December 30, 2007

இன்றைய குறள்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்
அறத்துப்பால் : தீவினையெச்சம்

பெனசீர் பூட்டோவின் கட்சிக்கு அவரது மகன் தலைமை

படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர் பெனசீர் பூட்டோவின் கட்சி, பெனசீர் பூட்டோவின் கணவர் மற்றும் அவரது 19 வயதான மகனை கட்சியின் இணைத் தலைவர்களாக அறிவித்துள்ளது. அத்தோடு இன்னும் ஒன்பது நாட்களில் நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி பங்கேற்க்க விரும்புகிறது என்பதையும் அக்கட்சி உறுதி செய்துள்ளது. திருமதி பூட்டோவின் மகனான பிலவால், ஜனநாயகத்தை மலர செய்வது தான் சிறந்த பழி வாங்குதல் என தனது தாயார் பலமுறை கூறி இருப்பதாக கூறியுள்ளார். திருமதி, பூட்டோவின் கணவரான ஆசிப் அலி ஜர்தாரி, பாகிஸ்தான் மக்கள் வன்முறையை கைவிட்டு, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார். அத்தோடு மற்றுமொரு பிரதான எதிர்கட்சியின் தலைவரான நவாஸ் ஷெரீப்பையும் அவர் தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

Overseas workers to get 24x7 helpline

Overseas Indian Affairs (OIA) Ministry will soon set up a "Resource Centre" here for helping overseas workers in distress. "It will be a one-stop destination for Indian workers," a top official of the OIA ministry said here on Saturday, adding that the Overseas Workers Resource Centre would work round-the-clock on all days. All that a worker in distress has to do is to call a toll-free number 1800-11-3090 to get proper advice on how to overcome his problems in his host country. The Centre would also provide information about how and when to seek legal assistance in case of denial of wages and violation of contract. He pointed out that the centre would help a lot to redress the grievances of Indian workers at a time when many countries are keen to ensure that labour laws are strictly adhered to by the employers there. The toll-free helpline could also be used by the victims of bad NRI marriages so that the ministry could initiate appropriate remedial steps. The official said there was also a plan to set up an overseas employment promotion council to provide information about new job opportunities in foreign countries. "This is envisaged as a counselling mechanism to help Indians go through a legal channel for employment," he said, adding that it would help to reduce incidence of cheating of overseas job seekers by travel agents. http://www.godubai.com/gulftoday/article.asp?AID=3&Section=Asia

December 29, 2007

பாகிஸ்தான் எதிர்காலம்? - நிபுணர் கருத்து

பேநசிர் பூட்டோ அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எதிர்காலம் குறித்தும், எதிர்கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், பாகிஸ்தானில் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்தும் பிபிசியின் கராச்சி செய்தியாளர் இலியாஸ்கான் அவர்களின் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம். அடிப்படையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இடதுசாரி கொள்கைகளையுடைய ஒரு கட்சியாகவே பார்க்கப்படுவதாக கூறும் இலியாஸ்கான், அதேநேரம் புட்டோ குடும்பத்தினரிடையே பெயரும் பலவகையில் அந்தக் கட்சியோடு இணைத்துப் பார்க்கபடுவதாகவும் தெரிவிக்கிறார். பூட்டோ குடும்பத்தின் கடைசி முக்கிய உறுப்பினரும் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி படிப்படியாக சிதறுண்டு போகக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். ஏனெனில், அந்தக் கட்சியில் பூட்டோவுக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்களிடம் பேநசிருக்கு உண்டான ஒரு ஆளுமையோ அல்லது பாகிஸ்தான் முழுவதும் மக்களால் ஏற்கப்படக்கூடிய ஒரு பொதுத்தன்மையோ இல்லை என்றும், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற கடைசி அரசியல் தலைவர் பேநசிர் பூட்டோவாகத்தான் இருக்கக்கூடும் என்றும் இலியாஸ் கூறுகிறார். பேநசிரின் திடீர் மறைவு, பாகிஸ்தான் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் இலியாஸ்கான் கூறுகிறார். தற்போதைய நிலையில் பேநசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள், தேர்தல்கள் தள்ளிவைக்கப்படுவதைத்தான் விரும்புவார்கள் என்றும், தற்போதைய நிலையில் அநேகமாக எல்லா எதிர்கட்சிகளுமே அதையே விரும்புவதாகவும், இலியாஸ் தெரிவிக்கிறார். அதேநேரம், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை பொறுத்த வரையில், தேர்தல்களை விரைவில் நடத்தி ஒரு ஆட்சியை ஏற்படுத்தவே விரும்புவார் என்கிறார் இலியாஸ்கான். ஒரு தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம், தனது பிரச்சினைகளை குறைக்க அவர் முயலக்கூடும் என்றும் இலியாஸ் கருத்து தெரிவித்தார். ஆனால், பாகிஸ்தானின் அட்வகேட் ஜெனரல் நாட்டில் தற்போது இருக்கும் சூழல் தேர்தல்கள் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என ஏற்கெனெவே குறிப்புணர்த்தியிருப்பதையும் இலியாஸ்கான் சுட்டிக்காட்டுகிறார்.

பாகிஸ்தானில் தேர்தல் நடக்குமா?

பாகிஸ்தானில் ஜனவரி எட்டாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்களை தள்ளிப்போட வேண்டும் என்று இப்போதே தீர்மானிப்பது கடினம் என்று அதிபர் முஷாரஃப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர். இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் கருத்தொருமித்த முடிவொன்றை எடுக்க முடியும் என்று காபந்து பிரதமர் முகமது மியான் சூம்ரோ கோரியுள்ளார். கொல்லப்பட்ட பேநசிர் பூட்டோதான் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தவர். இனியும் தேர்தலில் போட்டியிடுவதா என்பது பற்றி பரிசீலித்துவருவதாக அவருடைய பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறுகிறது. பூட்டோவின் படுகொலை தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவரது முக்கிய அரசியல் போட்டியாளர் நவாஸ் ஷெரிஃப் கூறியுள்ளர். தனது கட்சி தேர்தல்களைப் புறக்கணிக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நவாஸ் ஷெரிஃப் தேர்தல் நடந்தாலும் அதில் எந்த நம்பகத் தன்மையும் இருக்காது என்று இன்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்

பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை இலங்கையில் அமைதி ஏற்படாது : டக்ளஸ் தேவானந்தா ஆவேசம்

"பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை, அரசியல் தீர்வுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பு ஒப்புக் கொள்ளாது. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட வேண்டும்' என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆவேசமாக தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெளிநாட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு :
பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை, அரசியல் தீர்வுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு ஒப்புக்கொள்ளாது. எனவே, பிரபாகரன் கொல்லப்பட வேண்டும். அவர் அமைதியை விரும்பவில்லை, இலங்கையை துண்டாடத்தான் விரும்புகிறார். வன்னிப்பகுதியில் வசித்து வரும் மக்களில் 99 சதவீதம் பேர் பிரபாகரனை வெறுத்து வருகின்றனர். இதை விட்டால், புலிகளை இணங்கவைக்க மற்றொரு வழி உள்ளது. அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தாங்கள் கைவிடப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தை ஏற்பட வைத்து அமைதி முயற்சியில் அவர்களாகவே சேரும்படி வைக்க வேண்டும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில்தான் தற்போது மோதல்கள் நடந்து வருகின்றன. எனக்கு பொறுப்பு அளிக்கப் பட்டால், ஒரே ஆண்டில் அப்பகுதிகளில் அமைதியை நிலை நாட்டுவேன். இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

December 27, 2007

எனக்கே சொந்தம்!

புத்தகங்களை

ஏன் இடதுமார்பில்

வைத்து நடக்கிறேன்

என்கிறாயே தோழி?


சொல்கிறேன் கேள்!


என் இதயத்தினுள்ளிருக்கும்

என்னுயிர்க் காதலரை

வெளியிலுள்ள

வேறு யாரும்

பார்க்கக்கூடாதல்லவா?

"பில்லா" விஷ்ணுவர்தன்

இன்றைய குறள்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்ச மாட்டார்கள், தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்

அறத்துப்பால் : தீவினையச்சம்

பி.சுசீலாவிற்கு பத்மஸ்ரீ?

கண்டசாலாவுடன் தொடங்கி எஸ்.பி.பாலசுப்ரமணியம் வரை மூன்று தலை முறையாக 40,000 பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கும் பிரபல பின்ணணிப் பாடகி பி.சுசீலாவிற்கு இந்திய மத்திய அரசின் உயர் விருதான (பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற) பத்ம விருதுகளில் எதுவும் இதுவரை வழங்கப்பட வில்லை. 'இதுவரை அவர் செய்திருக்கும் சாதனைகளுக்கு ஏற்ப அவர் கௌரவிக்கப் படவில்லை என்றாலும், இழப்பு திரையுலகினருக்குத்தானேயன்றி அவருக்கு இல்லை' என்று பத்மவிபூஷண் விருது பெற்ற வரபிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். சுசீலாவின் பெயர் இதற்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக ஆந்திர அரசின் தகவல் குறிப்பு தெரிவிக்கின்றது. விரைவில் கிடைத்தால் நமக்கும் மகிழ்ச்சிதான்.

பேனசீர் புட்டோவின் வாழ்க்கை ஒரு பார்வை

1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார் பேனசீர் புட்டோ. தெற்கு ஆசியாவின் பிரபலமான ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் பேனசீர் புட்டோ. அவரது தந்தையான ஜுல்ஃபிகர் அலி புட்டோ 1970 களில் மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதமராக திகழ்ந்தார். இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் ஆட்சியை இழந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ பதவியிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார். தனது தந்தை பதவியிலிருந்து நீக்கப்பட்டு தூக்கிலடப்பட்ட சம்பவங்களே அவரை அரசியலில் நுழைய வைத்தது எனக் கூறப்படுகிறது. அவரது தந்தையை தூக்கிலிட்ட ஜியாவுல் ஹக் பேனசீரையும் சிறையிலடைத்தார். ஜியாவுல் ஹக் ஒரு விமான விபத்தில் பலியான பிறகு, நடைபெற்ற ஜனநாயக முறையிலான தேர்தலில் வெற்றி பெற்று உலகளவில் ஒரு இஸ்லாமிய நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பெண் பிரதமராக பொறுப்பேற்றார். 1988 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் பிரதமராக பொற்பேற்ற போது, நவீனத்துவமும், ஜனநாயகத்தையும் பிரதிபலிக்கும் ஒருவராக பேனசீர் புட்டோ பார்க்கப்பட்டார். தம்மை ஒரு மதச்சார்பற்றவராகவும், தீவிரவாதத்தை எதிர்ப்பவராகவும் தம்மை அவர் வெளிக்காட்டிக் கொண்டார். பாகிஸ்தானின் கொந்தளிப்பு மிக்க அரசியல் களத்தில் அவரது இந்தக் கொள்கைகள் அவருக்கு எதிராகச் செல்லக் கூடும் என 1979 ஆண்டிலேயே கூறப்பட்டது. இதை அவரும் ஏற்றுக் கொண்டார்.
ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் உலகில், இளைமையாக, நன்றாக படித்த கவர்ச்சி மிக்கவரான பேனசீர் புட்டோ இஸ்லாமிய உலகில் ஒரு புதிய காற்றாக பார்க்கப்பட்டார். இவ்வாறு இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் மீதும் அவரது கணவர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதன் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த பேனசீர் புட்டோ, கடந்த அக்டோபர் மாதம்தான், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் நோக்கில் நாடு திரும்பினார். ஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்திலேயே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அவர் தப்பினாலும், அவரது வாகனத் தொடரணியைத் தொடர்ந்து வந்த கூட்டத்திலிருந்த 130 பேர் பலியானார்கள்.
நாடு திரும்பிய அவர் அதிபர் முஷாரஃப் அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார் என மேற்குலகம் எதிர்பார்த்தது. ஆனால், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல் படுத்திய பிறகு அவர் தலைமையில் தாம் பிரதமராக பணியாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார்.
தனது தந்தை இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து அவரிடம் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு எண்ணமே இருந்து வந்தது. அவர் பிரதமராக இருந்த இரண்டு முறையும் அவரது ஆட்சி ஊழல்களால் பீடிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானியர்கள் முன் தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க விழைந்த பேனசீர் புட்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

December 26, 2007

இன்றைய குறள்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூறவேண்டும்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

பொன்மொழிகள்

  • வீட்டுக்குள் நடப்பதை வீதிக்கு எடுத்துச்செல்லாதே, வீதியில் பாதித்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவா
  • மனிதனாய் இரு மகானாய் வேண்டாம்
  • மகானாய் வேண்டாம் ஒரு தாய்க்கு நல்ல மகனாய் இரு
  • குழந்தையை ரசிக்கக் கற்றுக்கொள் குணவானாவாய்
  • இயற்கையை ரசி அது உன்னிடம் பேசும்

பில்லா விஷ்ணுவர்தன்

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்பாக விடுதலைப் புலிகளை வீழ்த்த்த வேண்டும் : இலங்கை ஜனாதிபதி

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்னதாக விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக வெற்றிகொள்வது இன்றியமையாதது என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் தெற்கே மாத்தறையில் நடைபெற்ற சுனாமி நினைவு நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் காணப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் ஆனாலும், அதற்கு முன்னதாக நாட்டில் பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கப்பம் செலுத்தும் பாணியிலான சமாதானம் தமக்குத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் சுனாமி மீள்கட்டுமானப் பணிகள் சிறப்பாக நடக்கின்ற போதிலும், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு போன்ற சில இடங்களில் இந்தப் பணிகள் இன்னமும் பூர்த்தியடையவில்லை என்றும் ராஜபக்ஷ கூறினார். சர்வதேச சமூகம் இலங்கை அரசை புறக்கணித்துவருவதாக கூறப்படுவது தவறு என்றும், வழமையை விட இந்த வருடம் அதிக சர்வதேச உதவி இலங்கைக்குக் கிடைத்துள்ளதாகவும் ராஜபக்ஷ தெரிவித்தார்

இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஜி.பி.சிப்பி மரணம்

இந்தியாவின் பழம்பெரும் சினிமா தயாரிப்பாளர் ஜி.பி.சிப்பி மும்பையில் இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வயது 93. இந்திய சினிமா வரலாற்றில் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படமான ஷோலே படத்தைத் தயாரித்தவர் என்று பரவலாக அறியப்படுபவர் ஜி.பி.சிப்பி. 'ஷோலே' என்றால் 'தீச்சுவாலை' என்று பொருள். முந்தைய வசூல் சாதனைகள் எல்லாவற்றையும் முறியடித்து அந்தக் காலத்திலேயே 6 கோடி டொலர்கள் வசூலை அள்ளியது இப்படம். மும்பையில் ஒரு திரையரங்கில் தொடந்து ஐந்து ஆண்டுககளுக்கும் அதிகமாக 'ஷோலே' படம் ஓடியது.

