September 15, 2007

ஹரீஷ் ராகவேந்திரா : பின்னனிப் பாடகர்

இன்றைய குறள்

உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்

அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்

பாதிப் பேர் கழுதைகள்?

ஆங்கில நாடக ஆசிரியரான ஷெரிடன், பார்லிமெண்டில் ஒருமுறை பேசியபோது, "இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப் பேர் கழுதைகள்'' என்றார். "நீ பேசியதை வாபஸ் வாங்கு'' என்று உறுப்பினர்கள் கூச்சலிட்டார்கள். கூச்சலை அடக்கி, ஷெரிடன் அமைதியாக, "மன்னிக்க வேண்டும். இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப்பேர் கழுதைகள் அல்ல'' என்றார்.

  • பழ.நெடுமாறன் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் : தழிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ நெடுமாறன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார். இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதிக்கு உணவுப்பொருட்களை கொண்டு செல்ல இந்திய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நெடுமாறன் அவர்கள், தமிழக அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்கும் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி உறுதியளித்ததாக, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தன்னிடம் கூறியதை அடுத்து, தான் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டதாக தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்
  • இந்திய அரசு பொருட்களை அனுப்பினால் ஏற்கத் தயார்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா : இதற்கிடையே நெடுமாறன் அவர்கள் கூறுவது போல யாழ்ப்பாணத்தில் பட்டினி நிலைமை இல்லை என்று கூறும் இலங்கை அமைச்சரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அதேவேளை இந்திய அரசு அப்படியான உணவுப்பொருட்களை அனுப்பும் பட்சத்தில் அவற்றை ஏற்க தாம் தயாராக இருப்பதாகவும், இது விடயத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக உணவுப் பொருட்களை அனுப்பலாம் என்று கூடத் தான் பரிந்துரைப்பதாகவும் கூறினார்
  • உயிலங்குளம் பாதையைத் திறக்க விடுதலைப்புலிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர் - மன்னார் ஆயர் : இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் வடபகுதியில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண பொருட்களை அனுப்பி வைப்பதற்கு வசதியாக, கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ள உயிலங்குளம் சோதனைச்சாவடி ஊடான பாதையைத் திறப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்தார்
  • இலங்கை மோதல்களில் 19 பேர் பலி : இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் வெவ்வேறு சம்பவங்களில் 14 விடுதலைப் புலிகளும் 5 இராணுவத்தினருமாக 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • அமெரிக்காவின் மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அதிபர் புஷ் மீது குற்றச்சாட்டு : அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசேர்வின் தலைவராக சுமார் இரண்டு தசாப்தங்கள் பணியாற்றிய, அலன் கிறீன்ஸ்பான் அவர்கள், நிதி நிலை நிர்வாகம் குறித்து அமெரிக்க அதிபர் புஷ் கவனம் எதுவும் செலுத்தவில்லை என்று கூறி, அவரைக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்
  • பாலைவனங்கள் பெருகுவதை தடுக்கும் முயற்சிகள் குறித்த ஐ.நா மாநாட்டில் உடன்பாடு ஏற்படவில்லை : உலகளவில் அதிக இடங்கள் பாலவனங்களாக மாறுவதை தடுப்பது குறித்த ஐ.நா வின் ஒரு மாநாடு நிதி ஒதுக்கீடு குறித்த உடன்பாடு ஏற்படாத நிலையில் முடிவடைந்துள்ளது
  • மலேசியாவில் போராட்டம் நடத்திய வங்கதேச ஊழியர்கள் கைது :
    கோலாலம்பூர் நகரம் : மலேசியாவில் வங்கதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    வேலைவாய்ப்பு நிறுவனங்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக் கூறி அவர்கள் ஒரு போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டனர்