May 02, 2009

கட்டாயம் ஜெயிக்கணும்! சாப்பிட வழி பண்ணணும்!! இவருக்கு ஓட்டளியுங்கள்!!!

http://manuneedhy.googlepages.com/KattayamJaikanum.pdf

தேர்தல் திருவிழா! தெளிந்திடு தமிழா!!

http://manuneedhy.googlepages.com/Ponguthamizh1formail.pdf

May 01, 2009

ஒவ்வொரு தமிழனும் அவசியம் காணவேண்டிய காணொளி

இக் காணொளி ஒவ்வொரு தமிழ்நாட்டுத் தமிழனும் பார்க்கவேண்டிய அதி முக்கிய ஆவணம். தயவுசெய்து இக் காணொளியை எல்லோரோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

April 28, 2009

இதோ இன்னொரு பிரபாகரன்! அன்றிருந்த சார்லஸ் ஆன்டனி இதோ மீண்டும்...

சார்லஸ் ஆன்டனி - 20 ஆண்டுகள் கழித்து சிங்கள அரசாங்கத்துக்கு மீண்டும் ஒரு புலி சொப்பனமாக மாறியிருக்கும் பெயர்! அன்று இருந்த ஆன்டனி, பிரபாகரனின் ஆத்மார்த்தமான நண்பன். இன்று இருக்கும் ஆன்டனி, உயிருக்குயிரான மகன்! சார்லஸ் ஆன்டனியைப் பிரபாகரனால் மறக்க முடியாது. 25 ஆண்டுக்கு முன்னால், சாவகச்சேரி காவல் நிலையத்தைக் கைப்பற்றிய சம்பவம்தான் ஜெயவர்த்தனே அரசாங்கத்துக்குப் புலிகள் மீது பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. ஒரு பஸ்ஸைக் கடத்தி, அதில் சார்லஸ் தலைமையிலான புலிப் படை காவல் நிலையத்தை நோக்கி வந்தது. இயந்திரத் துப்பாக்கிகள் முழங்க உள்ளே நுழைந்த சார்லஸ், அங்கு ஆயுத அறை எங்கே இருக்கிறது என்று தேடினார். ஒரு ரிவால்வர், 28 துப்பாக்கிகள், இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள் என இருந்ததை அள்ளிக்கொண்டு வெளியேறினார்கள். சார்லஸைக் குறிவைத்துத் தேடியது சிங்கள ராணுவம். யாழ்ப்பாணத்துக்குப் பக்கத்தில் மீசாலை என்ற இடத்தில் அவர் தங்கி இருப்பதாகத் தகவல் கிடைக்க… போய் இறங்கினார்கள்.

பனை மரங்களுக்குள் ராணுவம் பதுங்கியிருக்க, வெட்டவெளியில் மாட்டிக்கொண்டனர் சார்லஸூம் இரண்டு போராளிகளும். முதல் குண்டு நெஞ்சில் பாய்ந்தது. உயிரோடு தான் பிடிபடக் கூடாது என்று நினைத்த சார்லஸ், ‘என்னைக் கொன்றுவிடு. எந்தப் புலியையும் ராணுவம் உயிரோடு பிடிக்கக் கூடாது’ என்று சக போராளிக்கு உத்தரவு போட்டார். அவன் சம்மதிக்கவில்லை. மீண்டும் கட்டாயப்படுத்தி கெஞ்சினார் சார்லஸ். கடைசியில் அழுதுகொண்டே சுட்டான் அவன். ‘பிரபாகரன் இந்த அளவுக்கு உடைந்துபோய் நான் பார்த்ததில்லை’ என்று கிட்டு சொல்லும் அளவுக்கு அந்த மரணம் பிரபாகரனைப் பாதித்தது. ஆன்டனியை மறக்க முடியவில்லை அவரால். இரண்டு ஆண்டுகள் கழித்து தனக்கு மகன் பிறந்தபோது, ‘சார்லஸ் ஆன்டனி’ என்று பெயர் வைத்தார். மீசாலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட சார்லஸ் மீண்டு வருவான் என்று சிங்கள ராணுவம் கனவிலும் நினைத்திருக்காது. சாதாரணமாக சைக்கிளில் போய் இயக்கத்தை வளர்த்த பிரபாகரன், இன்று விமானத்தை வைத்து சிங்கள அரசுக்குச் சிக்கல் கொடுத்துவரும் குடைச்சலின் பின்னணியில், அவரது மகன் சார்லஸ் இருப்பதாகச் சந்தேகப்படுகிறது சிங்கள அரசு.

விமானக் குண்டுவீச்சில்தான் சார்லஸின் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது. இன்று சார்லஸூக்கு 23 வயது. அவர் பிறந்த காலங்களில்தான் சிங்கள ராணுவம் அதிகமாக விமானப் படைத் தாக்குதலைத் தொடங்கியது. இதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் என்று புலிகள் மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்கள். ‘குண்டுவீச்சில் இருந்து பாதுகாப்பு’ என்ற புத்தகம் போட்டு வீடு வீடாகக் கொடுத்தார்கள். அம்மா மதிவதனியுடன் பெரும்பாலும் பதுங்கு குழிகளில்தான் வளர்ந்தார் சார்லஸ். புதுக்குடியிருப்புப் பள்ளியில் தொடக்கக் கல்வி படித்தார். அட்வான்ஸ் லெவல் வரை படித்ததாகச் சொல்கிறார்கள். அதாவது, இங்கு நம் ப்ளஸ் டூ போல. ஜெனரல் சர்டிஃபிகேட் ஆஃப் எஜுகேஷன் என்று இதற்குப் பெயர். இதை அவர் முடிக்கும்போது இலங்கையில் போர்ச் சூழல் குறைந்து ரணில் விக்கிரமசிங்கே ஆட்சிக் காலம் ஆரம்பமானது. எனவே, தன்னை உயர் படிப்புக்காக வெளி நாட்டுக்கு அனுப்பிவைக்க மகன் ஆசைப்பட்டுக் கேட்கிறார். ‘அது பாதுகாப்பானதல்ல’ என்று பிரபாகரன் நினைக்கிறார். கொழும்பில் படிக்க அனுப்பலாமா என்ற யோசனை. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் வாங்கி இருக்கிறார்கள்.ஆனால், அதையும் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால், மகனது படிப்புக்குத் தடை போட பிரபாகரனுக்கு மனமில்லை. காரணம், சார்லஸின் டெக்னாலஜி ஆர்வம். சின்ன வயதில் இருந்தே எதையாவது பிரித்து மேய்வதில் ஈடுபாடு காண்பித்திருக்கிறார். போர்ப் பயிற்சிகளைவிட, போர் ஆயுதங்களைக் கையாளுவது, அது பற்றி படிப்பதில்தான் ஆர்வம் அதிகம் இருந்திருக்கிறது. முதலில் ஏற்பட்டது கப்பல் ஆர்வம். படகுகள் கட்டும் பிரிவில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். சில மாதங்களில் கம்ப்யூட்டரைக் கையாளும் ஆர்வமாக அது மாறியிருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி ஆஸ்திரேலியாவில் இருந்து கம்ப்யூட்டர் படித்த 8 பையன்கள் கிளிநொச்சிக்குள் வந்திறங்கினர். அவர்கள் சார்லஸூக்குக் கற்றுக்கொடுத்தனர்.

