April 27, 2008

"மணிவண்ணன் மகனுடன் ஆடையில்லாமல் நான்" - ஸ்டெபி ஆவேசம்

சென்னை விருகம்பாக்கம் சாய்நகரை சேர்ந்தவர் ஸ்டெபி (வயது 20). சினிமா உதவி டைரக்டர். நேபாளி, சரோஜா உள்ளிட்ட படங்களில் பணியாற்றி உள்ளார். இவர் நடிகரும் இயக்குனருமான மணிவண்ணன் மகன் ரகு வண்ணன் மீது பரபரப்பு புகார் ஒன்றை கூறினார். ``ரகுவண்ணன் காதலித்து திருமணம் செய்து விட்டு ஏமாற்ற முயற்சிப்பதாக கூறிய அவர் அதற்கு ஆதாரமாக இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களை வெளியிட்டார்.
அதோடில்லாமல் ரகுவண்ணன் தரப்பில் இருந்து டைரக்டர் சீமான், அவரது தம்பி நகேந்திரன் ஆகியோர் முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவதாக தன்னை மிரட்டுவதாகவும், தன்னுடைய படத்தை வேறு வாலிபருடன் நெருக்கமாக இருப்பதாக கிராபிக்ஸ் செய்து வருவதாக திடீர் குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
ஸ்டெபி கொடுத்த புகார் குறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் முத்தமிழ் மணி விசாரித்து வருகிறார். நாளை (28-ந் தேதி) விசார ணைக்கு ஆஜராகும்படி, ரகுவண்ணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே தன் மீதும் தம்பி நகேந்திரன் மீதும் ஸ்டெபி கூறிய குற்ற சாட்டு குறித்து டைரக்டர் சீமான் கூறியதாவது:-

நான் டைரக்டராக உயர்ந்ததற்கு மணிவண்ணன் குடும்பத்தார் தான் காரணம். நானும் அவர்களது குடும்பத்தில் ஒருவன். ரகுவை சிறுவயதில் இருந்தே தூக்கி வளர்த்தவன். அவனை பற்றி எல்லா விஷயங்களும் தெரிந்தவன். அவன் மீது அதிக அக்கறை கொண்டவன் என்னுடைய தம்பி படத்தில் ரகு உதவி இயக்குனராக இருந்தார்.

என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றி டைரக்டராக உயர்ந்துள்ள துரையிடமும் `நேபாளி' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். படபிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயம் லயோலா கல்லூரியில் விஷ்வல் கம்யூனிகேசன் பட்டப்படிப்பு படித்து வந்த ஸ்டெபி என்ற பெண் கல்லூரி கிளாசில் டைரக்ஷன் பற்றி தெரிந்து கொள்ள வந்துள்ளார். 25 நாட்களே பணியாற்றி உள்ளார். அப்போது ரகுவுடன் ஸ்டெபி நட்பாக பழகி உள்ளார்.
ஸ்டெபியின் நடவடிக்கை சரியில்லாததால் துரை அவரை நிறுத்திவிட்டார் ரகு பிரபலமான டைரக்டரின் மகன் நிறைய சொத்து உள்ளது வளைத்து போட்டால் வசதியாக வாழலாம் என்ற எண்ணத்தில் ரகுவுக்கு அடிக்கடி போன் செய்து உணர்ச்சியை தூண்டி மயக்கி உள்ளார்.

நட்பு முறையில் வீட்டிற்கு அழைத்து சென்று மயக்கும் வகையில் பேசி அவருடன் நெருக்கமாக இருப்பதை சுவீட் மெமொரிஸ் என்று கூறி கேமராவில் வீடியோ எடுத்துள்ளார். ரகுவும் தோழிதானே என்று விட்டு விட்டார். ரகுவை வளைப்பதில் ஸ்டெபியின் குடும்பத்தினர் முழு ஈடுபாடு காட்டி உள்ளார். அடிக்கடி ரகுவை வீட்டிற்கு அழைத்து பொண்ணுடன் பழக விட்டுள்ளனர்.