December 25, 2007

இன்றைய குறள்

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்லமாட்டார்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

விரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் துகளில் முழு பைபிளையும் எழுதி சாதனை

பூர்வ மொழியான ஹீப்ருவில் மூன்று இலட்சம் வார்த்தைகளைக் கொண்ட நூல் கிறிஸ்துவர்களின் திருமறையான பைபிள். உலகின் மிகச் சிறிய பைபிள் என்ற சாதனையை இதற்கு முன் தக்கவைத்திருந்த நூல் 2.8 செண்டிமீட்டர் அகலமும் 3.4 செண்டிமீட்டர் நீலமும் 1 செண்டிமீட்டர் உயரமும் கொண்டது, இதில் 1514 பக்கங்கள் இருந்தன. தற்போது பைபிளின் மூன்று லட்சம் வார்த்தைகளை ஒரு குண்டூசி முனையில் எழுதி சாதனை படைத்திருக்கிறார்கள் இஸ்ரேலிலில் உள்ள ஹைஃபா தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்தவர்கள். அரை மில்லிமீட்டர் அளவேகொண்ட ஒரு சதுரங்கத்தில் முழு பைபிளும் மெல்லிய மின்-கதிர் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது

பொன்மொழிகள்

  • தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை

  • காயங்களுக்கு மருந்து வேண்டாம், கனிவான பார்வை போதும்


  • எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால் சோர்வடையமாட்டாய்


  • படைப்பாளனாய் வேண்டாம், நல்ல விமர்சகனாய் இரு

ஒட்டகச்சிவிங்கிகள் ஒற்றை இனம் அல்ல

உலகின் மிக உயரமான விலங்கினம் ஒட்டகச்சிவிங்கி. உண்மையில் ஒற்றை இனமல்ல அது பல்வேறு இனங்களின் தொகுப்பு என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. தற்போது ஒட்டகச்சிவிங்கிகள் ஓர் இனமாகவும் அவற்றுக்குள் பல உட்பிரிவுகள் இருப்பதாகவும் கருதப்பட்டுவருகிறது. ஆனால் சஹாரா பாலைவனத்துக்கு தென்பகுதியில் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒட்டகச்சிவிங்கியின் ரோம நிறம் இடத்துக்கு இடம் மாறுபடுவது, அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு இனம் என்பதைக் காட்டுகிறது. இனப்பெருக்க ரீதியில் - அதாவது ஓரினத்தோடு மற்றொரு இனம் சேர்ந்து பொதுவாக இனப்பெருக்கம் செய்யாத - ஒட்டகச்சிவிங்கிகள் ஆறு பிரிவுகள் இருப்பது மரபணு மூலக்கூறுகள் ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது என்று லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மரபணுக் கல்வி நிபுணர் டேவிட் பிரவுன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்

December 24, 2007

"ஆண்டவனின் கருவறையில் அனைவரும் சமம்" - 'வாரமொரு ஆலயம்' நடராஜ் பிரகாஷ்

நிலாச்சாரலுக்காக நான் கண்ட நேர்முகம் : வாழ்க்கையே வியாபாரமாகிவிட்ட இந்தக் காலத்தில் நமது கலாசாரமும், பண்பாடும் மறந்துபோகக் கூடாதென்கிற நல்லெண்ணத்தில் அவற்றை நினைவுபடுத்துகிற சேவைகளைச் செய்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தனது லட்சியமே தமிழகத்தில் உள்ள கோயில்கள் அனைத்தைப் பற்றியும் இந்த உலகத்துக்கு விளக்கிக் கூறுவதுதான் என்று கூறும் நடராஜ் பிரகாஷ், வாரமொரு ஆலயம் என்ற இணையச் சேவையை நடத்திவருகிறார். சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த இவர், தற்போது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலீஸுக்கு அருகில் வசிக்கிறார். தனது முழுநேரப் பணிக்கு நடுவே, பல்வேறு எதிர்ப்புகளுக்கும், ஏளனங்களுக்கிமிடையில் விடாமுயற்சியோடு தன் சேவையைத் தொடர்கிறாரென்றால் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் அருள்மிகு மலிபு வெங்கடேஸ்வரா திருக்கோவிலில், வாரக் கடைசி நாட்களில் தன்னார்வத் தொண்டராக, அங்கு வரும் பக்தகோடிகளுக்குச் சேவையும் செய்து வருகிறார். துளியும் சுயவிளம்பரத்தை விரும்பாத இந்த வித்தியாசமான துருதுரு இளைஞர், நீண்ட யோசனைக்குப் பிறகு நிலாச்சாரல் வாசகர்களிடம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டார். நண்பருடனான செவ்விக்குச் செல்வோம்.


வித்தியாசமான இந்த “வாரமொரு ஆலயம்” செய்ய எப்படி எண்ணம் வந்தது?நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பது ஆலயம். ஓவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு ஸ்தலபுராணம் உண்டு. அவை ஆலயத்தின் பெருமையை, ஸ்தலம் (இடம்), விருக்ஷ்ம் (மரம்), தீர்த்தம் (புண்ணிய நீர்), மூர்த்தி (இறைவனின் வடிவம்) ஆகிய பரிமாணங்களால் விளங்குகின்றன. வலைப் பதிவுகளை (Blogs) விட பாட்காஸ்டிங் (podcasting) நான்கு மடங்கு வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் இணைய நுட்பமாகும். அதனால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களுக்கு விருப்பமான பாட்காஸ்டை எந்த நேரத்திலும் கேட்கலாம். நமது ஆலயங்களின் பெருமையை பாட்காஸ்டிங் மூலமாக பரப்ப நினைத்ததில் உருவானதுதான் "வாரமொரு ஆலயம்".


பாரம்பரியம் மிக்க இந்துக் கோவில்களைப் பற்றிய விபரங்களை எப்படிச் சேகரிக்கிறீர்கள்?


பெரும்பாலும் நான் அல்லது எனது குடும்பத்தினர் சென்று தரிசித்த கோவில்களைப் பற்றி பாட்காஸ்ட் செய்கிறேன். நான் புதிதாக எதுவும் சொல்லவில்லை. நமது முன்னோர்கள் மற்றும் அறிஞர்கள் அளித்துள்ள களஞ்சியமான நூல்கள், ஆய்வுகள், கட்டுரைகள், தலபுராணங்கள் என என்னால் முடிந்த அளவு தொகுத்து வழங்குகிறேன். "வாரமொரு ஆலயம்" சிறப்பாக வர எனக்கு உதவி செய்யும் நண்பர்களுக்கும், ஊக்கப்படுத்தும் எனது குடும்பத்தினருக்கும் எனது உளம் கனிந்த நன்றி.


அமெரிக்காவில் நமது பக்தர்களின் ஈடுபாடு எப்படி உள்ளது?


ஆன்மீக வாழ்வில்தான் நிம்மதி அதிகமென்பதால் அமெரிக்காவில் தற்பொழுது கோவில்களில் நமது பக்தர்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளது. ஆன்மீகம் என்ற பெயரில் ஆண்டவனின் முன் நமது ஆசையை முன்வைத்து வேண்டுகிறோம். ஆன்மீகம் என்பது அன்பு. மற்றவர்களுக்கு உதவுவதும் கூட. அமெரிக்காவில் கோவில்களில் தொண்டு செய்வதையும் சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.


இந்தியாவில் இருந்திருந்தால் இதைச் செய்திருப்பீர்களா?


"அன்பு சுரக்கும் இடத்தில்தான் அருள் சுரக்கும்". கோபத்தைக் குறைத்து அன்புணர்வைப் பெருக்கும் ஆன்மீக இறையுணர்வைப் பரப்புவதற்கு இடம் ஒரு பொருட்டேயல்ல. எங்கிருந்தாலும் கண்டிப்பாகச் செய்திருப்பேன்.


பாட்காஸ்ட் தவிர வேறு ஏதாவது எதிர்காலத் திட்டம்?


இந்த பாட்காஸ்ட் தவிர, "அதிகாலை.காம்" என்ற பெயரில் புதிய தமிழ் இணையதளம் ஒன்று நண்பர்களுடன் இணைந்து தொடங்குகிறேன். நம் தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களும் அதில் இடம் பெறும். தமிழ் தளங்கள் தொடாத பகுதிகள் எல்லாம் இதில் பதிவு செய்யப்படும். இது சம்பந்தமாக உலகளவில் நிபுணத்துவம் பெற்ற நம் சமூக முன்னோடிகளிடம் ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் அத்தளம் நம் சமூகத்தின் முன் சமர்ப்பிக்கப்படும்.


பக்திப் படங்கள் முன்புபோல் தமிழில் வருவதில்லையே, இது எதனைக் காட்டுகிறது?


பக்திப் படங்கள் குறைந்துவிட்டால் மக்களிடம் பக்தி குறைந்து விட்டது என்று அர்த்தமல்ல. திரையில் பக்தியின் முழுப்பரிமாணத்தைக் காட்ட எந்தத் தயாரிப்பாளரும் முன் வருவதில்லை. தற்பொழுது ரசிகனும் பக்தியைத் திரையில் தேடிக் கொண்டிருக்கவில்லை.


ஆன்மீகம் வியாபாரமாக்கப் படுகிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க http://www.nilacharal.com/ocms/log/12240711.asp

இன்றைய குறள்

அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்

அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்தமாட்டார்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

ஒரு டாலருக்கு! ஒரு பாலம்

அமெரிக்கா விஸ்கோன்சினில் உள்ள கிகாப்பூ நதியின் மீதுள்ள பாலத்தை வாங்க வேண்டுமா? ஒரு நூற்றாண்டுக்கும் மேலான இந்தப் பாலம் கடந்த 31 ஆண்டுகளாக உபயோகிக்கப் படாததால் பழுதாகி நொறுங்கி நதியில் விழுகின்ற நிலையில் இருக்கிறதாம். அதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து விற்கப் போகிறார்கள் ஒரு டாலருக்கு!

நியுயார்க் டைம்ஸ் செய்திக்கு பாகிஸ்தான் மறுப்பு

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய இராணுவ உதவித் தொகையில் 500 கோடி டொலர்கள் பயங்கரவாததுக்கு எதிரான யுத்தத்தில், மோதல் முன்னரங்கில் செயலாற்றும் துருப்பினரைச் சென்றடையவில்லை என்று நியுயார்க் டைம்ஸ் நாளேட்டில் வெளியான செய்தியை முட்டாள் தனமான கூற்று என்று சொல்லி பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களை வாங்குவதில் இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இந்தப் பத்திரிகைச் செய்தி குற்றம் சாட்டுகிறது. வடமேற்கு பாகிஸ்தானில் மோதலில் ஈடுபட்டுவரும் படையினர் பனிப் பிரதேசத்திற்கு உதவாத தலைக்கவசமும் காலணிகளும் அணிந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இராணுவ பேச்சாளர் வஹீத் அர்ஷத், குற்றம் சொல்பவர்கள் படையினரின் நிலைமையை நேரடியாக வந்து பார்த்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில் உதவுவதற்காக அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நிதி வழங்குகிறது.

December 23, 2007

நடிகை தமானா

இன்றைய குறள்

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று

பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லிவிடலாம், ஆனால் பயனில்லாத சொற்களை சொல்லாமல் இருப்பதே நல்லது

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் - நடிகர் விஜய்

புகை பிடிப்பதால் புற்று நோய், இதயக்கோளாறுகள் தாக்கக் கூடும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அகில உலகளவில் அண்மையில் செய்த ஒரு ஆய்வின்படி இளமையிலேயே தலை வழுக்கை விழும் சாத்தியங்கள் அதிகமென்ற செய்தி சரும நோயின் ஆவணங்கள் என்ற பிரிடிஷ் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதைச் சொல்லும்போது புகை பிடிப்பது பற்றிய ஒரு உபரி செய்தி நினைவுக்கு வருகிறது. மத்திய அமைச்சர் அன்புமணி கேட்டுக்கொண்டதன் பேரில் நடிகர் விஜய் இனி திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேனென்று உறுதி அளித்து அவரின் சபாஷைப் பெற்றிருக்கிறார்.

குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி

இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பாரதீய ஜனதா கட்சிக்கு சாதகமாக வந்துள்ளது. அந்த மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். குஜராத் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. வாக்குகள் ஞாயிறுக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில், பாரதீய ஜனதா கட்சி, 117 தொகுதிகளில் வென்று, ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மூன்று இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தற்போது முடிவடைய உள்ள சட்டப்பேரவையில், பாரதீய ஜனதா கட்சி 127 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 51 இடங்களையும் கொண்டுள்ளது. இந்த முறை பாரதீய ஜனதா 10 இடங்களை இழந்திருக்கிறது. இருந்தபோதிலும் தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, காங்கிரஸ் கட்சி 8 இடங்களைக் கூடுதலாகப் பிடித்துள்ளது.
இந்தத் தேர்தலில், வடக்கு, தெற்கு குஜராத் மற்றும் செளராஷ்டிரா பிராந்தியங்களில் பாரதீய ஜனதா கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறது. கடந்த 2002-ம் ஆண்டு மதக்கலவரம் நடைபெற்ற மத்திய குஜராத்தில், கடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சி, இந்த முறை கணிசமான இழப்பைச் சந்தித்திருக்கிறது. 2002-ம் ஆண்டு கலவரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது, முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறியதாக நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்தச் சம்பவம் தொடர்பாக, உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்தும் மோடி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ள வெற்றி, தேசிய அளவில் அந்தக் கட்சி பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என்று நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்த வெற்றி குறித்து கருத்துத் தெரிவித்த நரேந்திர மோடி,தேர்தல் பிரசாரத்தின்போது, புதுப்புது வழிகளில், புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தி எதிர் பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், அது எடுபடவில்லை. குஜராத் மக்கள், எதிர்மறை சக்திகளைத் தோற்கடித்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். இந்த வெற்றி, ஐந்தரை கோடி குஜராத் மக்களுக்குக் கிடைத்த வெற்றி. தொடர்ந்து ஐந்தாவது முறையாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. என்றார்.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு, பிரதமர் மன்மோகன் சிங், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழக பாஜக தலைவர் இல. கணேசன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். குஜராத் மாநில முடிவுகள் குறித்து அரசியல் ஆய்வாளர் மகேஷ் ரங்கராஜன் அவர்களின் பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

December 22, 2007

இன்றைய குறள்

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

ஒரு சபிக்கப்பட்ட வைரம்

1857-ம் ஆண்டு சிப்பாய் கலகத்தின் போது கான்பூர் இந்திரன் கோவிலிலிருந்து கொள்ளையடிக்கபட்டு பெர்ரிஸ் என்ற ராணுவ வீரனால் பிரிட்டிஷ் அரசுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பழுப்பு வைரம் இப்போது லண்டன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்படவிருக்கிறது. இது ஒரு சபிக்கப்பட்ட வைரமாம். இந்த வைரத்தை வைத்திருந்த பெர்ரிஸ¤க்கு உடல் நலம் சீரழிந்தது. அதைப் பெற்றுக்கொண்ட அவருடைய மகன் தற்கொலை செய்துகொண்டு இறந்தான். ஸ்கார் ஒயில்டின் நண்பரான விஞ்ஞானி எட்வர்ட் ஹெரான் என்பவர் இந்த வைரத்தின் கடைசி சொந்தக்காரர். 1890வது ஆண்டு இந்த வைரத்தை அவர் பெற்றபோது அவர் பட்ட துயரங்கள் அளவற்றது. அவர் தன் நண்பர்களுக்கு அதைக் கொடுத்தபோது அடுத்தடுத்து சோதனைகளாம். அதை அவர் ஒரு ஏரியில் வீசியெறிந்ததும் கூட மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவரிடமே வந்து சேர்ந்ததாம். ஏழாண்டுகளுக்கு முன்பு விட்டேகர் என்ற தேசிய அருங்காட்சியகத்தின் தலைமை பொறுப்பாளர் அதை ஒரு கருத்தரங்குக்கு எடுத்துச் சென்றபோது மேகங்கள் இருண்டு ஒரு பெரிய புயல் காற்றில் சிக்கித் தவித்தாராம். “அந்த அனுபவம் மிகவும் பயங்கரமானது, நாங்கள் பிழைத்ததே மறு பிறப்பு’ என்கிறார் அவர். இப்படி சாப வரலாறு படைத்த வைரம்தான் இப்போது சாதுவாக லண்டன் தேசிய அருங்காட்சியகத்தில் அமரப்போகிறது.

உத்தரப்பிரதேச குண்டுவெடிப்பு தொடர்பில் இருவர் கைது

இந்தியாவின் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் மூன்று நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், ஹர்கத்-உல்-ஜிஹாதி-இஸ்லாமி என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். சனிக்கிழமை அதிகாலை, உத்தரப் பிரதேச போலீசாரும், மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகளும் இணைந்து, பாரபங்கி ரயில் நிலையத்தில் அந்த இரு நபர்களையும் கைது செய்தார்கள். முகமது காலித் மற்றும் முகமது தாரிக் என்ற அந்த இருவரும், வங்கதேசத்தை மையமாகக் கொண்ட ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். லக்னோ, ஃபைசாபாத் மற்றும் வாரணாசி நகரங்களில் நீதிமன்ற வளாகங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட இரு நபர்களும், வெடிபொருள்களுடன் பிடிபட்டதாக, உத்தரப்பிரதேச மாநில கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் பிரிஜ்லால் தெரிவித்தார்

இந்தியா சீனா இராணுவக் கூட்டுப் பயிற்சி முகாம் - நிபுணர் கருத்து

உலகின் மிகப்பெரிய இரண்டு இராணுவங்களை கொண்டுள்ள இந்தியா மற்றும் சீனா இடையில் முதல்முறையாக இராணுவ கூட்டுப் பயிற்சி முகாம் நடந்துவருகிறது. சீனாவின் தென்மேற்கிலுள்ள யுன்னான் பிராந்தியத்தில் டிசம்பர் 20 தொடங்கி ஒருவாரகாலம் இந்தக் கூட்டுப் பயிற்சி முகாம் நடக்கிறது. 1962-ல் இந்தியா சீனா இடையில் குறுகியகாலமானாலும் ரத்தக்கறை படிந்த யுத்தம் ஒன்று நடந்திருந்தது. பலகாலமாக இறுக்கமாகவுள்ள இருநாடுகளிடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான அடையாள நடவடிக்கை இந்த இராணுவ கூட்டு முயற்சி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய அமைச்சரவை செயலகத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற அதிகாரி டி.எஸ்.ராஜன் அவர்களின் செவ்வியை தமிழோசையில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

ஆற்காடு வீராசாமிக்கும் இராமதாசுக்கும் இடையே நடப்பது என்ன?

December 21, 2007

இராமதாசு 2011-ல் பதவிக்கு வருவாரா?

தமிழகத்தில் இன்றைய காங்கிரசின் நிலை

திருநெல்வேலி இளைஞர் அணி மாநாடு : அடுத்த முதல்வர் ஸ்டாலினா?

இன்றைய குறள்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்

நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

கல்லூரி - தமானா

நிலைக்கண்ணாடி போல இருப்பவர் வைரமுத்துதான்" - மு.கருணாநிதி

"நான் எழுதும் கவிதைகளை அவரிடம் படித்துக் காட்டுவதும் அவர் எங்கிருந்தாலும் தான் எழுதிய கவிதைகளைத் தொலைபேசி மூலம் என்னிடம் படித்துக் காட்டுவதும் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. எனது கவிதைகள் நன்றாக உள்ளனவா என்பதை அறிந்து கொள்ள நிலைக்கண்ணாடி போல இருப்பவர் வைரமுத்துதான்" - மு. கருணாநிதி

இலங்கை படையினரின் குறுக்கீடின்றி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வழிவேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை

தமிழக மீனவர்கள், இலங்கை பாதுகாப்புப் படையினரின் குறுக்கீடுகள் இல்லாமல், இந்தியக் கடற்படையின் பாதுகாப்புடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று புதுடெல்லியில் நடந்த மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கருணாநிதியின் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக, கருணாநிதி இந்த மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை. அவரது சார்பில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு, முதல்வரின் உரையை வாசித்தார். இந்திய மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நடப்பு ஆண்டில் இந்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்ட 26 தாக்குதல் நிகழ்வுகளில் 8 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 13 பேர் காயமடைந்திருக்கிறார்கள் என்று கருணாநிதியின் உரையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தெளிவாக எல்லை வரையறுக்கப்பட்ட பகுதிகளில், இலங்கைப் படையின் குறுக்கீடு இல்லாமல், இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிப்பதில் உள்ள பாரம்பரிய உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது. இதில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்வது, கடல் பகுதியில் மனிதர்களாலும், பிற பொருள்களாலும் சட்டத்துக்குப் புறம்பாக நடைபெறும் எந்த ஒரு நடவடிக்கையையும் கட்டுப்படுத்துவதற்கு உதவும் என கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அகதிகள் வருகை, தமிழகத்தால் எதிர்கொள்ளப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்றாக வடிவெடுத்துள்ளதாக கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 1983-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இதுவரை நான்கு கட்டங்களில் தமிழகத்துக்கு வந்த 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள், 25 மாவட்டங்களில் உள்ள 117 முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்களை அவர் வெளியிட்டுள்ளார். இலங்கை அகதிகளுக்காக மாநில அரசு செலவிடும் தொகையை மத்திய அரசு திருப்பித்தர வேண்டும் என்றும், அகதிகளுக்காக கிலோ 57 காசு என்ற மானிய விலையில் அரிசி வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

December 20, 2007

இன்றைய குறள்

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

கருணாநிதி சோனியா சந்திப்பு

நான்கு நாள் பயணமாக புதுடெல்லி வந்துள்ள தமிழக முதல்வர் மு. கருணாநிதி, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை வியாழக்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சோனியா காந்தியுடன் நடந்த சந்திப்புக் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கிய கருணாநிதி, தமிழ்நாட்டில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட பாதிப்புக் குறித்தும், மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சினை குறித்தும் பேசியதாகத் தெரிவித்தார். உள்நாட்டுப் பாதுகாப்புத் தொடர்பாக, இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்க முடியவில்லை என்று அவர் தெரிவித்தார். தனது சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டதாகவும் கருணாநிதி தெரிவித்தார். தீவிரவாதத்தை ஒடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துவருவது குறித்து அந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கேரள முதல்வருடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படாத போதிலும், அதை முன்னேற்றமாகவே தான் கருதுவதாக கருணாநிதி கருத்துத் தெரிவித்தார். இதனிடையே, மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் ஆகியோர் தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேசினார்கள்

சிப்ஸ் சாப்பிடுவோருக்கு ஆண் குழந்தை

சாக்லேட்டுகள், இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பெண் குழந்தை பிறக்குமாம். அதேபோல, சிப்ஸ், பர்கர் போன்ற ஸ்னாக்ஸுகளை விழுங்கினால் ஆண் குழந்தை பிறக்குமாம். தென் ஆப்பிரிக்க ஆய்வு ஒன்று இந்த சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளது.தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வின்படி, இனிப்புப் பதார்த்தங்களை அதிகம் சாப்பிடுவோருக்குப் பெரும்பாலும் பெண் குழந்தைகளே பிறப்பதாகவும், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடுவோருக்கு ஆண் குழந்தைகளும் பிறக்கின்றனவாம்"

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை தேதி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள தருமபுரி மாவட்டத்தில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் பயணித்த பேருந்துக்கு ஒரு கும்பல் தீ வைத்ததில், மூன்று மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு, வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி தண்டனையை நிறைவேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000-வது ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் முறைகேடு வழக்கில், அவருக்கு எதிராக நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது, கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் தங்கள் பல்கலைக்கழக பேருந்தில் தருமபுரி மாவட்டத்தில் இலக்கியம்பட்டி அருகே வந்துகொண்டிருந்தனர். அதைத் தடுத்து நிறுத்திய ஒரு கும்பல் பேருந்துக்குத் தீ வைத்தது. அதில் சிக்கிய மூன்று மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில், அதிமுகவினர் 28 பேர் குற்றவாளிகள் என சேலம் முதலாவது செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், நெடுஞ்செழியன், ரவீந்திரன் மற்றும் முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையும், மற்ற 25 பேருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் கடந்த 6-ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந் நிலையில், சேலம் முதலாவது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம், அந்தக் குற்றவாளிகள் சிறை வைக்கப்பட்டுள்ள கோவை மத்திய சிறைக்கு ஓர் உத்தரவை அனுப்பியுள்ளார். அதில், தூக்கு தண்டனை கைதிகள் மூன்று பேரையும் வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடக்கோரி, இந்த மூன்று கைதிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சிறை தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 25 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்கள், கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு, ஜனவரி முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நம் தேசியக்கொடியும், தேசியகீதமும் மங்கையரின் உள்ளாடைக்குள்!

குஷ்புக்கு பழநி கோர்ட் நோட்டீஸ் : சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை குஷ்பு, முப்பெரும் தேவியர் சிலை அருகே காலணி அணிந்து உட்கார்ந்திருந்த போட்டோ பத்திரிகைகளில் வெளியானது. இச்செயலை கண்டித்து இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் பல ஊர்களில் உள்ள கோர்ட்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஆயக்குடியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் சார்பில் வக்கீல் தினேஷ் குமார் பழநி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தனிநபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில்,"பட விழாவின் போது தெய்வ உருவங்களுக்கு முன் காலணி அணிந்து கால்மேல் கால்போட்டு குஷ்பு உட்கார்ந்தது, வழிபாட்டுக்குரிய தெய்வ உருவங்களை அவமதிக்கும் வகையில் உள்ளது. இந்திய தண்டனை சட்டப்பட்டி இது குற்றமாகும். இதுகுறித்து அவரை விசாரிக்க வேண்டும்,' என குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரணைக்கு ஏற்ற மாஜிஸ்திரேட் சசிகலா பிப் 28-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய குஷ்புவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
எல்லாம் சரிதான். சந்தோசம்தான். இந்தக் கொடுமைக்கு நாம் யாரிடம் போய் முட்டிக்கொள்வது?

நமது தேசியக்கொடியும், தேசிய கீதமும், இந்துக்கடவுள்களும் பெண்களின் உள்ளாடைக்குள் சென்றுவிட்டதே! இதை நாம் எண்ண செய்யப் போகிறோம். கீழ்க்காணும் இணைப்பில் சென்று பார்த்தால் நண்பர்களுக்கு உண்மை விளங்கும். இதற்கு எத்தனை பேர் போர்க்கொடி தூக்கப்போகிறார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.....இந்த இணைப்பில் சென்று பார்ப்பதைக்கூட அவர்கள் வியாபாரத்திற்கான விளம்பர உத்தியாகவே எடுத்துக்கொள்வர் என நினைக்கிறேன். ஒன்று மட்டும் தெளிவாகப்புரிகிறது. நாம் குரல் எழுப்பவேண்டிய எத்தனையோ பிரச்சினைகளை விட்டுவிட்டு பிரயோஜனமில்லாதவைகளுக்காக பிதற்றிக்கொண்டிருக்கிறோம்......
இந்த மாதிரியான அநாகரீகமானவற்றை எதிர்த்து ஒவ்வொருவரும் குரல்கொடுக்கவேண்டும்.... http://www.cafepress.com/buy/hindu/-/pv_design_prod/pg_6/p_storeid.45451248/pNo_45451248/id_10795115/opt_/fpt______________D/c_70

இந்தியர்களை மலேசியா வெறுத்து பழிவாங்குவது ஏன்?

மலேசியப் பிரதமர் படாவி அங்கு வாழும் தமிழர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டிருக்கிறார். இதன் பின்னணி பயங்கரமானது. இனி அங்கு வாழும் இந்தியர்கள் கவுரவத்துடன் வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்து விட்டது. கடந்த 2005-ம் ஆண்டில் மலேசிய ராணுவத்தில் பணியாற்றிய மூர்த்தி என்ற வீரர் கொல்லப்பட் டார். அவர் உடலை முஸ்லிம்கள் நடைமுறைப்படி புதைப்பது என்றும், இல்லை இந்து முறைப்படி எரிக்க வேண்டும் என்றும் சர்ச்சை எழுந்தது. மூர்த்தி மனைவி நீதிமன்றம் சென்றார். ஆனால், ஷரிஅத் கோர்ட் வென்றது.
அதற்குப் பின் கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி படாங்ஜவா பகுதியில் மாரியம்மன் கோவில் தகர்க்கப்பட்டது. அதற்குப் பின் ஒருவாரம் கழித்து தீபாவளி நன்னாள் வந்த போது எல்லாரும் வேதனையுடன் அதைக் கொண்டாடினர். மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 3 ( பிரிவு 1) `மற்ற மதங்களை அமைதி நல்லிணக்கத்துடன் அனுசரிக்கலாம்' என்று குறிப்பிட்ட போதும், அரசமைப்புச் சட்ட விதி 12 (1) ன்படி இஸ்லாமிய கோர்ட் உத்தரவுக்கு நீதித்துறை கட்டுப்பட்டது என்றிருக்கிறது.முன்பு மகாதிர் முகமது பிரதமராக இருந்த போதே இஸ்லாமிய அடிப்படையில் நாட்டை வழி நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது உருவானதே `பூமிபுத்ரா' என்ற வார்த்தை. கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறை அமலானது.ஆனால், மலேசியாவில் வாழும் பெரும்பான்மை இந்தியர்களில் பலர் பெரிய அளவில் வசதி வாய்ப்பற்றவர்கள். படிப் படியாக கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் கற்றுத்தரும் பள்ளிகள் குறைக்கப் பட்டன. கடந்த 50 ஆண்டுகளில் பத்தாயிரம் இந்துக் கோவில்கள் அழிக்கப் பட்டதால், இந்துக்களின் கவுரவம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தோட்ட வேலை பார்க்க அழைத்துச் சென்ற மக்கள் அங்கே தொடர்ந்து வாழ்கின்றனர். இவர்களில் 70 சதவீதம் பேர் தமிழர்கள், அதே சமயம் அங்கே வர்த்தகர்கள், வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலுக்காக சென்றவர்கள், அதிகாரிகள் என்று செட்டியார்கள், மரைக்காயர்கள், இலங்கைத் தமிழர்கள் சென்றனர். மலையாளிகளும் அங்கு சென்று குடியேறினர். தற்போது, மலேசியாவின் வளம் அதிகரித்திருப்பதால், சராசரி வருமானம் அதிகரித்ததால் அங்குள்ளவர்கள் வளமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் தமிழரில் அதிகப் பணக்காரர் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்டவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் இலங்கைத் தமிழர். அதனால் தான் தற்போது போராட்டம் நடத்தும் இண்ட்ராப்' அமைப்பு தெரிவித்த தகவலில் `அரசு உயர் பதவிகளில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 40 சதவீதம் இருந்த தமிழர்கள் இன்று அதில் 2 சதவீதம் மட்டுமே என்று சுட்டிக்காட்டுகிறது. மலேசியாவில் 15 பொதுப் பல்கலை உள்ளது. அதில், மொத்தமுள்ள மாணவர்கள் 45 ஆயிரம். ஆனால் இந்தியர்கள் 5 சதவீதம் மட்டுமே' என்று குறிப்பிட்டிருக் கிறது. அதுமட்டுமல்ல, கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற மொத்த குற்றவாளிகளில் 40 சதவீதம் இந்தியர்கள் என்பதும் வேதனை தரும் தகவலாகும்.
மலேசிய மக்கள் தொகை 2.7 கோடியில் 1.6 கோடிப் பேர் மலாய் மக்கள். 50 லட்சம் பேர் சீனர்கள், 27 லட்சம் பேர் இந்தியர். மலாய் என்றழைக்கப்படும் பூமிபுத்ரர்களுக்கு' அதிக வாய்ப்பு தரும் பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.இப்போது உலக அரசியல் தலைவர்கள் பார்வை மலேசியா மீது விழுவதால் பிரதமர் படாவி சற்று சுருதி குறைந்து காணப்படுகிறாரே தவிர அடிப்படையாக இந்தியர் மீது மலேசிய அரசு வெறுப்புக் கொண்டிருக்க மூன்று காரணங்கள் உள்ளன.அவை வருமாறு:எண்ணெய் வள நாடுகள் அமைப்பான ஒ.ஐ.சி-யுடன் படாவி சேர்ந்து கொண்டு அமெரிக்க எதிர்ப்பு சக்தியாக அணிசேரா நாடுகளின் அமைப்பான நாம் மாற்றப்பட வேண்டும் என்று விரும்பினார். அதை இந்தியா ஆதரிக்கவில்லை. அமெரிக்க எதிர்ப்பு என்பதைவிட இஸ்லாமிய சக்திகளின் ஆதரவாக அணிசேரா இயக்கத்தை மாற்ற விரும்பிய படாவி செயல் முறியடிக்கப்பட்டது.`ஆசியான்' நாடுகள் கூட்டமைப்பு ஆசிய நாடுகளில் பொருளாதார இணக்கம் காண விரும்பிச் செயல்படுகிறது. இதில் இந்தியா, சீனா முக்கிய நாடுகள், சிங்கப்பூர், மலேசியாவும் அங்கம் வகிக்கின்றன. கிழக்கு ஆசியாவில் இந்து-புத்தமத கலாசார நெருக்கம் இருப்பதை இந்தியா சுட்டிக் காட்டி, அந்த அடிப்படையில் பொருளாதார வளம் காண விரும்புகிறது. இதை சிங்கப்பூர் ஆதரிக்கிறது. இம்முயற்சிக்கு சீனா ஆதரவு காட்டவில்லை, அவர்களின் கைப்பாவையாக மலேசியா இருக்கிறது. ஆசியான் நாடுகளுக்கும் பாகிஸ்தானுக்கும் அதிக சம்பந்தமில்லை, வரைபடத் தில் மேற்கே இருக்கிறது பாகிஸ் தான். மலேசியாவுக்கு ஆதரவு தருகிறது பாகிஸ்தான். இந்த அமைப்பில் பாகிஸ்தானும் அங்கம் வகிக்கிறது. சீனா, மலேசியா, பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட மலேசிய அதிபர் படாவி முக்கியப் பங்காற்றுகிறார். பீஜிங்- இஸ்லாமாபாத்- கோலாலம்பூர் கூட்டணியை அவர் விரும்புகிறார். அந்த அமைப்பில் சிங்கப்பூர்- இந்தியா - ஜப்பான் ஒரே கருத்தில் சிந்திக்கின்றன.குறிப்பாகச் சொன்னால் அமெரிக்காவுக்கு எதிராக சீனாவுக்கு ஆதரவாக செல்லும் படாவி அதனால் அங்குள்ள சீனர்களைத் தாக்கவில்லை.பெரிய அண்ணனைத் தாக்க விரும்பாமல் இந்தியர்களைத் தாக்குகிறார். இதைச் சரியாகப் புரிந்து கொண்டால் படாவி அணுகுமுறை எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம்.

December 19, 2007

இன்றைய குறள்

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

இயக்குனர் பாலாஜி சக்திவேல்

இசை - சர்.சி.வி.ராமன்

"கலையின் உன்னதமான வெளிப்பாட்டில்தான் முழுமையான மகிழ்ச்சியைக் காணமுடியும். கட்டுப்பாடில்லாத உணர்ச்சி வேகத்தின் கொந்தளிப்பில் அல்ல. பண்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடுதான் கலை எனப்படுகிறது. இசை அப்படிப்பட்ட ஓர் வெளிப்பாட்டின் முயற்சிதான்" - சர்.சி.வி. ராமன்

"மத்திய மாநில அரசுகள் ஒத்துழைத்தால் இந்திய பொருளாதார வளர்ச்சி வேகத்தை மேலும் அதிகப்படுத்த முடியும்" - பிரதமர் மன்மோகன் சிங்

இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசுகள் அர்ப்பணிப்புடன் செயற்படும் பட்சத்தில், இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய வளர்ச்சியை நிலைபெறச் செய்வதுடன், அதனை பத்து சதவீதம் உயர்த்தவும் முடியும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார். மாநில முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், உலக அளவிலான பொருளாதார நிலை குறித்து கவலையும் வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள், மாநில வாரியான நிதி ஒதுக்கீட்டை எளிமைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்திய ஆறுகளை இணைக்கும் திட்டத்தை ஒரு தேசியத் திட்டமாக அறிவித்து, அதற்காக கால வரையறையுடனான செயற்திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.

December 18, 2007

மூன்று ஹிஜிரி வருடங்களைக் கொண்ட 2008

"நம்மை நெருங்கி வரும் 2008 ஆங்கிலப் புத்தாண்டில் மூன்று ஹிஜிரி இஸ்லாமிய வருடங்களைக் கொண்டதாக இருக்கும். ஹிஜிரி 1428-ஆம் வருடத்தின் கடைசி மாதமான துல்ஹஜ்ஜின் கடைசி ஒன்பது நாட்கள் ஜனவரி 2008-லும், ஹிஜிரி 1429-ஆம் வருடம், அதனைத் தொடர்ந்து ஹிஜிரி 1430 டிசம்பர் 2008-ல் ஆரம்பமாகும். இதுபோன்ற நிகழ்வு 33 வருடங்களுக்கு ஒருமுறைதான் நடக்கும். அடுத்து 2041-ஆம் ஆண்டில்தான் மூன்று ஹிஜிரி வருடங்களைக் காணலாம்"

இன்றைய குறள்

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

கல்லூரி நண்பர்கள் - பாலாஜி சக்திவேல்

பிரதமர் மன்மோகன் சிங் - தமிழக முதல்வர் கருணாநிதி சந்திப்பு

தமிழக முதல்வர் மு. கருணாநிதி இன்று மாலை புதுடெல்லி வந்தார். சிறிது நேரத்தில் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை குறித்து விரிவாக விவாதித்ததாகத் தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் கேரள மாநில முதல்வர்கள் மீண்டும் இந்தப் பிரச்சினை பற்றிப் பேசுமாறு பிரதமர் யோசனை தெரிவித்தாக கருணாநிதி தெரிவி்த்தார். ஏற்கெனவே உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் பேச்சு நடத்தி அதில் எந்தப் பலனும் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டியபோது, மீண்டும் பேசுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். அவரது யோசனையை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்று முதல்வர் தெரிவித்தார். அதனால் பயன் ஏற்படுமா என்று கேட்டபோது, பயன் இருக்கலாம் என்று எதிர்பார்த்துத்தான் பிரதமர் பேசச் சொல்லியிருக்கிறார் என்றார் கருணாநிதி. இலங்கைக்கு ராணுவ உதவிகளை அளிப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசுடன் பேச்சு நடத்த இந்திய அதிகாரிகள் குழு ஒன்று கொழும்பு சென்றிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது குறித்தும், மலேசியத் தமிழர் பிரச்சினை குறித்தும் செய்தியாளர்கள் கேட்டபோது, இலங்கை, மலேசிய பிரச்சினைகளை மத்திய அரசு பொறுப்பேற்று அதற்கு ஆவன செய்து வருகிறது. மத்திய அரசு விவகாரங்களில் குறுக்கிட விரும்பவில்லை என்றார் முதல்வர். மலேசியாவைப் பொருத்தவரை அது அவர்களது உள்விவகாரம் அதைப்பற்றி நான் பேச விரும்பிவில்லை என்றும், அவர்கள் ஓரளவு நிம்மதியாக வாழ்வதையும் கெடுக்க விரும்பவில்லை என்றும் முதல்வர் கருத்துத் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி தர வேண்டும் என்று பிரதமரிடம் கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

மேக்கப்-புக்கு மூன்று வருடமா?

"ஒரு திருமணத்திற்கோ அல்லது ஒரு விருந்து அழைப்பிற்கோ செல்லுமுன்பு தங்களை ஒப்பனை செய்துகொள்வதற்கு சராசரியாக ஒரு மணி நேரமும் 12 நிமிஷங்களும் ஆகிறதாம். மொத்தத்தில் தங்கள் ஆயுள் காலத்தில் சுமார் மூன்று வருடத்தைப் பெண்கள் அவர்கள் வெளியில் செல்லும்போது தங்களை அலங்கரித்துக் கொள்வதில் செலவிடுகிறார்களென மிகவும் உபயோகமான ஒரு ஆய்வு தெரிவிக்கிறது"

இந்திய முன்னாள் அமைச்சர் ஜக்தீஷ் டைட்லருக்கு சீக்கியக் கலவரத்தில் பங்கு விவகாரம்

புதிய விசாரணைகளுக்கு நீதிமன்றம் உத்தரவு : இந்தியாவில் இருபது வருடங்களுக்கு முன்னர் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜக்தீஷ் டைட்லருக்கு தொடர்பு இருந்தது என்ற குற்றச்சாட்டு தொடர்பில் புதிய விசாரணைகளுக்கு தலைநகர் தில்லியிலுள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழ்ந்துவரும் முக்கிய சாட்சியான ஜஸ்பிர் சிங்கின் வாக்குமூலத்தை மத்திய புலனாய்வுத்துறை-சிபிஐபதிவுசெய்யவேண்டுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீக்கியர்களுக்கெதிரான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தியதில் டைட்லருக்கு பங்கு இருந்தது என்பதற்கு நம்பக்த்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக அரசு விசாரணையில் தெரியவந்ததை அடுத்து டைட்லர் கட்டாயத்தின் பேரில் பதவி விலகினார். இக்குற்றச்சாட்டினை டைட்லர் மறுக்கிறார்.

December 17, 2007

இயக்குனர் பாலாஜி சக்திவேல்

இன்றைய குறள்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

சுழன்றும் ஏர் பின்னது உலகம்

"உலக அரங்கில் இந்திய பொருளாதாரம் தலைநிமிர்ந்து நிற்கக் காரணம் விவசாயிகள். விவசாயத் தொழிலாளர்கள், பல்வேறு தரப்பினருடைய உழைப்பு ஆகியவைதான் காரணம். இந்தியாவில் உழைப்பு அதிகமாக உள்ளது" - ப. சிதம்பரம்

எழுச்சியுறும் இந்தியா

இந்திய பொருளாதாரத்தின் அதி வேக வளர்ச்சி குறித்து பிபிசி பல பெட்டகங்களைத் தயாரித்து வழங்குகிறது. இவை குறித்து தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டகங்களை நேயர்கள் இங்கு கேட்கலாம். முதலில் இந்தியா காணும் அதீத பொருளாதார வளர்ச்சி அங்கு கலாச்சார மாற்றங்களுக்கும் இடம் தந்துள்ளது. ஆயினும் திருமணம் என்று வரும் போது, அங்கு பெரும்பாலும் பெரியோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் மற்றும் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கே அங்கு இன்னமும் முக்கியத்துவம் காணப்படுகிறது...Please click the link....http://www.bbc.co.uk/tamil/matri.ram
இன்னும் சில ஆண்டுகளிலேயே இந்தியா பொருளாதார ரீதியில் உலகில் மூன்றாவது இடத்தை எட்டிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 1991ல் அன்றைய பிரதமர் நரசிம்மராவால் தொடங்கப் பெற்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களால் விளைந்துள்ள அசுர வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் சிறப்பானதொரு சாட்சி கோயம்புத்தூர்
இந்தியாவின் இந்த வேகமான பொருளாதார வளர்ச்சி அதன் அண்டைய நாடுகளிலும் சாதக மற்றும் பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அந்த வகையில் அது இலங்கையின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்

மலேசிய தமிழர்கள் மீதான சில குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்டன

மலேஷியாவில் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக சமீபத்தில் போராடிய இந்திய வம்சாவழித் தமிழர்களில் 31 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. தற்போது அவர்கள் மீதான கடுமையான குற்றச்சாட்டுக்கள் சில நீக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த 31 பேரில் மாணவர்களான 5 பேர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் விலக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அவர்கள் சார்பிலான சட்டத்தரணியான சிவநேசன். அதேவேளை ஏனைய 26 பேரைப் பொறுத்தவரை அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் முக்கிய குற்றச்சாட்டான, கொலைக் குற்றச்சாட்டு விலக்கப்பட்டு விட்டதாகவும், ஏனைய இரண்டு குற்றச்சாட்டுகளான, சட்டவிரோதமாகக் கூடியமை மற்றும் பொதுச் சொத்துக்கு பங்கம் விளைவித்தமை ஆகியவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இவற்றுக்கான தண்டனைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி நீதிமன்றம் கூடும் போது அறிவிக்கப்படும் என்றும் சிவநேசன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்தப் போராட்டத்தை நடத்திய மலேசிய இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழுவின் முக்கிய 5 உறுப்பினர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் ஒரு ஆட்கொணர்வு மனுவையும் தாம் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

பிரமோத் மஹாஜன் கொலை வழக்கில் அவரது சகோதரர் குற்றவாளியாக அறிவிப்பு

இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரமோத் மஹாஜன் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில், அவரது சகோதரர் குற்றவாளி என்று மும்மையிலிருக்கும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் அமைச்சரான பிரமோத் மஹாஜனை, அவரது சகோதரரான பிரவீன் மஹாஜன் சுட்டுக்கொன்றதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் மும்மையிலிருக்கும் அவரது வீட்டில் சுடப்பட்ட பிரமோத் மஹாஜன், சில நாட்கள் கழித்து மருத்துவமனையில் இறந்தார். குடும்பச் சண்டை காரணமாகவே பிரமோத் மஹாஜன் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இந்த கொலையை தான் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பிரவீன் மஹாஜன், பின்னர் நீதிமன்ற விசாரணைகளின்போது இதை மறுத்தார். அவருக்கான தண்டனை என்ன என்பதை, நீதிமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை அறிவிக்க இருக்கிறது.

December 16, 2007

கீரிப்பிள்ளை

வழக்கம் போல் முழு ஆண்டு விடுமுறைக்குக் கிராமத்தில் இருக்கும் தன் தாத்தா பாட்டி வீட்டிற்கு வந்திருந்த சுபிக்ஷா, தன் சந்தேகத்தைப் பாட்டியிடம் கேட்டாள்.
"ஏம்பாட்டி! பிள்ளைனா என்ன?" "ம்ம்! பிள்ளைன்னா, சின்னக் கொழந்தை, அதாவது பாப்பா-ன்னு அர்த்தம்" என்றாள் பாட்டி. "அப்பறம் ஏன், கிளிப்பிள்ளை, கீரிப்பிள்ளை, அணில்பிள்ளை, தென்னம்பிள்ளை-ன்னெல்லாம் சொல்றாங்க?"
பதில் சொல்லாவிட்டால் இன்று தன்னை ஒரு வேலையையும் செய்யவிடமாட்டாள் சுபிக்ஷா என்பது அந்தப் பாட்டிக்குத் தெரியும். தனக்குத் தெரிந்தவரை, தன் பாட்டி தனக்குச் சொன்ன கதைகளை தன் பேத்திக்கும் சொல்ல ஆரம்பித்தாள். "சுபிக்ஷா கண்ணு! நீ கேட்ட கேள்வி ரொம்ப அருமையான கேள்விடா செல்லம். பாட்டி இதோ சொல்றேன், சமத்தாக் கேட்டுட்டு, ஒங்க ஸ்கூல்ல உள்ள சினேகிதிங்ககிட்ட எல்லாம் போயி சொல்லணும் என்ன?" என்று ஆரம்பித்தாள்.
"பிள்ளைன்னு எல்லாத்தையும் சொல்ல மாட்டோம். பொதுவாக் குழந்தைங்களையும், குழந்தைங்க மாதிரி கூடவே வளர்க்கிற பிராணிகளயும் மட்டுந்தான் பிள்ளைன்னு சொல்லுவாங்க. பிள்ளைங்க அவங்க வளந்து பெரியவங்களானதும், தங்களோட அம்மா அப்பாவ நல்லா கவனிச்சுக்குவாங்க. தாத்தா பாட்டி ஆனதும் அவங்களுக்கு ஓடி ஆடி வேலை செய்ய முடியாது, யாராச்சும் உதவிக்குத் தேவைப்படும். அப்படிப்பட்ட நேரங்கள்ல பிள்ளைங்கதான் அவங்களுக்கு ஒத்தாசையா இருப்பாங்க. நீ சொன்ன, கிளிப்பிள்ளை, கீரிப்பிள்ளை, அணில்பிள்ளை, தென்னம்பிள்ளை எல்லாம் வயசான காலத்துல அவங்களுக்கு உதவியா இருக்கும். அதுனாலதான் அதுங்களயெல்லாம் 'பிள்ளை'னு சொல்றோம் கண்ணு!"
"அதுங்கல்லாம் எப்படி பாட்டி உதவி செய்யும்?" சுபிக்ஷா"
நாம எப்படி கோழி, நாய், பூனை, வாத்து இதெல்லாம் வளக்கிறமோ, அதே போல நீ சொன்ன இதெல்லாம் வளத்தாலும் பிற்காலத்துல பிள்ளைங்க உதவுறது மாதிரி உதவுமாம், அதுனாலதான்டா அப்படிச் சொல்றோம். விளக்கமாச் சொல்றேன் கேளு!
ஒரு கிராமத்துல ஒரு அம்மா அப்பா இருந்தாங்களாம். அவங்களுக்கு ஒரே பையன். அவனை நல்லாப் பெரிய படிப்பெல்லாம் படிக்கவச்சு வேலைக்காகப் பட்டணத்துக்கு அனுப்பி வச்சாங்களாம் அந்த அப்பா அம்மா. அவங்க பையனுக்கு சின்ன வயசா இருக்கும்போதே, அவங்க வீட்டுல ஒரு சின்னத் தென்ன மரம் நட்டு வச்சுத் தண்ணி ஊத்திகிட்டே வந்தாராம் அந்த அப்பா. இப்போ அந்த மரமும் பெரிய மரமாயிருச்சாம். அவங்க பையன் பட்டணத்துல வேலை பாக்குறதால அடிக்கடி வந்து அப்பா அம்மாவை வந்து கவனிச்சுக்க முடியலை. அந்த மாதிரி நேரங்கள்ல எல்லாம் அந்தத் தென்னைமரம்தான் பிள்ளையாம். அது பெருசா வளந்து, காய் காச்சு, இளநீர், தேங்காய், மட்டை எல்லாமே குடுத்துச்சாம். டெய்லி, அதை வித்து, அந்தக் காசு வச்சு அவங்க சாப்பிடுவாங்க. இளநீர் குடிப்பாங்க, மட்டை, ஓலை எல்லாமே அவங்களுக்கு உபயோகமா இருந்துச்சாம். அதுனாலதான் பெத்த பிள்ளைங்க தன்னோட அம்மா அப்பாவுக்கு உபயோகமா இருக்கற மாதிரியே அந்தத் தென்னை மரமும் அவங்களுக்கு உபயோகமா இருந்ததால அதுக்குப் பேரும் ‘தென்னம்பிள்ளை’ அப்படீன்னு சொல்றோம், புரிஞ்சுதா?" பாட்டி சொல்லி முடித்தாள்.
சுபிக்ஷாவுக்குத் தெரியும், பாட்டி மீதியையும் சொல்லி முடித்துவிடுவாள் என்று. மிகவும் சீரியஸாக உட்கார்ந்து 'ம்' போட்டுக் கொண்டிருந்தாள்.
"அப்பறம், ஏன் அணில் பிள்ளைன்னு சொல்றோம்னா, இராமர்னு ஒரு கடவுள், அவரு ரொம்பக் களைப்பா இருக்கறப்போ, குடிக்கவே தண்ணி கெடைக்காத அந்த நேரத்துல, ஒரு அணில் தென்னைமரத்துல ஏறி, அங்கேருந்து ஒரு இளநீர் பறிச்சு அவருக்குக் கொண்டுபோயி குடுத்துச்சாம், அதுனால அவரு ரொம்பச் சந்தோசப்பட்டு, நன்றியுணர்வோட, அதைப் பாசமா முதுகுல தடவிக் குடுத்தாராம். அதுனாலதான் அதோட முதுகுல மூணு கோடு இருக்கு. அதுலயிருந்து அதுவும் மனுசங்க இருக்குற இடத்துலயே சேந்து இருக்கறதால அணில்பிள்ளைன்னு பேரு".
"ஏம்பாட்டி! ஒரு அணில்தானே தண்ணி குடுத்துச்சு, அந்த அணில்மேல மட்டுந்தானே கோடு இருக்கணும்! எப்படி எல்லா அணில் மேலயும் கோடு இருக்கு?"
"ஏன்னா! கோடு போட்டது கடவுளாச்சே! அப்படி ஒரு அணில்மேல மட்டும் கோடு இருந்து மத்த அணில்மேல கோடு இல்லாட்டி மனுசங்க மத்ததத் துன்புறுத்தலாம் இல்லயா? அதுக்காகத்தான் எல்லா அணில் மேலயும் கோடு இருக்கு. பெரும்பாலும் நாம இருக்கற இடத்துலதான் அணிலும் இருக்கும்.
ம்ம்..அப்பறம் வேற என்ன பாக்கி?" பாட்டி.
"கிளிப்பிள்ளை" சுபிக்ஷா.
"சமத்துக்குட்டிடி நீ.
சரி! எதுக்காக கிளிப்பிள்ளைனு பேரு தெரியுமா? ஏன்னா! அது அழகா குழந்தைங்க மாதிரியே கொஞ்சிக் கொஞ்சிப் பேசும், வீட்ல அதைவளத்துப் பேசக் கத்துக் கொடுத்தோம்னா, யாரு வந்தாலும் கொஞ்சிப் பேசும். உங்க தாத்தா பாட்டி மாதிரி தனியா இந்தக் கிராமத்துல இருக்கறவங்களுக்கு ஒரு பிள்ளை மாதிரி பேச்சுத் துணைக்கு சௌகரியமா இருக்கும். வெளி ஆட்கள் யாரு வந்தாலும், வந்ததை நமக்குக் கத்திச் சொல்லிரும். அதுனாலதான் அதுக்குக் கிளிப்பிள்ளைனு பேரு".
"இனியென்ன பாக்கி இருக்கு?"
தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க... http://www.nilacharal.com/ocms/log/12170712.asp

இன்றைய குறள்

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும். வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்

அறத்துப்பால் : புறங்கூறாமை

ஹைக்கூ கவிதைகள்

1.வாழ்க்கைச் சுமைகளை
வரிசையாகச் சுமக்கும்
ஏழை விவசாயி….

குட்ஸ் வண்டி

2.வண்டுக் காதலனைக் கண்டதும்
மலருக்குப் பதட்டம்
வியர்வையாய்….

பனித்துளிகள்

3.அழுதவானம் எழுதிப்பார்க்கும்
அந்தரங்க வரிகள்….

நீரோடை

4.இந்தியத் தாயின்
இறுதிக் கண்ணீர்த்துளி....

இலங்கை

5.சொந்தமண்ணிலிருந்து
துரத்தப்பட்ட அகதி
துடுப்பற்ற பரிசல்

பிறைநிலா


வார்ப்பு.காம்-ல் எனது கவிதைகள்http://www.vaarppu.com/view.php?poem_id=949

விவாகரத்து : இலக்கிய ஆர்வம்

குடும்பத்தோடு இலக்கியக் கூட்டங்களுக்கு வருவது மன்னிக்க முடியாத பாவங்களில் ஒன்றைப் போலவே கருதப்படுகிறது. விவாகரத்து கோரி வழக்குப் போடுவதற்கு எளிய காரணம், இலக்கியத்தில் ஒருவனுக்கு ஆர்வமிருக்கிறது என்று சொன்னால் போதும் என்றே தோன்றுகிறது" - எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர்

இலங்கையில் நிரந்தர சமாதானம் எனது இறுதி ஆசைகளில் ஒன்று: சர் ஆர்தர் சி.கிளார்க்

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இனமோதல் வன்முறைகளினால் அல்லலுறும் இலங்கைத் தீவில் நிரந்தர சமாதானம் மலரவேண்டுமென்பது தனது இறுதி ஆசைகளில் ஒன்று என்று இங்கிலாந்தினைப் பிறப்பிடமாகவும், இலங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வானியல் விஞ்ஞான ஆய்வு எழுத்தாளர் சர் ஆர்தர் சி.கிளார்க் இன்று தெரிவித்திருக்கிறார். 1917 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பிரித்தானியாவில் பிறந்த "செய்மதி தொழினுட்பத்தின் தந்தை" என்று வர்ணிக்கப்படும் சர் ஆர்தர் சி.கிளார்க் கடந்த 50 வருடங்களிற்கும் மேலாக இலங்கையில் தங்கியிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வானியல் ஆய்வுக் கட்டுரைகளையும், நூற்றிற்கும் மேற்பட்ட புத்தகங்களையும் இதுவரை வெளியிட்டிருப்பதோடு பிரபலமான பல சர்வதேச விருதுகளையும், உள்ளூர் விருதுகளையும் பெற்றிருக்கிறார். தனது 90வது பிறந்த தினத்தினையொட்டி கருத்து வெளியிடும்போதே இவர் இலங்கையில் நிரந்தர சமாதானம் குறித்த தனது ஆதங்கத்தினை வெளியிட்டிருக்கிறார். செய்தித் தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்திய முன்னோடி என்ற ரீதியில் உலகப் புகழ்பெற்ற இவர், ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக 1950 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கைக்கு வந்திருந்தார். 1979 ஆம் ஆண்டு தொடக்கம் 2002 ஆம் ஆண்டுவரை இவர் கொழும்பு மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணிபுரிந்திருப்பதோடு, இலங்கைப் பிரஜை ஒருவரிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதியுயர் விருதுகளான "சாஹித்ய ரத்னா", "வித்யா ஜோதி", மற்றும் "லங்கா அபிமான்ய" போன்ற விருதுகளும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருக்கிறார். கொழும்பில் இன்று இடம்பெறும் இவரது பிறந்த தினக் கொண்டாட்டங்களில், 1965 ஆம் ஆண்டு முதன்முதலில் விண்வெளியில் இறங்கி நடந்த புகழ்பெற்ற ரஷ்ய வானியல் விஞ்ஞானியான டாக்டர் அலெக்ஸே லினோவ் விசேட அதிதியாகக் கலந்துகொள்கிறார் என்பது இங்கு சிறப்பம்சமாகும்.

டாக்டர் பத்மஸ்ரீ PB.ஸ்ரீனிவாஸ்

Powered by eSnips.com

"ஒசாமாவுடன் பணியாற்றியது கட்டுக்கடங்காத சந்தோஷம்'* சொல்கிறான் முன்னாள் கார் டிரைவர்

குவான்டனாமோ: "ஒசாமாவுடன் பணியாற்றியபோது, கட்டுக்கடங்காத சந்தோஷத்தில் இருந்தேன்' என்று, அவனுடைய முன்னாள் கார் டிரைவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, உலக வர்த்தக மையம் விமானம் கொண்டு தகர்க்கப்பட்ட பின், அதற்கு காரணமான ஒசாமா பின்லாடனை அமெரிக்கா தீவிரமாக தேட தொடங்கியது. ஆனால், இதுவரை அவன் சிக்கவேயில்லை. அதே ஆண்டில் நவம்பர் 24ம் தேதி, ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் நகரில் அமெரிக்க வீரர்கள் பல சோதனை சாவடிகளை அமைத்து வாகனங்களை சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது பிடிபட்டவன் தான் சலீம் அகமது ஹாம்தான். கியூபாவில் குவான்டனாமோ என்ற இடத்தில் அமெரிக்க கடற்படை தளம் உள்ளது. இங்குள்ள தனிமை சிறையில் ஹாம்தான் அடைக்கப்பட்டுள்ளான். அவன் மீது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடவடிக்கையின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இரண்டு முறை அவன் மீது வழக்கு நடத்தப்பட்டு, அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது முறையாக அவனை மீண்டும் நீதிபதி முன் நிறுத்த ராணுவ வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதற்கு முன் அவனிடம் விசாரணை நடத்தி, அவனது வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். அதில் அவன் கூறியிருப்பதாவது:நான், ஒசாமா பின்லாடனின் டிரைவர் மற்றும் பாதுகாவலன். 2001ம் ஆண்டு அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் விமானம் மூலம் தகர்க்கப்பட்ட போது, காந்தகாரில் உள்ள ஒரு இடத்தில் தங்கி இருந்தார். அவரையும், அவரது மகன் ஒட்டமானையும், நான் தான் காரில் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றேன். அமெரிக்கர்கள் பிடியில் அவர் சிக்கி விடக் கூடாது என்பதற்காக பல வாரங்கள், ஒவ்வொரு நகராக அவரை நான் தான் அழைத்து சென்றேன். உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட போது, குறைந்தது ஆயிரத்து 500 பேராவது இறப்பர் என ஒசாமா எதிர்பார்த்தார். ஆனால், அதற்கு மேலும் இறப்பு எண்ணிக்கை இருந்ததால், மிகவும் திருப்தி அடைந்தார். அவருக்கு விசுவாசமாக இருப்பதாக நான் பிரமாணம் எடுத்துள்ளேன். கட்டுக்கடங்காத சந்தோஷத்துடன் அவரிடம் பணியாற்றினேன்.இவ்வாறு ஹாம்தான் கூறியுள்ளான்.

கடிகார முட்களைப்போல் தி.மு.க.,வில் அழகிரி, ஸ்டாலின் செயல்பட கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல்

திருநெல்வேலி : கடிகாரத்தின் இரண்டு முட்களைப்போல ஸ்டாலினும் அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என நெல்லை தி.மு.க.,இளைஞரணி மாநாட்டில் நடந்த காவியக்கலைஞர் நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து வலியுறுத்தினார். அவர் மேலும் பேசியதாவது: இந்த மாநாட்டுக்கு வந்துள்ள இளைஞர்களின் கட்டுப்பாட்டை பார்த்து மகிழ்ந்து வியந்தேன். தமிழகத்தில் பிறந்ததுபாயும் ஒரே நதி தாமிரபரணி. அத்தகைய சிறப்பு பெற்ற நெல்லையில் இந்த மாநாடு நடத்துவதுசிறப்பானதாகும். கருணாநிதியின் தாயார் சிந்திய கண்ணீர், கருணாநிதியின் வியர்வை, ஸ்டாலின் வடித்த ரத்தம் என மூன்று தலைமுறை தியாகங்கள் இந்த இயக்கம் வலுப்பெற்றுள்ளது. கருணாநிதி ஒரு அபூர்வகலவை. ஒரு நாவலாசிரியராக இருந்து 15 நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளார். 1969-70களில் அவர் தாக்கல் செய்த பட்ஜெட் மதிப்பு 280.91 கோடி. 2007ல் அவர் தாக்கல் செய்த 15வது பட்ஜெட்டின் மதிப்பு ரூ 46 ஆயிரத்து 592 கோடிஆகும். தனிமனிதர் போனால் இயக்கம் அழிந்துவிடாது. இந்த இயக்கம் இன்னும் நுாற்றாண்டுக்குதொடர வேண்டும். ஒரு கடிகாரத்திற்கு சிறிய முள், பெரிய முள் தேவை. இரண்டு முட்களும் இல்லையென்றால் நேரத்தை காட்ட முடியாது. ஸ்டாலினும், அழகிரியும் இரண்டு முட்களைப்போல இந்த இயக்கத்திற்கு தேவை. திராவிட இயக்கத்தின் மீதுஆசை உள்ளவன் என்ற முறையில் இதனை கேட்டுக்கொள்கிறேன். இந்த மாநாடு புதிய தலைமுறைகளை உருவாக்கும் மாநாடாக மாற வேண்டும் என்றார்

December 15, 2007

இன்றைய குறள்

அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை

ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை 'இவனைச் சுமப்பதும் அறமே' என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது

அறத்துப்பால் : புறங்கூறாமை

உன்னதமான சங்கீதம்

உன்னதமான சங்கீதம் என்பது, இனிமையான குரலில் வழிந்தோடும் இசையல்ல. எண்ண ஓட்டத்தைத் தெளிய வைத்து, மனதையும் புத்தியையும் இணைக்கும் மந்திரம் அது. சிந்தனையைச் செம்மைப்படுத்தாத எந்த இசையும், அது எத்தனை இனிமையான குரலில் இருந்து வந்தாலும், சங்கீதமாகக் கருத முடியாது" - பத்மஸ்ரீ டாக்டர் பிரபா ஆத்ரே, ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்

தமிழக மீனவர்கள் ஆந்திராவில் கைதாகி விடுதலை

தமிழக தலைநகர் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த சுமார் 150 மீனவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கச் சென்றார்கள். அவர்கள் கடலில் தொழில் செய்து கொண்டிருந்தபோது, வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக, மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டது. இதையடுத்து, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அந்த மீனவர்கள் பாதுகாப்பு தேடி கரைக்குத் திரும்பியபோது, தவறுதலாக ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா துறைமுக எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆந்திர போலீசார் மீனவர்களைக் கைது செய்து, அவர்களிடமிருந்து பெருமளவு மீன்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். இந்த நிலையில், தமிழக அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக அந்த மீனவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. மீனவர்களை மீட்பதற்காக, காக்கிநாடா சென்றுள்ள, ராயபுரம் மீன்பிடித் துறைமுகத்துக்குப் பொறுப்பு வகிக்கும் தமிழக மீன்வளத் துறையின் உதவி இயக்குநர் எம். நஸீருல்லா இதுதொடர்பாக பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/2115.ram

அவசரகால நிலையை அகற்றினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்

பாகிஸ்தான் அதிபர் பெர்வேஷ் முஷாரஃப் அவர்கள் கடந்த மாதம் முதல் நாட்டில் போட்டிருந்த அவசரகால நிலையை விலக்கியுள்ளார். கூடவே அரசியல் சாசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் தன்னால் நியமிக்கப்பட்டிருந்தவர்களிற்கு நாட்டின் முக்கிய நீதிபதிப் பதவிகளுக்கான சத்தியப் பிரமாணங்களையும் செய்து வைத்துள்ளார். இப்படியொரு நிலையில் அவசரகாலச் சட்டத்தை விலக்குவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்கிறார்கள் அதிபரை விமர்சிப்பவர்கள். அவசரகால நிலைமையின் போது பதவி விலக்கப்பட்ட பக்கச்சார்பற்ற நீதிபதிகள் மீண்டும் பதவியில் அமர்த்தப்படப் போவதில்லை. கூடவே செய்தி ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்கப் போகின்றன. இந்த முன்னெடுப்புகள் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரம் உள்ள நிலையில் வந்துள்ளன.

December 14, 2007

வசந்தகால நதிகளிலே!

வசந்தகால கோலங்கள்

இயக்குனர் பாலாஜி சக்திவேல்

இன்றைய குறள்

துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு

நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?

அறத்துப்பால் : புறங்கூறாமை

தி.மு.க., அ.தி.மு.க தவிர மற்ற எந்தக் கட்சிகளும் எங்களுக்குத் தீண்டத் தகாதவை அல்ல - டாக்டர் ராமதாஸ்

தி.மு.க., அ.தி.மு.க தவிர மற்ற எந்தக் கட்சிகளும் எங்களுக்குத் தீண்டத் தகாதவை அல்ல. 2009-ல் இரண்டுக்கும் மாற்றாக, ஒரு பலமான அணி உருவாகப் பாடுபடுவோம். அதுவரை தி.மு.க. அரசின் மீதான விமர்சனங்கள் தொடரும். அது தி.மு.க.வுக்குக் கசப்பாக இருந்தாலும் கவலைப்பட மாட்டோம்" - டாக்டர் ராமதாஸ்

புவி வெப்பமடைதல் தொடர்பிலான ஐ.நா. மாநாடு நிறைவு நேரம் தாண்டியும் நீடிக்கிறது

புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றம் தொடர்பில் சமரச உடன்பாடு ஒன்றைக் காண்பதற்கான முயற்சியில் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ள நிலையில், பாலியில் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு இரவாகியும் தொடர்கிறது. மாநாடு முடிவடைவதற்கான கால எல்லை கடந்துவிட்ட நிலையில், சட்ட ரீதியான இலக்குகளை நிர்ணயிக்க முடியுமா என்பதற்கான முட்டுக்கட்டைகளை நீக்க முடியும் என்பதில் சமரசப் பேச்சுவார்த்தையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த இலக்குகளை நிர்ணயிப்பதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. 2020 அளவில் கரியமில வாயுவின் வெளியேற்றத்தில் 40 வீதம் வரை கட்டாயமான வெட்டு வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூறுகின்றன. வறிய நாடுகள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதற்காக அவற்றுக்கு உதவுவதற்கான கட்டமைப்பு மற்றும் ஒரு புதிய ஒப்பந்த வேலைகளுக்கான நிதி ஆகியவை உட்பட இறுதி ஆவணத்துக்கான பெரும்பாலான எழுத்து வேலைகள் எல்லாம் உடன்பாடு காணப்பட்டு விட்டதாக பாலியில் இருக்கின்ற பிபிசியின் சுற்றுச்சூழல் நிருபர் கூறுகிறார்.

December 13, 2007

பொண்ணுங்க மாறிட்டாங்க!


"திண்ணையில் பிரசுரமான எனது சிறுகதை"

ஸ்வேதா! என்னாச்சு ஒனக்கு? ஒம்பின்னாடியே எத்தனை நாள் இப்படி நாய் மாதிரி அலையிறது? ப்ளீஸ்… நீ இந்த மாதிரி சைலன்ட்டா இருந்தா நான் அப்பறம் காலேஜ்-க்கே வரமாட்டேன். என்னோட ஃபியூச்சரே ஸ்பாய்ல் ஆனாலும் பரவால்ல! இந்தக் காலேஜ் முழுக்க என்ன பேசுறானுக தெரியுமா? ‘என்னாச்சு மச்சான் ஒன்னோட ஆளு ஸ்வேதா வேற யாரையோ கரெக்ட் பண்ணிட்டா போல. ரெண்டரை வருசமா ஒங்கிட்ட பழகிட்டுருந்தா, இப்போ ரெண்டு நாளைக்கு முன்னாடி அவளையும் கூடவே ஸ்மாட்டான ஒரு ஹீரோவையும் அஷ்;டலட்சுமி கோயில்ல பாத்தேன்னானுக’. நான் நம்பல ஸ்வேதா. ஆனா நீ எங்கிட்ட ஒரு மாசமா பேசாம இருக்கறதப் பாத்தா எனக்கே கொஞ்சம் டவுட்டு வரு..து..” ராஜேஷ் ஸ்வேதாவின் கையைப்பிடித்தான்.

“ஸோ…நீங்க டவுட் பட்டா நாங்க பேசிறணுமா? மொதல்ல இந்த மாதிரி காலேஜ் காம்பஸ்-குள்ள இன்டீசன்ட்டா நடந்துக்கறத ஸ்டாப் பண்ணு. ப்ளீஸ்.. என்னெ தொந்தரவு பண்ணாத. ஒன்னோட ஃப்ரண்ட்ஸ் சொன்னதுல எந்த டவுட்டும் இல்ல. நான் இன்னொருத்தர லவ் பண்றேன். அவரத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். வீட்ல எல்லாருக்கும் சொல்லிட்டேன். வர்ற செமஸ்டர் முடிஞ்சதும் கல்யாணம். சாரி….ராஜேஷ்! நீ அந்த மாதிரி நெனச்சு இத்தனை நாளா எங்கிட்ட பழகிருந்தா என்னெ மன்னிச்சுரு. எனக்கும் ஒம்மேல அந்த மாதிரி கொஞ்சம் எண்ணம் இருந்தது உண்மைதான். ஆனா நான் தனியா திங்க் பண்ணிப் பாத்தப்போ அவருதான் எனக்கு பொருத்தம்னு தோணுது. இனி என்னெப் பாக்காத, பேசாத. எக்ஸ்ட்ரீம்லி சாரி” ஸ்வேதா அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

இதை ராஜேஷ் கொஞ்சங்கூட எதிர்பார்க்காதவனாய் வாய் பேசமுடியாமல் அந்த இடத்தை விட்டு கண் கலங்க நகர்ந்தான்.

“ஏய்!…இதெல்லாம் ஒனக்குத் தேவையாடா? நீ காலேஜ்-ல ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கி என்னடா செய்ய? அவ்வளவு பேருக்குமே நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கணு தெரியுமேடா. இப்ப என்ன செய்யப்போற? போய் தூக்குமாட்டிட்டு சாவுடா. டேய்! இந்த மாதிரி பொண்ணுங்கள நம்பாதடா, பொண்ணுங்க முன்னாடி மாதிரி இல்ல, இப்பல்லாம் ரொம்ப மாறிட்டாளுங்கடான்னேன். கேட்டியா நீ! இப்ப முட்டிகிட்டு சாவுடா”. நண்பர்கள் அனைவரும் வழக்கம்போல் ஒருமையில் அவளையும் சேர்த்துத் திட்டினார்கள்.

“இவளுக்குத்தான் அறிவு இல்ல, அந்த டாபருக்கு புத்தி எங்கடா போச்சு. நீங்க லவ் பண்றது தெரிஞ்சும்... இவளோட சுத்துறான்னா, அவன் சரியான சோமாறிடா. மச்சான் அவன் எந்த ஏரியாடா? அட்லீஸ்ட் எந்தக் காலேஜ்-னாச்சும் யாருக்காவது தெரியுமாடா? மவனே அந்தப் பொறம்போக்கெ தீத்துடுவோம் மச்சான்.

“ஏய்! அதெல்லாம் வேணாண்டா. எனக்காக நீங்க எதாச்சும் செய்யணுன்னா ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்கடா. அவங்கிட்ட என்னோட மேட்டர மட்டும் பக்குவமா சொல்லி, அவள விட்டுறச் சொல்லுங்கடா. அவன் மனசு வச்சா நடக்கும் மச்சான் ப்ளீஸ்” ராஜேஷ் வெட்கத்தை விட்டுச் சொன்னான்.

“தோடா! என்ன காதல் பிச்சையா? இதெல்லாம் வேலைக்கி ஆவாது மச்சான். மவனே! கையக் கால எடுத்துருவோம் எனக்கு ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆள் இருக்குடா” ஒரு மேதாவி சொல்லி முடித்தார்.

ஒரு வழியாக ராஜேஷ்-ஸ்வேதா விசயத்தை அவனிடம் பக்குவமாகச் சொல்ல ஒத்துக்கொண்டார்கள். செமஸ்டர் தொடங்கியது. அனைவருமே படிப்பிலும், தேர்விலும் மும்முரமாக இருந்தனர். ஒரு நாள் கல்லூரி முடிந்து மொத்தமாக வெளியே வந்த ராஜேஷின் நண்பர்கள் அந்தக்காட்சியைக் கண்டு அதிர்ந்து போயினர்.

ஒரு பார்வையற்ற வாலிபனுக்கு உதவுவதற்காக, அந்த வாலிபனின் கையைப்பிடித்துக்கொண்டு, போக்குவரத்து நிறைந்த அந்த சாலையை, ராஜேஷ் கடந்து கொண்டிருந்தான். ஸ்வேதாவோடு அஷ்டலட்சுமி கோவிலில் பார்த்த அந்த வாலிபன் பார்வையற்றவன் என்பது அப்போது யாருக்குமே தெரியாது.

அடுத்த நாள் கல்லூரி சென்ற ராஜேஷ் தன் நண்பர்கள் யாருமே தன் கண்ணில் படவில்லையென்பதால் அனைவரையும் ஒரு வழியாகத் தேடிக் கண்டுபிடித்தான்.

“மச்சான் என்னெ மன்னிச்சுருங்கடா! ஒங்களயெல்லாம் என்னால மறக்க முடியாதுடா. நீங்க நெனக்கிறமாதிரி எனக்கு ஒங்கமேல கோபம் இல்லடா. ஒரு தப்பான தகவல் ஏன் குடுத்தோம்னு நீங்க ஃபீல் பண்றது எனக்குப் புரியுது மச்சான். ஆனா தப்பு அங்க இல்ல மச்சான், எம்மேலதான்டா. ஸ்வேதா என்னெ முழுசா லவ் பண்ணலடா. அப்படி ஒரு ஃபீலிங் இருந்ததென்னமோ உண்மைதான்டா. ஆனா இப்ப எனக்கு எல்லா மேட்டரும் தெரிஞ்சு போச்சுடா. இனிமே அவளை நான் நெனைச்சுப் பாக்கக்கூட அருகதை இல்லடா. அவ ரொம்ப பெரிய மனசு உள்ளவ மச்சான். நீங்க சொன்ன மாதிரி பொண்ணுங்க ரொம்ப மாறிட்டாங்கடா. முன்னாடி மாதிரியெல்லாம் இல்லேங்கறது நூத்துக்கு நூறு உண்மைடா.

“டேய்! என்னடா புதிர் போடுற? என்னடா ஆச்சு ஒனக்கு? மாறிட்டாங்கங்குற, பெரிய மனசுங்குற.. ம்ம்...என்ன?”

ஆமடா மச்சான்! அவ அந்த ஹீரோவ லவ் பண்றாடா. பார்வை இல்லேன்னு தெரிஞ்சும் எந்தப்பொண்ணுடா லவ் பண்ணுவா? நம்மதான்டா பொண்ணுகள தப்பாவே கணக்குப்போட்டு வச்சுருக்கோம். அவ, அவளோட வாழ்க்கையையே அவனுக்கு குடுக்க நெனைக்கிறப்போ, ஆஃப்டர் ஆல் என்னோட லவ் என்ன மச்சான் பெருசு? அவனுக்கு எதோ ஜாப் சம்மந்தமா எக்ஜாம் எழுதறதுக்கு ஹெல்ப் கேட்டு ஒரு விளம்பரம் வந்திருக்கு. இவ ஹெல்ப் பண்ணிருக்கா. அவனுக்கு அந்த வேலை ஓகே ஆயிடுச்சு. அப்பறம் அவனுக்கு நெறைய எய்ம் இருக்கு மச்சான், ஐஏஎஸ் எழுதணுங்கறான். ப்ரிபேர் பண்ணிகிட்டுருக்கான். இன்னும் என்னென்னமோ சாதிக்கணுங்கறான். இப்படிப்பட்ட பார்வையில்லாத ஒரு இளைஞனோட கனவுகள முழுசா பூர்த்தி செய்ய ஸ்வேதா முழு மூச்சா இறங்கிட்டாடா. பார்வை இல்லாட்டிக்கூட அவனோட தைரியம், லட்சியம், கனவு, இவளோட ஹியூமானிடி இதெல்லாம் பாக்கறப்போ நாமெல்லாம் எங்கேயோ இருக்கோம் மச்சான். காதல் கீதல் எல்லாத்தயும் விட வாழ்க்கையில எதையாவது சாதிக்கணுங்கற ஒரு வைராக்கியந்தான்டா முன்னாடி நிக்கிது. அவனுக்கு நெறைய உதவிகள் செஞ்சுகிட்டுருக்கா மச்சான். அப்படியே அவங்களுக்குள்ள நல்ல ஒரு அன்டர்ஸ்டேன்டிங் ஆகி, அது மேரேஜ் வரைக்கும் போய்டுச்சு… எப்படியோ நல்லாருக்கட்டும் மச்சான். ஷீ இஸ் ரியலி க்ரேட் மச்சான். ராஜேஷால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.

நண்பர்களின் தோள்களில் சாய்ந்து கொண்டான்.

இன்றைய குறள்

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்

அறத்துப்பால் : புறங்கூறாமை

ஜெயலலிதா சொல்கிறார்!

என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படவில்லை. பாதுகாப்பு கொடுத்திருப்பதாக ஏதோ சொல்கிறார்கள். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. என்னவென்று தெரியவில்லை. அது எப்படி சென்னையில், தமிழ்நாட்டில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் என்னுடைய இல்லத்தை நோக்கியே வந்து கொண்டிருக்கிறார்கள்!
- ஜெ. ஜெயலலிதா

இலங்கைக்கான பிரிட்டனின் தூதரின் கருத்துகளுக்கு இலங்கை அரசு கண்டனம்

இலங்கை அரசின் வெளியுறவுச் செயலர் பாலித கோஹனஇலங்கைக்கான பிரிட்டிஷ் தூதர் டொமினிக் சில்கோட் கடந்த திங்களன்று ஒரு கூட்டத்தில் தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பாக இலங்கை அரசு தனது முறையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. விடுதலைப்புலிளின் கோரிக்கைகளைப் பற்றிக் குறிப்பிட்ட சில்கோட் அவர்கள் , தமிழ்த்தாயகம் என்ற அரசியல் அபிலாஷையே நியாயத்தன்மையற்றது என்று தான் கூறமாட்டேன் என்று கூறியிருந்தார். சில்கோட்டை வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைத்த இலங்கை ஆட்சியாளர்கள், அவர்களது அதிருப்தியை வெளியிட்டனர். பிரிட்டிஷ் அரசு தனி நாடு ஒன்று உருவாக்கப்படுவதை உறுதியாக நிராகரித்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். அரசியல் அபிலாஷைகள் நியாயமான வழிகள் மூலம் தெரிவிக்கப்படவேண்டும் என்ற பொருள்படவே தான் இதைக் கூறியிருந்ததாக சில்கோட் கூறினார்

December 12, 2007

சரண்யா பாக்யராஜ்

இன்றைய குறள்

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்

பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்

அறத்துப்பால் : புறங்கூறாமை

ஐ.ஐ.எம்- (IIM)மின் ஊழல்

தினம் தினம் பேப்பர்களில் வருகிற செய்திகளைப் பார்த்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறது. நிர்வாகப் படிப்பான M.B.A. பயிற்சி தரும் உயர் கல்வி நிறூவனங்களில் (Indian Institute of Management) நுழைவுத் தேர்வில் மாணவர்களுக்குப் பதிலாக கெட்டிக்காரர்களை டம்மியாக அமர்த்தித் தர ஏஜென்ஸிகள் இருக்கின்றனவாம். பீஹார், உ.பி. மாநிலங்களில். இறுதித் தேர்வுக்கும் ஏற்பாடு செய்து விடுவார்கள் போல. இந்த உயர் படிப்பு “படித்து” வெளி வரப்போகும் மாணவர்கள்தாம் எதிர்காலத்தில் நிர்வாகிகளாக உயர் பதவிகளில் அமரப்போகிறார்கள். ஏற்கெனவே, நமது அமைப்புகளில் நேர்மை கொடி கட்டிப் பறக்கிறது. இனி கேட்கவே வேண்டாம்

இந்தியாவின் வேலை செய்திறன் பற்றாக்குறை குறித்த சந்திப்பு

இந்தியாவின் வேலை செய்திறன்களில் ஏற்பட்டு வரும் பற்றாக்குறை பிரச்சினைகள் குறித்து இந்தியாவின் அரசியல் தலைவர்களும், தொழில்துறை தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்று, இந்தியத் தலைநகர் புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்திய தொழில் துறையின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த கலந்துரையாடலில் பேசிய பலரும் கல்வி இன்மையும், போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமையுமே இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்று கருத்து தெரிவித்தனர். 2012 ஆண்டில், இந்தியாவின் பணியாளர் பற்றாக்குறையை நிறைவு செய்ய வேண்டுமானால், ஐந்து லட்சம் பொறியாளர்களும், ஐந்து லட்சம் மருத்துவர்களும் தேவைப்படுவார்கள் என்று சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் பழமையான தொழிலாளர் நல சட்டங்கள் பாரதூரமான அளவில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தொழிலதிபர்கள் கோருவதாக, தில்லியில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்

December 11, 2007

இன்றைய குறள்

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்

ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்

அறத்துப்பால் : புறங்கூறாமை

ஆண் குழந்தை வேண்டுமா அல்லது பெண் குழந்தை வேண்டுமா?

"சாக்லேட்டுகள், இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பெண் குழந்தை பிறக்குமாம். அதேபோல, சிப்ஸ், பர்கர் போன்ற ஸ்னாக்ஸுகளை விழுங்கினால் ஆண் குழந்தை பிறக்குமாம். தென் ஆப்பிரிக்க ஆய்வு ஒன்று இந்த சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளது"

பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அத்வானியை பா.ஜ.க அறிவித்தது

இந்திய நாடாளுமன்றத்துக்கு அடுத்து வரக்கூடிய தேர்தலில், பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக எல். கே. அத்வானி அவர்களை அந்தக் கட்சி அறிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்துக்கான அடுத்த தேர்தல் 2009 ஆம் ஆண்டிலேயே நடக்கவுள்ள இன்றைய சூழ்நிலையில், இந்த அவசர அறிவிப்பு ஏன் என்ற கேள்வி இந்தியாவில் பலதரப்பாலும் எழுப்பப்பட்டுள்ளது. அதேவேளை குஜராத் தேர்தலில் நரேந்திர மோடி அவர்கள் பெரும் வெற்றியைப் பெறும் தருணத்தில், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தனது பெயரை அறிவிக்குமாறு அவர் கோரலாம் என்ற சந்தேகத்திலேயே, அதற்கு முன்னதாக இப்படியான அறிவிப்பு வந்துள்ளதாகவும் சில தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால், அத்வானி அவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை, மூத்த பத்திரிகையளரான சோ. இராமசாமி வரவேற்றுள்ளார். அதேவேளை அரசாங்கம் எதிர்க்கொள்ளும் நிலைமைகள் காரணமாக, ஆளும் காங்கிரஸ் கட்சியே முன்கூட்டியே தேர்தலை அறிவிக்கும் நிலையும் உருவாகலாம், என்று கூறிய சோ அவர்கள், அதனாலேயே இந்த அறிவிப்பை பா.ஜ.க முன்கூட்டியே வெளியிட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். இந்த விடயம் குறித்த சோ அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

மின்சார பற்றாக்குறை விவகாரம்: பாமக - திமுக முறுகல்

திமுக-பாமக தலைவர்கள்தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சினை, பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரை மட்டுமன்றி, அரசியல் கூட்டணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி, மின்சாரப் பற்றாக்குறை பிரச்சினையில் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளது. தமிழக மின்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கடலூர் மாவட்டம் தியாகவள்ளி பகுதியில் தனியார் மின் நிறுவனத்தின் சார்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையம் தொடர்பாக திமுக – பாமக இடையே சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, ஆர்க்காடு வீராசாமி மற்றும் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

மலேசியத் தமிழர்களின் போராட்டம் தேவையா?

December 10, 2007

இலங்கை

மு.க.ஸ்டாலின் முதல்வராவாரா?

இன்றைய குறள்

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்

நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு

அறத்துப்பால் : புறங்கூறாமை

சரண்யா பாக்யராஜ்

கிசு கிசு

எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜனின் 80-வது பிறந்த நாள் விழாவில் விழுந்த கிசு கிசு. ரா.கி.ர.விடம் யார் வேலை கேட்டு வந்தாலும் முதலில் அவர்களது பெயரைக் கேட்பாராம். இப்படித்தான் ஒருவர் தனது பெயர் ரங்கராஜன் என்றதும் ரா.கி. "முதல்ல உன் பெயரை மாத்துப்பா, அப்புறம் நீ நல்ல கதை எழுதி பேர் வாங்கிடுவ, அது நான்தான்னு எல்லாரும் என்னைப் பாராட்டுவாங்க" என்றாராம். அந்த ரங்கராஜனும் திருமணத்திற்குப் பிறகு பெயரை மாற்றிக்கொண்டு கதை எழுத ஆரம்பித்தாராம். அவர் வேறு யாருமில்லை பிரபல எழுத்தாளர் சுஜாதாதான்

சர்வதேச சமூகம் குறித்து பாகிஸ்தான் நீதிபதி வருத்தம்

பாகிஸ்தானில் நிலவும் நிலைமைகளைச் சரி செய்யப் போதுமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ளவில்லை என்று அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் விமர்சித்துள்ளார். அதிபர் முஷாரஃப் அவர்களால் நெருக்கடி நிலைச் சட்டத்தின் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதியான ராணா பகவான் தாஸ் அவர்களே, பிபிசிக்கு அளித்த அபூர்வமான பேட்டி ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளார். தாமும், தம்முடன் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளும் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டு, சட்டத்தின் மாட்சிமை மீண்டும் அமல்படுத்தப்படாவிட்டால், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல்கள் நேர்மையாகவும், நியாயமானதாகவும் இருக்காது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். எந்தவிதமான சட்ட முகாந்திரமும் இல்லாமல், தாமும் தமது சக நீதிபதிகளும் ஏறக்குறைய வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

அமைதிக்கான நோபல் பரிசு அல்கோருக்கு வழங்கப்பட்டது

அல் கோர் உலக பருவநிலை மாற்றம் குறித்த நாடுகள் இடையிலான ஐ.நா.மன்ற செயற்குழுவான ஐ.பி.சி.சி.யும் முன்னாள் அமெரிக்கத் துணையதிபர் அல் கோர் அவர்களும் ஒஸ்லோவில் நடந்த வைபவம் ஒன்றில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்டனர். புவி மொத்தத்துக்குமான ஒரு நெருக்கடி நிலையை உலகம் எதிர்கொள்கிறது என்று அல்கோர் தெரிவித்தார். காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க அமெரிக்காவும் சீனாவும் மிக தைரியமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் ஒருவரின் செயற்பாட்டை குறிப்பிட்டு மற்றவர் சாக்கு சொல்வதை இருநாடுகளும் நிறுத்த வேண்டும் என்றும் அல்கோர் குறிப்பிட்டுள்ளார்

December 09, 2007

"எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்" அண்ணா கண்ணன் - நேர்முகம் 2

நான் நிலாச்சாரலுக்காக எடுத்த செவ்வி : முதல்பகுதி கடந்த வாரம் பிரசுரமானது நினைவிருக்கலாம். இரண்டுக்குமே இடது பக்கதில் இணைப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

தங்களின் படைப்பால் இதுவரை ஏதாவது சர்ச்சை அல்லது சுவாரஸ்யமான சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறீர்களா?

கவிதையைப் பரிசோதனைக்கு உரிய ஒன்றாக நான் பார்த்து வருகிறேன். என் பள்ளி நாள்களில் என் பள்ளி ஆசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் ஏற்பாட்டில் நடந்த கவிதைப் பட்டிமன்றம் ஒன்றுக்கு நடுவராக இருந்தேன். 1995-ல் கின்னஸ் சாதனைக்காகக் கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை 48 மணிநேரத் தொடர் கவியரங்கம் ஒன்றை நடத்தியது. அதில் சுமார் 30 கவிஞர்கள், ஒருவர் மாற்றி ஒருவர் கவிதை வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதில் நானும் கலந்துகொண்டேன். கவிதையை வடிவ ரீதியாகப் பல சோதனைகளுக்கு உள்ளாக்கியுள்ளேன். சித்திரக் கவிதைகள் எழுதியது அப்படித்தான். தலைகீழாகப் படித்தால் அதே பாடல் வரும் மாலை மாற்று, உதடு ஒட்டாமல் பாடும் நீரோட்டகம், உதடு ஒட்டிப் பாடும் ஒட்டியம், வரிகள் வளைந்து வளைந்து செல்லும் கோமூத்திரி எனப் பல சித்திரக் கவிகள் படைத்துள்ளேன். பலராலும் அவற்றை எளிதில் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. நானே விளக்கம் அளிக்க வேண்டிய நிலை இருந்தது. பிறகு, அத்தகைய கவிதைகளைப் படைப்பதில்லை. பெண் கவிஞர்களின் படைப்புகள் பற்றிய என் பார்வையைக் 'கவிதாயினி' என்ற தலைப்பில் அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தேன். அப்போது, யோனி, முலை எனப் பாலியல் சொற்களைப் பயன்படுத்திக் கவிதை புனைவது குறித்துக் கடும் விமர்சனம் இருந்தது. ஆனால், அது, படைப்பாளியின் உரிமை. அது, படைப்புக்குத் தேவையாக இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும் என அந்தப் போக்கை நான் ஆதரித்து எழுதினேன். அது குறித்துச் சிலர், குறைப்பட்டுக் கொண்டார்கள். இதயம் பேசுகிறது வார இதழில் வயது வந்தவர்களுக்கு மட்டுமான உள்ளடக்கத்தோடு, ஓர் இலவச இணைப்பு அளித்து வந்த நேரம். அதில் நான் சில கவிதைகள் எழுதினேன். 'இல்லை, ஆனால் இருக்கு!' என்ற கவிதைக்கு அமோக வரவேற்பு கிட்டியது. அது, கிளாசிக்கலாக இருந்தது என்று சிலர், வெகு காலத்திற்குப் பிறகும் பாராட்டினார்கள். ஆனால், 'அந்த' மாதிரி கவிதைகளை எப்படி எழுதலாம்.... எனக் கண்டனங்களும் எழுந்தன. எழுத்தாளர் மாலனின் திசைகள் மின்னிதழில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் எப்படி இருக்கும்? என்ற கருவில் ஒரு கட்டுரை எழுதினேன். அதில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்ததோடு சாதகமாகவும் பாதகமாகவும் சில கருத்துகளை வைத்தேன். 'அடுத்த 50-ஆவது ஆண்டிற்குள், நான் சொன்னவற்றுள் ஏதேனும் ஒன்று நடக்காது போனாலும் நான் என் தலையை மொட்டை அடித்துக்கொள்கிறேன், அப்போது என் தலையில் முடி இருந்தால்' என்று முடித்திருந்தேன். கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆயினும் சிலர், நான், எதிர்மறையாகக் கருத்து தெரிவித்ததற்கு வருந்தினார்கள். அந்தக் கட்டுரையில் தமிழ், செம்மொழி அந்தஸ்து பெறும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதன்படியே தமிழ், செம்மொழி ஆகிவிட்டது.


தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில், இங்கிலாந்தின் இன்னொரு மாநிலம்தான் தமிழகம் என்று எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதுபற்றி உங்கள் கருத்து?

தமிழகத்தில் ஆங்கிலத் தாக்கம் அதிகம் என்பது ஊரறிந்த உண்மை. தாங்கள் கலப்புத் தமிழில் பேசுவதோடு மட்டுமின்றி, யாரேனும் நல்ல தமிழில் பேசினால், அவரைக் கேலி செய்து, பிழைக்கத் தெரியாத ஆள் என முத்திரை குத்தும் குணம் பலரிடமும் உள்ளது. இது, இரட்டைக் குற்றம். மிகவும் போலித்தனமான ஒரு வாழ்வை இங்கே பலரும் வாழ்கிறார்கள். ஆங்கிலத்திலோ, தமிழிலோ தனித்துப் பேசும் வல்லமை இல்லாமல், இரண்டையும் கலந்து பேசித் திரிகிறார்கள். இது, தமிழனின் மொழியாற்றல் வீழ்ச்சி அடைந்துள்ளதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்றைய சிறுவர்களிடம் பெற்றோர் - ஆசிரியர் - ஊடகங்கள் - சமூகம் என ஒட்டுமொத்தமாக ஆங்கிலத்தைத் திணித்து வருகிறார்கள். இது, அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழுக்குப் பெரும் இழப்பை அளிக்கும். இங்கிலாந்தின் இன்னொரு மாநிலம்தான் தமிழகம் என்று எழுத்தாளர் பிரபஞ்சன் கூறியிருப்பதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எழுத்தாளர்கள் பிரபலமாகும் போது ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாகிவிடுகிற வாய்ப்புகள் ஏற்படுகின்றனவே? இன்றைய சூழலில் அண்ணாகண்ணன் எப்படி?

அரசியல் என்பதை நேரிய நிர்வாகம், சீரிய வழிநடத்தல், ஒளிவு மறைவற்ற மக்களாட்சி என உயர்ந்த தத்துவங்களின் அடிப்படையில் நான் காண்கிறேன். அத்தகைய அரசியலில் எனக்கு ஆர்வம் உண்டு. ஆனால் போலித்தனம், இலஞ்சம், ஊழல், ஊதாரித்தனம், ஏமாற்றுதல், சுரண்டல், இரட்டை நாக்கையும் மிஞ்சி, 20 நாக்குகளுடன் பேசுதல், அதிகார துஷ்பிரயோகம், பாரபட்ச அணுகுமுறை, தீர்க்க தரிசனமற்ற திட்டங்கள், மக்களை மழுங்கடித்து, சாதி - மத - இன உணர்வுகளைத் தூண்டி வாக்கு வேட்டை ஆடுவது என எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலோர் உலவுகிறார்கள். இது குறித்துப் பெரும் கவலையும் துக்கமும் உண்டாகிறது. இதற்கான தீர்வுகள் குறித்துச் சிந்தித்து வருகிறேன். மக்களிடம் பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தி, நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். ஓரளவுக்கு என்னைத் தற்காத்துக்கொண்ட பின், பொதுநல ஊழியனாகி, இந்தச் சமுதாயத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. என் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குத் தமிழில் மின்னாளுகை என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இதன் மூலம் வெளிப்படையான, விரைவான, சிக்கனமான ஆட்சி நடத்த வாய்ப்பு உண்டு.


தமிழ்ப்பெண் எப்படி இருக்கவேண்டும் என்று பதிவிட்டிருந்தீர்கள். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு வித்திட்டது எது? .....