அந்த எட்டு பேரும் பிரபாகரனால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டவர்கள். கிளிநொச்சியில் இருந்து படிப்பில் ஆர்வமான பையன்களை பிரபாகரன் தேர்ந்தெடுத்து, பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்திரேலியா அனுப்பிவைத்தாராம். அவர்கள், அங்குள்ள மொனாஸ் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் படித்ததாக சிங்களப் பத்திரிகை ‘தி பொட்டம்லைன்’ எழுதுகிறது. சார்லஸூக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொடுத்த ஆசான்கள் இவர்கள்தானாம். இதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவில் சார்லஸ் வலம் வந்தார். அடுத்ததாக, கிளிநொச்சிக்கு வந்து இறங்கியதுதான் இப்போது கலக்கிக்கொண்டு இருக்கும் வான் படை. இளம் நீல நிற வரிப்புலிச் சீருடையும் ‘வானோடி’ என்று பொறிக்கப்பட்ட சின்னத்தையும் பொருத்தி ஒரு படை கட்ட வேண்டும் என்பது பிரபாகரனின் பல்லாண்டுக் கனவு. அவருடன் அப்பையா அண்ணை என்று ஒருவர் ஆரம்ப காலத்தில் இருந்திருக்கிறார். அவர்’நான் விமானம் செய்யப் போறேன்’ என்று சில வேளைகளில் ஆர்வம் காட்டி இருக்கிறார். அப்போது, எல்லாரும் அவரைக் கிண்டல் செய்வார்களாம். கடற்படையில் வேலை பார்த்த தனது நண்பன் டேவிட் மூலமாக ‘கடற்புலி’களை ஆரம்பித்த பிரபாகரன், வான் படைக்கு ஒரு நண்பரைத் தேடினார். சங்கர் கிடைத்தார். கனடாவில் ஏரோநாட்டிக்ஸ் படித்தவர். ஏர் கனடாவில் வேலை பார்த்தவர். முதல் கட்டமாக பழைய விமானம் வாங்கப்பட்டது.

மாவீரர் துயிலுமிடம், வற்றாப்பளை அம்மன் கோயில் ஆகிய இடங்களில் 10 ஆண்டுகளுக்கு முன் இந்த விமானத்தை வைத்துப் பூத் தூவினார்கள். ‘பிரபாகரன் வைத்திருக்கும் விமானம் பூ தூவத்தான் லாயக்கு’ என்று சிங்களத் தளபதிகள் காமென்ட் அடித்தார்கள். ‘விமானங்களை வாங்குவதற்கு முன் இயக்குவதற்கு ஆட்களைத் தயார் பண்ணுங்கள்’ என்று சங்கர் சொல்ல, ஒரு டீம் பிரான்ஸ், மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ‘சம்பந்தப்பட்ட நாட்டில் கொண்டுபோய்விட வேண்டியது எங்கள் வேலை. அங்கேயே ஏதாவது வேலை பார்த்துப் படித்து முடிக்க வேண்டியது உங்களது சாமர்த்தியம்’ என்ற அடிப்படையில் 20 பையன்கள் அனுப்பப்பட்டார்கள். வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களும் உதவ, படிப்பை முடித்து 2002-ல் இந்தக் குழு கிளிநொச்சி வந்து இறங்கியது. இவர்கள் விமானப்படை சம்மந்தமான தொழில்நுட்பங்களை சார்லஸூக்கு ஊட்டினார்கள். அவர்களுக்கு தீனியாக சிறு விமானங்கள் தயாராக இருந்தன. ஒரு ஆள் மட்டும் பயணிப்பவை. செக்கோஸ்லோவேகியா நாட்டின் ‘சிலின் இசட் 143 எல்’ ரக விமானங்கள் இவை. நாங்கள் புலிகளுக்கு விற்கவில்லை என்று அந்த நாடு மறுக்கிறது. வாங்கியதை அப்படியே பயன்படுத்தாமல், அதில் பல மாறுதல்களைச் செய்துள்ளார்களாம். இங்குதான் சார்லஸின் முக்கியப் பங்கு இருந்ததாகச் சொல்கிறார்கள். இப்போது வான் படையை ரத்னம் மாஸ்டர் என்பவர் வழிநடத்தி வருகிறாராம். சிறு விமானத்தை அதிக பயன்பாடு உள்ளதாக மாற்றும் வேலையை சார்லஸ் டீம் பார்த்து வருகிறது.

600 கி.மீ தூரம் போய் திரும்பத்தான் அதில் எரிபொருள் நிரப்ப முடியும். அதாவது ஒரு முறை கொழும்பு போய்விட்டுத் திரும்ப முடியும். விமானத்தில் குண்டு நிரப்பிக்கொண்டு போய் ஓர் இடத்தைத் தாக்க வேண்டும் என்று முடிவெடுக்கும்போது, அவ்வளவு எடையைக் கொண்டுசெல்ல இந்த விமானங்கள் வசதிப்படவில்லையாம். எனவே, சுமார் 240 கிலோ எடைகொண்ட குண்டுகளைப் பொருத்தும் பலம்கொண்டதாக மாற்றும் காரியங்களை சார்லஸ் டீம் பார்த்ததாம். அதே போல், ரேடாரின் கண்ணுக்குப் படாமல் தப்பிக்கவைக்கவும் இவர்களது குழு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது. சமீபத்தில் நடந்த தாக்குதலுக்காக இரவு 8.30-க்குக் கிளம்பிய புலிகளின் விமானத்தை 9.20-க்குத்தான் சிங்களப் படை அறிய முடிந்திருக்கிறது. அதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் சண்டை அதிகமாக நடக்கும் புதுக்குடியிருப்புக்குத் தென் மேற்குப் பகுதியில் இருந்துதான் விமானங்களைக் கிளப்பியிருக்கிறார்கள்.

ஒரு விமானம் வீழ்த்தப்பட்டது. இன்னொன்று வருமான வரிக் கட்டடத்தின் 3-வது மாடிக்கும் 12-வது மாடிக்கும் மத்தியில் புகுந்தது. 240 கிலோ குண்டு வெடித்ததில் அந்தக் கட்டடமே தீப்பிடித்து எரிந்தது. புலிகள் வைத்திருக்கும் விமானத்தை ‘குரும்பட்டி மெஷின்’ என்று சிங்களவர்கள் கிண்டல் செய்வார்களாம். வளர்ச்சியின் ஆரம்பத்தில் இருக்கும் தேங்காய்க்குக் குரும்பு என்று பெயர். அந்தக் குரும்பை வைத்து இதுவரை எட்டு முறை குடைந்தெடுத்துவிட்டார்கள். அதுவும் குண்டுகளைக் கட்டிக் குதிக்கும் வான் கரும்புலிகள் வந்த பிறகு அச்சம் அதிகமாகி இருக்கிறது. ‘பலவீனமான இனத்தின் பலமான ஆயுதம்தான் கரும்புலிகள்’ என்று பிரபாகரன் சொல்கிறார். ‘உன்னுடைய எதிரி உனக்கு எந்தக் கஷ்டத்தைக் கொடுத்தானோ, அதையே அவனுக்குத் திருப்பிக் கொடு’ என்பது இந்தக் கரும்புலிகளின் லட்சிய முழக்கமாம். ‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்’ என்று வான் புலிகளின் சட்டையில் எழுதப்பட்டிருக்கிறது. அதுதான் கண்டம்விட்டுக் கண்டம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

ஒருத்தி தாலியறுத்ததால் ஓராயிரம் தமிழச்சிகள் தாலியறுக்கவேண்டுமா? காணொளி











April 20, 2009

இன்றைய சூடான செய்திகள்

சீறிப்பாயும் சீமான் சிங்களப்பெண்ணைக் கதாநாயகியாக்கியது சரியா? S.Ve.சேகர்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13041&lang=ta&Itemid=163
இலங்கை தமிழினப்படுகொலை : பாதுகாப்பு வலைய பரிதாபங்கள் - வீடியோ
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13072&lang=ta&Itemid=52
கருணாநிதி CNN-IBN பேட்டி பற்றி ஜெயலலிதா : CNN-IBN பேட்டி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13103&lang=ta&Itemid=62
கருணாநிதி பேட்டி:அந்தர் பல்டி : சோ, சுப்ரமணியம் சுவாமி, அபிசேக் சிங்வி Video
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13102&lang=ta&Itemid=62
ஜெயலலிதா பிரதமராக முழு ஆதரவு - வைகோ
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13082&lang=ta&Itemid=52
பிரதமராவதற்கு சரத்பவார் தகுதியானவர் : ஜெயலலிதா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13081&lang=ta&Itemid=52
பிரபாகரன் என் நல்ல நண்பர் - என்.டி.டி.வி NDTV திரித்துவிட்டது : கருணாநிதி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13083&lang=ta&Itemid=52
தோனியின் சகோதரர் பிஜேபி-யில் இணைந்தார் : வீடியோ
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13096&lang=ta&Itemid=52
பிரபாகரன் என் நண்பர்:நான் சொன்னேனா என்டிடிவி செய்தி தவறு:கருணாநிதி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13047&lang=ta&Itemid=55

April 07, 2009

ஏப்ரல் 08 ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார் வைகோ

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக நாளை ஏப்ரல் 08-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார் வைகோ

March 31, 2009

எங்கள் தமிழீழத் தாகம் தணியாது! பாவாணனின் குருதி கொதிக்கும் சொற்பொழிவு

குண்டு விழுந்தாலென்ன?
வீடு குலுங்கி இடிந்தாலென்ன?
சதைத்துண்டு பறந்தாலென்ன?
எங்கள் தமிழீழ தாகம் தணியாது!
எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது!

சொற்பொழிவைக் கேட்க தலைப்பைச் சொடுக்கவும்

March 27, 2009

தமிழீழ விடுதலைப்புலிகளே - உலகத் தமிழர்களின் முகவரி : கை.அறிவழகன்

ஏறத்தாழ 32 ஆண்டு கால விடுதலைப் போராட்டம், சொல்லொணாத இழப்புகள், எழுச்சியும் வீழ்ச்சியும் கலந்த ஒரு கலவையான பயணம், காலத்தை வென்று, விடுதலையின் வெம்மையைத் தணியாமல் காப்பாற்றிக் களத்தில் இருக்கும் காரணி, உலக வல்லாதிக்கங்களுக்கு எதிராகச் சமரில் இருக்கும் ஒரே இயக்கம், அரச ஒடுக்குமுறை மற்றும் பேரினவாத மேலாதிக்கம் கட்டுக்கடங்காமல் திமிறிப் பாய்ந்த போது வரலாற்றுத் தேவையாகத், தன்னியல்பாகத் தோன்றிய ஒரு இயக்கம், உண்மையில் தனித்துவம் மிக்க உலகின் முந்தைக் குடியின் முகவரியாகப் பரிணமித்திருக்கிறது.

உளவியல் ரீதியாக இன்று ஒவ்வொரு தமிழரும் புலிகளை தங்கள் இனத்தின் முற்று முழு முகவரியாகவும், ஏகப் பிரதிநிதிகளாகவும் சிந்தனை செய்தது, உலகின் பல்வேறு நாடுகளில் புலிக்கொடி பறந்த போது வெட்ட வெளிச்சமானது. உளவியல் தாக்கங்கள் மனித இனக் குழுக்களுக்கு எப்போதும் வரலாற்றுத் தேவைகளின் அடிப்படையில் தோன்றும் வாழ்வாதார உரிமைகளின் மீது கட்டமைக்கப்படுகிறது. இன்றைக்கு உலகெங்கும் தமிழர்கள் தங்கள் வாழ்வாதார உரிமைகளில் ஒன்றான உளவியல் அமைதியை பெருமளவில் இழந்திருக்கிறார்கள். சிங்களப் பேரினவாதம் எம்மக்களின் மன அமைதியை குலைக்க முயலும் போதெல்லாம் அந்த வெற்றிடங்களை நிரப்பிச் சமன்படுத்தும் பணியைச் செவ்வனே செய்தவர்கள் விடுதலைப் புலிகள் தான், அவர்கள் மக்களின் நம்பிக்கையை, விடுதலை நோக்கிய அவர்களின் தாகத்தைத் தணியாமல் வைத்திருந்தார்கள். வெற்றியோ, தோல்வியோ விடுதலைப் போராட்டத்தின் சமரில் எமது இன எதிரிகளை நேருக்கு நேர் நின்று எதிர் கொள்ளும் ஆற்றல் இன்றளவும் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தான் இருக்கிறது என்பதை யாரால் மறுக்க முடியும்.
தங்கள் குறிக்கோள்களை அடையத் தேவையான தெளிவான சிந்தனைகளோடு அவர்கள் விடுதலையை நோக்கிய பயணம் செய்கிறார்கள், கடந்த மாவீரர் நாள் உரையில் தமிழீழத் தேசியத் தலைவர் தனது உரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,

"இது எமது மண், இந்த மண்ணிலே தான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். எங்கள் மூதாதையரின் மூச்சுக்காற்று இந்த மண்ணில் கலந்திருக்கிறது"
இந்த வாக்கியங்களின் பின்னால் இருக்கும் மறைபொருள் மிக எளிதானது, நாம் தனி ஈழம் நோக்கியே பயணப்படுகிறோம் என்கிற அந்த எளிதான உரையின் சாரம் அறியாது தனி ஈழம் கேட்கவில்லை என்று திரிக்க முனைவது முற்றிலும் தவறான ஒரு முன்னுதாரணம், இதனை எந்தப் பேராசிரியர் செய்தாலும், அது சரியான நேரத்தில் செய்யப்படும் மிகத் தவறான வரலாற்றுப் பிழையாகவே உட்கொள்ளப்படுமே அன்றி புலமையாகவும் ஆய்வாகவும் அல்ல. தொடர்ந்து வாசிக்க....இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=12039&lang=ta&Itemid=185

March 19, 2009

இனி வறுமைக்குச் சொமாலியாவைச் சொல்ல வேண்டியதில்லை, இதோ நம் சொந்தங்களே இருக்கிறார்கள்

மனிதம் கொன்று.... மனம் தின்று.... ஈழம் இன்று....ஓர் இனம் நடைப்பிணமாக மாறிக்கொண்டே இருக்கிறது. குண்டுகள் வீசப்படும்போது முதலில் பிணம் விழுகிறது. உயிரோடு பிழைப்பவரின் மனம் அடுத்ததாக விழுகிறது. ஓர் இனம் நடைப்பிணமாக மாறிக்கொண்டே இருக்கிறது.

'கவனமாகக் காலை வையுங்கள். கண்ணி வெடிகள் இருக்கலாம்' என்ற வாசகம் ஈழ மக்கள் வாழ்க்கையில் இயல்பானது. 'பாதங்களைப் பார்த்து வையுங்கள்... பிணங்கள் தட்டுப்படலாம்' என்பதுதான் இன்றைய யதார்த்தம். பிணங்கள் பார்த்துப் பழகிய மனங்கள் இப்போது அழுவதில்லை. 'கொடுத்துவைத்தவர்கள், சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்' என்பது ஆறுதல்!

'அரசியல் தீர்வு என்ன என்று சிலர் பேசுகிறார்கள், பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்குமா என்று பலர் கவலைப்படுகிறார்கள். அந்த மக்கள் உளவியல்ரீதியாகப் பெரும் பாதிப்பில் சிக்கி இருக்கிறார்களே... அதைப் பற்றி யார் பேசப் போவது?' என்று கண்ணீர் வார்த்தைகளால் கேட்கிறார் யாழ் மாவட்டப் பாதிரியார்களில் ஒருவரான ஜெபனேசன் அடிகள்.

ஒரு நாள் இரவு மின்சாரம் இல்லையென்றால், மறுநாள் வாழ்க்கையே வெறுக்கிறது. பால்காரர் வராவிட்டால், வேலைக்காரம்மா லீவு போட்டால், கேபிள் கட்டானால் இங்கே பலருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடுகிறது. சில கல் தொலைவில் இலட்சக்கணக்கான மக்கள் உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல், கிடந்து துடிக்கிறார்கள். குடியிருக்க வீடு இல்லை, உணவில்லை, மாற்று உடையில்லை, மருந்து இல்லை. எல்லா ஊருக்கும் எருமையில் வரும் எமன், ஈழத்தில் மட்டும் ஏரோபிளேன் ஏறி வந்து குண்டுகள் வீசுகிறான். உயிர் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்பதைத் தவிர, சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. ''81 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் இங்கு இருக்கிறார்கள்' என்று புள்ளிவிவரம் சொல்கிறார், முல்லைத் தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்தீபன். மாத்தளன் கடற்கரைப் பகுதிக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் வந்து இறங்கியபோது, 'எங்களக் காப்பாத்தச் சோறு போடுங்க', 'எம் புள்ளைகளைக் குணப்படுத்த மருந்து கொடுங்க' என்று மொழி தெரியாத மனிதர்களிடம் பிச்சை கேட்டு ஆணும் பெண்ணுமாகக் கதறிய கோலம் காணச் சகிக்காதது. குண்டடி பட்டுச் செத்தவர்கள் போக, பாம்புக் கடி, நாய்க் கடியால் இறந்தவர்களும் மலேரியா காய்ச்சலுக்கு மருந்து இல்லாமல் மறைந்த வர்களும் அதிகம்.
18 பேர் நான்கு நாட்களில் தொடர்ச்சியாகச் செத்து விழுக, விநோதமான வியாதி ஏதாவது பரவிஇருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கிறது கொஞ்சம் அக்கறையுள்ள மருத்துவக் குழு. அவர்களால் காரணத்தை வெளியில் சொல்ல முடியவில்லை. 'உணவின்மை, ஊட்டச் சத்து இல்லாதது, நோய் எதிர்ப்புச் சக்தி இழந்தது என மூன்று காரணங்களால் நிறையப் பேர் தூங்கிய நிலையில் இறந்துகிடக்கிறார்கள்' என்கிறது மருத்துவர் குழு. 'பிள்ள சாப்பிட்டே மூணு நாள் ஆகியிருக்கும் போல இருக்கே' என்று கேட்கிறார். தூக்கி வந்த அம்மா, அமைதியாகத் தலை கவிழ்ந்து நிற்கிறார். துக்க மிகுதியில் அழுவதற்கு உடலில் கண்ணீர் மிச்சம் இல்லாததே அவரது மயான மௌனத்துக்குக் காரணம்.பால் வளம் இழந்த மார்பின் காரணம் அறியுமா குழந்தை? சபேசன் சிந்து, சிவராசா சக்தி கணேசன் ஆகிய இரண்டு குழந்தைகள் பெயர் வரலாற்றில் இடம் பெறும். அம்மையிடம் பால் இல்லாமல் செத்த பிள்ளைகள். இனி, உலகில் வறுமைக்கு சோமாலியாவைச் சொல்ல வேண்டியதில்லை. நமது சொந்தங்களே இருக்கிறார்கள். தன் வளர்ப்பு மகனைத் தேடி, தயா தங்கராசா என்பவர் வன்னி மருத்துவமனைக்குப் போகிறார். அவர் சொல்லும் காட்சி... ''வைத்திய சாலைக்குள் அனைவரும் உறுப்புகளை இழந்தவர்களாக இருந்தார்கள். யாரையும் பார்க்க அவ்வளவாக அனுமதிக்கப்படவில்லை.நோயாளிகளுக்குத் தங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றுகூடத் தெரியாது. தங்களது வலியின் காரணமாகவும் கெட்ட கனவுகள் காரணமாகவும் இரவு முழுவதும் கத்திக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்தார்கள். இரண்டு கால்களையும் கைகளையும் இழந்த ஒரு கர்ப்பிணித் தாய், தாதியை அழைத்து தான் சாவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கதறிக்கொண்டு இருந்தாள். ஒரு தாய் வெறுமையுடன் உட்கார்ந்திருந்தாள். குண்டு விழுந்து அவள் ஓடத் தொடங்கியபோது அவளது குழந்தை கொல்லப்பட்டதாம். ஒரு மண்வெட்டியை எடுத்து மண்ணைத் தோண்டி குழந்தையைப் புதைக்கும் துணிவு அவளுக்கு இருந்திருக்கிறது. தனது குழந்தையின் உடல் காட்டு விலங்குகளால் உண்ணப்படுவதை அவள் விரும்பவில்லை. இதைச் சொல்லும்போது அவள் அழவில்லை. உளவியல் பிரச்னைக்கு அவள் உட்பட்டிருந்தாள் என்பது உறுதி!''சாவைச் சட்டை பண்ணாமல்... ரத்தத்தை அலட்சியப்படுத்தி... சதைகள் பிய்ந்து தொங்கும்போது உணர்வில்லாமல் பார்த்து... குப்பைமேட்டைக் கொளுத்துவது போல மனித உடல்கள் எரிவதை வெறுமனே வேடிக்கை பார்க்க மக்கள் பழகிவிட்டால், அந்த மனம் என்னவாகும்?குழந்தைகளுக்கு விருப்பமே விமானம் பார்ப்பதுதான். ஆனால், ஈழத்துக் குழந்தைக்கு அதுதான் எமன். 30 ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் இருந்து வாங்கி வரப்பட்ட விமானம்தான் குண்டு போடுவதைத் தமிழ்ப் பகுதிகளில் தொடங்கிவைத்தது. அதனுடைய கிர் ஒலியைக் கேட்டாலே, மக்களுக்குக் கிறுக்குப் பிடித்தது. அதிலிருந்து தப்பிக்கப் பதுங்கு குழிகள் வெட்டி, அதில் வாழப் பழகினார்கள். வெளிச்சத்தைப் பார்த்துக் கண் கூசும் அளவுக்குப் பலரது வாழ்க்கை பதுங்கு குழிக்குள் கழிந்தன. கடந்த ஆண்டில் மட்டும் 14 ஆயிரம் டன் குண்டுகள் விமானங்களின் மூலம் போடப்பட்டுள்ளதாக சிங்கள ராணுவம் பெருமையாக அறிவித்துள்ளது.சமீபகாலமாகப் பயன்படுத்தப்படும் பீரங்கிக் குண்டுகள் ஏற்படுத்தும் சத்தம் காது சவ்வு மற்றும் தொப்புள் ஆகிய இரண்டையும் கிழிக்கிறதாம். இதனால், காது வழியாக ரத்தம் வடிந்த நிலையில் வாழ்வோரும் தொப்புள் வெடித்து வேறு எந்தக் காயமும் இல்லாமல் மரணிப்போரும் அதிகமாகி வருகிறார்களாம்.


