June 21, 2007


"மனசே ரிலேக்ஸ் ப்ளீஸ்" என்றாலே சுவாமி சுகபோதானந்தா அவர்களின் நினைவுதான் அனைவருக்கும் வருமென்பதில் ஐயமில்லை. அவர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய ஒலிப்பதிவு இது.
Powered by eSnips.com

தமிழோசை

தமிழ்நெட் முடக்கத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என கூறுகிறது இலங்கை அரசு : விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான இணையத் தளமாகக் கருதப்படும் தமிழ்நெட் இணைய தளத்தை கடந்த சில தினங்களாக இலங்கை அரசு முடக்கியுள்ளதாக கூறப்படும் பரவலான குற்றச்சாட்டினை இலங்கை அரசு மறுத்துள்ளது. இன்றைய (ஜுன் மாதம் 21 - ம் தேதி வியாழக்கிழமை) "BBC" செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

"பட்டியல்" திரைப்படத்தில் மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா'வுடன் பாடிய தமிழ்ப்பாடகி, இளம்பாடகி ரோஷினியின் நேர்முகம் பகுதி I

நாலடியார்

1. அறத்துப்பால்

1.1. செல்வம் நிலையாமை

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்று

உண்டாக வைக்கற்பாற் றன்று


- சமண முனிவர்கள்


தமிழ் விளக்கவுரை :

ஆறு விதமான சுவை படைத்த உணவை, அருகே அமர்ந்து, தன் இன்ப மனைவி, தன் கையால் கொடுக்க, அந்த உணவின் மறுபகுதியைத் தொடுவதற்கு முன்னர், வறுமை வந்து, எல்லாம் இழந்து, இன்னொரு இடத்துக்குப் பிச்சை எடுக்கப் போய்விடுவார். அளப்பரிய செல்வம் சேர்ந்து இருப்பினும் ஒன்றுமில்லாத நிலையே!

- ஆதியக்குடியான்


ஆங்கில விளக்கவுரை :


CHAPTER 1.--Unstable Wealth.

Even those who have eaten of every variety of food of six flavours laid before them by their wives with anxious attention, not taking a second portion from any dish, may yet become poor and go and beg somewhere for pottage. Verily riches are but seeming, not to be considered as actually existing.

Translation of Selected Verses by
Rev.F.J.Leeper, Tranquebar

இன்றைய குறள்

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்படவேண்டும்.

அறத்துப்பால் : வான்சிறப்பு

இடுப்புக்குக் கீழே உள்ள உறுப்புகளை இழந்த பிறகும் நாட்டின் விடுதலையின் பொறுப்புகளை இழக்காத இந்த மயூரித் தங்கைகளின் உணர்வை மதித்து நான் பெண்களின் உறுப்புகளை வர்ணித்து திரைப்படத்துக்குப் பாடல் எழுதுவதை நிறுத்திவிட்டேன்" என்று தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்ட கவிஞன். வானொலி நேர்முகத்தின் ஒலிப்பதிவைக் கேட்க கீழுள்ள செயலியை இயக்கவும்

Get this widget Share Track details