June 23, 2007

எழுத்தாளர் சுஜாதா நேர்முகம்

Essence of your life so far ரத்னச்சுருக்கமாக சொல்ல முடியுமா?

'ரத்னச்சுருககமாக' ஓரிரு வரிகளில்' எல்லாம் ஒரு வாழ்க்கையைச் சொல்ல முடியாது. இபபடிக் கேட்பது தமிழனின் சோம்பேறித்தனங்களில் ஒன்று, என் வாழ்க்கை என் எழுத்தில் முழுவதும் விரவிக் கிடக்கிறது. Please 'click' the link
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

மன அழுத்தம் (Depression)

சுவாமி அனுபவானந்தா அவர்கள் அமெரிக்கப் பண்பலை வரிசைக்கு அளித்த நேர்முகம். மன அழுத்தம் (Depression) ஒரு மனிதனை எந்த அளவுக்குப் பாதிக்கிறது, எப்படி அதிலிருந்து தற்காத்துக்கொள்வது என்பதைப் பற்றி தெளிவுபடுத்துகிறார்.
Get this widget | Share | Track details

தலைக்கு ஒரு கோடி

சர்ச்சைக்குரிய "சல்மான் ருஸ்டி" யின் பிரபலமான நாவல் "The Satanic Verses"-ல் இருந்து அவருடைய சொற்பொழிவு. பாகிஸ்தானில் ஒரு வர்த்தக சங்கம் இவரின் தலைக்கு ஒரு கோடி நிர்ணயித்திருக்கிறது.

"சல்மான் ருஸ்டி" யின் நேர்முகம்

எந்தக்காரியம் எப்படி இருந்த போதிலும், அரசியலில், பொதுவாழ்க்கையில் கண்டிப்பாக மனித தருமம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தருமமோ, புகுத்தப்படக் கூடாது என்பது தான் எனது ஆசையேயொழிய உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பப்படி தான் நடக்க வேண்டும் என்பதல்ல.
- பெரியார்

நாலடியார்

1. அறத்துப்பால்

1.2 இளமை நிலையாமை

எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள் - தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்டு
ஏகும் அளித்திவ் வுலகு.


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை :

என்னை ஈன்றெடுத்த என் தாய், என்னைத்தவிக்க விட்டுவிட்டு அவளைத்தவிக்கவிட்டுச் சென்ற தன் தாயைத் தேடிக்கொண்டு போய்விட்டாள். என் தாயின் தாயாரின் நிலையும் அதுவேதான். இப்படி ஒவ்வொரு தாயும் தன் தாயைத் தேடிக்கொண்டு போவதுதான் உலகநியதி


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை :

She who was my mother, having borne me in this world, had departed seeking a mother for herself, if this be the case also with her mother, one mother seeking after another mother, then is this world wretched indeed.


- By Rev.F.J.Leeper, Tranquebar

இன்றைய குறள்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூறமுடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது

அறத்துப்பால் : நீத்தார் பெருமை