கொடூரங்களைச் செய்வதைவிட அதைப் பரப்புவதையும் சரியாகவே சிங்கள ராணுவம் செய்து வருவதாகச் சொல்கிறார்கள். மக்களை மனரீதியாகப் பலவீனப்படுத்துவதில் ராணுவம் இறங்கி உள்ளது. கற்பழிப்புக் கதைகளை ராணுவம் இதனால்தான் அதிகம் பரப்பி வருகிறது. 100 பேர் சாவு, 200 பேர் சாவு என்ற தகவல்களைப் பரப்புவதை 'உளவியல் யுத்தம்' என்கிறார்கள். அதனால்தான் கடுமையான போர் ஆரம்பமாவதற்கு முன், கடந்த ஜூலை மாதம் விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழரை அடிமைப்படுத்த முயலும் எதிரி தனது சூழ்ச்சிகரமான உளவியல் போரைத் தொடுத்துள்ளான். வதந்திகளைப் பரப்பி மனங்களைக் குழப்பி வருகிறான்' என்று எச்சரித்தது.கற்பழிக்கப்படும் பெண்களது உடல்களைப் பொது இடங்களில் போட்டுவிட்டுப் போவது அப்படித்தான். பெண்களையும் சிறுவர்களையும் இது அதிகமாகப் பாதிக்கிறது. இழப்புகள், சோகங்கள், இடப் பெயர்வுகள் பல மாதங்களாகத் தொடர்வதால் தலைவலி, உடல் சோர்வு, அதிகக் கோபம், உணவில் விருப்பமின்மை, கவலை, சோகம், அச்சம், வேதனை என அத்தனை உளவியல் பாதிப்புகளும் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளன.இந்த மனித மனங்களை மீண்டும் தட்டியெழுப்ப முடியுமா என்று மனநல மருத்துவர் ருத்ரனைக் கேட்டோம். ''நம் வீட்டில் ஒரு சாவு விழுந்தால், அது அதிகபட்சம் இரண்டு மூன்று மாதங்கள் நம் மனச் சிறையில் உட்கார்ந்து கிடக்கும். அந்தச் சோகம் மெள்ள மெள்ள மறைந்து, நாம் அடுத்த வேலைக்குத் தாவிவிடுவோம். நம் வீட்டிலேயே அடுத்தடுத்து மரணங்கள் சம்பவித்தால், மறுபடி மறுபடி நமது சோகம் தட்டியெழுப்பப்படும். அது மாதிரிதான், நிமிஷத்துக்கு நிமிஷம் நாள்கணக்கில், மாதக்கணக்கில் மரணங்கள் நடந்தால், அழுவதற்கு நம்மிடம் கண்ணீர் இல்லை. பழகிப்போகும். அப்படித்தான் மரணத்தைப் பார்த்து அம்மக்கள் மனசு பழகிப் போய்விட்டது.அழுகை என்பது மனதின் தற்காப்பு. சொல்லிப் பயனில்லாததை அழுவதன் மூலமாக அறிவிக்கிறோம். அது எப்போதாவதுதான் சாத்தியம். தொடர்ச்சியாக அழ முடியாது. இவ்வளவு பேர் செத்து விழும்போதும் அம் மக்களால் அழ முடியாததற்குக் காரணம், அதைப் பார்த்து அவர்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதால்தான்.குண்டு வீச்சையும், பீரங்கி வருகையையும் முதல் தடவை பார்க்கும் தலைமுறையாக இருந்தால், அவர்களுக்குப் பதற்றம் இருந்திருக்கும். 30 ஆண்டுகளாகப் பார்த்துச் சலித்துப்போன சத்தம். சென்னையில் குண்டு விழுகிறது என்றால், ஏற்படும் பதற்றம், அச்சம் அந்த மக்கள் மனதில் இல்லை. ஏனென்றால், அச்சத்தை நித்தமும் எதிர்பார்த்துதான் அவர்களது வாழ்க்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. 'நாளை நலமடைவோம்' என்று அவர்கள் நினைப்பதில்லை. 'இன்றிருந்ததைவிட நாளை இன்னும் மோசமாகும்' என்ற எதிர்பார்ப்புடனே மறுநாளை எதிர்கொள்கிறார்கள்.
பதற்றம் என்ற வார்த்தைதான் உளவியலில் ஆரம்பமான அளவு. ஆனால், அவர்களது மனதில் பதற்றம் அப்படியே பதிந்துபோய்விட்டது. போர்ச் சூழலில் கஷ்டப்படும் மக்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை. ஏனென்றால், அவர்களது பயமே மரணத்தைப் பார்த்துத்தான். அதனால், தற்கொலைக்கு முயற்சிக்க மாட்டார்கள். ஆபத்து, மரணம், துயரம் ஆகிய மூன்றையும் எதிர்பார்த்து வாழும் வாழ்க்கைதான் ஈழத் தமிழருடையது. அதனால்தான் அவர்கள் அழுவதில்லை. சோகமாவதில்லை. நிம்மதியற்ற அரசியல் சூழ்நிலை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வாழும் மக்களுக்கு இதுதான் தலைவிதி.ஒருவனின் வாழ்க்கையை அவனது அனுபவம்தான் தீர்மானிக்கிறது. இவர்களுக்கு அனுபவமே அச்சம் கலந்ததாக இருக்கிறது. நிம்மதியான கடந்த காலம் இல்லாததால் நம்பிக்கையான எதிர்காலத்தைக் கற்பனை செய்ய முடியவில்லை. வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதைச் சொல்ல இயலவில்லை. குழந்தைகள்கூட தொடர்ந்து இந்தச் சம்பவங்களைப் பார்த்துப் பழகிவிட்டார்கள். அவர்களுக்கு உடல் காயங்களால் வலி இருக்கலாம். அதிர்ச்சி குறைந்து போயிருக்கும். தனது தாய்-தகப்பனைத்தான் குழந்தைகள் தனது பாதுகாப்பாக நினைக்கும்.ஆனால், இலங்கையில் யார் யார்கூடவோ ஓடி, வாழ்ந்து பழகியதால் சமூகத்தைத் தனது பாதுகாப்பாக நினைக்க ஆரம்பிக்கும். குடும்பத்தை இழந்த குழந்தைக்குச் சமூகமே குடும்பமாக ஆகும். படிப்பை இழந்த பிள்ளைகள் மனதில் ஏற்பட்ட வெறுமைக்கு அளவு இல்லை. இது இரண்டு தலைமுறைகளைப் பாதிக்கும். பணத்தால் வரும் தைரியம் கொஞ்ச நாள்தான். கல்வியால் வரும் தைரியம் ஆயுள் வரை இருக்கும். எனவே தைரியமற்ற, எந்தச் சிந்தனையுமற்ற, கோழையான, வெறுமையான மனிதர்களாக்கும் கொடுமையே அங்கு நிகழ்கிறது.அங்கு ஓர் அரசியல் தீர்வு வரும் என்று வைத்துக்கொண்டாலும், போருக்குப் பின் அந்த மக்களை மறுபடியும் உடல், மன ஆரோக்கியத்துடன் கட்டமைக்கிற பணி மிகப் பெரிய சவால்!'' என்கிறார் ருத்ரன்.சூனியம் ஓர் இனத்தைச் சூழ்வதும் அதன் சொந்தங்கள் சும்மா இருப்பதுமான சூழல் வேறு இனத்தில் நடக்காது. நாற்காலி யுத்தத்தில் தமிழகம் மும்முரமாகிவிட்டது. ஆனால், ஈழ மக்கள் வாழ்வோ உளவியல் யுத்தத்தில் உயிர்விட்டுக்கொண்டு இருக்கிறது!
ப.திருமாவேலன்

February 12, 2009

Slumdog millionaire: சர்வதேச அரங்கில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் மானம்

Slumdog millionaire: Review in TAMIL (Exclusive)
சர்வதேச அரங்கில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் மானம்
- தமிழ்ச்செல்வன்

ஸ்லம்டாக் மில்லினியர் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு வாழ்க்கை முறையின் தனித்துவத்தை கொச்சைப்படுத்தி இந்தியாவின் மானத்தை ஒரு அயல்நாட்டு திரைப்பட இயக்குனரின் சாமர்த்திய திறமையால் சர்வதேச அரங்கில் அசிங்கப்படுத்தபட்டுள்ளன.
இது போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் நிகழாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்குமா?கடந்த சில தினங்களுக்கு முன் ''சினிமாத்துறையில் ஊறிப்போயுள்ள காவி சிந்தனை" என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். அந்தப் பதிவிற்கான பல விமர்சனங்கள் மின் அஞ்சலின் மூலம் வரப் பெற்றேன் அதில் ஒரு விமர்சனம் அமெரிக்காவிலிருக்கும் ஒரு சகோதரரிடமிருந்து வந்தது இவை...

***----------***

From: Navaneetha Krishnan. USA.
வணக்கம்!
மிகவும் உணர்வுப்பூர்வமான... அதே சமயம் ஒவ்வொரு தமிழனுக்கும், ஏன் ஒவ்வொரு மனிதனுக்கு எழ வேண்டிய உணர்வு! அருமை.... அற்புதம்! நீங்கள் ஏன் இதுபோன்ற வித்தியாசமான, நியாயமான ஆக்கங்களை அதிகாலை.காம் இணையம் வழியாக வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளக்கூடாது? இன்னும் அதிகமான உள்ளங்கள் படித்துப் பயன்பெறுமே! ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டுப்போகட்டுமே! நாம் அதைச் செய்வோமே!

இதுதான் என்னை தங்களுக்கு எழுதத் தூண்டியது. இந்த உணர்வுகளை நானும் அடைந்தேன்! அமெரிக்காவின் ஒரு பிரபல திரையரங்கிற்கு, நான் இந்தத் திரைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மானுக்காகவே பார்க்கச் சென்றது நூறு சதம் உண்மை. ஆனால் வெட்கித்தலைகுனிந்தேன். காரணம் மும்பைக்குடிசைகளைப்பற்றிய காட்சியமைப்புக்காக அல்ல, அந்தத் திரையரங்கில் கிட்டத்தட்ட 2-3 நபர்கள்தான் இந்தியர்கள், இதில் நானும் என் மனைவியும் உட்பட. படம் முடிந்ததும் அனைத்து அமெரிக்கர்களின் பார்வையும் எங்கள் மீது இருந்ததை இப்பொழுதும் நான் உணர்கிறேன். ஏதோ அந்தப்படத்தில் நடித்த ஒரு நடிகர் அங்கு வந்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும்பொழுது எப்படி மேலும் கீழுமாக பார்ப்பார்களோ அது போல் பார்த்ததற்கு காரணம் பிறகுதான் புரிந்தது. பச்சையாகச் சொல்லவேண்டுமெனில் "கேவலப்படுத்தியிருக்கிறார்கள்". இந்தியா வல்லரசாகும், அப்படியாகும், இப்படியாகும் என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த 2009-ல் இன்றும் இந்தியா இப்படித்தான் இருக்கிறதா? என்ற கேள்விக்கனைகளும், இந்தியா மீதான் அவர்களின் தவறான கோணமும் இன்னும் தொடருவதற்கு இது உந்துகோலாக இருக்கிறது. இந்தக்காட்சிகளின்படி இது உண்மையா? பொய்யா? என்ற விவாதம் வேறு. ஆனால் ஆஸ்கார் நோக்கி செல்லும் ரஹ்மான் மாத்திரமே நம் கண்ணுக்குத் தெரிவதால் நாம் இதை இப்போதைக்கு ஒரு புறம் தள்ளிவைப்போம் அவ்வளவே! நன்றி!!

புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
http://www.adhikaalai.com/
http://manuneedhi.blogspot.com/

***---------------***

இந்த விமர்சனம் கண்டவுடன் நண்பர் வைத்தீஸ்வரன் மூலம் இத்திரைப்படத்தின் குறுந்தகடு வாங்கப் பெற்று இந்த திரைப்படம் பற்றிய விமர்சனம் எழுதினேன். இந்தியாவின் மிகப் பெரும் வர்தக நகரமான, மும்பை நகரை அழகான வார்த்தையில் சொல்வதென்றால் "தூங்காத நகரம்" என்று சொல்லலாம் அந்த நகரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மும்பையின் குடிசை வாழ் பகுதி மக்களின் வாழ்க்கை முறையின் மறுபக்கத்தை மிக துல்லியமாக பதிவு செய்திருக்கிறது. இதுவரை இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் இந்திய மொழிகளில் தயாரித்து வெளியிட்டு வந்த அசிங்கங்கள் ஒரு சில பகுதியாகவே இருந்திருக்கும். ஆனால் சர்வதேச சமூகத்திற்கு தெரியாமல் மறைத்தோ அல்லது தெரியாமலோ வந்த பல சம்பவங்கள் இந்த படத்தின் மூலம் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நூற்றுப்பத்து கோடி மக்கள் தொகையுடன், மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தொழில்துறையிலும் விஞ்ஞான வளர்ச்சியிலும் மிகப்பெரிய அளவில் சாதனைகள் படைத்துவரும் ஒரு நாடு. உலகின் அடுத்த வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் ஒரு தேசத்தின் மானம் உலக அளவில் துகிலுரியப்பட்டு இருக்கிறது.இந்தியாவில் பிறந்து பிரிட்டனில் வாழ்ந்து வரும் அஹமது சல்மான் ருஸ்டி கடந்த 1988 ம் ஆன்டு தனது 4வது நூலான "சாத்தானின் வேதங்கள்" மூலம் இஸ்லாத்தை விமர்சித்து எழுதியதற்காக ருஸ்டியை ஈரான் முன்னாள் அதிபர் ஆயத்துல்லாஹ் கொமெய்னி கொலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார். ஆனால் மேற்கத்திய நாடுகள் அவனது நரகல் நடை எழுத்திற்கு விருதுகள் வழங்கி கவுரவித்தது. கர்ப்பப்பை சுதந்திரம் (?) கேட்டு எழுதிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமாவுக்கு அமோக வரவேற்புகள் வாழ்த்துக்கள். இது போல் ஒரு சமூகத்தை இழிவு படுத்தி எழுதினால் அதற்கு ஆஸ்கார் விருது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேற்கத்திய நாட்டின் கேடு கெட்ட கலாச்சாரப் புத்தி இது. மிக திறமைவாய்ந்த இயக்குனரான அந்த வெள்ளைக்காரன் இந்தியாவின் கேவலங்கள் என்று என்ன இருக்கிறதோ, அதை எல்லாம் ஒரே படத்திலேயே வரிசைப்படுத்தி இருப்பது அவனின் அதீத திறமைக்கு ஒரு சான்று. இதில் வரும் அவலங்களான வன்முறை, ஏமாற்றல், அடிப்படை வசதியின்மை, குழந்தை தொழிலாளி, வறுமை, குப்பைகள் நிறைந்த சேரிப்புற வாழ்க்கை, வீட்டு வன்முறை, பாலியல் தொழில், சிறுவர் சீர்கேடு, சிறுவர் வன்முறை, நிழல் உலக தாதாக்கள், மத ரீதியான சண்டைகள், வெட்டுக்குத்துகள், இந்திய சமூகத்தில் பெண் தொடர்பான பார்வை, தொலைக்காட்சி/சினிமா தொடர்பான அதீத மோகம், அதற்கும் மேலாக திருட்டு என்று இத்தனை வருட கால இந்திய சினிமா வரலாற்றில் கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியா காட்டப்பட்டதை எல்லாம் இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் ஒரே படத்தில் காட்டி இந்தியாவின் மானத்தை சர்வதேச அரங்கில் தலைகுனிய வைத்துள்ளான் அந்த இயக்குனன்.இதன் காரணமாகவோ என்னவோ இந்தியரான அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குலோப் மற்றும் பாஃப்டா விருதுகளும் படத்தொகுப்பாளர், ரெசூல் பூக்குட்டி என்பவருக்கு பாஃப்டா விருதும் வழங்கி அவர்களை ஆஸ்காருக்கும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.இந்தியாவை கவுரவமாக கேவலப்படுத்த மேற்குலகுக்கு கிடைத்த அரிய ஆயுதம் இந்த படம். அதனால் தான் இந்தப்படத்திற்கு விருது மேல் விருது கொடுத்து அருமையாக விளம்பரம் செய்கிறார்கள்.

முதல் சந்தேகம், ஏ.ஆர் ரஹ்மான் ஆங்கில படத்துக்கு இசை அமைப்பது இது முதல் முறை அல்ல . அவரது முந்தய படங்கள் அதிகம் பேசப்பட வில்லை அல்லது ஏதாவது விருதுக்கு கூட பரிந்துரைக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம்.? அவரது திறமை இந்த படம் மூலமாக தான் உலகுக்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன?

படத்தில் நடிக்கும் எந்த ஒரு முக்கிய கதாபாத்திரமும்(இந்தியர்) ஏன் நல்ல முறையில் சித்தரிக்கப்படவில்லை?நாயகனாக வரும் 2 சகோதரர்களை அதாவது திருடர்களை முஸ்லிம்களாக காட்டியுள்ள இயக்குனன் அதில் ஒரு தொழு‍கைக் காட்சியும் வைத்து 'நான் பாவம் செய்பவன், என்னை மன்னித்துவிடு இறைவா' என்று இறையும் காட்சிகள் தேவையில்லாமல் புகுத்தப்பட்டு முஸ்லிம்களின் கண்ணியத்தை கொச்சைப் படுத்தியிருக்கின்றான். கதாநாயகனை சுற்றி நடக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன ...?அவர்கள் மிக மிக கொடூரமாக சித்தரிக்கப்பட வேண்டிய தேவை என்ன? உதாரணமாக அந்த போலீஸ் காரர், தொகுப்பாளராக வரும் அனில் கபூர் கூட ஏன் வில்லனாக சித்தரிக்கப்பட வேண்டும்.சிறுவர்களை கடத்தும் அந்த கும்பல், கண்களை குருடாக்கும் காட்சிகள், அண்ணன் தம்பி உறவு முறிவுக்கான காட்சிகளில் ஏன் அளவு கடந்த கொடூரம்?இவ்வளவு கீழ்த்தரமாக இந்திய மனிதர்களை காட்டும் இயக்குனன், உல்லாச பயணிகளாக வரும் இரு அமெரிக்க பாத்திரங்களை மட்டும் மனிதாபிமானம் உள்ளவர்களாக காட்டுகிறான். அந்த காட்சியிலும் கூட இந்திய போலீஸ்காரர் கொடூரமானவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். இப்படியான காட்சி அமைப்பு கதையின் கருவிற்கு கட்டாயம் தேவை தானா?

அணு சக்தி ஒப்பந்தம் போடும் நாட்டில் பசியில் திருடும் சிறுவனை ஓடும் ரயில் இருந்து தள்ளி விடுகிறார்கள். மற்ற நாடுகளுக்கு ஆயுத உதவி செய்யும் நாட்டில் எத்தனை கோடி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை.? சந்திரனுக்கு ராக்கெட் விடும் நாட்டில் தான் எத்தனை குழந்தைகள் குப்பை பொருக்கி பிழைக்கிறார்கள். வல்லரசு கனவு காணும் தேசத்தில் எத்தனை கோடி பிச்சைக்காரர்கள்? இதை எல்லாம் பார்க்கும் மேற்கு உலகின் எத்தனை பேர் இந்தியாவுக்கு வர அஞ்சுவர். இதை பார்க்கும் அவர்களுக்கு ஏற்படும் உள ரீதியான தாக்கம் எப்படி இருக்கும். கண்களில் சூடான திராவகத்தை ஊற்றி ஸ்பூனால் கண்களை தோண்டி சிறுவர்களை பிச்சை எடுப்பதற்கு தயார்படுத்துவதை பார்க்கும் அமெரிக்க குழந்தைகள் இனிமேல் இந்தியர்களை எப்படி பார்ப்பார்கள்?வர்த்தக/வளர்ச்சியடைந்த மும்பை நகரின் புற தோற்றமே இது என்றால் மற்ற இந்திய நகரங்கள் பற்றி இதுபோன்ற கேள்விகள் அந்த காட்சிகளை பார்க்கையில் எழும். ஆனாலும் இயக்குனன் பொய்யான ஒன்றை காட்டவில்லை, நிஜமான ஒரு சில சம்பவங்களை காட்சிப்படுத்தியிருக்கிறான். நாம் அமெரிக்கா போன்ற நாடுகளின் மக்களையும், அந்த நாட்டு வாழ்க்கை முறையையும் கேவலமாக சித்தரித்தால் அவர்களும் இது போல தான் கொண்டாடுவார்களா?இந்தியத் திரைப்படத்துறைக்கு அந்த தைரியம் இருக்கிறதா? இந்த படம் மறைமுகமாக ஏற்படுத்தும் சமூக பொருளாதார தாக்கம் என்ன?

இன்னுமொரு சான்று, இந்திய எழுத்தாளர் அரவிந்த் அடியா என்ற ஒருவர் எழுதிய வைட் டைகர் என்ற புத்தகம் கடந்த வருடம் சர்வதேச விருதான பூக்கேர் (The White Tiger wins the 2008 Man Booker Prize for Fiction ) விருது பெற்றது. இதில் கூட அந்த எழுத்தாளர் இந்திய ஏகாதிபத்தியத்தையும், அதன் கலாச்சாரம் மற்றும் பல ஊழல் நடைமுறைகளையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்காக விருது வழங்கி அந்த புத்தகம் உலக அளவில் பிரபலப்படுத்தப்பட்டது. இம்முறையும் அது போன்ற ஒரு நிகழ்வே நடை பெறுகிறது. அந்நிய நாட்டு திரை துறையினரின் இந்த போக்கை இந்திய அரசு தொடர்ந்து அனுமதிக்குமேயானால் வரும் காலங்களில் இந்தியாவின் நீதித்துறை, நிர்வாகத்துறை, பாதுகாப்புத் துறைகளில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் தவறுகள் காட்சிகளாக பதியப்பட்டு சர்வதேச அரங்கில் துகிலுரிக்கப்படும் ஆட்சியாளர்கள் இப்போ‍தே விழித்துக் கொள்ளாவிட்டால் நாட்டின் பாதுகாப்பு எதிர்காலத்தில் கேள்விக்குறியாகிவிடும் என்பதை எச்சரிக்கையுடன் சொல்லி வைக்கிறோம்.

February 10, 2009

இன்றைய செய்திகள்

குழாயடி கூச்சல்கள், இலங்கைத் தமிழர் நலன் காக்க உதவாது : ராமதாஸ்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10504&lang=ta&Itemid=52
ஆப்கானில் படுகொலை செய்யப்பட்ட சைமன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதிஉதவி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10503&lang=ta&Itemid=52
முல்லைத்தீவு நோக்கி தமிழக வழக்கறிஞர்கள் பயணம்: போலீஸ் கைது நடவடிக்கை
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10502&lang=ta&Itemid=55
வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10501&Itemid=52
மும்பையில் விமானம்-ஹெலிகாப்டர் மோதல் தவிர்ப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10500&Itemid=52
வரும் 17-ம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10499&Itemid=52
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடங்கி வைத்தார் லாலு பிரசாத்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10496&Itemid=52
சவூதிக்கான இந்திய தூதருக்கு தமிழ்ச்சங்கப் பாராட்டு விழா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10507&Itemid=52
ஓய்வூதிய அதிருப்தி : விருதுகள் திருப்பியளிப்பு : முன்னாள் ராணுவத்தினர்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10506&Itemid=52
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் தைப்பூச ஜோதி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10505&Itemid=52
எந்திரனில் (ரோபோ) ரஜினியா? டேனியா?
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10523&Itemid=67
பாலாவின் அடுத்த நான்கு படங்கள்! யாருக்கு ஜாக்பாட்?
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10522&Itemid=67
ஆர்யா இப்போ சூர்யா ரேஞ்சுக்குப் போய்ட்டாருங்க!
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10521&Itemid=67
கல்யாண மாப்பிள்ளையாகப்போகிறார் கஞ்சாகருப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10520&Itemid=67
டமிளு நாக்கு ஒத்தண்டி : நிகிதா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10519&Itemid=67
விக்ரம் - கந்தசாமி பாடல் ஒலிப்பதிவு புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10517&Itemid=67
ரகசியா-கலக்கல் புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10516&Itemid=67
தினம் ஒரு தகவல் : நிம்மதி - கொல்லிமலைச் சாரல் பொ.ஆனந்த் பிரசாத்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogcategory&id=155&Itemid=244
ஒன்றிப்போதலே வெற்றியின் இரகசியம் - சேமுமு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10514&Itemid=164

