July 01, 2007

பட்டிமன்றப் பேச்சாளர் பேராசிரியர் திரு.ஞானசம்பந்தன் அவர்கள் அமெரிக்கப் பண்பலை வரிசையில் அளித்த நேர்முகத்தின் வானொலிப் பதிவு
Powered by eSnips.com

'ஒரு போதும் கடந்தகாலம் திரும்பி வராது. எதிர்காலத்தைப் பற்றியும் நமக்குத் தெரியாது. அவற்றை நினைத்து நேரத்தையும், ஆரோக் கியத்தையும் இழக்காமல் நிகழ்காலத்தைப் பயனுள்ளதாக்க முயற்சி செய். மூன்று காலங்களையும் பற்றி அறிந்தவர் பரமாத்மா ஒருவரே. அதனால் நீங்கள் மூன்று காலங் களையும் இறைவனுக்கு சமர்பித்துவிட்டு, அவரை நினைத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல முயற்சி செய்யுங்கள். அப்படிச் செய்தால் சதா நம் முகத்தில் புன்னகை மறையாமல் இருக்கும்.'

- மாதா அமிர்தானந்தமயி

தமிழோசை

இன்றைய (ஜுலை 01 ஞாயிற்றுக்கிழமை) "BBC", சர்ச்சைக்குரிய இராணுவக் கப்பல் சென்னை வருவது பற்றிய செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும். BBCTamil.com Radio Player

அபஸ்வரம் ராம்ஜி அவர்களுடன் ஒரு நேர்முகம்.

பிரபல இசைக்கலைஞர்கள் என்றால் அவர்களுள் போட்டி, பொறாமை இருக்கும். ஆனால் இந்த மழலைகள் இசையை ஒரு விளையாட்டாகக் கருதி அவர்களுக்குள் பாடல்களை எப்படிப் பாடவேண்டும், எப்படி மேலும் புதுமையாகப் பாடலாம் என்றெல்லாம் விவாதிக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் ஒருவர் பாடியதை மற்றவர் ஆக்கப்பூர்வமாக விமர்சிக்கிறார். இதனால் எதிர்காலத்தில் போட்டி பொறாமையற்ற ஒரு இசைச் சமுதாயம் உருவாகும். Please 'click' the link
Tamil magazine Tamil news, poem, story, movie & song reviews

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல் சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை நடத்துவதை விட, ஆண்டான் அடிமையை நடத்துவதை விட மோசமானதாகும்.

- பெரியார்

தாஜ்மகாலுக்கு ஓட்டு போடாதீர்கள்

புதிய உலக அதிசயங்கள் வரிசையில் தாஜ்மகாலும் இடம் பிடிக்க இந்த நம்பருக்கு SMS செய்து தாஜ்மகாலுக்கு ஓட்டளியுங்கள் என உங்களுக்கு உங்கள் நண்பர் SMS அனுப்புகிறாரா? நீங்களும் அதை நம்பி SMS ஓட்டு போட்டீர்களா?... போடாதீர்கள்.. இதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை..."உலகத்தின் புதிய ஏழு அதிசயங்கள் தீர்மாணிக்கப்படுகிறது.. அதற்கான ஓட்டெடுப்பு" என்று நடத்தப்படும் இந்த ஓட்டெடுப்பின் பின்னனி என்ன என்று பார்த்தோமானால் அதிர்ச்சியாக இருக்கிறது...
சுவிட்சர்லாந்தில் உள்ள NOWC (New Open World Cooperation) என்னும் தனியார் நிறுவனத்தின் தலைவர் Bernard Webber என்பவரால் முடுக்கி விடப்பட்டுள்ள இந்த வாக்கெடுப்பு உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கிறது...இலவச மற்றும் கட்டண ஓட்டுக்கள் உதவியுடன் நடத்த படும் இந்த வாக்கெடுப்பு செல்பேசி SMS, தொலைபேசி அழைப்பு மற்றும் இணையத்தின் மூலம் நடத்தப்படுகிறது. இதை பற்றி மேலும் தகவல்கள்

1) இது முழுக்க முழுக்க தனியார் நடத்தும் வாக்கெடுப்பு... இதற்கும் எந்த நாட்டின் அரசுகளுக்கும் தொடர்பில்லை...

2) உலக பாரம்பரியங்களை அறிவிக்கும், சேர்க்கும், நீக்கும் அதிகாரம் உடையது ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) மட்டுமே... UNESCO இந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்க மறுத்துள்ளது... UNESCO இதன் வாக்கெடுப்பு நடத்தப்படும் முறைகள் மற்றும் அதன் நம்பகத்தன்மை குறித்து அவநம்பிக்கையும், கவலையும் தெரிவித்துள்ளது...

3) இந்த வாக்கெடுப்புக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நமது மத்திய அரசும் மறுத்துள்ளது...

4) இது முழுக்க முழுக்க லாப நோக்கோடு தனியார் நடத்தும் கருத்து கணிப்பு என்றும் இதை தடை செய்ய வேண்டும் என்று உலகெங்கிலும் எதிர்ப்பு குரல் கிளம்ப ஆரம்பித்துள்ளது... எகிப்து நாட்டில் ஏற்கனவே இதற்கு எதிராக, "ஓட்டளிக்காதீர்கள்" என்று பிரச்சாரம் கிளம்பி இருக்கிறது...

5) ஒவ்வொருவர் போடும் ஒரு SMS வோட்டுக்கும் மொபைல் நிறுவனங்களால் வசூலிக்கப்படும் கட்டணத்தில் ஒரு பகுதி இந்த தனியார் நிறுவனத்தை சென்றடையும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம்...

நமது அரசாங்கத்தின் BSNL கூட இதற்கு விதிவிலக்கல்ல
6) இன்னும் T சர்ட்டுகள் மற்றும் மெலும் பல வியாபார பொருட்கள், உலக சுற்றுலா மற்றும் பல வியாபாரங்கள் இதன் மூலம் முடுக்கி விடப்பட்டுள்ளன... அதன் லாபங்களும் சர்வதேச நிறுவனங்களிடையே பங்கிடப்படுகின்றன...
அப்பாவி மக்களின் நாட்டுப்பற்றை கூட காசாக்கும் எண்ணம் கொண்ட இத்தகைய நிறுவனங்களை என்ன செய்வது...

இன்றைய குறள்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்


அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு கொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவர்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை