June 22, 2007
'காதலும் நட்பும் ஒன்றுதான்'
நட்பு வளர வளர அது ஆணாக இருக்கும் பட்சத்தில் அது தலைமுறையும் தாண்டிய ஒரு உறவாக மாறுகிறது. அதுவே ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அது காதலாக மாறி கல்யாணத்தில் போய் நிற்கிறது. அதுவும் தலைமுறைக்குத் தொடர்கிறது.
இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன், நட்புக்கும் காதலுக்கும் உள்ள ஒரேயொரு வித்யாசம்
அதனைத்தேடி யாரும் செல்வதில்லை, தானாக வரக்கூடியது, அல்லது ஏற்படுத்திக்கொள்ளக்கூடியது.
அதானால்தான் உடலால் கிடைக்கக்கூடிய இன்னொன்றையும் தேடி காதல் என்ற ஒன்றுக்காக தலைமுறை தலைமுறையாக நாம் அலைகிறோம். இது தவறோ குற்றமோ இல்லை. இது மனித நியதி, ஏன் உயிருள்ள ஜீவராசி ஒவ்வொன்றுக்கும் உரியது. ஆத்மா நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று.
அப்படி நம்மால் கட்டுப்படுத்தமுடியுமெனில் அங்கே காதலுக்கு இடமில்லை, அது இறைவனுடைய திருவடி நோக்கிப் பிரயாணிக்கும் ஆன்மீகவழி
- இது ஒரு நண்பரின் கேள்விக்கான என்னுடைய பதில்
Posted by Manuneedhi - தமிழன் at 5:48 PM 1 comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by Manuneedhi - தமிழன் at 4:42 PM 0 comments (நெற்றிக்கண்)
- Our lives are not what we deserve; they are, let us agree, in many ways deficient.
- Most of what matters in your life takes place in your absence.
- In this world without quiet corners, there can be no easy escapes from history, from hullabaloo, from terrible, unquiet fuss.
- A book is a version of the world. If you do not like it, ignore it; or offer your own version in return.
- A poet's work is to name the unnameable, to point at frauds, to take sides, start arguments, shape the world, and stop it going to sleep.
- Be sure that you go to the author to get at his meaning, not to find yours. Books choose their authors; the act of creation is not entirely a rational and conscious one.
- I do not need the idea of God to explain the world I live in.
- I hate admitting that my enemies have a point.
- Salman Rushdie
பிரபல எழுத்தாளர் சல்மன் ருஸ்டி-யின் தலையைத் துண்டிப்பவர்க்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று அறிவித்திருக்கிறது பாகிஸ்தான் வர்த்தக சங்கம். இவர் இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர். எழுத்துத் துறையில் இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டிப் பிரிட்டன் அரசு "வீரப்பட்டம்" ஒன்றைச் சமீபத்தில் வழங்கியது. இது பாகிஸ்தானில் வாழும் முஸ்லீம்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். எது எப்படியோ? அவரின் "பொன்மொழிகள்" நமக்குத் தேவை.
Posted by Manuneedhi - தமிழன் at 12:35 PM 0 comments (நெற்றிக்கண்)
விதி என்பது – மிதிக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், கொதித்து எழாதிருக்கச் செய்யப்பட்ட சதியாகும்
Posted by Manuneedhi - தமிழன் at 2:18 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
64 - வது நாயன்மார்
திருமுருகக் கிருபானந்த வாரியார் அவர்களின் அற்புதச் சொற்பொழிவு : 64 - வது நாயன்மார் என்று போற்றக்கூடிய அளவுக்குப் புகழ்வாய்ந்த அந்த மகானின் குரலை எத்தனைபேர் உண்மையாகவே கேட்டிருப்பர் என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் எனக்குக் கிடைத்த இந்த சொறிபொழிவின் ஒலிப்பதிவை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். கேட்டுவிட்டுத் தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்க.
Powered by eSnips.com |
Posted by Manuneedhi - தமிழன் at 2:02 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
இன்றைய குறள்
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்
Posted by Manuneedhi - தமிழன் at 12:40 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 21 - ம் குறள்
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மொழியுமே பிடிக்கும். குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்.
2. நீங்கள் அடிக்கடி ரசிக்கும் ஒரு கலை ?
நமது பாரம்பரியக்கலையான பரதக்கலை
3. ஒரு நட்பு காதாலாக மாறுகிறது. இதை பற்றி உங்கள் கருத்து ?
காதலும் நட்பும் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வித்யாசப்படும். மற்றபடி இரண்டுமே ஒன்றுதான்
4. நீங்கள் அடிக்கடி திட்டும் நபர், திட்டு வாங்க கூடிய நபர் ?
என்னைத்தான். திட்டு வாங்குவது நான்தான்.
5. திமுரு பற்றி உங்களுடைய கருத்து ?
அது ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டிய ஒன்று
Posted by Manuneedhi - தமிழன் at 12:13 AM 0 comments (நெற்றிக்கண்)