல படம் என்று என்னால் தைரியமாக சொல்ல முடியும். ஆனால், அந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருதை 'அருணாசலம்' படத்துக்கு கொடுத்தார்கள். சொந்த மண்ணிலேயே தரமான படம் மதிக்கப்படவில்லை. அதைப்பற்றி நாம் யாரும் பேசவில்லை. ஆனால், ஆஸ்கரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

கடந்த 3 மாதங்களாக ஒரு படம் வருகிறது என்று ஏற்படுத்தப்பட்ட பீதியால் மற்ற படங்களை வெளியிட முடியவில்லை. அந்தப் படம் வெளியான பின்னரும் இதுவரை எந்த படத்தையும் திரையிட முடியவில்லை.

தமிழ் சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டோம். பாதி நேரம் சண்டை, மீதி நேரம் பாட்டு... நடிப்பதற்கு ஏது நேரம்?

சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பற்கு உலகளாவிய கோட்பாடு இருகிறது. உலக அளவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சினிமா கோட்பாடுகள் எல்லாம் பொய்த்து - தோற்றுப் போகக்கூடிய ஓர் இடம் தமிழ் சினிமாதான்.

ஹிரோஷிமா

ஹிரோஷிமா சரித்திரத்தைச் சல்லடையாக்கி, வரலாறுகளைத் திருப்பிப்போட்ட ஒன்றை, யுகமாற்றங்கள் வந்து போனாலும் மனித ஜீவராசிகளின் மனதை விட்டு கிள்ளியெறிய முடியாத கிறுக்கல்கள்!! அதைச் சற்று பார்ப்போமே!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வரதட்சணைக் கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ஆடைகளைக் களைந்துவிட்டு, உள்ளாடைகளுடன் தெருவுக்கு இறங்கி நடந்து சென்ற பெண்ணின் கணவரையும் , கணவரின் பெற்றோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆப்காணிஸ்தானில் பழைய சிறைக் கூடம் கண்டுபிடிப்பு : இந்த சிறைக் கூடத்தில் கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் பல சடலங்கள்....மேலும் இன்றைய 'BBC' தமிழோசை(ஜுலை 05 வியாழக்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பில் செல்க .... BBCTamil.com Radio Player

இன்றைய குறள்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

நாலடியார்

1. அறத்துப்பால்

1.5 தூய தன்மை

ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை
பெருந்தோளி பெய்வளாய் என்னுமீப் போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை

அழகிய தோலால் போர்த்தப் பட்ட இந்த உடம்பு அழகான ஒரு தோற்றத்தைக் கொடுத்தாலும் அறுவருப்புள்ள கழிவுகளை உடலின் 9 துவாரங்கள் வழியாக வெளியேற்றும் இந்த உடம்பை அறிவிலா மனிதர்கள் எத்தனை விரிந்த தோல்கள்! என்றும், இன்னும் பலவாறாய் அழகை வியந்து பாராட்டுவர்.


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை

By reason of the beautiful skin causing it to appear lovely to the eye, and which is the external covering of the body, which is like a pot ejecting liquid faeces and seething filth abominable, from nine orifices which ooze out with excrement matter, the foolish will say of this body, Oh, thou who hast wide shoulders! Oh, thou who art adorned with bracelets!


Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

"நீதி மன்றம் விதித்த தண்டனையால், ஒரு மனித உயிர் பறிக்கப்படும் ஒவ்வொரு வைகறைப் பொழுதிலும் மனித உரிமைக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது"



வி.ஆர்.கிருட்டிணய்யர்
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதி அரசர்
இந்திய மனித உரிமையின் முன்னோடி