ஸ்டெபியின் நடவடிக் கைகள் தவறாக இருப்பதை உணர்ந்த ரகு அவரிடம் பழகுவதை நிறுத்தி விட்டார். தற்போது சுவீட் மெமொரீஸ் என அவர் எடுத்த படங்களை காட்டி ரகுவையும் அவரது குடும்பத்தாரையும் மிரட்டுகிறார். திருமணம் நடந்து விட்டது என கூறி மணிவண்ணனின் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்து ரகளையில் ஈடுபடுகிறார். நட்பாக பழகியது உண்மை அவர்களுக்கு முறைபடி திருமணம் நடைபெறவில்லை. ஒரு வீட்டில் மருமகளாக வாழ நினைக்கும் பெண் தானும் அவரும் நெருக்கமாக இருக்கும் படங்களையும், வீடியோக்களையும் பத்திரிகையில் வெளியிட துணிவாளா? இது பெண் இனத்துக்கே இழிவு. ஒரு குடும்பத்தை அசிங்கப்படுத்தி, அவமான படுத்தி, பணம்பறிக்கும் முயற்சியே தவிர எப்படி சொல்வது.

நான் 50 படத்தில் உதவி டைரக்டராக பணிபுரிகிறேன் என இவர் கூறியிருக்கிறார். ஒருடைரக்டரிடம் 5 உதவி இயக்குனர்கள் இருப்பார்கள், ஒரு உதவி டைரக்டர் 5 இயக்குனர்களை வைத்திருப்பது இப்போதுதான் கேள்விபடுகிறேன். இவரது உண்மை நிலையை இதை வைத்தே அறியலாம்.

எங்களுக்கு எவ்வளவோ வேலைகள் உள்ளது. இவர் முகத்திற்கு ஆசிட் வீசுவதா எங்கள் வேலை. படம் இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நாங்கள் இவரது படத்தை வைத்தா கிராபிக்ஸ் செய்ய போகிறோம். இவரது முகத்தை பார்த்தால் கிராபிக்ஸ் படம் கூட இவரிடம் ஒட்டாது.

இப்படி பேசுவதில் இருந்தே ஸ்டெபி எப்பேர்ப்பட்ட கிரிமினல் என்பது தெரிந்து விட்டது. இப்படியெல்லாம் பொய்யான, தகவல்களை வெளியிட்டு மோசடி செய்வது இவருக்கு கைவந்த கலை. இவர்கள் குடும்பமே சரியில்லை அவர்கள் தூண்டுதலால் இப்படி நடந்து கொள்கிறார்.

ஸ்டெபியின் அப்பா என்று அறிமுகப்படுத்தி கொண்ட நபர்தான் குடிபோதையில் என்னை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி மிரட்டினார். இது பற்றி போலீஸ் விசாரணையின் போது தெரிவிப்பேன். ரகு ஸ்டெபியை திருமணம் செய்து கொண்டான் என கூறுவோர் திருமண படத்தை வெளியிட வேண்டியது தானே! எதை எதை எல்லாமோ ஆதாரமாக காட்டுவோரிடம் தாலி கட்டும் படம் இல்லை என்றால் அவர்கள் திருமணம் நடக்கவில்லை என்பது தானே உண்மை.
ஸ்டெபியின் கீழ்த்தரமான நடிவடிக்கையால் ரகுவண்ணனின் தாய் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இடைவிடாமல் அழுது கொண்டே உள்ளார். ரகுவை வளைப்பதற்காக ஸ்டெபி குடும்பத்தினர் இப்படியொரு காரியத்தில் இறங்கி உள்ளது வேதனையை தருகிறது. புகாரை சட்டத்தின் மூலம் எதிர்கொள்வோம். இவ்வாறு டைரக்டர் சீமான் கூறினார்.

சீமான் கூறியது பற்றி ஸ்டெபியிடம் கேட்டபோது :-தொடர்ந்து படிக்க அதிகாலை.காம் இணைப்பில் செல்க.. http://www.adhikaalai.com/index.php?/en/செய்திகள்/தமிழகம்/-மணிவண்ணன்-மகனுடன்-ஆடையில்லாமல்-நான்-ஸ்டெபி-ஆவேசம்