November 06, 2007

இன்றைய குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமிமைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்

அறத்துப்பால் : பொறையுடைமை

நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்திருந்த இரண்டு வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை

  • கூடுதல் கைகால்களுடனான குழந்தைக்கு பெங்களூரில் அறுவை சிகிச்சை : நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்திருந்த ஒரு இரண்டு வயது குழந்தைக்கு இயல்பான ஒரு வாழ்க்கை கிடைக்க 13 நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு அறுவை சிகிச்சை மூலம் முயன்றுவருகிறார்கள். இந்தியாவின் பெங்களூரு நகர புறநகர்ப் பகுதியில் ஒரு அசாதாரணமான அறுவை சிகிச்சை தற்போது நடைபெற்றுவருகிறது. லக்ஷ்மி தத்மா என்ற அந்தக் குட்டிப் பெண்ணுடைய இடுப்புப் பகுதியில் ஒரு தலையற்ற, முறையான வளர்ச்சியற்ற ஒரு பிள்ளையின் உடல் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
    தனது குழந்தையை இந்துப் பெண்தெய்வத்தின் அவதாரமென்று பெற்றோர்கள் பார்க்கிறார்களென்றாலும் அக்குழந்தையைக் காப்பாற்ற அது சிறுபிள்ளையாக இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்வது அவசியமென்று மருத்துவர்கள் கூறுயிருந்தனர்.
    லக்ஷ்மி விவகாரத்தை முதலில் கையிலெடுத்தவரும் இந்த அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ குழுவுக்கு தலைமை ஏற்றிருப்பவருமான டாக்டர் ஷரன் பாடில், நாற்பது மணிநேரம் தொட்ர்ந்து சிகிச்சை நடக்கலாம் என்பதற்காக தங்களைத் தயார் செய்திருப்பதாகக் கூறினார். இந்த நல்ல காரியம் வெற்றிகரமாய் நிறைவடைந்து சிறுமி லக்ஷ்மி சிறப்பான ஒரு வாழ்க்கை வாழ்வாளென்று இந்த நிகழ்ச்சியைக் கேட்கும் அத்தனை பேரும் வாழ்த்துவார்களென்பதில் ஐயமில்லை
  • வரதட்சணைக்கு எதிரான போராட்டம்: மணமகன்களை காக்க முயன்ற காவலர் பலி : இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை வழங்குவதற்கு எதிராக போராட்டம் நடத்தும் கூட்டம் ஒன்றில் இருந்து, இரண்டு மணமகன்களை காப்பாற்ற முயன்ற பொலிஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்
  • கர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி வரவேண்டும் - ஜனாதிபதியிடம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை : குமாரசாமியுடன் யெதியூரப்பாகர்நாடகத்தில் தற்போது அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து, பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பி.எஸ். யெதியூரப்பா தலைமையில் ஆட்சியமைக்க உத்தரவிட வேண்டும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீலிடம் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தனர்
  • கருணா அணியிலிருந்து பிரிந்து சென்றிருந்தாகக் கூறப்படும் பிள்ளையான் அணியினர் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகங்களைக் கைப்பற்றியுள்ளனர் : இலங்கையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கருணாவை பிரிட்டிஷ் அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை, குடிவரவு குற்றம் ஒன்றிற்காக தடுத்து வைத்துள்ள பின்னணியில், மட்டக்களப்பு நகரில் உள்ள அவரது அணியின் அலுவலகங்கள் பலவற்றை, கருணா அணியினரிடமிருந்து சமீபகாலத்துக்கு முன் முரண்பட்டதாக கூறப்படும் அவரது தளபதிகளில் ஒருவரான பிள்ளையான் அணியினர் கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன
  • யுத்த செலவினங்கள் அதிகமுள்ள இலங்கை வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு : இலங்கையில் யுத்த செலவினத்தை அதிகமாகக் கொண்டதாகக் கூறப்படும் வரவு செலவுத்திட்டம் நாளை காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் முக்கிய உரையாற்றவுள்ளார்
  • ஹைட்ரோ கார்பன் வளங்கள் குறித்து இந்தியா-ஆப்பிரிக்கா இடையில் மாநாடு : ஹைட்ரோ கார்பன் துறையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்
  • தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளின் அறிவுத்திறன், மற்ற குழந்தைகளின் அறிவுத்திறனை விட அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பாலில் காணப்படும் குறிப்பிட்ட ஒரு புரதச்சத்து, குழந்தையின் மூளை வளர்ச்சியை ஊக்குவித்து, அதன் மூலம், குழந்தையின் அறிவுத்திறன் மேம்படுவதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதே வேளை, இந்த ஆய்வின் முடிவு எல்லா குழந்தை களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு விஞ்ஞான ரீதியான முடிவல்ல என்கிற சந்தேகத்தையும் வேறு சிலர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து, தமிழக தலைநகர் சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவரும், தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருபவருமான மருத்துவர் ஜெயம் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் கேட்கலாம்
  • சௌதி மன்னர்-போப்பாண்டவரிடையே முதல் சந்திப்பு : சௌதி மன்னர் ஒருவர் முதல் தடவையாக ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரை வத்திக்கானில் சந்தித்துள்ளார்
  • முஷாரஃபை சந்திக்கப்போவதில்லை என்கிறார் இஸ்லாமாபாத் செல்லும் பேநசிர் பூட்டோ : பாகிஸ்தானில் சென்ற வாரக் கடைசியில் அதிபர் முஷாரஃப் அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ள நிலையில், அவரை சந்திக்கப்போவதில்லை என்று எதிர்கட்சி தலைவி பேநசிர் பூட்டோ கூறியுள்ளார்