January 30, 2009

"அதிகாலை" இன்றைய செய்திகள்

போர்நிறுத்தமும், உத்திரவாதமான பேச்சுவார்த்தையுமே அமைதி தரும்:பா.நடேசன்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10225&Itemid=52
சென்னை - காந்தி நினைவு தினம் : அரசியில் பிரமுகர்கள் பங்கேற்பு-காணொளி

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10228&Itemid=52
தீக்குளிப்பதற்கு முன் முத்துக்குமார் வினியோகித்த துண்டுப் பிரசுரம்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10205&Itemid=52
தீக்குளித்து வீர மரணமடைந்த முத்துக்குமாருக்கு விடுதலைப்புலிகள் அஞ்சலி

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10204&Itemid=52
மும்பை தாக்குதல் : ப.சிதம்பரம் - பாகிஸ்தான் தூதரக அதிகாரி சந்திப்பு

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10220&Itemid=52
அமெரிக்கா : ஹிலாரி கிளின்டனின் வெளியுறவு அமைச்சர் பதவி செல்லாது

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10217&Itemid=52

முல்லைத்தீவு-வெளியேறும் பொதுமக்களை நாங்கள் தடுக்கவில்லை:பா.நடேசன்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10216&Itemid=52

காந்தி நினைவு தினத்தில் புழல் கைதிகளுக்கு விழிப்புணர்ச்சி வகுப்புகள்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10203&Itemid=52
பார்த்திபன் கனவு # 16 : இரண்டாம் பாகம் - அத்தியாயம் 6 : கலைத்திருநாள்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10197&Itemid=110

சென்னை - காந்தி நினைவு தினம் : அரசியில் பிரமுகர்கள் பங்கேற்பு-காணொளி

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10228&Itemid=52

காதலா? ஆக்சனா? ஆக்சன்தான் என்கிறார் அருண்விஜய்!

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10233&Itemid=67
மம்மூட்டி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10234&Itemid=67

January 11, 2009

காங்கிரசின் பச்சைத்துரோகமும் தி.மு.கவின் ஒட்டுத் துரோகமும்!

காங்கிரசு கட்சியானது தமிழினத்திற்குத் தொடர் துரோகங்களைச் செய்து வருகிறது என்பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவர். கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவில் காங்கிரசினும் தமிழினத்திற்கின்னல் விளைத்தார் எவரேனும் காட்டலரிது.
1956-ல் தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று மாற்றச்சொல்லி அறவழியில் உண்ணா நோன்பிருந்தார் சங்கரலிங்கனார். 76 நாள்கள் நோன்பிருந்தும் காங்கிரசின் வஞ்ச மனம் கனியவில்லை. இறுதியில் காலமானார் சங்கரலிங்கனார். இத்தனைக்கும் சங்கரலிங்கனாரும் ஒரு காங்கிரசுக்காரர்தான். காந்தியாருடன் தண்டியாத்திரை சென்றவர் அவர்.தமிழ், தமிழர் என்று வந்தால் காங்கிரசு கட்சிக்கு காங்கிரசுக் காரரும் பகையாவர் என்பதற்கு இது சான்று. அந்த சூக்குமம் புரிந்ததால்தான் எந்தத் தமிழ்நாட்டுக் காங்கிரசுக்காரரும் தமிழ் தமிழர் என்று பேசுவதில்லை என்பதை ஓர்க. வெள்ளையர் போனபின்னர் தமிழ்நாட்டிற்காக, தமிழருக்காக உயிர் ஈந்த இவரோடு காங்கிரசின் கணக்கு தொடங்கி குறி வைத்து தமிழினத்தை அது அழித்து வருகிறது.

"தமிழ், தமிழர் என்று வந்தால் காங்கிரசு கட்சிக்கு காங்கிரசுக் காரரும் பகையாவர்"
1965-ல் இந்தி மொழியை தமிழர்களிடம் வலிந்து திணித்த காங்கிரசு, அதற்கெதிராக கிளர்ந்த தமிழ் மக்களை, காவற்துறையாலும், அரணம் கொண்டும் சுட்டுப் பொசுக்கியது. அந்தக் கொடுமையான 1965 ஆம் ஆண்டின் பிப்ரவரி 8-க்கும் 12-க்கும் இடையேயான 5 நாள்களில் மட்டும் சுடப்பட்டுக் கொல்லப் பட்டவர்கள் 63 பேர். பிப்ரவரி 12 ஆம் நாள் மட்டும் கொல்லப் பட்டவர்கள் 31 பேர். பலரின் சோதனைகளும் வேதனைகளும் வெளியே வரவில்லை. திராவிடக் கட்சிகளாய் இருந்தவை சொன்ன கொல்லப் பட்டோர் எண்ணிக்கை 145. அண்ணா என்ற சிறந்த தலைவரும், அவருக்குப் பெரியவராகப் பெரியாரும் இருந்து, இராசாசி, டி.டி.கே போன்றோரெல்லாம் இந்தி திணிப்பை எதிர்த்தபோதும், காங்கிரசின் தமிழ்ப் பகைமைக்கு, இரத்த வெறிக்குப் பலியானவர்கள் நூற்றுக்கும் மேல்.

ஒவ்வொரு தமிழரைக் கொன்ற போதும், "இந்தி தெரியாவிட்டால் நீ இந்தியனே இல்லை" என்று சொல்லிக் கொன்று போட்டன காங்கிரசின் வடக்கு மூளைகள்! அந்தப் பகையோடு 1967-ல் இடுப்பொடிந்து போன காங்கிரசு 1987-ல் தமிழீழத்தில் திலீபன் உண்ணா நோன்பிற்குக் காரணமாய் இருந்து அவர் உயிரையும் காவு வாங்கியது. காங்கிரசை காந்தியார் கலைக்க வேண்டும் என்று சொன்னது அதன் இரத்த வெறியை அறிந்ததனால் இருக்கக் கூடும்.

தமிழகத்தில் சங்கரலிங்கனாரையும், தமிழீழத்தில் திலீபனையும் பலிவாங்கியது காங்கிரசு. காந்தியம் பேசும் காங்கிரசிடம் அறப்போராட்டங்களும் செல்லாது என்பதற்கு தமிழினத்தின் மேல் அது தொடுத்த இந்தத் தாக்குதல்கள் காட்டா நிற்கின்றன.

தொடரும் அதன் தமிழின இரத்த வேட்கையே, 1987-ல் ஒன்னே கால் இலக்க அரணத்தை அனுப்பி, தமிழீழத்தில் 8000 பேரைக் கொன்றதும், கண்ணில் பட்ட மகளிரை சீரழித்ததும். மற்று, 2004ல் ஆட்சிக்கு வந்த காங்கிரசு கருணாநிதியுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டு, மெல்ல மெல்ல தமிழீழத்தில் நடந்த பேச்சு வார்த்தைகளைக்கெடுத்து, தமது இத்தாலி வழி தொடர்புகளாலும், இந்தியாவின் பல்வேறு துறைசார் தொடர்புகளாலும் தமிழீழ மக்களை உலக அரங்கில் தனிமைப் படுத்தி, சிங்களன் துணையோடு இன்றைக்குப் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று வருகிறது.
தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9668&lang=ta&Itemid=62